Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(28) FINAL

P BargAvi

Active member
Member
“ அடியே!!... என் அழகு ராட்சசி. நாம என்னமோ உயிர்க்கு உயிரா பழகி காதலிச்சுட்டு நீ என்னமோ என்னைய மறந்த மாதிரி அழற. நான் காதலிச்சது . உனக்கு தெரியாது அப்புறம் நீ என்ன பண்ணுவ” என ருத்ரன் கேட்க

“ இல்ல மாமா உங்களுக்கு என்னால கஷ்டம் தான் அதிகம். அதோட உங்களுக்குன்னு நான் ஒண்ணுமே பண்ணுனது இல்ல. அப்படி இருக்குறப்போ நீங்க என் மேல வச்சுருக்க பாசத்துக்கு நான் என்ன பண்ண போறேன்” என தென்றல் பரிதவிப்புடன் கேட்க

“ ஹ்ம்ம் நீ ஒன்னும் செய்ய வேணாம் என்னைய காதலிக்க கூட வேணாம். நான் உன்னைய காதலிக்குறதை ரசிச்சுகிட்டு அனுபவிச்சுக்கிட்டே இரு போதும்” என கூறி அவளை அணைத்துக்கொள்ள அவனின் அணைப்பில் பாந்தமாக இருந்துகொண்டு தூரம் தெரிந்த வான்வெளியை வெறித்துக்கொண்டே பேச ஆரம்பித்தாள்.

“ மாமா எனக்கு எங்க அம்மா இறந்ததை பத்தி எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல எல்லாரும் சொன்னப்போ எனக்கு எதுவுமே தோணலை. ஏன் அழுகை கூட வரல அவுங்க சுயநலமா எங்க அப்பாவோட போராட மனசு இல்லாம கோழைத்தனமான முடிவெடுத்துட்டாங்க.

என்னைய பத்தி யோசிக்கவே இல்ல. அதனால நானும் அவுங்கள பத்தி யோசிக்கக்கூடாதுன்னு வைராக்யமா எங்க அம்மாவை பத்தி எங்கையும் நான் கேட்டதும் இல்ல. அவுங்கள பத்தி இன்னைக்கு வரைக்கும் யோசிச்சதும் இல்ல.

அதே மாதிரி என்னோட அப்பா ம்ப்ச் அவரும் அப்படித்தான் என்ன எங்க அம்மா பூமில இல்ல அப்பா என் வாழ்க்கைல இல்ல. அப்புறம் என் அத்தை மாமா எல்லாருக்கும் நான் வேண்டாதவ ஒரு பாரம் அவுங்களுக்கு. என் ஆத்தாவுக்கு நான் தான் எல்லாம். ஆனா அவுங்க காது பிரச்சனைனால நான் அவுங்க கிட்ட எதையும் மனசுவிட்டு பேச முடியாது.

அதனாலதான் நீங்க என்கிட்ட நாலு வருஷம் முன்னாடி கல்யாணம் பத்தி பேசுனது எல்லாம் நான் வீட்டுல யாருகிட்டயும் சொல்லல. அதோட கல்யாணம் பண்ணனும்ன்னு வீட்டுல என் அத்தை சொல்லும்போது எனக்கு உங்க நியாபகம் ஒரு நிமிஷம் வந்துச்சு.

ஆனா நான் அதுக்கு மேல யோசிக்க விரும்பல. அப்புறம் என் ஆத்தாவுக்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். அதோட எனக்கு பார்த்த மாப்பிளைக்கு சுய நினைவு இல்லைன்றது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்” என தென்றல் கூறிக்கொண்டிருக்கையில்

அதுவரை அவள் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த ருத்ரன் கடைசியாக கூறியதை கேட்டு அணைப்பை விடுத்து அவள் முகம் நோக்கி,

“ நீ என்ன என்ன சொல்லுற??.. அப்போ தெரிஞ்சே என்னைய கல்யாணம் பண்ணுனியா??.....”

“ ஹம்ம்ஹும் இல்ல மாமா. வீட்டுல என் ஆத்தாவுக்குத்தான் காது பிரச்சனை தவிர எனக்கு இல்ல. அத்தை பேசும்போதே எனக்கு தெரியும் எப்படி பட்ட மாப்பிள்ளைன்னு. ஆனா அதுவும் கல்யாணத்துக்கு முதல் நாள்தான். ஆனா கல்யாணத்தனைக்கு மயங்குனது உங்கள நான் அந்த நிலமைல எதிர்பாரக்கல” என கூறி நிறுத்த ருத்ரன் தென்றலை அணைத்துக்கொண்டான்.

“ சின்னு இனிமே நீ வாழ்க்கைல சந்தோசத்தை மட்டும் தான் பார்ப்ப உனக்கு துணையா நான் எப்பவும் இருப்பேன் நமக்குள்ள கோவம் சண்டை அழுகை சிரிப்பு எல்லாம் வரும் அதோட காதலும் வளரும். இந்த தென்றல் என்னைய அப்போ அப்போ வருடுனா போதும் நான் வாழ்க்கைல எங்கையோ போயிடுவேன்” என கூற

“ எங்கையும் வேணாம் என்கிட்ட மட்டும் இருங்க வரு மாமா” என கூறி தென்றல் வெட்கப்பட

“ வாறே வா எனக்கு செல்ல பேருகூட வச்சாச்சு என் செல்லக்குட்டி” என கூறி சந்தோசத்துடன் இறுக்க அணைத்துக்கொண்டான்.

நாட்கள் கடக்க இன்னும் ரெண்டு நாளில் ருத்ரன் தென்றல் முதல் திருமண நாள். ருத்ரன் திட்டவட்டமாக அனைவரிடமும் கூறிவிட்டான் முதல் திருமண நாள் அன்று காலை வீட்டில் தென்றலுக்கு தாலி கட்டிவிட்டு மாலை வரவேற்பில் கலந்துகொள்வதாக. வீட்டில் இருந்த அனைவருக்கும் அதில் மறுப்பு சொல்லத்தோன்றவில்லை ஏன்னெனில் அனைவருக்கும் தெரியுமே அவர்கள் திருமணம் நடந்த முறை.

அதோடு சிம்மவர்மனும் நித்தியவதியும் வரவேற்பு வேண்டாம் என கூறிவிட்டனர். காரணம் நித்யவதி சிம்மவர்மனின் வரிசை சுமப்பதால் வேண்டாம் என கூறிவிட்டனர்`

மேலும் மூன்று மாதம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வீட்டில் இருந்தவர்களும் கட்டாயப்படுத்தவில்லை. அன்று மாலை வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்த தென்றலை ஜானவி முறைத்துக்கொண்டிருந்தார். அருகில் சோபாவில் நித்தியவதி சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அவளை பார்த்த தென்றல் “என்ன??” என கண்களால் வினவ நித்தி உதட்டை பிதுக்கினாள்.

“ அம்மா என்னமா ஏன் என்னைய முறைக்குறிங்க??” என கேட்டுக்கொண்டே அவரின் அருகே சென்ற தென்றலை கண்டு ஜானவி

“ உன் புருஸன்தான் என் பேச்சை கேட்க மாட்டேன்கிறானா நீயும் இப்படி இருக்க…..” என புலம்பிய ஜானவியை கண்டு

“ அம்மா நான் என்ன செய்யல”

“ ஹ்ம்ம் கல்யாணத்துக்கு இன்னமும் ரெண்டு நாள் தான் இருக்கு முகுர்த்தத்துக்கும் வரவேற்புக்கு இன்னும் புடவை எடுக்கல நானாவது எடுக்கவாடான்னா அதுவும் வேணாம் என் கல்யாணத்துக்கு நானேதான் பார்த்து பார்த்து செய்வேன்னு சொல்றான். நீயாவது சட்டுன்னு கூட்டிட்டு போய் புடவை நகை எல்லாம் எடுத்துட்டு வரலாம்ல” என பேசிக்கொண்டே ஜானவியிடம் எப்படி கூறுவது என தயங்கிக்கொண்டு நின்ற தென்றலை காப்பாற்றுவது போல டிரைவர்,

“ அம்மா இத எங்க வைக்கட்டும்??” என மிக பெரிய பெரிய பைகளாய் எடுத்துக்கொண்டு வர அதனை கண்ட ஜானவி

“ என்ன தென்றல் இது??” என கேட்க

“ அது அம்மா நானும் வரு மாமாவும் ஜவுளிக்கடை நகை கடைக்கு போயிட்டு எல்லாருக்கு டிரஸ் எடுத்துட்டு வந்தோம்” என கூறினாள்.

“ ஒரு வழியா எடுத்தாச்சா” என கேட்டுக்கொண்டே அனைத்தையும் பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்த ஜானவியிடம்

“ ஏன் அத்தை நீங்க சொன்னிங்கன்னா உங்க செல்ல மருமக கடைக்கு போயிருப்பா??” என கிண்டலுடன் நித்தி கேட்க தென்றல் வேகமாக தலையாட்டினாள்.

அதை பார்த்தும் பார்க்கத்ததும் போல ஜானவி,

“ ஹ்ம்ம் அதை சொல்லு நித்தி நாமளும்தான் படி படின்னு சொன்னோம் சுடிதார் போட சொன்னோம் எங்க…..” என கிண்டலுடன் கூறி தென்றலை காண வெள்ளை லெகினும் அதற்கு மெரூன் நிற குர்தியும் போட்டு நீண்ட கூந்தலை இடைவரைவெட்டி அனைத்தையும் ஒரு ரப்பர் பாண்டில் அடக்கி குதிரைவால்போட்டு தோரணையா நின்றுகொண்டிருந்த தென்றலை கண்ட நித்தியும்,

“ அதானே இப்போ பாருங்க ஆளே மாரி மேடம் காட்ரிங் வேற படிக்குறாங்க. அது முடிச்சவுடன் ருத்ரனும் மேடமும் ஹோட்டல் பிஸிநெஸ்ல இறங்க போறாங்க வேற” என கூறிய நித்தியை கண்டு கண்களால் கெஞ்சி “ அக்கா போதும்” என கூற

“ என்ன போதும்??. நாங்க எவ்வளவு சொன்னோம் படின்னு இப்போ புருஷன் சொன்னவுடன் ஹ்ம்ம்ன்னு மண்டை ஆட்டி படிக்க ஆரம்பிச்சுட்ட” என பொய் கோபத்துடன் கேட்ட நித்தியவதியிடம்

“ நீங்க இங்கிலீஷ் படிக்கச் சொன்னிங்க வரு மாமா எனக்கு என்ன புடிக்கும்ன்னு கேட்டாங்க நான் எங்க படிக்க சொல்லுவாரோனோ பயந்து சமைக்க பிடிக்கும்ன்னு சொன்னே அதுக்கு இத்தை படிக்க வைக்குறாரு. ஆனா அக்கா இதுவும் நல்ல இருக்கு” என கூறி சிரித்த தென்றலை ஜானவியும் நித்யவதியும் வாஞ்சையுடன் பார்த்தனர்.

இரண்டு நாள் கழித்து தென்றல் ருத்ரன் திருமண நாள் அன்று நல்ல நேரத்தில் ருத்ரன் திருமாங்கல்யம் பூட்டினான் தென்றலுக்கு. பின் வரவேற்பும் முடிந்து இரவு அவர்களுக்கான விசேஷமும் நடக்க அவனுடைய அறையை அண்ணன்கள் மூவரும் அலங்கரிக்க ருத்ரனிடம் ஜானவியும் திருவாசகமும் பேசிக்கொண்டிருந்தனர்.

“ டேய் சீக்கிரம் எங்களை பாட்டி தாத்தாவை ஆக்குடா” என திருவாசகம் கூற

“ ஆமா இப்போ மட்டும் இவரு குமரன்” என ஜானவி நொடிக்க

“ ஏண்டி எல்லா பசங்க பேர பிள்ளைகளையும் பார்த்தாச்சு நித்யவதி சீக்கிரம் பேரனோ பேத்தியோ பெத்துக்குடுத்துடுவா நம்ம ருத்ரன் பிள்ளைகளையும் பார்க்குற ஆசைல சொன்னேன்”

“ ஆமா அப்படியே இவரு வளக்க போற மாதிரித்தான் தூர இருந்து பார்த்துட்டு டேய் பேராண்டின்னு சொல்லிட்டு கம்பெனி போயிடுவீங்க இதுல எதோ ஸ்கூல்ல அட்டெண்டென்ஸ் எடுக்குற மாதிரி எல்லா பேர பிள்ளைகளையும் பார்க்கணும்ன்னு” என மீண்டும் ஜானவி குறைபட

“ ஏண்டி இதைகூட சொல்ல கூடாதா”

“ ஆமா சொல்ல கூடாது. நமக்கு ஆசை இருந்தாலும் அவுங்களுக்கு எப்போ சவுரியமோ அப்போ பெத்துக்குவாங்க அது அவுங்க தனிப்பட்ட விஷயம். அவன் சந்தோசமா இருக்கனும்ன்னு வாழ்த்துங்க அதுபோதும்” என ஜானவி கூற

“ நீ சொன்ன சரிதான் ஜாணுமா” என்று கூறிய தந்தையை பார்த்த ருத்ரனிடம்

“ எந்தவயசுலையும் பொண்டாட்டியை மட்டும் பகைச்சுக்கவே கூடாதுடா மகனே” என திருவாசகம் கூற ஜானவி செல்லமாக முறைச்சுக்கொண்டே இருந்தார்.

அதே நேரம் ஒப்பனையாளர்கள் உதவியுடன் பால்ரோஸ் நிறத்தில் தங்க ஜரிகையிட்ட பட்டு புடவையை நாட்டுப்புற கட்டு கட்டி கூந்தலை கொண்டையிட்டு அதனை சுற்றி மல்லிகை பூ வைத்து அம்சமாக வந்து நின்ற தென்றலிடம்

“ ஏய்!!... என்னடி இது??” என அருணா கேட்க அதற்கு பதில் கூறாது அமைதியாக கூச்சத்துடன் நெளிந்துகொண்டிருந்த தென்றலை கண்ட தமயந்தி

“ என்ன ருத்ரன் வேலையாக்கும் இது??....” என கேட்க

“ ஹ்ம்ம்….” என தலையாட்டினாள் தென்றல்.

“ எங்க ருத்ரன் ரசனையே வேறப்ப… ….” என நித்தியும் கிண்டல் செய்ய வேகமாக தங்கள் அறைக்குள் ஓடி சென்றுவிட்டாள்.

இவர்களை தூரம் நின்று பார்த்துக்கொண்டிருந்த சின்னாத்தா “ அய்யா கருப்பா இந்த வருஷ திருவிழாவுக்கு கிடா வெட்டுறேன்யா. என் பேத்தியை இதே சந்தோசத்துடன் வச்சுக்க கருப்பா” என வேண்டிக்கொண்டிருந்தார்.

அறைக்குள் நுழைந்த தென்றலை கண்ட ருத்ரன்,

“ பார்ரா என் பொண்டாடி என்னைய பார்க்க ஓடி வந்துருக்கா” என கூறி சிரிக்க

“ அச்சச்சோ அங்க தப்பிச்சு இங்க வந்து மாட்டிகிட்டேனே” என எண்ணிக்கொண்டு அறையை கவனிக்க அந்த அலங்காரம் அவளுக்கு இதுவரை இருந்த நிதானம் போய் ஒரு வித படபடப்பை தந்தது.

அதனை கவனித்த ருத்ரன்,

“ ஹே செல்லாகுட்டி ஏண்டி பயப்புடுற தயவு செய்து நீ என்னைய காதலா பார்கலைனாலும் பரவா இல்ல இப்படி அதிர்ச்சியா பயமா பார்க்கா”த என கூறிக்கொண்டு அவளின் அருகில் வந்து கைபிடித்து அழைத்து சென்று அமர வைத்தான்.

பின் எதுவும் பேசாது அவளின் கைகளை மட்டும் பிடித்துக்கொண்டு ஏதோ யோசனையில் இருந்த ருத்ரனை கண்டு,

“ என்ன மாமா??.. என்ன யோசனை??...”

“ ஹ்ம்ம் என்னடா”

“ இல்ல எதோ யோசனையில் இருக்குற மாதிரி”

“ ஹ்ம்ம் ஆமா யோசனைதான்”

“ என்ன மாமா எதுவும் பிரச்சனையா??”

“ இல்ல இல்ல பிரச்சனைன்னு சொல்ல முடியாது இது நான் ஒரு விஷயம் எதிர்பார்க்குறேன் அது நடக்கனும்னு ஆசை”

“ நடக்கும் மாமா ஏன் விசனைபடுறிங்க.”

“ ஹ்ம்ம்”

“ நீங்க எதிர்பார்த்தது நடக்கலைனாலும் நாம அதற்கான முயற்சியை செய்யலாம்”

“ ஹ்ம்ம் கண்டிப்பாடா அதுக்கு நீ மனசு வைக்கணும்”

“ சொல்லுங்க மாமா என்ன எதிர்பார்க்குறீங்க” என கேட்க

“ அது சின்னு எங்க வீட்டுல எல்லாரும் ஆம்பள பசங்க பொம்பள பிள்ளை இல்ல அதனால ஒரு பெண்குழந்தை பெத்து தறியா” என ருத்ரன் எதோ ஆம்லெட் போட்டு தறியா என்பது போல சாதரணமாக கேட்க

“ ஏது!!!...” என அதிர்ந்த தென்றலை அணைத்து அவர்களின் இல்லறத்தை ஆரம்பித்தான் இல்லாளின் அனுமதியுடன்.

சரியாக ஒரு வருடம் கடந்து பிரசவ அறையில் தென்றல் இருக்க வெளியே ருத்ரன் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தான். குடும்ப உறவினர்கள் அனைவரும் வெளியே நிற்க மாறவர்மன் ஒன்றைவயது மகனும் சிம்மவர்மன் ஐந்து மாத குழந்தையும் வீட்டில் மாயாவதி லீலாவதி பாதுகாப்பில் இருக்க இங்கு அனைவரும் கவலையுடன் இருந்தனர்.

சிறுது நேரத்தில் இவர்களின் கவலை போக்க வேகமாக அடுத்துட்டு ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தனர் ருத்ரன் தென்றலின் இரட்டை பெண் குழந்தைகள்.

அனைவரும் செய்தி கேட்டு சந்தோஷமடைய ருத்ரன் தென்றலை நார்மல்வார்டுக்கு மாத்தியவுடன் வேகமாக தென்றலை காண சென்றான்.

“ சின்னு குட்டி ஏண்டி மாமா மேல அம்ம்புட்டு லவ்வுவுவு…… நான் கேட்டேன்னு ஒன்னுக்குரெண்டு தேவதை குடுத்துருக்கடி தேங்க்ஸ் தேங்க்ஸ் செல்லக்குட்டி” என கூறி நெற்றில் முத்தம் வைக்க சோர்வுடன் புன்னகைத்த தென்றல்

“ வரு மாமா I LOVE U” என கூற ருத்ரன் தென்றலின் காதலை முதல் முறை வாய்மொழியாக கேட்க அந்த கண்ணீருடன் காதலாக பார்த்துக்கொண்டிருந்தான் அவன் மனைவியை.
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால்

உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூங்தலில்மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்.......
Thanks for ur wonderful supporting friends to complete my second story

please drop ur comments about this story friends.....

thanks thanks....


:love::love:
Nice story
 
Top