Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(16)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(16)

தன்னை நோக்கிய தாயை கண்ட ருத்ரன் ஜானவியிடம் திரும்பி,

“ அம்மா என்ன என்னைய பார்த்துகிட்டு இருக்கீங்க??. அவளை போக சொல்லுங்க முதல்ல” என மீண்டும் கத்த

“ டேய் அவ நீ கோமாவுல இருந்தப்போ அவளை கல்யாணம்…….” என ஜானவி உண்மையை கோவமாக கூற வருகையில் அதுவரை இங்கு நடந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாயாவதி

“ அண்ணி என்ன பேசுறீங்க நீங்க??. அவன் கோமாவுல இருக்குறப்போ தான் அந்த பொண்ணு புதுசா கல்யாணம் ஆகி இங்க வேலைக்கு வந்துருக்கு. அதுக்கு என்ன பண்ணனும்ன்னு நினைக்குறிங்க. அவனுக்கு பிடிக்கலைன்னா வெளில அனுப்பிற வேண்டியதுதானே.

ருத்ரன் இப்படி கத்துக்கிட்டு இருக்கான். அவனோட உடல் நிலையையும் பார்க்கணும்ல. அதப்பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம எதுவோ சொல்லவரிங்க. இது மட்டும் அண்ணனுக்கு தெரிஞ்சுச்சு. அப்புறம் என்ன நடக்கும்ன்னு தெரியும்ல. உங்க நல்ல நேரம் அண்ணா புது ப்ராஜெக்ட் விஷயமா மும்பை போயிருக்காரு பார்த்துக்கோங்க” என ஜானவி உண்மையை கூற வருவதை தடுத்து ருத்ரனின் உடல்நிலையையும் திருவாசகத்திற்கு தெரிந்தால் கோவம் வரும் என மறைமுகமாக மாயாவதி தெரியப்படுத்தி சூழ்நிலையை தன் கையில் எடுத்து தனக்கு சாதகமாக்க பார்த்தாள்.

அவளை அடுத்து லீலாவதியும்,

“ அதானே அண்ணி யாரோ ஒருத்திக்காக உங்க பையனை இப்படி டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இது நல்லா இல்ல” என ஜானவியை சாட

அடுத்து என்ன பேசுவது என ஊமை ஆகி போனார் ஜானவி. உண்மையை கூறி ருத்ரனுக்கு மன அழுத்தம் வந்துவிடுமோ என்ற கவலையும், அதே நேரம் தென்றலை வீட்டை விட்டு அனுப்பாமல் இருக்க வழி தெரியாது கலங்கி போனார்.

ஜானவி பரிதவிப்புடன் தென்றலை காண அவரின் நிலையை புரிந்துகொண்ட தென்றல் அவரை நெருங்கினாள். தென்றல் அருகில் வந்தவுடன் அவளை காண முடியாது தலையை குனிந்தவாறு இருந்த ஜானவியை கண்டு,

“ அம்மா” என கூறி அவரின் கையை பிடித்துக்கொள்ள அதில் கலங்கிய விழிகளுடன் மன்னிப்பை யாசிக்கும் வகையாக கண்ணீர் சிந்திய ஜானவியின் கண்ணீரை துடைத்த தென்றல்,

“ அம்மா நீங்க கவலையே பட வேணாம். எனக்கு தெரியும் இது நிலைக்காது. அதுக்கான தகுதி இல்லைன்னு. அதை சாரே சொல்லிட்டாங்க. எனக்கு இங்க வேலைக்காரியா கூட இருக்க தகுதி இல்லைன்னு. இதுல வருத்தப்பட ஒன்னும் இல்லம்மா நான் இங்க இருக்குறவரைக்கும் எல்லாருக்கும் மன கஷ்டம்தான்.

நான் எங்க ஊருக்கு போறேன்ம்மா. அப்போதான் இங்கயும் எல்லாருக்கும் நிம்மதி எனக்கு நிம்மதி. தினம் என்ன நடக்கும்ன்னு பயந்து இருக்குறதுக்கு இது பரவா இல்ல. நான் சந்தோசமா போறேன்ம்மா” என கலங்கிய குரலில் விழி நீருடன் கூறிய தென்றல் யாரையும் நிமிர்ந்து நோக்காது தனது அறைக்கு பையை எடுத்துவர சென்றாள்.

“ அதான் அவளே சொல்லிட்டாளே அண்ணி சந்தோசமாதான் போறேன்னு. அப்புறம் என்ன கவலை பட்டுக்கிட்டு” என லீலாவதி கூற அதில் கோவமாக முறைத்த ஜானவியை கண்டுகொள்ளாது அங்கு சம்மந்தம் இல்லாமல் நின்றுகொண்டிருந்த ஷாலுவிடம் சென்ற லீலாவதி

“ நீ யாரும்மா புதுசா இருக்க??” என கேட்க

“ நானா ஆண்ட்டி??. டாக்டர் விஜயனோட பொண்ணு ஷாலினி. அப்பா டெல்லிக்கு கான்பிரென்ஸ் போயிருக்காங்க. வர இருபது நாளு ஆகும்”

“ அப்போ எங்க ருத்ரனுக்கு treatment??......”

“ நான்தான் ஆண்ட்டி குடுக்க போறேன். நானும் டாக்டர் தான். அதோட அவன் என்னோட ஸ்கூல் பிரென்ட்”

“ இது எங்க அண்ணனுக்கு தெரியுமா??”

“ எது நானும் ருத்ரனும் பிரெண்டுன்னா??”

“ எம்மா அது இல்ல நீ தான் treatment குடுக்க போறது”

“ ஓ!!... தெரியும் அப்பா சொல்லிட்டாங்க” என கூறிய ஷாலுவை கண்டு சலிப்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ருத்ரனை நோக்க

ருத்ரவர்மன் புருவ முடிச்சுடன் யோசனையுடன் முகம் எதோ முடிவை எடுத்தவிட்டது போல் இருக்க ‘ என்ன இவன் இவ்வளவு யோசிக்குறான். என்னவா இருக்கும்’ என எண்ணி

“ ருத்ரா என்னப்பா என்ன யோசனை??” என மெதுவாக கேட்ட லீலாவதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக சோபாவில் அமர்ந்தான்.

அவன் என்ன யோசிக்குறான் என அறியாது அவனை எல்லாரும் குழப்பத்துடன் காண. அப்பொழுது தன் பையுடன் வந்த தென்றல் அங்கிருந்தவர்களிடம் பொதுவாக சொல்லிக்கொண்டு ஜானவியிடம் சென்று

“ அம்மா போயிட்டு வரேன் நித்தி அக்காகிட்ட சொல்லிடுங்க. அவுங்க வேலைக்கு போயிருக்காங்கள. சொல்ல முடியலைன்னு வருத்தமா இருக்கு ம்மா.
அப்புறம் என்னய டேவிட் அண்ணனை பஸ்ஸு மட்டும் ஏத்துவிட சொல்லுங்கம்மா” என தென்றல் புன்னைகை செய்ய முயற்சி செய்து பேச

“ டேவிட்……” என வீட்டின் ட்ரைவர் டேவிட்டை அழைத்த ஜானவி தென்றலை அவளுடைய ஊரிளையே இறக்கிவிட சொல்ல

“ இவளுக்கு வந்த வாழ்வை பாறேன்க்கா. கார்ல சொந்த ஊருக்கு போறா” என லீலாவதி மாயாவதியிடம் பொரும

“ ம்ப்ச். அவ எப்பிடியோ போறா. ஆனா திரும்ப வர கூடாது அவ்வளவுதான் நீ சும்மா இரு” என மாயாவதி கூறிக்கொண்டிருக்கையில் அதுவரை அமைதியாக இருந்த
ருத்ரன் “ நில்லு” என கூற அனைவரும் ருத்ரனை நோக்கினர்.

தென்றலும் கலங்கிய விழிகளுடன் இப்போ என்ன சொல்ல போறாரோ என சற்றே பயத்துடன் பார்க்க மெதுவாக நடந்து தென்றலின் அருகில் வந்து நின்ற ருத்ரன் அவளை வெறித்துக்கொண்டிருந்தான்.

அந்த பார்வையில் சற்றே மிரண்ட தென்றல் கைகளின் நடுக்கத்தை குறைக்க தனது பையை இறுக்க பிடித்துக்கொண்டிருந்தாள். அதனை கண்டு கடுப்பானவன் வேகமாக அந்த பையை பிடுங்கி தூர எறிந்தான்.

அதில் மேலும் அதிர்ந்து ஓரடி பின்னே நகர்ந்த தென்றலை கண்டு,

“ சும்மா இந்த பயந்த மாதிரி நடிக்குறது குழந்தைமாதிரி முகத்தை வச்சுக்குறது இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத. எனக்கு உன்னைய நல்ல தெரியும். சரியா??” என கோவமாக கூறிய ருத்ரனை கண்டு தலையை நன்றாக குனிந்தவாறு நின்ற தென்றலின் கன்னங்களை தனது கைகளால் அழுத்தமாக பிடித்து தன்னை நோக்கி பார்க்க வைத்து,

“ நீ என்ன சொன்ன இங்க இருந்து போனா நிம்மதியா சந்தோசமா இருப்பியா. அப்படி இருக்க கூடாதே நான் என்னோட காதலை இழந்து என்னோட சந்தோசம் நிம்மதியை இழந்து நிற்குறேன். நீ கட்டிகிட்ட கேனையனோட நிம்மதியா இருக்க போறியா” என ருத்ரன் கத்த லீலாவதி மாயாவதி காதில்,

“அக்கா இவன் அவனையே கேனைன்னு சொல்றான் எனக்கு சிரிப்பா வருது” என கிசுகிசுக்க

“ ம்ப்ச் சும்மா இரு லீலா. இவன் வேற இவளை எதுக்கு நிப்பாட்டி வச்சு பேசிகிட்டு இருக்கான்னு தெரியல” என மாயாவதி புலம்பிக்கொண்டிருகையில்

“ விடமாட்டேன் உன்னைய நிம்மதியா சந்தோசமா இருக்க நான் விடமாட்டேன். நீ இங்க தான் அதுவும் என்னோட அடிமையா எனக்கு வேலைக்காரியா எல்லா வேலையும் செய்யணும். உன்னோட நிம்மதி சந்தோசம் எதுவும் உனக்கு கிடைக்க கூடாது” என கூறிவிட்டு தான் பிடித்த கன்றி சிவந்த கன்னங்களில் இருந்து கைகளை விலக்கிய ருத்ரன்

“ நான் சொன்னது புரிஞ்சுச்சா நீ எனக்கு அடிமையா இருக்கனும் இங்க இருந்து போகலாம்ன்னு எதாவது திட்டம் வச்சுருந்த அப்புறம் இந்த ருத்ரனோட வேற முகத்தை பார்க்க வேண்டியது வரும். என்ன சரியாய்” என இரைந்து கத்திய ருத்ரனின் முழுதும் இருந்த கோவத்தை கண்டு வேகமாக தலையை ஆட்டிய தென்றலிடம்

“ சரி இப்போ போய் இன்னும் பத்து நிமிசத்துல என்னோட அறைக்கு டிபன் எடுத்துட்டுவா” என கூறிவிட்டு ஷாலுவிடம் சென்றவன்

“ நீ நாளைக்கு வா ஷாலு எனக்கு இப்போ மூடு சரி இல்ல” என கூறிவிட்டு ஜானவி உட்பட யாரையும் கண்டுகொள்ளாது வேகமாக தனது அறைக்கு சென்றுவிட்டான்.

“ என்னமோ நான் மசாஜ் பண்ணவந்தமாதிரி நாளைக்கு வா மூடு சரியில்லைன்னு சொல்றான். இவனை………” என பல்லை கடித்த ஷாலுவிடம் சென்ற லீலாவதி

“ அதான் சொல்றான்ல நாளைக்கு வாம்மா நீ” என கூற மேலும் ருத்ரனின் கோவத்தை கண்டு மேலும் அவனிடம் கேள்வி கேட்க சற்றே தயங்கிவிட்டு கடுப்புடன் முறைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அங்கு நின்று கலங்கிய விழிகளுடன் ருத்ரன் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்த தென்றலின் தோளை தட்டிய ஜானவி “ தென்றல்” என அழைக்க சட்டென்று திரும்பிய தென்றலின் கண்களில் இருந்த பயத்தை கண்டு

“ பயப்புடாத தென்றல் அவன் கிடக்குறான் எங்க நீ இங்க இருந்து போயிடுவியோன்னு ரொம்ப பயந்துட்டேன். ஆனா எப்பிடியோ இங்க இருக்க ஒத்துக்கிட்டான்”

“ ஆனா அம்மா நா…. நான்… அவருக்கு அடிமை….” என கூறிக்கொண்டிருக்கையில்

“ அட!!!... நீ வேற தென்றல் புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிமைன்னா என்ன தெரியுமா??. என்னை அடின்னு அர்த்தம். அதான் புருசனுக்கு பொண்டாட்டி அடிமை பொண்டாட்டிக்கு புருஷன் அடிமை.

அதாவது ரெண்டு பேரும் நல்லா அடிச்சுக்கலாம் அதுக்கு உரிமை இருக்கு. நீ என்ன பண்ற. அவனுக்கு உடம்பு நல்லா சரி ஆகுறவரைக்கும் கொஞ்சம் அவன் பண்றது எல்லாம் பொறுத்துக்கோ. அவனுக்கு எல்லாம் சரி ஆனவுடன் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வழி ஆக்கிடுவோம் சரியா” என ஜானவி தென்றலை இயல்பாக்க பேச அதில் சற்றே தெம்பு வர

“ சரிம்மா”

“ சரி சரி அவனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போ இல்ல அதுக்கு வந்து தாண்டவம் ஆடுவான்”

“ அம்மா பயமா இருக்கு”

“ அட!!.... பயந்தா காலம் ஓட்ட முடியுமா??. நீ பண்ற டார்ச்சர்ல அவன் காண்டாகனும் போ போ சீக்கிரம் உன் புருசனுக்கு சாப்பாடு எடுத்துட்டு போ” என விரட்டிவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தார் ஜானவி.

அதோடு அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல

“ என்னக்கா அவளை இங்க தங்க வச்சுட்டான்” என லீலாவதி மாயாவதியிடம் கூற

“ நான்தான் சொன்னேன்ல நாம போடுற எந்த திட்டமும் நாசமா போகுதுன்னு.
இதுல ஒரே ஒரு நல்லா விஷயம் இவளை இனிமே ருத்ரன் நல்லா வச்சு செய்வான்” பேசிக்கொண்டே அவர்களும் அவர்கள் வேலையை பார்க்க சென்றனர்.

அதேநேரம் ருத்ரனுக்கான காலை உணவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு ருத்ரனின் அறையின் வாயிலில் கதவு திறந்திருக்க அதன் அருகில் நின்று கொண்டு தன்னுடைய நடுக்கத்தை மறைத்து மெதுவாக “ சார்” என அழைக்க

எந்தவிதமான பதிலும் உள்ளிருந்து வராததால் மீண்டும் சார் என அழைத்த தென்றலின் குரலுக்கு ருத்ரன் எந்த பதிலும் கூறாததால் ‘ என்ன இதானே இவரோட அறை. அப்புறம் என்ன கூப்ட்டா ஒன்னும் சொல்லமாட்டேன்றாக. சாப்பாட்டை இப்போ என்ன பன்றது’ என சற்றே அறையில் எட்டி பார்த்த தென்றல்

அங்கு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டியவாறு கண்களை மூடிக்கொண்டு கெட்செட்டுடன் போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான். அதனை கண்டு

‘ இங்க இருந்துகிட்டே தான் பதில் சொல்லலையாக்கும். என்னதான் இருந்தாலும் இவரு ரொம்ப பண்ணுறாரு. எனக்கு இவரு உதவி செஞ்சுருக்காரு அதோட அதால இவரு பாதிக்க பட்டுருக்காருன்னு பொறுமையா இருந்தா ரொம்பதான். நான் தான் தகுதி இல்லைன்னு ஒதுங்கி போறேன்ல அப்புறம் எதுக்கு இப்படி பன்றாரு’ என

அவனை திட்டிக்கொண்டே சற்றே சத்தமாக “ சார்” என அழைக்க

அதே நேரம் ருத்ரன் கேட்டுக்கொண்டிருந்த பாட்டிற்கு ஏத்தவாறு தலையை மேலும் கீழும் ஆட்ட அதனை கண்டு

‘ வாயை திறந்து கூப்புட மாட்டராம்மா’ என மனதில் சலித்துக்கொண்டு அறையினுள் நுழைந்தாள் . அங்கு சாப்பாட்டை கையில் வைத்துக்கொண்டு அவனின் அருகில் நின்று கொண்டே அவனின் கண்மூடி பாட்டை கேட்டுக்கொண்டிருந்த முகத்தை கண்டு,

‘ ஹ்ம்ம் பார்க்கத்தான் நல்லா இருக்காரு ஆனா பண்றது எல்லாம் வில்லத்தனம். நான் பக்கத்துல சாப்பாட்டை கொண்டு வந்துருக்கேனே கீழ வைன்னு சொன்னா என்னவாம்.

மூணு வருசத்துக்கு முன்னாடி பார்த்தத விட இப்போ கொஞ்சம் கலர் குறைஞ்சுடுச்சு எடையும் குறைஞ்சுடுச்சு. ஹ்ம்ம்…… ஆமா மருந்து மாத்திரைன்னு எடுத்துக்கிட்டா அப்புறம் எப்பிடி இருக்கும். இந்த முகத்தில சிரிப்பு வருமா வராதா. எப்போ பார்த்தாலும் காக்கா மாதிரி கத்திகிட்டே இருக்காரு’ என தனது மனதில் தன போக்கில் எண்ணிக்கொண்டிருந்த தென்றலின் இருப்பை உணர்ந்ததாலோ,

தீடிரென கண்ணை திறந்த ருத்ரன் அங்கு எதோ யோசனையில் இருப்பது போல நின்றுகொண்டிருந்த தென்றலை கண்டு கோவமாக,

“ ஏய்!!!....” என கத்த

‘ இந்தா கத்த ஆரம்பிச்சுட்டாருல்ல இப்போ என்னவாம்’ என அதே சலிப்புடன் பார்க்க அவள் பார்வையை புரிந்துகொண்ட ருத்ரன்,

“ ஏய்!!.... என்ன திமிரா கீழ பயந்த மாதிரி நடிச்சுட்டு இப்போ என்னமோ நான் தாலிகட்டுன பொண்டாட்டி மாதிரி அனுமதி கேட்காம உள்ள வந்து நிக்குற. உனக்கு அறிவில்லை” என கத்த

“ இல்ல.... அது.... சார்ன்னு வெளில இருந்து கூப்பிட்டேன் நீங்க மண்டையை ஆட்டுனீங்க சார்” என தென்றல் கூறினாள்.

இதுவரை மனதில் மட்டுமே அனைவருக்கும் பதில் கூறிக்கொண்டு அமைதியாக குனிந்து நின்றுகொண்டிருக்கும் தென்றல் ருத்ரனிடம் இதுவரை குற்ற உணர்ச்சியுடன் பேச பயந்த தென்றல் ஏனோ இப்பொழுது தன்னை குறை சொல்லும்போது அதை மறுத்து கூறவும் தயங்காது இருக்கிறாள்.

இதற்கு தன்னவனை தான் அறியாது தன் மனம் ஏற்றுகொண்டதாலா!!....

“ நானா??” என எண்ணிய ருத்ரன் பின் யோசனையா

‘ ஓ!!... இந்த அரை லூசு பாட்டு கேட்டதை வச்சு சொல்லுது’ என எண்ணி சாப்பாட்டை கொடு என வாங்கிக்கொண்டு சாப்பிட ஆராம்பித்தான். அடுத்து என்ன செய்வது என அறியாது அங்கிருந்து நகர பார்த்த தென்றலை

“ ஏய்!!... என்ன நீவாட்டுக்கு வந்த சாப்பாட்டை குடுத்த போற தட்டை யாரு வாங்கிட்டு போவா. நின்னு வாங்கிட்டு போ” என கட்டளையாக கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அதனை கண்டு இங்க இருந்து நான் என்ன பண்றது என எண்ணிக்கொண்டு ருத்ரன் சாப்பிடுவதை பார்க்க சற்றே சங்கடப்பட்டு கொண்டு குனிந்து நிற்க,

“ ஆமா நான் கேட்கணும்ன்னு நினைச்சே உன் புருஷன் என்ன பன்றான்” என ருத்ரன் தீடிரென கேட்க அதில் குனிந்து இருந்தவள் நிமிர்ந்து பார்க்க

சாப்பிட்டு தட்டிலையே கையை கழுவி விட்டு டிஷ் யூ பேப்பரால் கையையும் வாயையும் துடைத்துக்கொண்டே,
“ உன்னைத்தான் உன் புருஷன் என்ன பன்றான்??” என மீண்டும் கேட்க உடனே எதுவும் யோசிக்காது

“ துடைச்சுக்கிட்டு இருக்காரு சார்” என தென்றல் கூற

“ என்ன சொன்ன??” என புரியாது கேட்ட ருத்ரனிடம்

‘ ஐயையோ உளறிட்டியே தென்றலு ஆத்தா சொல்றமாதிரி கூறு கெட்டவதான் நீ சரி சமாளிப்போம்” என எண்ணிக்கொண்டு

“ ஹான் அது…. அது…. தூசியை அழுக்கை எல்லாம் துடைச்சுக்கிட்டு இருக்காரு சார்”

“ பின்ன நல்லா சுத்தமா இருக்குறதையா துடைப்பாங்க. என்ன போ. உன்னைய மாதிரி அரை லூசை கட்டிக்கிட்ட அந்த பாவப்பட்ட ஜென்மம் பெரிய தியாகிதான். ஆனா உன்னைய எல்லாம் கல்யாணம் பண்ணிருக்க அந்த கேனையனை நான் ஒரு நாள் பார்த்து என் அனுதாபவங்களை சொல்லணும்” என தென்றலை நோகடிக்க வேண்டுமென அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே ருத்ரன் கூற

தென்றலோ சிறு புன்னகையுடன் அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

“ என்ன இவ புருஷனை சொல்றேன் கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம போறா என்னவா இருக்கும் ஒரு வேளை அவனை பிடிக்கலையா” என அவன் போக்கில் சிந்தித்துக்கொண்டிருந்தான்

ஆனால் அவளின் கணவன் தான் என அறியும் போது????...........


plz drop ur comments

&

thanks for wonderful supporting friends

இது கொஞ்சம் சின்ன epi தான் அடுத்தத பெரிய epi யா போடுறேன் friends ........


 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்

என்னப்பா இது?
தென்றல் பெண்ணை ருத்ர வர்மனுக்கு பிடிக்கவும் இல்லை
அவளை போகவும் விட மாட்டேங்கிறான்
பாவம் தென்றல்
என்னதான் செய்வாள்?
எது எப்படியோ இரண்டு விதி அத்தைகளுக்கும் ருத்ரன் செமத்தியான ஆப்பு வைச்சுட்டான்
ஹா ஹா ஹா
அந்த தென்றல் பொண்ணைத் துரத்த நினைத்த மாயாவிதியின் விதி எப்போ எப்படி மாறும், நிரஞ்சனா டியர்?
ஊருக்கு மட்டும் தென்றல் போயிருந்தால் சின்னாத்தாவிடம் செமத்தியா ஒரு கச்சேரி இருந்திருக்கும்
நல்லவேளை தென்றல் தப்பிச்சிட்டாள்
அவளுடன் அவள் புகுந்த வீடும் தப்பிச்சிது
ஹா ஹா ஹா
ஆனாலும் தென்றலைக் கல்யாணம் செஞ்ச புருஷன் கேனையனே தான்தான்னு தெரிய வரும் பொழுது ருத்ர வர்மனின் நிலை?
ஹா ஹா ஹா
 
Last edited:
அவள நிம்மதியா இருக்க விட கூடாதுன்னு ஊருக்கு போக விடாமல் இங்கையே இருக்க ஒத்துக்கொண்டானே அதுவே சந்தோஷம் தான். ஆனாலும் அவ புருசனை திட்டுறேன்னு உன்னையே இவ்வளவு டேமேஜ் பண்ணிக்கக்கூடாது ருத்ரா. :love: :love: :love:
 
Top