Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான்; இமையாக நீ---18

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 18

பிருந்தாவிடம், மருத்துவர் ஷீபாவைத் துப்பறியச் சொல்லலாம், என்ற எண்ணம் எழுந்தவுடன், தீபக் ஒரு கணம் அவளைக் கண்ணோடு நோக்கியவனாய், " ஆங், சிஸ்டர் உங்களால எனக்கு ஒரு வேலை ஆகணுமே. செய்வீங்க தானே? " என்று கேட்டான்.

அப்போது,மருத்துவமனையில் , ஆட்களின் வருகை சற்று குறைவாக இருந்தது. அதனால் ரிசப்ஷனிலும், ஆட்கள் குறைவாகவே இருந்தனர் . அங்கிருந்த, பணியாளர்களும், டீ, குடிக்க என்று ஆங்காங்கே ,திசைக்கு ஒருவராய் சென்று விட்டிருந்தனர்.

தீபக், பிருந்தாவிடம் பேசுவதற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்.

பிருந்தா சற்று யோசனையுடன் அவனைப் பார்த்தாள். பின், " என்ன வேணும் சார் ? சொல்லுங்க " என்று கேட்டாள்.

" ஒன்னுமில்லை. இந்த மைக்ரோ சிப்பை, டாக்டர் ரூமில எங்கேயாவது கண் காணாத இடத்தில ஒளிச்சு வைக்க முடியுமா, ? இதை வச்சி, எனக்கு நிறைய வேலை ஆக வேண்டி இருக்குது. " என்று சொன்னான்.

" இது எதுக்கு சார்?." என்று கேட்டாள் பிருந்தா.
அது, மருத்துவரின் அறைக்குள் இருந்து சிறிதான ஒலி எழுந்தால் கூட, அதில் பதிவாகி விடும்.அதனால், மருத்துவரின் திட்டங்களைப் பற்றி முழுமையாக அதன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அவன் அவ்வாறு கேட்டது.

ஒரு கணம் தயங்கிய பிருந்தா பின், " சார், இதனால எனக்கு ஏதும் பிரச்சினை வராது இல்லை. " என்று கேட்டாள்.

" அதெல்லாம் எதுவும் வராது, நான் பார்த்துக்கறேன். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க வெண்ணிலாவோட நிலைமை, இங்கே உள்ள யாருக்குமே ஏற்படலாம். அதுக்கு, நாம ஏன் இந்த டாக்டரம்மாவுக்கு சான்ஸ் கொடுக்கணும். " என்றான் தீபக்.


அதன் பின் தான், பிருந்தா, தீபக் நீட்டிய மைக்ரோ சிப்பினைத் தனது கைகளில் வாங்கிக் கொண்டாள்.
அதனை, எடுத்துக் கொண்டு, ஷீபாவின் அறைக்குச் சென்ற அவள் , அங்கிருந்த, அலமாரியின் கதவினைத் திறந்து , அதில் இருந்த ஃபைல் ஒன்றில் அதனைச் செருகி வைத்து விட்டாள்.
பின் வெளியே வந்த அவள் , தீபக்கிடம் , " சார், நான் நீங்க சொன்னா மாதிரியே செஞ்சி முடிச்சுட்டேன். அப்புறம்..." என்று கேட்டாள்.

" அப்புறம் , எப்படியும் இந்த ரிசப்ஷனைத் தாண்டி யாரும் டாக்டர் அம்மாவைப் பார்க்கப் போக முடியாதுன்னு நான் நெனக்கிறேன். இங்கே, வர்ற
பேஷன்ட்ஸில, வாடகைத் தாய் மூலமா குழந்தை பெத்துக்கறதுக்கு, வர்றவங்க பத்தின விவரங்களை என் கிட்ட நீங்க சொல்லணும் " என்று கேட்டான்.

" சரிங்க சார் " என்று பிருந்தா ஒப்புதல் அளித்திடவும், தீபக் " ஓ.கே. டேக் கேர் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வாசலில் தனது காருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரவி, " என்னடா, உன் வேலை முடிஞ்சுதா? எனக்கு என்னவோ, நீ ஆளைப் பிடிச்சு உள்ளே தூக்கிப் போட்ட மாதிரி, அந்த டாக்டரையும், கைது பண்ணி விசாரிச்சு இருக்கலாம்னு தோணுது " என்று சலித்த குரலில் சொன்னான்.

தீபக் மறுத்தான். " அப்படி எல்லாம் சரியான ஆதாரம் இல்லாம ஒரு டாக்டரைக் கைது பண்ண முடியாதுடா. அதோட எனக்கு
வெண்ணிலா காணாமப் போனதுக்கும், இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கிற மாதிரி தெரியலை. அவங்களோட பேச்சில இருந்து சின்னதா ஒரு கெஸ்ஸிங். நாம இன்னும் கொஞ்சம், வேற கோணத்துல இந்த விஷயத்தை டீல் பண்ணனும்னு நெனக்கிறேன் " என்றான்.

ரவி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பின் அவன் தீபக்கிடம் , " அவ செல் நம்பரை வச்சி, நாம அவ லொகேஷனைத் தேடலாமாடா?." என்று தயங்கிய குரலில் கேட்டான்.

" ஓ, தேடலாம். ஆனா, அதுக்கு அவங்க போன் ஆன்ல இரூக்கணும். எங்கே நீ, அவங்க நம்பரை சொல்லு " என்று கேட்டான்.

ரவி தன்னிடம் இருந்த, நிலாவின் அலைபேசி எண்களை அவனிடம் பகிர்ந்து கொண்டான்.

அதனைத் தனது அலைபேசியில் சேமித்துக் கொண்ட தீபக், உடனே அந்த எண்களைத் தட்டினான். ஆனால் அது சுவிட்ச் ஆப், செய்யப்பட்டு விட்டதாகச் சொன்னது.
உடனே அவன், அந்த எண்ணின் இருப்பிடத்தைத் தேடச் சொல்லி, அதற்கென, பணி புரிந்திடும் ஊழியர்களிடம், சொன்னான் . " இந்த நம்பர், எப்ப ஆன் ஆனவுடனே உடனே அதோட லொகேஷனை எனக்கு, அனுப்பி விடுங்க " என்று ஆணை பிறப்பித்தான்.

பின், " ஓ.கே ரவி. கிளம்பலாமா? நான் ஸ்டேஷன் போறேன். நீயும், கிளம்பு. கவலைப் படாதே. கண்டிப்பா வெண்ணிலா கிடைச்சுடுவாங்க " என்று சொல்லி விட்டுத் தனது பைக்கில் அமர்ந்து கொண்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

ரவி, மீண்டும் ஒரு முறை வெண்ணிலாவின் எண்களைத் தனது அலைபேசியில் இருந்து, தட்டினான். அப்போதும், அவளது அலைபேசி அவனது அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தது. மிகவும் வாட்டமுற்ற, முகத்துடன் அவனும் அங்கிருந்து கிளம்பித் தனது பணியிடம் நோக்கி விரைந்தான்.

<<<<<>>>>><<><>>>>><<>>>>>>>>><<<<
நிலாவின் அலைபேசி, வாசுவிடம் தான் இருந்தது. அவள் மயக்கத்தில் இருந்த போது, அவன் தான், அதனை எடுத்துத் தன்னகப் படுத்தி விட்டிருந்தான். அதனை உடனே, சுவிட்ச் ஆப், செய்தவனும் அவனே.
வீட்டில், தனது காலை உணவினை முடித்துக் கொண்ட வாசு, வெண்ணிலாவைத் தான் அடைத்து வைத்திருந்த அறைக்குச் சென்று பார்த்தான். அப்பொழுது, அங்கே வெண்ணிலாவுடன் இணைந்து, அவனது தாயும், சுஷ்மியும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அவனுக்குப் பெரிதான ஆசுவாசம் ஏற்பட்டது. வெண்ணிலாவுக்குத் தன் மீது, ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவனது ஆழ் மனம் சொன்னது. ' இல்லை என்றால் அவளுக்கு, எப்படி இது போன்ற ஆழ்ந்த உறக்கம், கிட்டியிருக்கும் ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.

ஏதோ, அந்த வீட்டிற்கே ஒரு புதிதான ஜீவ களை வந்து விட்டது போல அவனுக்குத் தோன்றியது.

' நீ இல்லாமல் இருள் கவிந்த
எனது வானமும் இன்று
பேரொளி பெருக்கைப்
பிரதிபலிக்கிறதே என் நிலவே!!
வெண்ணிலவே!!!'

என்று தனக்குள் கவிதை சொல்லிக் கொண்டவன், தூக்கத்தில், தனது கால்களைத் தூக்கி அவளின் மேல் போட்ட, சுஷ்மியைத் தனது கைகளில் எடுத்துக் கொஞ்சினான்.

தனக்கு அருகில், ஏதோ ஒரு அரவம் கேட்டதை உணர்ந்த வெண்ணிலா, சட்டென கண் விழித்துக் கொண்டாள்.
கட்டிலில் ,இருந்து எழுந்து அமர்ந்து கொண்ட அவள், அங்கே அவளுக்கு , மிக நெருக்கத்தில், வாசுவின் முகத்தைக் கண்டதும் மிகவும் பதைத்துப் போனாள் .
" என்ன, என்ன ? என்ன வேணும் உனக்கு? அம்மா, அம்மா " என்று தரையில் படுத்தபடி கண் அயர்ந்து விட்டிருந்த சாரதாவை எழுப்பினாள்.

" ஏய், ஏய் அவங்களை எதுக்காக இப்ப நீ எழுப்பறே? நான், என்ன உன்னைக் கடிச்சுத் திங்கவா போறேன்? " என்று கேட்டான்.

வெண்ணிலாவிடம் அதற்குப் பதில் இல்லை. ரம்யாவைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்த போது, சாரதாவிடம் இருந்து மெலிதான விசும்பல் ஒலி கேட்டது. அவள் அதனைத் தனக்குள் மறைத்துக் கொள்ள, மிகுந்த பிரயத்தனப்பட்டுக் கொண்டு இருக்கிறாள், என்பதை அறிந்து கொண்டதும், " அம்மா அழாதீங்கம்மா. வேணாம், எல்லாத்தையும் மறந்துடுங்க. ரம்யா ஞாபகம் வரும் போதெல்லாம் இதோ இந்தக் குழந்தையோட முகத்தைப் பாருங்க.
இதோ, உங்க கண் முன்னால, நிக்கற இந்தக் குழந்தையோட எதிர்காலம் தான், உங்களோட ஒரே பிடிமானம்." என்று சொன்னாள்.

" என் கேள்வியே அதான்மா . இந்த ப் பிள்ளைக்கு அப்பன் யாரு? பேரு என்ன? என்ன ஊரு, ஒரு பள்ளிக்கூடத்தில சேர்க்கணும்னா கூட இதை எல்லாம் கேப்பாங்களே? நாங்க என்ன சொல்லுவோம்? இன்னும் வளர, வளர இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன எல்லாம் சோதனைகளை எல்லாம் அனுபவிக்கப் போகுதோ தெரியலியே " என்று மிகவும் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள் சாரதா.

ஏற்கனவே, காலை உணவு முடித்துக் கொண்டவுடனே கண்கள் செருகத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்த சுஷ்மியைத் தனது மடியில் போட்டுக் கொண்டாள் வெண்ணிலா.

சாரதாவும் தனது கைகளையே தலையணை ஆக்கிக் கொண்டு, தரையிலேயே சுருண்டு படுத்துக் கொண்டாள் .
அப்போது தான் தானும் கண் அயர்ந்து இருக்க வேண்டும் என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள் வெண்ணிலா.
எப்போதும் துருதுருவென்று ஏதாவது, வேலை செய்து கொண்டிருக்கும் வெண்ணிலாவிற்கு, இப்படி ஒரே அறைக்குள் அடைந்து கிடப்பது, தனது கை கால்களை யாரோ முடக்கிப் போட்டு விட்டது போன்ற எண்ணம் ஏற்பட்டது.

" ஏய், என்ன கண்ணைத் திறந்து வச்சிக்கிட்டே தூங்கறே ? ஆனா இப்படி தூங்கு மூஞ்சியா இருந்தாலும், இந்த மூஞ்சி நல்லாத் தானே இருக்குது . அதுவும் எனக்குப் பிடித்த பார்பி பொம்மை மாதிரி" என்று குறும்புத் தொனியுடன் கேட்டான் வாசு.

வெண்ணிலா, கண்டிப்பான குரலில் பேசத் தொடங்கினாள். " இங்கே பாரு ,வாசு. இப்படி எல்லாம் என் கிட்ட பேசிட்டு இருக்காதே. நான் இன்னொருத்தருக்கு சொந்தமாகப் போற பொண்ணு. சரி என்னைக் காப்பாத்தறதுக்காகத் தான் நீ என்னைக் கடத்தி வந்து வச்சிட்டு இருக்கே . அது போகட்டும். ஆனா இப்பத் தான் எனக்கு, எல்லாம் புரிஞ்சுடுச்சே. நான் இனிமே பார்த்துக்கறேன். பிளீஸ் என்னை விட்டுடு " என்று மீண்டும் கேட்டாள் வெண்ணிலா .

வாசுவுக்கு இப்போது கோபம் வந்தது. தனது கைகளில் இருந்த வெண்ணிலாவின் அலைபேசியை ஆன் செய்த அவன் , அதில் மிருதுளா அவளுக்கு அனுப்பி வைத்திருந்த, ரவியின் புகைப்படத்தை எடுத்து அவள் முன் நீட்டினான் . " இதோ இந்த மூஞ்சியைத் தானே நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு குதிக்கற. இதோ இப்பவே இவன் லட்சணத்தைப் பாரு " என்று தனது அலைபேசியை அவளிடம் நீட்டினான் வாசு.

அவன் காட்டிய வீடியோவில், வெண்ணிலாவின் தங்கை மிருதுளாவை, அவன் கல்லூரியில் இறக்கி விட்டு, கை அசைத்திடும் காட்சி படமாக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்ட வெண்ணிலா மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டிருந்தாள்.

வெண்ணிலா என்ன சொல்லப் போகிறாள்?
( வரும்)
 
Top