Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)-12

Advertisement

praveenraj

Well-known member
Member

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)

அன்றைய பொழுதில் வழக்கத்திற்கும் மாறாக வெகு சீக்கிரமே தயாரான அஞ்சனா கணேஷனிற்கு அழைத்து விரைவாக வருமாறு சொன்னாள். அஞ்சனாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று புரியாமல் கார்த்தி குழம்பியவாறு ஜெஸ்ஸியிடம் தன் கவலையைத் தெரிவித்தாள்.

"கார்த்தி, எனக்கும் ரொம்ப நாளாவே இந்த டௌட் இருக்கு. அஞ்சுவோட ஃபேமிலி போட்டோ அவ ரூம்ல இருக்கு. ஆனா அவளைத் தேடி அதுல இருக்கும் யாருமே இங்க வந்ததில்லையே? அதைக் கூட விடு, இவளும் மூணு மாசத்துக்கு ஒருமுறை வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு போனதும் தெரியாம வந்ததும் தெரியாத மாதிரி ரெண்டொரு நாளுல திரும்ப இங்க வந்திடுவா. எனக்கு என்னமோ அஞ்சனாவோட வாழ்க்கையில சில சொல்லமுடியாத சோகங்கள் ஒளிஞ்சிருக்குனு படுது. எல்லா விஷயத்திலும் ஓப்பனா இருக்கும் இவ ஏன் அவளோட ஃபேமிலி பத்தி மட்டும் இவ்வளவு ரிசெர்வா இருக்கானே புரியல. நான் ஒருமுறை இதைப் பத்தி அவகிட்ட வெளிப்படையாவே பேச முயற்சி செஞ்சிருக்கேன். 'என் பெர்சனல் லைஃப் தவிர்த்து நீ என்கிட்ட என்ன வேணுனாலும் எப்போ வேணுனாலும் பேசலாம் ஜெஸ்ஸி. ஐ அம் ரெடி டு ஏன்சர் யூ ஜெஸ்ஸி'னு ரொம்ப டிப்ளமேட்டிக்கா பதில் சொல்லிட்டா. இதுக்கு மேல இவ கிட்ட இதைப் பேசுறது நாகரிகமா இருக்காதுன்னு நான் அவாய்ட் பண்ணிட்டேன்..." என்று அஞ்சுவைப் பற்றி தான் அறிந்தவற்றை ஒப்பித்தாள் ஜெஸ்ஸி.

கணேசன் வந்து விட வழக்கமாக தன் அலுவலகத்திற்குச் செல்லும் பாதையின்றி வேறொரு பாதையில் செல்லுமாறு அஞ்சனா தெரிவிக்க அவருக்குள்ளும் சில கேள்விகள் எழுந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவள் சொன்ன வழியிலே சென்றார். அப்போது ஒரு குறுக்குச் சந்தின் வழியே அவள் போகச் சொல்ல அந்த வழியில் தென்பட்ட ஒரு பெரிய வீட்டினை இமைகொட்டாமலே பார்த்த அஞ்சனாவை கணேசனும் கவனித்தார் தான்.

"பாப்பா, நான் வேணுனா வண்டியை ஓரங்கட்டட்டுமா?" என்று அவள் மனதை அறிந்தவராகவே வினவ,

"அவசியமில்லை. நீங்க போகலாம் அண்ணா" என்றவளின் குரலிலும் பாவனையிலும் பழைய மிடுக்கு வந்துவிட சற்று முன்னர் அத்தனை சோகத்தை கண்ணில் தேக்கி வைத்தவளா இவள் என்று கணேசனே வியக்கும் அளவிற்கு இருந்தது அவள் மாற்றம்.

நேற்று மாலை தன்னிடம் எவ்வளவு நாசூக்காக அவள் மனதை அஞ்சனா தெரிவித்திருந்தாலும் வினீதால் அதை கேசுவலாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

கிச்சனுக்கு சென்றவள் எப்போதும் போல் தன்னுடைய பார்ட்னெரை தேட அவன் இன்று வரவில்லை என்று அறிந்தவள் அவனுக்கே அழைத்து விட்டாள். அந்நேரத்தில் அவளிடமிருந்து அந்த அழைப்பை எதிர்பார்க்காத வினீத் தடுமாற்றத்துடன் அழைப்பை ஏற்றான்.

"எதுக்கு இன்னைக்கு லீவ் போட்ட வினீத்?"

"அது... கொஞ்சம் உடம்பு சரியில்லை. அது தான்..." என்று அவன் தடுமாற,

"என்னடா நாம சொல்லாமலே நம்ம மனசைப் புரிஞ்சிகிட்டு நம்ம கிட்ட நேரடியாவே நோ சொல்லிட்டாளே இவளை எப்படிப் பழி வாங்கலாம்னு பிளான் போடுறியா?" என்று சற்று குரல் உயர்த்திய பேசினாள் அஞ்சனா.

"ஹே அஞ்சு! என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது? எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது. நானா சொல்லலாம்னு இருந்தேன். ஆனா நீ முந்திட்ட. இதுக்காக எல்லாம் நான் உன்னை வெறுப்பேனா? அதும் உன்னைப் பழி வாங்குற அளவுக்கு? ஒரு வேளை எந்த மொமெண்ட்ல என்னை நீ இம்ப்ரெஸ் பண்ணுறதை நிறுத்தரியோ அப்போ வேணுனா உன் மேல ஒரு சின்ன கோவம் ஏற்படலாம். பட் அதுக்கு வாய்ப்பே இல்ல. இங்க வந்ததுல இருந்து எனக்குக் கிடைச்ச முதல் ஃப்ரண்ட் முதல் பார்ட்னர் இன் க்ரைம் முதல் க்ரஷ்..." என்றவன் அவனாகவே இடைவெளி விட்டு,"சென்னையில இந்த ஹோட்டல்ல எனக்கு ஏற்பட்ட முதல் க்ரஷ்" என்று சொன்னதும் மறுபுறம் இருந்து அவள் சிரிப்பொலி அவன் செவியில் இறங்க இப்போது தான் அவனுக்கு எல்லாமே நார்மலானதாக உணர்ந்தான்.

"எல்லாமே நீ தான் அஞ்சு. அதான் ஒரு வேளை நீயே என் லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன்" என்று அவன் நிறுத்த,

"ஒரு வேளை நீயும் நானும் மேரேஜ் பண்ணிக்கிட்டா இந்த உலகத்துலயே ரொம்பவும் துரதிஷ்டமான புருஷனா நீ மாறிடுவ வினீத். இன்னைக்கு வேலைக்குப் போற பல ஹஸ்பண்ட் அண்ட் வைப் சம்பாதிப்பதைக் காட்டிலும் கொஞ்ச நேரமாச்சும் ஒருத்தர் இன்னொருத்தர் முகத்தைப் பார்க்காம இருக்கலாங்கற ஆசையில தான் போறாங்க. நாம மேரேஜ் பண்ணிட்டா உனக்கு அந்த சுதந்திரமும் போயிடும். க்ரில்ல மாட்டுன கோழி கணக்கா நீ அல்லோலப்பட்டிடுவ. உண்மையைச் சொல்லனும்னா நீ கிரேட் எஸ்கேப். ஓகே நீ ரொம்ப நாளா என்கிட்ட கேட்டுட்டிருந்த உன் ஆசையை இந்த வாரம் நான் நிறைவேத்துறேன். இந்த சண்டே நான் உன் வீட்டுக்கு லஞ்சுக்கு வரேன். நல்லாக் கேட்டுக்கோ எனக்கு இந்த வெஸ்டர்ன் ஃபூட்ஸ் எதுவும் இருக்க கூடாது. எனக்கு ஒரு பக்கா கிராமத்து சமையல் ரெடியா இருக்கனும். மீன் குழம்பும் செட்டிநாடு சிக்கனும் கண்டிப்பா இருக்கனும். என்ன ஓகேவா?"

"அவ்வளவு தானே? த்தோ இன்னைக்கே வாங்கி சமைச்சு வெச்சிடுறேன்"

"பாவி! இதுக்கும் மேலயா நீ என்னைப் பழிவாங்கணும்?" என்று உரைத்தவள் தன்னுடைய வேலையில் மூழ்கினாள். ஆனாலும் அவளுக்கு வந்த முதல் திருமண அலைன்ஸ் பற்றிய நினைவுகள் அவளைத் தாக்கியது.

"மணி ஒன்பதாகுது. கொஞ்சமாச்சும் இந்தப் பிள்ளைக்கு அக்கறை இருக்கா? எல்லாம் அவரைச் சொல்லணும். பிள்ளையை ஒன்னும் சொல்லிடக் கூடாது. நாளைக்குப் போற இடத்துல 'என்ன பிள்ளையை வளர்த்தாளோனு?' என்னைய தானே பேசப் போறாங்க..இவருக்கென்ன?" என்று தன் போக்கில் புலம்பியவாறு அடுப்படியில் சமையல் வேலையில் மூழ்கிப் போனார் ஷோபனா.

இது ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த முரளிதரன் மற்றும் மதிவாணன் ஆகியோரின் செவிகளிலும் அச்சுப் பிசகாமல் விழுந்தது.

"இன்னைக்கும் அக்காவுக்கு டோஸ் விழுதா?" என்றான் சச்சின்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல பெரிம்மாவுக்கும் டோஸ் விழும் பாரு..." என்றான் யுவராஜ்.

"என்னடா அங்க சத்தம். உங்களுக்கெல்லாம் யாரு டா இன்னைக்கு லீவ் விட்டது?" என்று சமயலறையில் இருந்து வந்தது ஷோபனாவின் குரல்.

"இன்னைக்கு சென்னையை ஏதோ ஒரு சக்தி வாய்ந்த புயல் கடக்கபோகுதாம் பெரியம்மா. அதான் ரெட் அலெர்ட் விட்டு எல்லா ஸ்கூல் அண்ட் காலேஜுக்கு லீவ் விட்டுடாங்க..." என்று சச்சின் பதில் அளிக்கும் போதே டிவி பார்த்துக் கொண்டிருந்த முரளி அவனைப் பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்தார்.

"லட்சக்கணக்குல செலவு பண்ணி உங்க பொண்ணை சமையல் பத்தி படிக்க வெச்சீங்களே? என்னைக்காவது ஒரு நாள் இந்த கிச்சன் பக்கம் வந்து எனக்கு எதாவது சமைச்சு கொடுத்திருப்பாளா? நானெல்லாம் எந்த காலேஜ் போய் சமையல் கத்துக்கிட்டேன்? ஏ சுமித்ரா நீ எதாவது காலேஜ் போன?" என்று தன் ஓரகத்தியைக் கேட்டார் ஷோபனா.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முரளி மேலும் மௌனம் சாதிக்காமல்,"இப்போ என்ன உன் பிரச்சனை ஷோபனா? உங்கப்பா உன்னை லண்டனுக்கு அனுப்பி படிக்க வெக்கலைனு ஆதங்கமா இல்லை உன்னால ஒன்பது மணி வரை தூங்க முடியலங்கற வருத்தமா? எதுனாலும் வெளிப்படையாக் கேளு" என்று கேட்டதும் கையிலிருந்த சமையல் கரண்டியுடன் வெளியே வந்தவர்,

"உங்க பொண்ணுக்கு என்ன வயசாகுதுனு தெரியுமா? இப்படியே எதுக்கெடுத்தாலும் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்களே நாளைக்கு அவ போற இடத்துல இதே செல்வாக்கு கிடைக்குமான்னு யோசிச்சிருக்கீங்களா?" என்று கேட்டார்.

"அப்படி ஒன்னும் யாரோ ரோட்ல போற வரவனுக்கு நான் என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக் கொடுக்க போறதில்லை. அவளே அஞ்சு வருஷம் கழிச்சு இப்போ தான் இங்க வந்திருக்கா. அவ ஜாலியா இருக்கறதுல உனக்கென்ன கடுப்பு?"

அப்போது தான் தூங்கி எழுந்தவள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு படிகளில் இறங்கினாள்.

"குட் மார்னிங்ப்பா..." என்று பிரவாகமாக வந்தாள் அஞ்சனா. (பிரவாகம்- துள்ளி குதித்து வரும் நீர் அலை, வெள்ளம்)

"வெரி பேட் டைமிங்" என்று சச்சின் சொல்ல அதைக் கேட்டு யுவா மற்றும் மதி ஆகியோர் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.

"டேய் இன்னும் என்ன இங்கேயே இருக்கீங்க? ஸ்கூல் காலேஜ் இல்ல?"

"போய் ரமணனைக் கேளு" என்றான் யுவா.

"டேய் இப்போ இருக்கறது பாலசந்திரன்..." என்ற அஞ்சனாவை முறைத்த ஷோபனா,

"இப்போ இது தான் ரொம்ப அவசியம் பாரு..."

"என்னாச்சுப்பா?" என்று அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் அஞ்சு வினவ,

"நீ உங்க அம்மாக்கு இன்னும் எந்த ஸ்டார் ஹோட்டல் டிஷும் செஞ்சுத் தரலயாம். அதான் காலையில காளி அவதாரம் எடுத்திருக்கா" என்று சொல்ல,

இவ்வளவு களேபரங்களுக்கு இடையில் தீவிரமாக நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த தன் மாமனாரைத் துணைக்கு அழைத்தார் ஷோபனா.

"உங்க பேத்திக்கு கல்யாணம் பண்ணுற ஐடியா இருக்கா இல்லையா? உங்க மகன் தான் அவ பேச்சுக்கெல்லாம் ஆமாம் சாமி போடுறார்னா நீங்க இன்னும் நாட்டு நடப்பைத் தெரிஞ்சிக்கறதுலயே இருக்கீங்க. கொஞ்சம் வீட்டு நடப்பையும் கவனிங்க..." என்று சொல்ல சச்சிதானந்தம் அப்போது தான் தன் மூக்குக் கண்ணாடியைக் கழட்டி வைத்து மருமகளை நிமிர்ந்துப் பார்த்தார்.

"ஹே சச்சு குட் மார்னிங். நேத்து நான் சொன்ன மாதிரியே இந்தியா தோத்திடுச்சி பார்த்தியா? நீ என்னமோ அப்படி சவால் விட்ட? எடு ஐநூறு ரூபாயை" என்று தன் தாத்தாவிடம் வம்பு வளர்ந்தாள் அஞ்சனா.
இதுவரை இருந்த பொறுமை முழுவதும் காற்றில் பறந்து தன் கையிலிருந்த கரண்டியை தூக்கி வீசி எறிந்தார் ஷோபனா.

அதுவரை மீன் மார்க்கெட் போல் இருந்த அந்த வீட்டில் ஒரு அமைதி குடிபுகுந்தது.

என்ன தான் மருமகளிடம் அவ்வளவு நெருக்கம் இல்லாவிட்டாலும் இந்த விஷயத்தில் மருமகளுக்குத் துணையாக தன் பேச்சைத் தொடங்கினார் லலிதா.

"என்னலாம் பதினாறு வயசுல உங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. நீ என்னனா?" என்று அந்தக் காலத்துப் புராணம் பாடிய லலிதாவை நோஸ் கட் செய்ய எண்ணியவள்,

"ஏ லல்லி, அதே பதினாறு வயசுல கல்யாணம் ஆன நம்ம பாக்கியம் பாட்டி அறுபது வயசுல செத்துப் போயிடுச்சு. உனக்கு அறுபத்தி ஒன்பது ஆகுது. நீ ஏன் இன்னும் உயிரோட இருக்க?" என்று அஞ்சனா கேட்டதில் முரளி மற்றும் மதி ஆகியோர் மட்டும் அதிர்ச்சியடைய மற்ற அனைவரும் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள்.

இருந்தும் முயன்று சிரிப்பை அடக்கிய ஷோபனா,"இப்படித்தான் வயசுல பெரியவங்க கிட்டப் பேசுவியா டி?" என்று கேட்க,

"இதை நீ அப்பா மாதிரி ஆரம்பத்துலயே ஷாக் ஆகி கேட்டிருக்கனும். அதை விட்டுட்டு அந்தப் பக்கம் திரும்பி நல்லா கெக்க பெக்கனு சிரிச்சிட்டு இப்போ அப்படியே சீரியஸா இருக்குற மாதிரி பாவலா பண்ணுறியா? ஷோபி ம்மேஹ ம்மேஹ" என்று எந்திரன் சிட்டி போல் செய்தவளைக் கண்டு மீண்டும் எல்லோரும் சிரிக்க இம்முறை லல்லி என்கின்ற லலிதா மட்டும் தன் மருமகளை கொலைவெறியில் முறைத்தார்.


அப்போது கிச்சனில் இருந்து தீப்தி அவளை அழைக்க அதில் நிகழ்வுக்கு வந்த அஞ்சனா உள்ளே விரைந்தாள். அதன் பின் நேரம் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓட அவளுக்கு நடராஜனிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லுங்க அங்கிள். என்ன விஷயம்?"

"அம்மாடி இந்த வாரம் ஷோக்கு நீ இன்னும் ரிகர்சல் பண்ணலையே மா. உனக்கு ரிகர்சல் தேவையில்லை தான். இருந்தும்..." என்று அவர் இழுக்க,

"புரியுது அங்கிள். நம்ம ட்ரூப்போட விதிமுறைக்கு அப்பாற்பட்டவள் இல்ல இந்த அஞ்சனா. இன்னைக்கு ஈவினிங் வந்திடுறேன். ஞாயிறு அன்னைக்கு தானே ஷோ இருக்கு?"

"ஆமாம்மா. சனிக்கிழமை நம்மளோட காமெடி பிளே போடுறோம். 'பிளைட் எண் 123 சென்னை டு சொர்க்கம்'. நானூற்றி தொன்னூறாவது முறை ஸ்டேஜ் ஏறுது..." என்று அவர் முடிக்கும் முன்னே,

"ஓகே அங்கிள். ஈவினிங் பேசிக்கலாம். பை..." என்று அழைப்பைத் துண்டித்தவளுக்கு பழைய நினைவுகள் மீண்டும் தாக்கியது.

காதலால் நிறைப்பாள்...


 
பாக்கியம் பாட்டி அறுபது வயசுல செத்துப் போயிடுச்சு. உனக்கு அறுபத்தி ஒன்பது ஆகுது. நீ ஏன் இன்னும் உயிரோட இருக்க?" என்று அஞ்சனா கேட்டதில் முரளி மற்றும் மதி ஆகியோர் மட்டும் அதிர்ச்சியடைய மற்ற அனைவரும் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள்.
?????

குட்டி epi promo கணக்கில் சேர்க்கைப்படும், டெய்லி போடறாதலா excused.

அஞ்சனாவும் sari நவி பையனும் sari நல்லா சிரிச்ச குழந்தையா இருந்த்ருக்காங்க, அவங்களோட இந்த சிடு மூஞ்சி அவதாரம் ஆக காரணம் நீங்கதான praveen ???

நெக்ஸ்ட்ட் எபில naviran வரணும். அவனை மிஸ் பண்றேன் ?
 
?????

குட்டி epi promo கணக்கில் சேர்க்கைப்படும், டெய்லி போடறாதலா excused.

அஞ்சனாவும் sari நவி பையனும் sari நல்லா சிரிச்ச குழந்தையா இருந்த்ருக்காங்க, அவங்களோட இந்த சிடு மூஞ்சி அவதாரம் ஆக காரணம் நீங்கதான praveen ???

நெக்ஸ்ட்ட் எபில naviran வரணும். அவனை மிஸ் பண்றேன் ?
இல்ல என்னுடைய வழக்கமான writing இப்படித்தான். 1000- 1200 words தான் ஒரு எபி வரும். இந்த எபி கூட 1114 words. அது போக இது ஒரு போட்டிக் கதை. 30 எபிஸோட்ஸ் ஆச்சும் வரணுமாம். அதான்?? என்ன என் மேல இப்படிப் பழி போட்டுட்டீங்க பவி? அவங்களுக்குள்ள அவங்களுக்கே தெரியாத ஒரு connection இருக்கு. சொல்றேன். கண்டிப்பா வருவான்??? thanks for your constant support?
 
FB ல மட்டும் தான் ரெண்டு பேரும் சிரிக்கிறாங்க ??

என்ன தான் லண்டன் போய் சமைக்கறதுக்கு கத்துக்கிட்டு வந்தாலும் பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டு சமையலறையில நிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் போல ???
 
Nice epi
சமையல் கலை படிக்கிற யாருமே வீட்டில் இருக்க அம்மா க்கு செய்யுறது இல்ல
 
FB ல மட்டும் தான் ரெண்டு பேரும் சிரிக்கிறாங்க ??

என்ன தான் லண்டன் போய் சமைக்கறதுக்கு கத்துக்கிட்டு வந்தாலும் பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டு சமையலறையில நிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் போல ???
ரெண்டு பேருக்கும் சோகமான பிளாஷ்பேக் இருக்கு. ஹா ஹா இருக்கலாம்?? நன்றி
 
feels like long way to go to get full flash back. Both Naviran and Anjana has got sad/bad past?(y)(y)
உண்மை தான் ரெண்டுபேருக்கும் பிளாஷ் பேக் இருக்கு. ஆனா நாம அல்மோஸ்ட் இன்டெர்வல் பாயிண்டை நெருங்கிட்டோம். நன்றி?
 
Top