Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(14)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(14)

தென்றல் கலங்கி கொண்டிருப்பது அறியாது ஜானவி ருத்திரனின் அருகில் இருந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த டாக்டர் விஜயன்,

“ ஜானவிமா அதான் ருத்ரனுக்கு சுயநினைவு வந்துடுச்சுல. அப்புறம் எதுக்கு இப்படி அழற??”

“ இல்ல அண்ணா இத்தனை நாளு என் மகன் குணமாகிடுவான்னு எனக்குள்ள மந்திரமாதிரி சொல்லி சொல்லி என்னைய நானே தேத்திக்குவேன். இன்னைக்கு என் மகன் உண்மையாவே குணமாகிட்டான். என்னால சந்தோச தாங்க முடியல” என ஜானவி கூற திருவாசகமும் கலங்கிய விழிகளை துடைத்தார்.

அதனை கண்ட விஜயன் “ ஏண்டா அதான் உன் ஜோஸ்யக்காரன் சொன்னான்ல ருத்ரனுக்கு கல்யாணம் பண்ணிவைச்சா குணமாகிடும்ன்னு. அது மாதிரி ஆகிடுச்சு. நீ சும்மாவே ஜோசியம்ன்னா அப்படி நம்புவ. இனி ஜோசியாக்காரனுக்கு கோவிலே கட்டிடுவ போல”

“ இதுல என்னடா சந்தேகம் உனக்கு” என திருவாசகம் சிரிப்புடன் கூற

“ அதுக்கு முன்னாடி எனக்கு பில்லை கட்டிடுடா” என பாவம் போல கிண்டலுடன் கூறிய விஜயனை பார்த்து

“ அட நீங்க வேற அண்ணா இனிமே அவரு குளிக்கனும்னாகூட ஜோஸ்யரைதான் கேட்க போறாரு” என ஜானவி சிரிப்புடன் கூற அதற்கு பதில் ஏதும் கூறாது திருவாசகமும் அமைதியாக சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.

அவர் அறிவார் ருத்ரன் குணமடைந்ததால்தான் மூன்று வருடம் சண்டையை மறந்து பழைய ஜானவியாக தன்னை கிண்டல் செய்தது. எனவே அதனை பெரிதுபண்ண விரும்பாமல் திருவாசகமும் அமைதியாக நிற்க;

அதனை கண்டு ‘ இவங்க சண்டையும் சீக்கிரம் முடிவுக்கு வந்தா எல்லாம் நல்லா இருக்கும்’ என இவர்களின் குடும்ப சண்டை தெரிந்த விஜயனும் எண்ணிக்கொண்டு தனது பணியை தொடர்ந்தார்.

ஆனால் ஜானவி திருவாசகத்துடன் சகஜமாக பேசியதை பார்த்து,

“ அக்கா இந்த அண்ணனும் ஜானவியும் மறுபடியும் ஒன்னு சேர்ந்துடுவாங்க போல. நாம எவ்வளவு பேசி அண்ணனை உசுப்பேத்தி ரெண்டு பேரையும் பிரிச்சுவச்சா இந்த அண்ணனும் ஒன்னும் சொல்லாம கம்முன்னு இருக்கு” என லீலாவதி மாயாவதியின் காதில் கிசுகிசுக்க

“ ம்ப்ச் இப்போ அது பெரிய விஷயம் இல்ல. நான் அடுத்து சொல்ல போற விஷயம் ஜானவிக்கு எவ்வளவு அதிர்ச்சின்னு பாரு” என மாயா கூறியதை கேட்ட லீலாவதி

“ அக்கா என்ன பேச போற??”

“ பாரேன்….” என கூறிவிட்டு திருவாசகத்தை நோக்கி

“ அண்ணா” என அழைக்க

“ என்ன மாயா??”

“ அண்ணா ருத்ரன் குணமாகப்போறதா நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா…..”

“ என்ன மாயா ஆனா….???”

“ இல்ல இப்போவே இவன் சின்னுன்னு சொல்லி அலறுறான். ஒரு வேளை நல்லா சுயநினைவு வந்தப்புறம் நாம கல்யாணம் விஷயம் சொன்னா நிச்சயம் அவனுக்கு அது மன அழுத்தம் குடுக்கும்” என மாயாவதி கூறிக்கொண்டிருக்கையில்

“ ஏன் இதை அண்ணனும் தங்கச்சிகளும் ருத்ரன் கோமாவுல இருக்கையிலே கல்யாணம் பண்ணிவைக்குறப்போ தெரியலையோ??” என கோவமாக இடைமறித்து ஜானவி கூற

“ ம்ப்ச் அது இல்ல அண்ணி அப்போ ருத்ரன் பிழைச்சா போதும்ன்னு ஜோசியர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணி வச்சோம். இப்போ எதார்த்தத்தை பார்க்கணும்ல” என மாயா கூறுகையில் மறுபடியும் ஜானவி ஏதோ கூற வருகையில்,

“ நீ இப்போ என்ன சொல்ல வர மாயா??” என திருவாசகம் இடைபுகுந்து வினவ

“ அதான் அண்ணா விஜயன் சார் இங்கதான் இருக்காரு அவருக்கிட்டையே கேளு. இந்தமாதிரி நீ மயக்கத்துல இருக்கையிலே இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. அப்பிடின்னு ருத்ரன்ட சொன்னா அவனுக்கு அது மன அழுத்தத்தை கொடுக்குமா இல்லையான்னு” என பாவம் போல மாயாவதி கூற

திருவாசகம் எதுவும் கூறாது விஜயனை நோக்கினார்.

“ ஹ்ம்ம் ஆமா திரு. இப்போவே அவன் எழுந்தவுடன் எப்படி நம்மகிட்ட நடந்துக்க போறான்னு தெரியல. சிந்தியாவை பத்தி வேற நாம சொல்லணும். இதுல கல்யாணம் ஹ்ம்ம்…….. இதை கொஞ்ச நாள் கழிச்சு சொன்னா நல்லதுன்னு தோணுது. ஏன்னா கோமாவுல இருந்து உடனே சரி ஆகிடமுடியாது இல்லையா.

மூளை கொஞ்சம் கொஞ்சமா நடப்பையும் கடந்த காலத்தையும் ஏத்துக்கணும். அதுக்கு நாம கொஞ்சம் நேரம் குடுக்கணும். அதனால மாயா சொல்றமாதிரி இப்போதைக்கு அவனுடைய கல்யாணத்தை பத்தி சொல்ல வேணாம்” என விஜயன் கூறி முடிக்க; உடனே லீலாவதி,

“ ஆமா அண்ணா நாம இப்போதைக்கு எதுவும் அவனுக்கு சொல்லவேணாம். நமக்கு ருத்ரனோட நலன்தான் முதல்ல முக்கியம்” என லீலாவதியும் கூற சரி எனும் விதமாக திருவாசகம் தலை அசைத்தார். இதனை கண்டு பல்லை கடித்த ஜானவி,

“ அப்போ இந்த பொண்ண என்ன பண்றதாம்??” என தென்றலின் அருகில் சென்று கேட்க

“ பேசாம எல்லாம் சரி ஆகுறவரைக்கும் அவுங்க பாட்டி வீட்டுல இருக்கட்டும். இங்க இருந்தா நாம என்னன்னு சொல்லி அறிமுகபடுத்தறதாம். சொந்தகாரங்ன்னு சொல்ல முடியாது. பார்த்த சுத்த பட்டிகாட்டுன்னு தெரியுது. வேலைக்கு வந்தவன்னு சொல்ல முடியாது. ஏன்னா படிக்கவும் இல்ல. வேணும்ன்னா வேலைக்காரின்னு சொல்லலாம். அதுக்கு நீங்க ஒத்துக்க மாட்டிங்க” என லீலாவதி பேசிக்கொண்டிருக்கையில்

“ இல்ல நான் இங்க வேலைகாரியாவே இருக்கேன் ம்மா…” என அதுவரை அமைதியாக இருந்த தென்றல் கூற

“ ம்ப்ச் தென்றல் நீ வேற ஏன்ம்மா??. உன்னைய நான் இங்க எஜமானின்னு சொல்லிக்கிட்டு இருக்கே. ரொம்ப சாதரணமா வேலைக்காரியா இருக்கேன்னு சொல்ற” என ஜானவி சலிப்புடன் கூற

“ இல்லமா நான் எங்க ஊருக்கு போறதுக்கு பதிலா இங்க ஏதாவது உதவிமாதிரி செஞ்சுகிட்டு உங்க கூடவே இருக்கேன்மா”

“ நீ ஏன் ஊருக்கு போகணும்??. இவுங்க சொன்னா போயிருவியா??. இல்ல போகவிட்டுடுவேனா. நீ என்ன பேசிகிட்டுஇருக்க. இல்ல உங்க சின்னஆத்தாதான் சும்மா விட்டுடுவாங்களா??.” என ஜானவி பேசிக்கொண்டிருகையில்

மாயாவதி, “ அண்ணா பேசாம இவளை ருத்ரன் பார்க்கமுடியாம பார்த்துக்குவோம். ஒருவேளை இவளை பார்த்து யாருன்னு கேட்டுடா வேலைக்காரின்னு சொல்லிக்கலாம் கொஞ்ச நாள்தானே இவளும் இங்க இருந்தமாதிரி ஆச்சு நம்ம ருத்ரனக்கு பிரச்சனை இல்ல” என கூற, அதற்கு எதுவும் கூறாது திருவாசகம் தென்றலை காண,

“ நா…. நான்… இவங்க சொன்னமாதிரியே இருக்கேனுங்க” என மெல்லிய குரலில் கூற திருவாசகம் எதுவும் கூறாது சரி எனும்விதமாக தலை ஆட்டிவிட்டு சென்றுவிட்டார். விஜயனும் அடுத்து சென்றுவிட, தென்றலை முறைத்து கொண்டிருந்த ஜானவியை பார்த்து மாயாவதி லீலாவதியிடம்,

“ ஏன் லீலா இந்த பரம்ம்ம்பரை தாலியை பத்தி நீ என்ன நினைக்குற??”

“ அட!!... நீ வேற அக்கா. என்ன தான் நாம நல்லது பண்ண நினைச்சாலும் சிலருக்கு தலையில என்ன இருக்கோ அப்படித்தானே நடக்கும். வா நாம போவோம்” என கூறிக்கொண்டு அங்கிருந்து இருவரும் நகர்ந்தனர் தென்றல் ஜானவியை நெருங்கி,

“ அம்மா அது….”

“ நீ எதுவும் பேசாத தென்றல். நான் ஒன்னு நினைச்சா நீ உன் இஷ்டத்துக்குத்தான் இருக்க”

“ அப்படி இல்லமா நீங்க எனக்கு நல்லது பண்ணத்தான் நினைக்குறிங்க ஆனா இப்போ என்னையைவிட சாரோட உடம்புதான் முக்கியம். அதனால தயவுசெய்து கோவப்படாதிங்கமா” என தென்றல் கெஞ்ச

அதற்கு ஜானவி எதுவும் கூறாது அமைதியாக ருத்ரனை பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார் . தென்றல் ருத்ரனை நெருங்கினாள்.

“ சார் நீங்க குணமானதை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்போவே உங்களுக்கும் உங்க வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட தகுதி இல்லாத நான் போயிருப்பேன் சார். ஆனா நன்றி கடனா கொஞ்ச நாளைக்கு உங்களுக்கு வேலைக்காரியா இருந்துட்டு அப்புறம் போயிடுறேன் சார்” என கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறி ஜானவியை தேட,

அவர் தோட்டத்தில் இருப்பதை பொன்னி மூலம் அறிந்து அங்கு சென்றாள். அப்போது ஜானவி தோட்டத்தில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து யாருக்கோ போன் செய்துக்கொண்டிருந்தார். அதனை கண்டு தென்றல் அங்கிருந்து செல்ல எண்ணுகையில்,

‘ தென்றல் இங்க வா’ என விதமாக தந்து இடதுகையை அசைத்து அழைக்க

“ இல்லமா நீங்க பேசிட்டு கூப்புடுங்க. நான் இங்க இருக்கேன்”

“ நீ வா நான் உன் ஆத்தாவுக்குத்தான் பேசப்போறேன்” என போனை காதில் இருந்து எடுத்துவிட்டு தென்றலிடம் கூற

தென்றல் வேகமாக ஜானவியை நெருங்கவும் கண்ணன் போனை எடுக்கவும் சரியாக இருந்தது.

“ ஹலோ நான் சென்னையில் இருந்து தென்றல் மாமியார் ஜானவி பேசுறேன். கண்ணன்….”

“ ஹ்ம்ம் நான் கண்ணன்தான் பேசுறேனுங்க. அங்க தென்றல் நல்லா இருக்காளா??”

“ ஹ்ம்ம் நல்லா இருக்கா. நான் சின்னாத்தா அத்தைகிட்ட பேசணுமே இப்போ பேசலாங்களா??.”

“ ஹ்ம்ம் இப்போ மத்திய சாப்பாட்டுக்கு வீட்டுக்குத்தான் வந்துருக்கேன். இருங்க அம்மாகிட்ட கொடுக்குறேன்”

“ ஹ்ம்ம்”

“ அம்மா…. அம்மா….” என திண்ணையில் அமர்ந்து இருந்த சின்னாத்தாவை உரக்க அழைத்த கண்ணன்

“ இந்தாம்மா” என போனை speaker ல் போட்டு சின்னாத்தாவின் காதின் அருகில் வைத்தான்

“ அம்மா தென்றல் மாமியார் பேசுறாங்க சென்னையில இருந்து” என சத்தமாக கூற கண்ணனின் சத்தம் கேட்டு சுந்தரியும் திண்ணைக்கு வந்தாள்.

“அப்படியா??. ஹல்லோ…. நான் பூந்தென்றல் செல்வி புள்ளையோட பாட்டி சின்னாத்தா பேசுறேன்”

“ அத்தை நான் ஜானவி பேசுறேன். கேட்குதா??”

“ சாவியா??. எப்பிடித்தா இருக்க??. நல்ல இருக்கியா??. எம்புட்டு பேத்தி எப்பிடி இருக்கு?. கொஞ்சம் சத்தமா பேசுத்தா” என சின்னாத்தா பேச

“ ஹம்ம்ஹும்speaker ல போட்டே இந்த கிழவிக்கு கேட்கமாட்டேன்குது . இதுல
இதுகிட்ட அப்படி என்னத்தை பேச போறாங்க” என சலித்துக்கொண்டு சுந்தரி
இவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

“ ஹ்ம்ம் நான் நல்லா இருக்கேன் அத்தை. தென்றலும் நல்லா இருக்கா. நான்
உங்ககிட்ட ஒரு நல்ல செய்தி சொல்லத்தான் போன் பண்ணுனே”

“ ஆத்தி !!!......கல்யாணம் ஆகி ரெண்டு நாளுக்குள்ள நல்ல செய்தியா??” என சுந்தரி
சத்தமாக கூற

அதனை கவனித்த சின்னாத்தா,

“ சாவி செத்த இருத்தா. இங்க ஒரு பல்லி சத்தம் போடுது அடிச்சு தூக்கிப்போட்டு
வரேன்.” என ஜானவியிடம் கூறிவிட்டு
 
Last edited:
“ அடியே கூறுகெட்டவளே உன் புத்தி என்ன புண்ணாக்கு திங்கவா
போயிருக்கு. நல்ல செய்தின்னா உனக்கு அந்த நினைப்புதானா. போ போய் பொங்குற வேலைய பாரு. இல்ல அன்னைக்கு குடுத்த மாதிரி வேணுமா??” என சின்னாத்தா சுந்தரியை முறைத்துக்கொண்டு கூற

“ ஆத்தி கிழவி காதுல விழுந்துடுச்சு போல” என பதறிக்கொண்டு சுந்தரி
திண்ணையில் இருந்து நகர்ந்து வாசலில் நின்றுகொண்டு இவர்களின்
உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

‘ இவ எல்லாம் திருந்தவே மாட்டா’ என சலித்துக்கொண்டு

“ ஹ்ம்ம் சொல்லுத்தா என்ன சந்தோசமான சேதி??”

“ அது உங்க பேரன். அதான் தென்றல் வீட்டுக்காரனுக்கு முழிப்பு வந்துடுச்சு அத்தை”

“ அடி ஆத்தி!!... என்னத்தா சொல்லுற?. நெசமாலுமா??”

“ஹ்ம்ம் ஆமா அத்தை எல்லாம் என மருமக வந்த நேரம். என் பையனுக்கு குணமாகிடுச்சு”

“ நான் கும்புடுற கருப்ப சாமி கைவிடல ஆத்தா. என் பேத்தி வாழ்க்கை இனிமேட்டுக்கு நல்லா இருக்கு. சரி உன் மவன்கிட்ட சொல்லியாச்சா செல்வி
பிள்ளைதான் அவன் பொண்டாட்டின்னு??”

“ அது… அது…”

“ என்னத்தா இழுக்கிற??”

“ இல்ல அத்தை இப்போதான் முழிப்பு வந்துருக்கு அதான் கொஞ்ச உடம்பு தேறினவுடன் சொல்லலாம்ன்னு”

“ ஓ!!!.... ஆத்தா எப்பவும் ஆறுன கஞ்சி பழங்கஞ்சி. அதனால சூட்டோட எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விஷயத்தை
சொல்லிப்புடுங்க”

“ ஹ்ம்ம் சரி… சரி.. அத்தை”

“ சரித்தா என் பேத்தி பக்கத்துல இருந்தா குடுவே”

“ ஹ்ம்ம் அது….” என ஜானவி தென்றலை கண்டு போனை குடுக்க தென்றல் கலங்கிய விழிகளுடன் மறுப்பாக தலை அசைத்தாள். அதனை கண்டு,

“ அத்தை அவ அவளோட அறையில இருக்கா நான் வேணும்ன்னா கொஞ்ச நேரம் கழிச்சு கொடுக்கவா??”

“ இல்ல வேணாமத்தா. அவ பக்கத்துலதான் இருக்கனும் எங்க என்கிட்டே பேசுனா என்னைய பார்கனும்போல இருக்குன்னு சொல்லி கிளம்பி வர
சொன்னாலும் சொல்லிடுவான்னு பயந்துகிட்டு என்கிட்ட
பேசமாட்டேன்றாளா. சரி சரி இருக்கட்டும்த்தா. அவ நல்லா இருந்தா
அதுவே போதும்” என கூறிவிட்டு போனை கண்ணனிடம் குடுத்துவிட்டு
கருப்ப சாமி கோவிலுக்கு கிளம்பி சென்றார் சின்னாத்தா.

ஜானவியும் கண்ணனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு தென்றலை
காண அவள் கீழே அமர்ந்து எதோ யோசனையில் இருந்தாள். அவளை
கண்டு,

‘ ம்ப்ச் இந்த பொண்ணு இந்த வயசுல எவ்வளவு கஷ்டம் தான்
அனுபவிக்கும் புகுந்தவீட்டுல வேலைக்காரி மாதிரி நடத்துறதைவிட
வேலைக்காரின்னு சொல்லும்போது எவ்வளவு வலிக்கும். ஆனா இந்த
பொண்ணு அதையும் சகிச்சுக்குது .இப்போ என்ன செய்றதுன்னே எனக்கு தெரியலையே’ என மனதில் எண்ணிக்கொண்டு

“ தென்றல் கோவில்ல சொல்லிக்கிட்டு இருந்த மாறவர்மன் கல்யாண கதையை விட்ட இடத்துல இருந்து சொல்லவா??. கேட்குரிய??. இல்ல இன்னொரு நாள் சொல்லவா??.” என தென்றலின் கவனத்தை திசை திருப்ப ஜானவி கேட்க

“ இல்லமா இப்போவே கேட்குறேன் சொல்லுங்க. ஏன் நீங்க சரண்யா காதலைச்சவரை பார்த்து அதிர்ச்சி ஆனீங்க??”

“ ஏன் நாங்க சரணவனை பார்த்து அதிர்ந்தோம்னா??” என ஜானவி மீண்டு கடந்தகாலத்தை சொல்ல ஆரமபித்தார்.

“ சரண்யா இவர்…. இவர்தான் சரவணனா??” என ஜெயா கேட்க

“ ஹ்ம்ம் ஆமாக்கா. ஏன் கேட்குற ??”

“ இப்போதெரியுது சரண்யா அண்ணா எதுக்கு உன் கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னு. இவரோட கை…..” என ஜானவி இழுக்க

“ ஹ்ம்ம் ஆமா மேடம் சரண்யாவோட அப்பா என்னோட கையை காரணம் காட்டித்தான் எங்க காதலுக்கு ஒத்துக்கல” என வேதனையோடு சரவணன் கூற

அதனை கேட்டு பெண்கள் மூவரும் வருந்தினர். ஜானவி சரவணனை உற்று நோக்கினார் நல்ல கலையான முகம் மாநிறத்திற்கு சற்று கூடுதல் நிறமும் அளவான உடற்கட்டுடன் நல்ல உயரமாக கம்பீரமாக நிமிர்ந்து நின்றுகொண்டிருந்த சரவணனின் வலது கை மணிக்கட்டுவரை மட்டுமே இருந்தது.

“ மேடம் நான் சின்னவயசா இருக்கும் போதே என்னைய ஆசிரமத்துல விட்டுட்டாங்க. என்னோட பெத்தவங்க யாருன்னே எனக்கு தெரியாது` எனக்கு சின்னவயசுல இருந்தே என் கை இப்படித்தான் இருக்கு. அதிகபட்சம் என்னோட வேலைகள் எல்லாம் என்னோட இடது கைலையே பண்ணிடுவேன்.

யாரோட உதவியும் எனக்கு தேவை இல்ல. அதே நேரம் யாராவது எனக்கு பரிதாபம் பட்டா எனக்கு அழுகை வந்துடும் அதனால நான் யாரும் பரிதாபம் படுறமாதிரி இருக்க கூடாதுன்னு நல்ல படிச்சேன். எனக்கு கிடைச்ச உதவி தொகையில் என்னோட இளங்கலை படிப்பை முடிச்சுட்டு ஆசிரமத்தைவிட்டு வெளியேறி ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு போன்னேன். அப்புறம் படிக்குற ஆர்வத்துல சம்பாரிச்ச காசை வச்சுக்கிட்டு வேலையை விட்டு மறுபடியும் கல்லூரில சேர்ந்து என்னோட முதுகலை படிப்பை தொடர்ந்தேன்.

அங்கதான் சரண்யாவை சந்திச்சேன், என் வாழ்க்கைல முதல்தடவையா என்னைய பார்த்து பரிதாப படாம என்னோட செயல்களை பார்த்து அதிசய படமா சரவணனை சரவணனா பார்த்தா. அப்புறம் பேசி நட்பாகி காதலிச்சோம் எல்லாம் நல்லா இருந்தது அவுங்க அப்பாவுக்கு தெரியுற வரைக்கும்.

ஒரு நாள் அவுங்க அப்பா என்னைய கூப்பிட்டு என்ன பண்ணுற அப்படின்னு கேட்டாங்க . அப்போ நான் ஒரு கம்பெனில வேலைபார்க்க மாசம் சம்பளம் வாங்குறேன். உங்க பொண்ணை நல்லா பார்த்துக்குவேன்னு கிட்டத்தட்ட கெஞ்சுனே. ஆனா அதுக்கு அவர் சொன்னதுதான் மேடம்…….” என கலங்கிய விழிகளை துடைத்து கொண்டு

“ நீ எவ்வளவு சம்பாரிச்சாலும்சரி ஒண்ணுமே இல்லாதவனா இருந்தாக்கூட நான் ஓத்துக்கிட்டு இருந்துருப்பேன். ஆனா உன்னைய மாதிரி இப்படி இருக்குறவங்களுக்கு வாழ்க்கை குடுக்க நான் என் பொண்ணை பெத்து வைக்கல. நீ அவ வாழ்க்கையை விட்டு போயிடு இல்ல, என் பொண்ணுதான் வேணும்ன்னா நாங்க அவ வாழ்க்கையைவிட்டு போயிடுவோம் கடைசிவரைக்கும் உன்னையமாதிரி அவளும் நாங்கல்லாம் இருந்து அனாதையாத்தான் இருக்கனும்ன்னு சொல்லிட்டாரு. என்னால இதை ஏத்துக்கவே முடியல மேடம்.

நான் தனிமையில இருக்கனும்ன்னு சாபம் வாங்கிட்டு வந்துருக்கேன் போல. அதனால என்னைய கட்டிக்கிட்டு சரண்யாவும் எதுக்கு அனாதை ஆகணும்ன்னு முடிவு பண்ணி நான் விலகலாம்ன்னு நினைச்சேன்” என கண்ணீர் சிந்திய சரவணனை நெருங்கிய சரண்யா அவனின் சட்டையை பிடித்து

“ நீ என்ன லூசாடா??” என கேட்க

‘ ங்கே’ என விழித்த சரவணனை பார்த்து

“ நீ என்னைய கட்டிகிட்ட பிறகு நான் எப்பிடிடா அனாதை ஆவேன். நீ நான் நம்மோட குழந்தைகள்ன்னு குடும்பமாதானே ஆவோம்” என கூற

“ இல்ல சரண் உன்னோட அப்பா உன்னோட சொந்தங்கள்….” என சரவணன் கூறிக்கொண்டிருக்கையில்

“ இவுங்க யாரும் என்கூட கடைசிவரைக்கும் வரபோறது இல்லையே. ம்ப்ச் போடா….” என கூறிக்கொண்டு கட்டிலில் சோர்வாக சரண்யா அமர

ஜானவியை பார்த்த சரவணன் “ மேடம் ப்ளீஸ் மேடம் என்னோட சரண்யாவை எனக்கு குடுக்குறீங்களா. நான…. நான் நல்லா பார்த்துக்குவேன். ஒரு வேளை உங்களுக்கு கல்யாணத்துக்கு பிறகு திருப்த்தி இல்லைனா ஏண்டா எங்கவீட்டு பொண்ணை கஷ்டப்படுத்துறன்னு சொல்லி என்னைய நாலு அடிகூட அடிச்சுக்கோங்க. ஆனா என்னோட வாழ்க்கையை எனக்கு குடுத்துடுங்க மேடம் ப்ளீஸ்” என கெஞ்சிய சரவணனை பார்த்து ஜானவிக்கும் ஜெயாவுக்கு பாவமாக இருந்தது.

‘ உடல்ல எதோ ஒரு குறைபாடு இருக்குறதுக்கு அவனோட வாழ்க்கையை குறையா ஆக்குறது எந்த விதத்துல நியாயம். எல்லாம் நல்லா இருக்குறவனுக்கு கட்டிக்குடுத்து அவன்கிட்ட செயல் நல்லா இல்லாம கஷ்டப்படுறதுக்கு இந்தமாதிரி நல்லவனுக்கு கட்டிக்குடுக்கலாம். ஆனா இந்த கலயாணத்தை நிறுத்தினாலும் அண்ணே வேற மாப்பிளைத்தான் சரண்யாவுக்கு பார்ப்பார். சரவணனுக்கே கட்டிக்குடுக்கணும்ன்னா என்ன செய்யலாம்???’ என எண்ணி எதோ யோசனை வந்தவராக

“ ஜெயா எனக்கு உன்னோட உதவி வேணும”

“ என்ன உதவி அத்தை??”

“ நான் சொல்ற மாதிரி நடந்துக்கோ. அப்போ இந்த கல்யாணம் தன்னால நின்னுடும். அண்ணனும் சரண்யா சரவணன் கல்யாணத்தை நடத்திவைப்பாரு” என ஜானவி தனது திட்டத்தை கூற

“ ஆனா அத்தை அப்போ மாறவர்மனுக்கு??….”

“ நான் பண்ணப்போற நல்ல காரியத்தால் நிச்சயம் என் பையனுக்கும் நல்லதுதான் நடக்கும்”

“ ஆனா அத்தை தேவை இல்லாம உங்களுக்கும் மாமாவுக்கும் ஏதாவது பிரச்சனை வந்துடுச்சுன்னா??”

“ ஜெயா பிரச்சனைன்னு பார்த்தா எல்லாமே பிரச்சனைதான். அதனால அது வரும்போது பார்த்துக்கலாம். இப்போ நான் சொல்றமாதிரி செய்வோம் என்ன”

“ சரி அத்தை” என ஜெயா கூறினாள்.

“ அப்புறம் என்ன தென்றல் நாங்க போட்ட திட்டப்படி எல்லாம் நல்லபடியா நடந்துடுச்சு”

“ என்ன திட்டம்மா??”

“ அது ஒன்னும் இல்ல அன்னைக்கு ராத்திரியே ஒரு பனிரெண்டு மணி போல என் அண்ணன் குடும்பத்தையும் நம்ம குடும்பத்தையும் மொட்டை மாடிக்கு வர சொன்னே” என ஜானவி கூற

“ எல்லாருமேவாமா??” என தென்றலின் கேள்விக்கு

“ ஹ்ம்ம் ஆமா தென்றல் மாறவர்மன் உட்பட. அப்புறம் அண்ணன்கிட்ட எங்க வீடு அதாவது இப்போ அண்ணன் இருக்குற எங்க பரம்பரை வீட்டை என் மருமகளுக்கு சீதனமா தரணும் இல்லைனா கல்யாணம்
நடக்கா துன்னு சொல்ல அதுக்கு எங்க அண்ணன் தரேன்னு சொல்லி எப்படியாவது கல்யாணத்தை நடத்தப்பார்த்தான். ஆனா எங்க திட்டப்படி ஜெய ஊடால புகுந்து தரமுடியாது வீடு அவளுக்குதான்னு சொல்லி பிரச்சனை பண்ண;

உங்க மாமனார், மாறன் எல்லாரும் எதுவும் வேணாம் அம்மா தேவை இல்லாம பிரச்சனை பண்ணாதிங்கன்னு என்னைய சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க”

“ அப்புறம் என்னம்மா செஞ்சிங்க??”

“ ஹ்ம்ம் அங்க இருக்குறவங்க யாரோட கவனமும் என் மேல பதியாத மாதிரி எங்க அண்ணன்கிட்ட உன்மகளோட சரவணனுக்கு கல்யாணம் பண்ணிவை. இல்லைனா நீ உன் நண்பர்கிட்ட ஜாதகம்ன்னு பொய்ச்சொல்லி இந்த கல்யாணம் நாடத்துறதை சொல்லுவேன். அப்புறம் எங்க நாயக் குழுமத்துல இருந்து நீ விலகிடணும்ன்னு சொன்னே”

“ அதுக்கு உங்க அண்ணன் ஒத்துக்கிட்டாரா??”

“ ஹ்ம்ம் அவனுக்கு மதிப்பே எங்க குழுமத்துல பங்குதாரரா. இருக்கறதுதான். அத விட மனசு இல்ல. அதோட எங்க மாட்டிக்கிட்டா மரியாதை போயிடும்ல. அதான் நான் பிரச்சனை பண்ணுறதை வச்சு கோவமா கல்யாணத்தை நிறுத்துறமாதிரி நிறுத்தி ஒரு ரெண்டு நாளுல சரவணனுக்கு சரண்யாவுக்கு கல்யாணம் பண்ணிவச்சுட்டான்”

“ அப்போ உங்க பையனுக்கு???”

“ அவனுக்கு அடுத்த நாள் கல்யாணம் நிக்க கூடாதுன்னு தமயேந்திய கல்யாணம் பண்ணிவச்சுட்டாரு உங்க மாமனாரு”

“ நீங்க உண்மைய சொல்லிருக்கலாம்லம்மா”

“ ஹ்ம்ம் சொல்லிருக்கலாம் தென்றல். ஆனா என்னதா இருந்தாலும் அத்தனை பேருக்கு முன்னாடி எங்க அண்ணன் பண்ணுன ஏமாத்துவேலையை சொல்லி எங்க குடும்பத்தை அசிங்க படுத்த விரும்பல. தனியா பேசலாம்னா வாய்ப்பே குடுக்கல. சரின்னு கொஞ்ச நாள் பிரச்சனையை ஆறவிட்டு பேசலாம்னா. இந்த மாயாவும் லீலாவும் இந்த மூணு வருசமா கோவத்தை அப்படியே வச்சுக்குறமாதிரி இந்த பிரச்சனையை தினமும் பேசி பேசி பெருசாகுறாங்க. நானும் முயற்சி பண்ணி பார்த்து கடுப்புல அவுங்களா என்னைய புரிஞ்சு,

அன்னைக்கு நான் ஏன் அப்படி பண்ணுனேன்னு கேட்கட்டும்ன்னு விட்டுட்டேன்”

“ என்னமா தப்பே பண்ணாம இப்படி கஷ்டப்படுறீங்க”

“ கஷ்டம்ன்னு எல்லாம் இல்ல தென்றல். என் மகனுக்கு நல்லது பண்ணிருக்கேன், ஒரு உண்மையான காதலையும் சேர்த்துவச்சுருக்கேன்னு அப்போ அப்போ சந்தோசப்பட்டுக்குவேன். சரண்யாவுக்கு சரவணனுக்கு இப்போ ஒன்றரை வயசுல ஒரு பொண்ணு இருக்கா”

“ ஓ!!”

“ எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா தென்றல். ஒரு வேளை நான் பண்ணுன வேலையால மாறன் ரொம்ப பாதிக்கப்படுவான்னு கவலை பட்டுட்டே இருப்பேன். தமயந்தி இப்போதான் கர்ப்பமா இருக்கா. இந்த விஷயம் கேட்டதுல இருந்து என் மனசுல இருந்த குற்ற உணர்வுகூட இப்போ இல்ல”

“ உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்குமா”

“ சரி சரி வா உள்ள போகலாம்”

“ ம்மா…..”

“ என்ன தென்றல்???”

“ நான் இன்னொரு விஷயம் கேட்கவா??. என்னைய தப்பா எடுத்துக்க மாடீங்கள???”

“ என்ன தென்றல்??. தயங்காம கேளு.”

“ இல்ல இந்த சிந்தியான்றது யாரும்மா??”

“ உனக்கு எப்படி……”

“ அது சாரோட அத்தைங்க இப்போ பேசிகிட்டு இருந்தாங்க. அதான் உங்ககிட்ட கேட்கலாம்ன்னு”

“ அது.. அது… சிந்தியா ருத்ரனோட கடந்தகாலம் தென்றல். அதை பத்தி பேசி ஒன்னும் ஆகா போறது இல்ல.”

“ ஆனா அவுங்களோட நினைவுகள் நிகழ்காலந்தானேம்மா அப்போ தெரிஞ்சுகுறேன்னே சொல்லுறிங்களா??” என தென்றல் கெஞ்சலுடன் கேட்க

மகனின் காதலியை பற்றி எப்படி கூறுவது என தயங்கி நின்றார் ஜானவி


plz drop ur comments friends
and thanks for the supporting friends

:love: :love: :love: பெரிய ud போட்டுட்டேன்
 
Top