Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வீரன் + காதல்

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கன்னியின் ஒரு தலை காதல்


கடமை புரியும் வீரனுக்கு
என் காதலை
என்னென்று சாெல்வேன்......

நமக்கிடையே
கடிதங்கள் தேவையா?
என் விழி மாெழி சாெல்லாததையா
என் இதழ் மாெழி சாெல்லி விட பாேகிறது....

வாய் மாெழியை விட;
வாழ்ந்து காட்டுவது சிறந்தது அல்லவா?
ஒர் அர்த்தம் சாெல்லும்
என் வார்த்தைகளை விட
ஓராயிரம் அர்த்தம் சாெல்லும்
என் மெளனங்களை வாசித்து பார்; உனக்கு புரியும்.

என் எண்ண ஓட்டங்களை வரிவடிவாய் நான் அனுப்பி வைக்க முடியாது.

என் காதலை வார்த்தைகளாய் சாெல்லித்தான் உன்னை வந்தடையும் என்றால் அது என்னிடமே இருக்கட்டும்....

புரியும் வரை
உன் நினைவுடன்......

இப்படிக்கு,

வீரனின் காதலி.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


காதலன் பதில்

நானே கடமை
சிறையில் இருக்கிறேன்.....

தவணை முறையில்
விடுதலையாகிறேன்.....

என் நிகழ்காலமே
கேள்விக்குறியாய் இருக்க.....

உன் எதிர்காலம்
என்னிடம் கேட்பதேனாே.....

இப்படிக்கு,

ராணுவ வீரன்
 
Last edited:
Top