Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(15)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(15)

“ சிந்தியாவோட சொந்த ஊரு கோயம்பத்தூர் பக்கம். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கான். ருத்ரனும் சிந்தியாவும் இங்க காலேஜ் ஒண்ணா படிச்சாங்க. அப்புறம் ருத்ரன் வெளிநாடு போய் படிக்கறது தெரிஞ்சு அவளும் அங்க படிக்க போயிருக்கா.”

“ அவுங்க ரெண்டு பேரும் காதலிச்சது எப்பிடி தெரியும்மா உங்களுக்கு??”

“ அது இந்த விபத்து நடந்ததை கேள்விப்பட்டு வெளிநாட்டுல ருத்ரன்கூட படிச்சவங்க இங்க இவனை பார்க்க வந்தாங்க. அப்போ சிந்தியா இறந்த விஷயத்தை கேள்வி பட்டு அவுங்க சொன்னாங்க ருத்ரனும் சிந்தியாவும் காதலிச்சதாவும் எங்க போனாலும் ஒன்னாதான் சுத்துவங்களாம்.

அதோட இந்த சிந்தியா அவுங்க அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வந்துருக்கா. அவளை தனியா விட மனசு இல்லாம இவனும் துணைக்கு கிளம்பிருக்கான். ஆனா இங்க எங்ககிட்ட சொல்லவே இல்ல அவன் வரதை
பத்தி.

ஆனா ஏர்போர்ட்ல இருந்து கார்ல வரும்போது லாரியோட கார் மோதி விபத்து ஆகிடுச்சு. அதுல அந்த பொண்ணு அங்கேயே இறந்துடுச்சு. நம்ம ருத்ரன்தான் இப்படி சுயநினைவு இல்லாம கோமாவுக்கு போய்ட்டான்”

“ அப்போ… அப்போ…. அந்த பொண்ணு இறந்தது சாருக்கு தெரியாதாமா??”

“ இல்லைன்னுதான் நினைக்குறேன் தென்றல். பாப்போம் அதை சொல்லும்போது எப்படி என்னன்னு நடந்துக்குவான்னு கவலையா இருக்கு. சரி வா உள்ள போலாம்” என கூறிவிட்டு ஜானவி வீட்டிற்குள் செல்ல தென்றலும் அமைதியாக அவரை பின்தொடர்ந்தாள்.

சிம்மவர்மன் அறையில் கட்டி
லில் அமர்ந்து செல்லை பார்த்துக்கொண்டிருந்த நித்யவதியை கண்ட சிம்மவர்மன்,

‘ என்ன இவ காலையில வேலைக்கு போயே ஆவேன்னு அவ்வளவு பேசிட்டு இப்போ உட்கார்ந்து செல்லை பார்த்துகிட்டு இருக்கா. ஏன் போல ஒரு வேளை யாரும் மறுபடியும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ??’ எண்ணிக்கொண்டு நித்யவதின் அருகில் நின்று

“ ஹம்ம்ஹும்” என செருமினான் அதனை கவனிக்காது தொடர்ந்து செல்லை பார்த்துக்கொண்டிருந்த நித்யவதியை கண்டு முறைப்புடன் சற்று சத்தமாக செரும

“ என்ன அத்தான் கிஸ் வேணுமா??”

“ என்னது!!???” என சிம்மவர்மன் அதிர்ந்து நின்றுவிட்டான்.

“ இல்ல அத்தான் இருமுறிங்களே தொண்டையில கிச் கிச்சா மாத்திரை எதுவும் வேணுமான்னு சுருக்கமா கேட்டேன்” என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறிய நித்தியவதியை கண்டு பல்லை கடித்த

“ ஒரு மண்ணு வேண்டாம். நீ என்னமோ வேலைக்கு போயே ஆவேன்னு குதித்த. ஆனா இன்னும் கிளம்பவே இல்ல”

“ ஓ!!... அதுவா ருத்ரனுக்கு சரி ஆகிடுச்சுல அதான் சந்தோஷத்துல இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்”

“ உனக்கு சந்தோசமா??. நியாயமா பார்த்தா நீ கவலைலபடணும்” என தலையை சாய்த்து வலது கையை தாடையில் வைத்து யோசனையில் கூறிய சிம்மவர்மனிடம்

“ எனக்கு புரியல அத்தான். என்ன சொல்றிங்க?. நான் எதுக்கு கவலையில இருக்கனும்” என நித்யவதி கேட்க

“ பின்ன இல்லையா ருத்ரன் இவ்வளவு சீக்கிரம் குணமாகிடுவான்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு சீக்கிரம் நீ பிடிக்காம என்னைய அவசர பட்டு கல்யாணம் பண்ணிருக்க தேவை இல்ல. அதனால சொன்னே” என சாதாரணமான குரலில் சிம்மவர்மன் கூறி முடிக்க

சட்டென்று கலங்கிய விழிகளை சிம்மவர்மனுக்கு காட்டாது

“ கவலையா??. அது என்னமோ உண்மைதான். உங்களை போய் காதலிச்சேன்ல நான் கவலை படவேண்டியதுதான்”

உடனே போலியாக அதிர்ந்த சிம்மவர்மன் “ ஏது!!.... நீ என்னைய காதலிச்ச??. இதை நீ சொன்னவுடன் நான் நம்பணுமா??” என நக்கல் குரலில் வினவ

“ நான் உங்களை நம்ப சொல்லவே இல்லையே.”

“ அப்புறம் எதுக்கு என்கிட்டே சொல்ற??”

“ யாரை காதலிக்குறோம்ன்னு சம்மந்த பட்டவங்கட்டத்தானே சொல்ல முடியும்”

“ ஆனா நான் நம்பலை”

“ அது எனக்கு கவலை இல்ல”

“ ஏய்!!!.... என்ன திமிரா???”

“ அப்பிடி உங்களுக்கு தெரிஞ்சா அப்போ அப்படித்தான்”

“ ஏய்!!... ச்சை… உன்கிட்ட போய் மனுஷன் பேசுவானா??”

“ ஆனா நீங்க பேசுறீங்க”

“ தப்புதான் தப்புதான் என் இயல்பை மீறி உன்கிட்ட போய் வாயை குடுத்தேன் பாரு என்னைய சொல்லணும்” என கோவமாக சலித்துக்கொண்டு கூறிவிட்டு அறையை விட்டு சிம்மரவர்மன் வெளியேற எண்ணுகையில்

“ சிம்முத்தான்….” என சற்றே கொஞ்சல் குரலில் அழைத்த நித்யவதியை கண்டு பல்லை கடித்துக்கொண்டு சிம்மவர்மன்

‘ என்ன’ என்ற தோரணையில் நிற்க

“ இவ்வளவு பேசுனோம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்”

“ என்னது??”

“ அது…. அது…” என சிம்மவர்மனை நெருங்கிய நித்யவதி

“ அது I love u சிம்முதான்” என சிம்மவர்மனின் வலது கன்னத்தில் தனது இதழ்
பதித்துவிட்டு சிம்மவர்மனின் அதிர்ந்த தோற்றத்தை கண்ட திருப்தியுடன் அறையைவிட்டு ஓடிவிட்டாள்.

சில மணி துளிகளில் அதிர்வில் இருந்து மீண்ட சிம்மவர்மன் “ very dangerous” என தலையை உலுக்கிக்கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பினான். ஆனால் உதட்டில் சிறு வெட்க புன்னகை உண்டானதோ!!!!....

அதே நேரம் அறையை விட்டு வெளியே வந்த நித்யவதி

“ ஐயையோ!!!... நித்தி என்ன பண்ணி வச்சுருக்க. உன்னைய கடுப்பேத்துறாருன்னு சிங்கத்துக்கு மூஞ்சிய சொறிஞ்சுவிட்டுருக்கியே. சும்மாவே இருமுறேன்னு உருமாவாரு. போச்சு எதோ விளையாட்டா பண்ணப்போய் என்ன நடக்கபோகுதோ”.
என சற்றே பயத்துடன் எண்ணி ஹாலில் இருந்த சோபாவில் அமர அதே நேரம்

சிம்மவர்மன் கிளம்பி வெளியே வர;

சிம்மவர்மன் நித்யவதியை கண்டும் காணாதவாறு செல்ல எண்ணுகையில் அதனை கண்டு கொண்ட நித்யவதிக்கு மீண்டும் சிம்மவர்மனை சீண்டும் எண்ணம் வர வேகமாக நெருங்கினாள்.

அவளின் வேகத்தில் சற்றே தனது நடையை நிறுத்தி பதட்டத்தை மறைத்து “ என்ன??” என முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு சிம்மவர்மன் வினவ

‘ அச்சச்சோ சிம்மு கம்முன்னு இருக்குன்னு நினைச்சா சும்மா கும்முன்னு விறைச்சுக்கிட்டு நிற்குறாரே. எப்பிடி சமாளிக்குறது’ என மனதில் எண்ணிக்கொண்டு

“ அத்….. அத்தான்…. அது…. அது….” என நித்யவதி தயங்க

“ சும்மா பயந்தமாதிரி நடிக்காம என்னன்னு சொல்லு” என மீண்டும் சிம்மவர்மன் கடின குரலில் கேட்க

“ இல்ல காபீ சாப்பிட்டீங்களா டிபன் சாப்பிட்டீங்களான்னு கேட்க…….” என இழுக்க சிம்மவர்மன் அதற்கு பதில் கூறாது பல்லை கடித்துக்கொண்டு முறைத்துவிட்டு சென்றுவிட

“ அப்பாடா தப்பிச்
சோம். நீ எல்லாம் திருந்தவே மாட்டடி” என தன்னைத்தானே திட்டிக்கொண்டிருக்கும் போது தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தனர் ஜானவியும் தென்றலும்.

“ அப்புறம் அத்தை உங்க சின்ன பையன் குணமாகிட்டாரு. எனக்கு என்ன ட்ரீட்டு ஹ்ம்ம்”

“ என் மருமக இந்த வீட்டு வேலைக்காரியா மாறி இருக்கா அவகிட்ட என்ன வேணுன்னு சொல்லி செய்ய சொல்லு நித்தி” தென்றலை முறைப்புடன் பார்த்துக்கொண்டு கூற

“ என்ன அத்தை சொல்றிங்க??. யாரு வேலைக்காரி??” என புரியாமல் கேட்க

“ இதோ இங்க இருக்காங்களே தியாகத்தின் மறு உருவம் அவுங்கதான்” என தென்றலை காட்டி கூறிய ஜானவியிடம்

“ என்ன அத்தை தென்றலை எதுக்கு வேலைக்காரின்னு சொல்றீங்க??” என குழப்பத்துடன் நித்யவதி வினவ

ஜானவி மாயாவதி லீலாவதியின் பேச்சு ருத்ரனின் உடநிலை என காலையில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறிமுடிக்க. அதனை கேட்ட நித்யவதி,

“ நீ என்ன லூசா தென்றல்??. இதை வாழ்க்கைன்னு நினைச்சியா இல்ல நாடகம்ன்னு நினைச்சியா?” என நித்தியவதி கடிய

“ இல்ல அதுவந்து சாரோட உடம்புக்கு……”

“ என்ன உடம்புக்கு நீ வேலைக்காரின்னு சொன்னவுடன் எழுந்து துள்ளி ஓடப்போறானா இல்ல பாவப்பட்டு உன்னைய ஏத்துக்க போறானா. இப்படி எதுவும் நீ சொல்லப்போற பொய்யால நடக்க போறது இல்ல. நீ கஷ்ட படப்போற மத்தவங்க அதை கைகட்டி வேடிக்கை பார்க்கப்போறாங்க. இப்படி நீ கஷ்படவா உன் பாட்டியும் என் அத்தையும் உனக்கு இந்த வாழ்க்கை நிலைக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க”

“ நான் என்ன புதுசாவா கஷ்டப்படப்போறேன் இதுவரைக்கும் நான் எங்க அத்தை வீட்டுல எப்பிடி இருந்தேனோ அப்பிடித்தான் இங்க இருக்க போறேன் இதுல என்னங்க இருக்கு”

“ ஓ!!... அப்போ உனக்கே உன் வாழ்க்கை பத்தி அக்கறை இல்லாதப்போ மத்தவங்க என்னதான் அழுதாலும் ஒன்னும் செய்யமுடியாது தென்றல்” என கூறிவிட்டு யோசனையுடன் நித்யவதி சோபாவில் அமர்ந்து இருந்த ஜானவியின் அருகில் அமர, அங்கே அமைதி நிலவியது.

‘ என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க. நான் என்ன தப்பு பண்ணறேன்னு என்னைய திட்டுறாங்க. எனக்கே தெரியும் இந்த வாழ்க்கை என்னோட தகுதிக்கு மீறினது. அதோட நான் எட்டாவதுதான் படிச்சுருக்கேன். சார் வெளிநாடு எல்லாம் போய் படிச்சுருக்காங்க.

வசதிலையும் ஏணி வச்சா கூட எட்டாது. இது என்ன கதையா இல்ல சினிமாவா பார்த்தவுடன் காதல் வறதுக்கு. அப்படி பார்த்தாலும் சாருக்கு ஏற்கனவே காதலும் இருக்கு. இப்படி எல்லா பக்கமும் தடையா இருக்குற வாழ்க்கைல நான் என்னதான் செய்றதாம்??.

முடிஞ்ச அளவுக்கு வயசான காலத்துல என் ஆத்தாவுக்கு சுமையா இல்லாம இங்க எதோ குடுக்குற வேலைய பார்த்துகிட்டு இருக்கலாம்ன்னா அதுக்கு சண்டைக்கு வாரங்க” என மனதில் பலவித எண்ணங்களுடன் சலித்துக்கொண்டு ஜானவியின் அருகில் அமர்ந்த தென்றல்

“ அம்மா எனக்கு என்ன செய்றேன் ஏது செய்றேன்னு தெரியல. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படியே செய்றேன். அது இந்த வீட்டை விட்டு போக சொன்னாலும் சரி” என விரக்தியாக கூறிய தென்றலை கண்டு

“ பார்த்தியா நித்தி இப்போ கூட எப்பிடிம்மா என் வாழ்க்கையை சரி பண்றது என் புருசனுக்கு எப்பிடி என்னைய பிடிக்கவைக்கிறதுன்னு கேட்குறாளா இங்க இருந்து போறதுல குறியா இருக்கா” என ஜானவி குறைபட
 
“ நடக்குறதை பேசுங்கம்மா. அப்படியே சாருக்கு என்னைய பிடிச்சுட்டாலும். கழுத்தை பிடிச்சு தள்ளாம இருந்தா சரிதான்” என தென்றலின் முணுமுணுப்பில்

“ என்ன முணுமுணுக்குற??” என கோவமாக கேட்ட நித்யவதியிடம்

“ இல்ல… அது…. அது… எப்படி நடந்துக்கணும்ன்னு கேட்டேன்”

“ நீ??”

“ ஹ்ம்ம்…”

“ இதை நான் நம்பனும்”

“ இல்லங்க……”

“ இங்க பாரு நான் உனக்கு அக்கா முறை. முதல்ல என்னைய அக்கான்னோ இல்ல நித்தினோ பேரு சொல்லி கூப்புடு”

“ ஹ்ம்ம் சரிக்கா”

“ அப்புறம் அத்தை இவ இங்க வேலைக்காரின்னு சொன்னது எல்லாம் அப்படியே இருக்கட்டும். ருத்ரன் குணமாகி வரதுக்குள்ள நாம இவளை ருத்ரனுக்கு பிடிக்குற மாதிரி கொஞ்சமா நம்மளால முடிஞ்ச அளவுக்கு மாத்தலாம். என்ன சொல்றிங்க??. அந்த பொறுப்பையும் நானே ஏத்துக்குறேன்” எனக்கூறிய நித்யவதியை கண்டு சந்தோஷமடைந்த ஜானவி

“ நீ சொல்றமாதிரி செய்யலாம் நித்தி. எப்பிடியோ தென்றலும் ருத்ரனும் சேர்ந்து நல்ல இருந்தா சரிதான்” என ஜானவி கரகரப்பான குரலில் கூறினார்.

அதற்கு பின் காலங்கள் வேகமாக ஓட இரு மாதங்கள் கடந்த நிலையில் யாருடைய வாழ்க்கையில் மாற்றங்கள் வந்ததோ இல்லையோ ருத்ரனுக்கும் தென்றலுக்கு பல மாற்றங்கள் நடந்தது.

ருத்ரனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது எல்லாருடனும் பேச ஆரம்பித்த பின்னும் இதுவரை சிந்தியாவை பற்றி யாரிடமும் ருத்ரன் கேட்காததால் யாரும் அவளை பற்றி ருத்ரனிடம் பேச வில்லை.

மேலும் ஓரளவுக்கு யாருடைய உதவி இல்லாமல் சற்றே சிரமத்துடன் நடக்க ஆரம்பித்துள்ளான். ஆனால் இதுவரை ருத்ரனும் தென்றலும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை. ஜானவியும் நித்தியவதியும் சந்தித்துக்கொள்ள விடவில்லை.

ருத்ரனும் விழித்திருக்கும் நேரம் எல்லாம் எதோ ஒரு தீவிர சிந்தனையில் இருப்பதால் அதிகபட்சம் நடைப்பயிற்சி தவிர மற்ற நேரங்களில் அறைக்குள் தான் இருக்கிறான்.

தென்றலுக்கு முதலில் மாற்றத்தை ஆடையில் இருந்து ஆரம்பித்தாள் நித்யவதி. சுடிதார் போடமாட்டேன் என அடம்பிடித்த தென்றலை போராடி நாட்டுப்புற சேலை கட்டுலிருந்து சாதரணமாக சேலையை கட்டும் முறையை மட்டும் தான் மாற்றிக்கொண்டாள்.

அதில் ஜானவிக்கும் நித்யவதிக்கும் ஏக கடுப்பு. இருந்தாலும் போக போக மாற்றிக்கொள்ளலாம் என பொறுமையாக இருக்கின்றனர். அடுத்து ஓரளவுக்கு தென்றலை வெளிப்படையாக பேச வைக்க முயற்சி செய்தனர்.

எது சொன்னாலும் தலையை கீழே குனிந்துகொள்வதையும் பதில் சொல்லாமல் அமைதியாக கடந்து செல்வதையும் குறைத்தனர். ஆனால் மாற்றமுடியவில்லை.

அடுத்தது ஆங்கிலத்தில் பேச நித்யவதி பயிற்சி குடுக்க வார்த்தைகளை தெரிந்துகொண்டாள் தவிர தென்றலால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. பேச பிரியப்படவும் இல்லை.

கடுப்பான நித்தியவதி “ ஏன்??” என கேள்வி எழுப்ப

“ நான் என்ன english ல பேசி வெளில வேலைக்காக்கா போக போறேன். உங்ககிட்ட அம்மாகிட்ட என் ஆத்தாகிட்ட அப்புறம் பொன்னிகிட்ட பேச எதுக்கு English” என கேள்வி எழுப்ப அதில் மீண்டு கடுப்பான நித்யவதியால் பல்லைமட்டும் கடிக்க முடிந்தது.

இந்த இரு மாதங்கள் கடந்த நிலையில் காலையில் ஏழுமணிக்கு வழக்கம் போல தோட்டத்தில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு ருத்ரவர்மன் ஹாலில் இருந்த நியூஸ் பேப்பரையும் எடுத்துக்கொண்டு தன்து அறைக்கு செல்ல எண்ணுகையில் “ ருத்” என்ற கொஞ்சலான பெண்ணின் குரலில் நின்று திரும்பி பார்த்த ருத்ரவர்மன் அங்கு ஜீன்ஸ் பேண்டும் ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற டாப்பும் அணிந்து முடியை குதிரைவால் போட்டு கையில் போனும் ஒரு பையும் வைத்துக்கொண்டு சிரிப்புடன் நின்றுகொண்டிருந்த ஒரு இருபத்தைந்து வயது யுவதியை பார்த்து புருவம் சுருக்கி யோசிக்கையில்,

“ ஹேய்!!.... ருத் உன் உடம்பு இப்போதான் சரி ஆகிட்டு வருது அதுக்குள்ள போட்டு யோசிக்காத. என்னைய அடையாளம் தெரியல அதானே ருத்” என சொல்லிக்கொண்டு ருத்ரவர்மன் அருகில் வந்த அந்த யுவதி

“ நான் தான் ருத் ஷாலு”

“ ஹேய்!!... ஷாலு what a pleasant surprise. எப்பிடி இருக்க ??. பார்த்து ரொம்ப நாலு ஆச்சுல”

“ ரொம்ப வருஷம் ருத்”

“ ஹ்ம்ம் ஆமா ஆமா சரி நீ டாக்டர்க்கு படிச்சியே முடிஞ்சுச்சா”

“ முடிச்சு பேஷண்டை பார்க்க வீட்டுக்கே வந்துருக்கேன் பாரு”

“ பேஷண்டா??......”

“ ஹ்ம்ம் நீ தான்”

“ அது சரி. ஆனா உங்க அப்பா தானே எனக்கு treatment கொடுக்குறது”

“ அப்பா டெல்லிக்கு ஒரு கான்பிரென்ஸ் விஷயமா போயிருக்காங்க . வர ஒரு இருபது நாள் ஆகும். அதான் அதுவரைக்கு என்னைய உனக்கு treatment குடுக்க அனுப்பிருக்கார்”

“ ஓ!!... சரி சரி முதல்ல உட்காரு” என சோபாவை காட்டி கூறிவிட்டு அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான் ருத்ரவர்மன்.
அந்த நேரம் தோட்டத்தில் காய்கறிகளை பறித்துக்கொண்டு சமையற்கட்டிற்கு வந்துகொண்டிருந்த பொன்னியை கண்ட ருத்ரவர்மன் “ பொன்னி” என அழைக்க

“ என்னங்கையா??”

“ இவுங்க டாக்டர் விஜயனோட பொண்ணு. இன்னும் இருபது நாளைக்கு இங்க வருவாங்க என்னைய பார்க்க. அதனால இவுங்களுக்கு என்ன வசதி வேணுமோ இல்ல எதாவது உதவியோ தேவை பட்ட செய். அப்புறம் இப்போ ரெண்டு பேருக்கும் குடிக்க காபி கொண்டுவா” என கூற

“ சரிங்கய்யா” என கூறிவிட்டு பொன்னி விரைவாக சமையல் அறைக்கு செல்ல அங்கு தென்றல் ஏற்கனவே திருவாசகத்திற்கு ஜானவிக்கு காபி போட்டு தயார் செய்துவைத்ததை கண்டு

“ அம்மா பெரிய ஐயாவும் அம்மாவும் இன்னும் கீழ வரலைல அதுக்குள்ள ஹாலுல இருக்குறவங்களுக்கு இந்த காபிய குடுக்குறீங்கலாமா??. நான் மறுபடியும் காபி போட்டுடுறேன்”

“ சரி அப்போ நீங்க போய் குடுங்க பொன்னிக்கா. நான் காபி போடுறேன்”

“ இல்லம்மா நேரமாச்சு நான் சாம்பார் வச்சுக்கிட்டே காபி போட்டுடுவேன்”

“ ஹ்ம்ம் சரி பொன்னிக்கா நான் போய் கொடுக்குறேன்” என கூறிக்கொண்டு காபியை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு விரைந்தாள் தென்றல்.

எப்பொழுதும் இந்நேரம் ருத்ரவர்மன் அவனுடைய அறையில் இருப்பான் என எண்ணிகொண்டு எதார்த்தமாக காபி உடன் வந்த தென்றல் அங்கு சோபாவில் இருந்த ஷாலுக்கு சின்ன சிரிப்புடன் காபியை குடுத்துவிட்டு எதிர் சோபாவில் இருந்த ருத்ரவர்மனுக்கு குடுக்க திரும்பிய தென்றல் திக் பிரம்மையுடன் அதிர்ந்து நிற்க;

அதே நேரம் தனது எதிரில் நிற்கும் தென்றலை கண்டு உறுத்துவிழித்த ருத்ரவர்மன் அதிர்ச்சியுடனும் கோவமாகவும் தனது உடல் நிலையை மறந்து வேகமாக எழுந்து நின்று தனது கழுத்து நரம்புகள் புடைக்க கோவத்தை கட்டுபடித்துக்கொண்டே,

“ நீ!!.... நீ!!.... அந்த பட்டிக்காடுல. என்ன தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வந்துருக்க. என் முன்னாடி தைரியமா வேற நிக்குற” என கத்த அதில் பயத்தில் கையில் இருந்தா காபி தட்டை கீழே போட்டாள் தென்றல்.
இந்த சத்தத்தில் அனைவரும் ஹாலிற்கு விரைய அதே நேரம்,

“ சொல்லு எதுக்கு இங்க வந்த??” என மீண்டு ருத்ரவர்மன் கத்த

“ கா….. கா….. காபி குடுக்க வந்தேன்” என தென்றல் பயத்தில் வார்த்தைகள் திணற கூறியதை கேட்டு மேலும் கடுப்படைந்த ருத்ரவர்மன்

“ ஏது உங்க ஊருல இருந்து காபி குடுக்க வந்தியா??” என நக்கலாக வினவ பதில் ஏதும் கூறாது கலங்கிய விழிகளை மறைத்துக்கொண்டு தலையை குனிந்து நிற்க;

அதற்குள் அங்கு விரைந்த ஜானவி,

“ ருத்ரா என்னப்பா என்ன பிரச்சனை??” என தென்றலை மறைத்துக்கொண்டு கேட்க

“ என்ன பிரச்சனையா??. எல்லாமே பிரச்சனைதான் என்னைக்கு இவளை பார்த்தேனோ அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு பிரச்சனை. என் வாழ்க்கைல கஷ்டப்பட, அன்னைக்கு அத்தனைபேருக்கு முன்னாடி அசிங்கபடன்னு எல்லாத்துக்கும் காரணம் இவதான். என் காதல் என்னையைவிட்டு போனதுக்கு கூட இவதான் காரணம்” என மீண்டும் ருத்ரவர்மன் கத்த தென்றலோ

“ கருப்பா இவரு பாவம் எதோ பிரச்சனை பிரச்சனைன்னு கத்துறாரு முதல்ல என்னைய இவருகிட்ட இருந்து காப்பாத்து அப்புறம் அந்த பிரச்சனைகள்கிட்ட இருந்து இவரை காப்பாத்து” என மானசீகமாக வேண்டிக்கொண்டிருந்தாள்.

அதே நேர தனது அறையில் இருந்து வெளியில் வந்த ராஜவர்மன் அங்கு நடப்பதை கண்டு கொள்ளாது ஷாலு அமர்ந்திருந்த சோபாவின் அடுத்த சோபாவில் அமர்ந்து

“ பொன்னி காபி கொண்டுவா” என உரக்க கூற
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொன்னி வேகமாக சமையல் அறைக்கு சென்றாள் காபி எடுத்துவர. அதனை கண்ட ஜானவி,

“ டேய் ராஜா இங்க பாரு ருத்ரன் கத்துக்கிட்டு இருக்கான். நீ என்ன கண்டுக்காம இருக்க. அவனோட உடம்புக்கு இப்படி கத்தி டென்ஷன் ஆக கூடாது. நீ சொல்லுடா” என ஜானவி வேகமாக ராஜவர்மனிடம் கூற

“ அம்மா அவனுக்கே அவனோட உடமபை பத்தி அக்கறை இருக்கனும் தேவை இல்லாம நாம அதை பத்தி எல்லாம் கேட்ககூடாது” என கூறி கொண்டிருக்கையில் காபியோடு வந்த பொன்னியிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு போனை பார்த்துக்கொண்டிருந்தான்

அதனை கண்ட ஜானவி ‘ இவனை எல்லாம்…..’ என பல்லை கடித்துக்கொண்டு மீண்டும் ருத்ரனிடம் திரும்பி,

“ ருத்ரா நீ இப்போ அறைக்கு போப்பா. மீதத்தை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்”

“ என்ன அப்புறம் பேசலாம். அது எல்லாம் முடியாது. அவள் இனிமே என் கண் முன்னாடி இருக்க கூடாது. இப்பவே இந்த வீட்டை விட்டு போக சொல்லுங்க” என மீண்டு கத்தினான்

“ நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு ருத்ரா” என ஜானவி மீண்டும் பேச வருகையில் இடைபுகுந்த ருத்ரன்

“ எனக்கு எதுவும் கேட்க வேணாம். இவ இப்போ இங்க இருக்க கூடாது அவ்வளவுதான்” என ஜானவியிடம் கூறிவிட்டு தென்றலை நோக்கிய ருத்ரன்

“ ஹேய் உனக்கு காது கேட்குமா இல்ல உன் கிழவி ஒன்னு இருக்குமே அதுமாதிரி உனக்கும் காது கேட்காம போயிடுச்சா நான் இவ்வளவு சொல்றேன் அசையாம நிக்குற முத்தல்ல இங்க இருந்து போ…… போடி……” என கத்த தென்றல் அசையாது கலங்கிய விழிகளுடன் ருத்ரனையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

அதே நேரம் ஜானவிக்கு ருத்ரனின் பேச்சில் எதோ புரிவது போல் இருந்தது ‘ இவனுக்கு எப்படி இவளோட பாட்டி பத்தி தெரியும்??. முன்னாடியே இவங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா??. ஆனா தென்றல் சொல்லவே இல்ல. இவன் வேற ஏன் இவ்வளவு கோவமா இருக்கான்??. இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே’ என யோசித்துக்கொண்டு ருத்ரனை காண அவன் தென்றலை தன் கண்களாலையே எரித்துக்கொண்டிருதான்.

plz drop ur comments friends
and thanks for supporting friends

:love: :love: :love:
 
Top