Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(11)

Advertisement

Nice ep
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(11)

அனைவரும் உணவு மேஜையில் அமர தென்றலை அழைத்துக்கொண்டு ஜானவி நித்யவதியின் அருகில் அமரவைத்துவிட்டு சமையல் அறைக்கு செல்ல. தன் அருகில் அமர்ந்த தென்றலை பார்த்து,

“ அப்புறம் தென்றல் எப்படி இருக்கு இங்க உங்களுக்கு பிடிச்சுருக்கா??” என சிரிப்புடன் நித்யவதி வினவ

“ ஹ்ம்ம் பிடிச்சுருக்குங்க” என தென்றல் கூறிக்கொண்டிருகையில்

“ அது எப்பிடி நித்தி பிடிக்காம போகும்.
குடிசை வீட்டுல இருந்துட்டு அரண்மனை மாதிரி இருக்குற நம்மவீட்டுல இருக்க இவளுக்கு கசக்குதாமா” என கேட்டுக்கொண்டே மாயாவதி வந்து அமர

தென்றல் எதுவும் கூறாது அமைதியாக தலையை குனிந்துகொண்டாள். அதை கண்ட நித்தி

“ பெரியம்மா அவுங்களும் நம்ம வீட்டுல ஒருத்தவங்க பார்த்து பேசுங்க. மாமாவோ இல்ல அத்தையோ நீங்க பேசுறதை கேட்டா கோவப்படப்போறாங்க”

“ நான் என்ன இல்லாததையா சொன்னே உண்மையாத்தானே சொன்னே கால கொடுமைடா”

“ பெரியம்மா…” என நித்யவதி எதோ கூறவருகையில்

“ நித்தி இது என்ன பழக்கம். இந்த வீட்டு மருமகள் ஆனவுடன் உனக்கு திமிரு வந்துடுச்சா. பெரியவங்கள எதிர்த்து எதிர்த்து பேசுற ஒன்னும் சரியில்லை பார்த்துக்கோ” என காலையில் நித்யவதி பிடிவாதமாக வேலைக்கு செல்வதை பத்தி கூறியதிலிருந்து கோவத்தில் இருந்த லீலாவதி மகளை அதட்ட

“ என்ன சரி இல்ல லீலா சாப்பாடா??.
ஏன் இன்னைக்கு நீயோ இல்ல மாயாவோ சமைச்சுருக்கீங்களா??. ஐயோ!!!... நான் வேற நல்ல பசில வந்துருக்கேன்” என குணசேகரன் கேட்டுக்கொண்டு அவரும் மேஜையில் அமர

“ இன்னும் சாப்பாடே வரல பெரியப்பா” என நித்தியவதி கூற

“ அப்புறம் என்ன சரி இல்லையாம் உன் அம்மாவுக்கு”

“ அது….” என நித்தியவதி பேச வருகையில்

“ இப்போ அதை தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்ய போறிங்களாம். குடிச்சு குடிச்சு எல்லா வியாதியையும் உடம்புல வாங்கியாச்சு. வேலைக்கு போக முடியலைன்னு விருப்ப ஓய்வும் வாங்கியாச்சு. சும்மாதானே இருக்கீங்க எதாவது உருப்படியான காரியம் செய்யலாம்ல. அண்ணனோட கம்பெனிக்கு போங்கன்னு சொல்றேன். அதை மட்டும் கேட்க மாட்டேன்றீங்க. ஆனா தேவை இல்லாத விசயத்துல நல்லா மூக்கை நுழைக்குறிங்க” என குணசேகரனை மாயாவதி திட்ட

“ பெரியப்பா இருந்தாலும் நீங்க சொன்னது ரொம்ப அதிகம்” என நித்யவதி கூற

“ எதைமா சொல்ற??”

“ ஹ்ம்ம் அம்மாவும் பெரியம்மாவும் சமைச்சுருக்காங்களான்னு கேட்டிங்களா. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இவுங்க ரெண்டு பேரும் சமையல் அறை பக்கம் போய் நான் பார்த்தது இல்ல”

“ அட நீ வேறம்மா கல்யாணம் ஆனா காலத்துல இருந்தே நான் பார்த்தது இல்ல”

“ ஏன் எங்க அம்மாவும் சித்தியும் சமையல் அறை பக்கம் போகணும். அவுங்க ஒன்னும் இல்லாதவங்க இல்ல. அவுங்க சொல்றதை கேட்டு வேலை செய்ய ஆளு இருக்குறப்போ அவுங்க ராணி மாதிரி தான் இருப்பாங்க” என சொல்லிக்கொண்டு தமயந்தி அங்கு வர

“ அப்படி சொல்லு என் தமு குட்டி. நானும் ஒன்னு பெத்துருக்கேன் பாரு. எப்ப பார்த்தாலும் என்னைய குறை சொல்றதையே வேலையா” என லீலாவதி சலிக்க

“ அவ கிடக்குறா விடுங்க சித்தி” என கூறிவிட்டு

“ ஏய்!!... இங்க பாரு” என தமயந்தி அதட்டலாக அதுவரை இவர்களின் உரையாடலை குனிந்தவாறே அமைதியாக கேட்டு கொண்டிருந்த தென்றலை அழைக்க, திடீரென கேட்ட அதட்டல் குரலில் நிமிர்த்த தென்றலை பார்த்து

“ அப்படி என்ன அவசரம்ன்னு சோத்துக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துருக்க. இங்க உன்னைய உட்கார சொன்னவங்களுக்குத்தான் அறிவு இல்லைனா உனக்குமா இல்ல” என தமயந்தி கூற

“ தமயந்தி!!!...” “ அக்கா!!!...” என குணசேகரனும் நிதியவதியும் ஒரே சேர கண்டிக்கும் குரலில் அழைக்க

“ பார்றா அதுக்குள்ள உனக்கு ஒத்தூத ஆள் சேர்த்திட்டியாக்கும்” அதற்கும் எதுவும் கூறாது அமைதியாக இருந்த தென்றலை பார்த்து

“ என்ன இப்படி பார்த்தா நாங்க பாவம்ன்னு ஏமாந்து போயிடணுமா. ஹ்ம்ம்… நேத்து உன் பாட்டி என்ன சொல்லுச்சு என் அம்மாவை பூசணிக்காயா??. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அங்குனையே ரெண்டு அரை குடுத்துருப்பேன். எங்களாலத்தான் இன்னைக்கு நீ இங்க இருக்க இல்லைனா உன் மூஞ்சிக்கு இந்தமாதிரி வீட்டை கனவுல கூட பார்த்திருக்க முடியாது” என தமயந்தி பேசிக்கொண்டிருக்கையில்

மாறவர்மன் ராஜவர்மன் திருவாசகம் சேதுராமன் ஜானவி அனைவரும் உணவு உண்ண மேஜைக்கு வர இவர்களின் உரையாடல் அப்படியே நின்றது.

அனைவருக்கும் ஜானவி சாப்பாட்டை பரிமாற ஆரம்பிக்க,

“ என் அக்காவுக்காக உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் தென்றல்”நித்யவதி சங்கடத்துடன் கூற

“ ஐயோ என்னங்க நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு. எங்க அத்தை நான் காலையில எழுந்தவுடனே ஆரம்பிச்சுடுவாங்க என்னைய திட்ட. இங்க பரவா இல்லங்க. அப்போ அப்போ தான் இந்த மாதிரி பேசுறாங்க. ஆனா என்ன எப்போ பேசுறாங்கன்னு தெரியாம நின்னுடுறேன்” என புன்னைகயுடன் தென்றல் கூறிவிட்டு அமைதியாக குனிந்துகொள்ள

இது என்ன மாதிரி பதில் என புரியாது நித்யவதியும் சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தாள்.

“ அப்பா” என மாறவர்மன் அழைத்தான்.

அதில் அனைவரும் அவனை கவனித்துக்கொண்டே உணவை உண்ண

“ என்ன மாறா??” என்ற திருவாசகம் கேட்க

“ அது நேத்து ராத்திரி சொல்ல மறந்துட்டேன்பா”

“ என்னது??”

“ நான் இன்னைக்கு தமயேந்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்ப்பா”

“ ஆமா மூணாவது மாசம் ஸ்கேன்க்கு வர சொல்லிருந்தாங்கள. இந்த கல்யாண வேலையில நானும் மறந்துட்டேன். என்னம்மா நீயாவது என்கிட்டையோ இல்ல மாறாகிட்டையோ சொல்லிருக்க கூடாது”

“ அச்சச்சோ மாமா நீங்க எல்லாரும் கல்யாணத்துல எவ்வளவு வேலையா இருந்திங்க இதுல நானும் உங்க எல்லாருக்கும் கூடுதல் வேலை வைக்குறதான்னுதான் கல்யாணம் முடிஞ்சவுடன் சொல்லலாம்ன்னு இருந்தேன்” என தமயந்தி மென்மையாக நல்லவிதமாக பேச

' ஆத்தி இவுங்களா செத்த முன்ன ராங்கி கணக்கா பேசுனாங்க' என ஆச்சரியமாக தென்றல் பார்க்க

“ நல்லா பொண்ணும்மா. இந்த வீட் டு வாரிசை சுமக்குற அதுவும் மூணு வருஷம் கழிச்சு உண்டாக்கிருக்க அதுல கவனமா இருக்குறது இல்லையா. சரி சரி நீயும் மாறாவும் பார்த்து போய்ட்டுவாங்க” என கூறிவிட்டு சாப்பிட ஆரம்பிக்க

அனைவரும் உண்டுவிட்டு ஒவ்வொருவராக கிளம்புகையில் திருவாசகம் உணவைமுடித்துவிட்டு எழுந்த சேதுராமனை பார்த்து

“ சேது அந்த ராகேஷ் கம்பெனி டீலிங்க் பைலை இன்னைக்கு கம்பெனிக்கு வரும்போது எடுத்துட்டு வாங்க”

“ சரி மச்சான்” என கூறிவிட்டு எழும்போது நித்யவதியை காண அவளும் சேதுராமனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பார்வையால் மன்னிப்பை வேண்டிய சேதுராமனை கண்டுகொள்ளாது,

‘ ரொம்பத்தான் அக்கறை சொந்த பொண்ணு கல்யாணத்துக்கு வரமாட்டராம் கண்ணுலையே மன்னிப்பு கேட்பாராம்’ என முணுமுணுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அதே நேரம் மாறவர்மன் தமயந்தியிடம் “ தமு நான் போய் ஆஸ்ப்பத்திரிக்கு போன் பண்ணி appointment conform பண்ணிடுறேன். நீ அதுக்குள்ள கிளம்பு” என கூறிக்கொண்டிருக்கையில்

“ பார்த்து போயிட்டுவாங்க மாறா” என கூறிய மாயாவதியிடம்

“ சரி அத்தை” என கூறிவிட்டு மாறா செல்ல

‘ என்ன இவுக மாசமா இருங்காக போல. ஆனா ஏன் அம்மாகிட்ட சொல்லிக்கவே இல்ல அவுங்களும் எதுவும் பேசவே இல்லை’ என எண்ணிக்கொண்டு ஜானவி நிமிர்ந்து பார்த்த தென்றலுக்கு,

விழிகளில் இருந்து கண்ணீர் விழும் நிலையில் உதட்டுகள் துடிக்க சோர்வாக நின்றுகொண்டிருந்த ஜானவியை பார்த்து பதட்டமாக தென்றல் வேகமாக எழுந்துஅவரின் அருகில் சென்று ,

“ என்னம்மா!!... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??” என கேட்க

“ ஒன்னு…. ஒன்னும்… இல்ல தென்றல் சீக்கிரம் சாப்பிட்டு வரியா கோவில் போலாம்”

“ ஹ்ம்ம் போலாம்மா. நான் சாப்பிட்டேன்”

“ அப்போ நீ இரு நான் இதோ வந்துடுறேன்” என கூறிவிட்டு கோவிலுக்கு கிளம்ப சென்ற ஜானவியை பார்த்து ‘ என்ன ஆச்சு இவுங்களுக்கு’ என எண்ணிக்கொண்டு அங்கையே நின்றுகொண்டிருந்தாள்.

பேயாடிக்கோட்டையில் சுந்தரி வாசலிலையே அமர்ந்து யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருக்க அதனை கவனித்தும் எதுவும் கண்டுகொள்ளாதது போல அமைதியாக அமர்ந்து வெற்றிலையை போட்டுக்கொண்டிருந்தார் சின்னாத்தா.

“ சுந்தரி” என உள்ளிருந்து கண்ணன் அழைக்க

“ இதோ வரேன்.”

“ அடியே அப்படி என்னத்த வாசல்ல இருந்து பார்த்துகிட்டு இருக்க. சீக்கிரம் சாப்பாடு எடுத்துவை நேரமாச்சு”

“ கொஞ்சம் நேரம் இருங்க பக்கத்துவீட்டு பாப்பாத்தி அக்கா கிட்ட சாப்பாடு கொண்டுவர சொன்னே இப்ப கொண்டுவந்துருவாங்க அவுங்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்” என உரக்க வாசலில் இருந்து சுந்தரி கூற அதனை கேட்டு

“ ஏண்டி நீ காலைல சமைக்கலையா??” என வாசலில் வந்து கண்ணன் கேட்க

“ என்ன இப்போ??...... நான் சமைச்சா தினமும் சாப்பிட்டீங்க?? பேசாம இருங்க” என சுந்தரி கூறிக்கொண்டிருக்கையில்

“ பாப்பாத்தி சாப்பாடு கொண்டுவர மாட்டா. போய் உன் பொண்டாட்டிய சமைக்க சொல்லு” என சின்னாத்தா கூற

“ ஏன்??... ஏன்??... கொண்டுவர மாட்டா” என சுந்தரி சின்னாத்தாவிடம் சத்தமாக கேட்க

“ ஹ்ம்ம் நான் தான் கொண்டுவரவேணாம்ன்னு சொன்னேன்”

“ என்னது நீங்களா??”

“ ஆமா நான்தான்”

“ எதுக்கு அப்படி சொன்னிங்க. நான் நேத்து ராத்திரியும் சாப்பிடல. எனக்கு ரொம்ப பசிக்குது. உங்க பிள்ளைக்கு நேரமாச்சு. இப்போ என்ன செய்றது கொஞ்சமாது கூறு இருக்கா ” என சுந்தரி வழக்கம் போல கத்த

“ என்ன சொன்ன கூறா??. ஏன்டியம்மா சொல்லமாட்ட. உன்னைய மாதிரி பொம்பளைய என் மகனுக்கு கட்டிவச்சேன்ல. நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ. என்ன சொன்ன பசிக்குதா???.

அச்சாணி இல்லாத தேரு முச்சாணும் ஓடாத கணக்கா பொம்பளை சரி இல்லாத
குடும்பம் உருப்புடாது டி. இத்தனை நாளு அந்த செல்வி பிள்ளையை வச்சு இல்லாத
பேச்சு பேசி எல்லா வேலையையும் அந்த பிள்ளை கிட்ட தள்ளிட்டு சொகமா இருந்த.

இப்போ அந்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போயிடுச்சு.
இனிமேலாவது ஒழுங்கா குடும்பத்தை நடத்துற வழியபாருடி என் மருமவளே. இந்த மாதிரி வீட்டுக்கு வேலைக்கு ஆளுவைக்குறது மத்தவங்களை
சமைச்சு கொண்டுவர சொல்றதுன்னு எதாவது கிறுக்குத்தனம் பண்ணுன நேத்து
கல்யாணத்துல வாங்குனது நியாபகம் இருக்குல்ல.

போ போயி எனக்கு கருப்பட்டி தோசையும் தேங்காய் சட்னியும் வை காலைல” என கூறிவிட்டு வெத்தலை இடிக்க ஆரம்பித்த சின்னாத்தாவை சுந்தரி முறைத்து
பார்த்துக்கொண்டே கண்ணனை காண,

அவரால் எதுவும் பேச முடியாது வெளியே சென்றுவிட,

“ இந்த கிழவி ரொம்ப பண்ணுது. இதனை நாளு கம்முன்னு இருந்துட்டு இப்போ என்னமோ துள்ளுது. பார்க்குறேன் எத்தனை நாளைக்குன்னு. அந்த செல்வி கழுதையை எப்பிடியும் கொஞ்ச நாளுல துரத்திடுவாங்க. அப்போ பார்த்துக்கறேன் இந்த கிழவியை” என முணுமுணுத்துக்கொண்டே சுந்தரி சமையல் அறைக்கு செல்ல

“ அடியே மறந்துறாம அந்த தோசையில் ஏலக்காயை இடிச்சு போட்டுடுடி. வாசனையா இருக்கும்” என திண்ணையில் இருந்து சின்னாத்தா கத்த

“ ஹம்ம்கூம் வயசு வைக்கோலு போகுதாம் கிழவி கிண்ணாரம் வாசிக்குதாம். அந்தமாதிரி நல்ல வக்கணையா தின்னுபுட்டு இந்த கிழவி அடி ஒன்னும் குழவி கணக்கா இருக்கு” என புலம்பிய படி வேலையை ஆரம்பித்தாள்.

" இந்நேரம் அங்க என் பேத்தி என்ன பண்ணுதோ??. அங்குன எல்லாரும் பார்க்க நல்ல மாதிரித்தான் தெரியுறாங்க . ஆனா அந்த பூசணிக்காயும் கூட ஒன்னு கத்துச்சே ஒரு புடலங்காயும் தான் வில்லங்க புடிச்சதா இருக்குங்க போல. ஹ்ம்ம் நான் ஒரு பத்து நாளு இருந்திருந்தா செல்வி பிள்ளைக்கு கொஞ்சம் ஆதரவா இருந்துருக்கும்.

எங்க என்னைய விரட்டுறதுலையே இருந்துச்சே அந்த கழுதை. ஹ்ம்ம் கருப்பா என் பேத்திக்கு நீதான்யா துணையா இருக்கனும்" என புலம்பிக்கொண்டே இருந்தார் சின்னாத்தா

சென்னையில் சிறுது நேரத்தில் அருகில் இருந்த பிள்ளையார்கோவிலுக்கு ஜானவியும் தென்றலும் சென்று வழிபட்டுவிட்டு கோவில் பிரகாரத்தில் அமர்ந்தனர். கோவிலுக்கு கிளம்பி வந்ததிலிருந்து ஒரு வார்த்தையும் பேசாது அமைதியாக இருக்கும் ஜானவியை பார்த்து

“அம்மா எதுவும் பிரச்சனையா??. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??” என வினவ

“ அது எல்லாம் ஒன்னும் இல்ல தென்றல்”

“ இல்லமா உங்க முகமே சரி இல்ல”

“ ம்ப்ச்….. இல்ல தென்றல்”

“ உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைனா பரவா இல்லமா”

“ அச்சோ தென்றல் ஹ்ம்ம்” என சிறுது நேரம் அமைதியாக இருந்த ஜானவி

“ தென்றல் நானும் உன்னோட மாமாவும் மூணு வருசமா பேசிக்குறது இல்ல”

“ என்னது புருசனும் பொண்டாட்டியும் பேசிக்குறது இல்லையா இது என்னமா கூத்தா இருக்கு. அதுவும் மூணு வருசமாவா !!!!... ”

“ ஹ்ம்ம் ஆமா தென்றல் அதோட என்னோட ரெண்டாவது பையன். அதான் மாறவர்மன் இப்போகூட ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னானே அவன்தான். அவனும் என்கிட்ட மூணு வருசமா பேசுறது இல்ல”

“ ஆத்தாளும் மகனும் பேசிக்குறது இல்லையா!!!!” என மேலும் தென்றல் அதிர

“ ஹ்ம்ம் ஆமா”

“ என்னமா ஆமான்னு சும்மா பொசுக்குன்னு சொல்றிக”

“ வேற என்ன செய்ய சொல்ற”

“ ஆமா புருசனும் பெத்த மகனும் பேசாம இருக்குற அளவுக்கு அவுக புரிஞ்சுக்க முடியாத எதோ ஒரு விஷயத்தை செஞ்சிருக்கீக இல்லையாம்மா??”

“ தென்றல்!!....” என அதிர்ந்து விழிக்க

“ என்னம்மா!!!... என்னாச்சு??”

“ இல்ல…. இல்ல… அப்போ நீ என்ன சொல்லவற. கண்டிப்பா எதோ என்னைய புரிஞ்சுக்காமத்தான் ரெண்டுபேரும் என் கூட பேசாம இருக்காங்கன்னு சொல்லவரியா”

“ ஆமா”

“ ஏன் தப்பு என் பேர்ல கூட இருக்கலாம்ல”

“ அச்சச்சோ என்னமா பேசுறீங்க நீங்க. உங்க மகனுக்கு முன்ன பின்ன யாருன்னு தெரியாத என்னைய மாதிரி ஒரு பொண்ணை கட்டிவச்சு என்னோட வாழக்கையும் நல்லா இருக்கனும்ன்னு மனசார நினைக்குறிக. அப்படி பட்டவங்களா தப்பு பண்ணிருக்க போறீக”

“ தப்புதான் பண்ணிருக்கேன் தென்றல்” என ஜானவி கூற புரியாது நோக்கிய தென்றல்

“ என்னம்மா சொல்றிக??”

“ ஹ்ம்ம் யாருக்கோ நல்லது பண்ணுறதா நினைச்சு என் மகனோட வாழக்கையை பத்தி ஒரு நிமிஷம் யோசிக்கல. அதனால எனக்கு இந்த தண்டனை தேவைதான்”

“ புரியலம்மா”

“ என்னோட மூத்த பையன் ராஜாவோட ஒட்டுதல் இல்லாத குணம் கல்யாணம் பண்ணி வச்சா மாறிடும்ன்னு உங்க மாமாவோட நண்பர் மகள் அருணாவை கட்டிவச்சோ. ஆனாலும் அவன் மாறவே இல்ல. எப்போ பார்த்தாலும் வீட்டுல ரெண்டு பேருக்கும் பிரச்சனைதான். இதுல மூணு வருசத்துக்கு முன்னாடி எங்களுக்கு பேரன் காருண்யன் பிறந்த சமயம் அப்போ மாறவர்மனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்துகிட்டு இருந்தோம்” என ஜானவி கூறிக்கொண்டிருக்கையில்

“ அப்போ உங்க கடைசி பையன் எங்கம்மா இருந்தாரு??” என ஆர்வக்கோளாறில் கேட்டுவிட

“ உனக்கு உன் ஆளைப்பத்திதான் கவலை”

“ ஐயய்யோ!!!.. அப்பிடி இல்லம்மா. அது… அது… ஹான்..…. அவரு வெளிநாட்டுல இருந்தாருன்னு சொன்னாங்களா. அதான் அப்போ எங்க இருந்தாங்கன்னு தெரிஞ்சுக்க....”

“ அப்போ ருத்திரன் வெளிநாட்டுக்கு எல்லாம் போகல. இங்க எங்க தொழிலை பார்த்துகிட்டு வெளிநாட்டுக்கு மேல் படிப்பு படிக்க போக ரொம்ப ஆசைப்பட்டு அதுக்காக தயாராகிட்டு இருந்தான். நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு உதவ போயி கடைசில அவனும் போலீஸ் கேஸுன்னு ஆகி அதுல ஒரு வருஷம் வீணா போச்சு. அதுக்கப்புறம் ரொம்ப ஒரு மாதிரி இறுக்கமா மாறிட்டான் அப்புறம் மாறா கல்யாணத்துல நடந்த குளறுபடில அந்த வருஷமே வெளிநாட்டுக்கு போய்ட்டான் இந்த மூணு வருசத்துக்கு அப்புறம் அவனை நான் இப்படி படுக்கையாத்தான் பார்க்குறோம்” என கரகரத்த குரலில் கூறிக்கொண்டிருந்த ஜானவியின் கையை தென்றல் அழுத்தி பிடிக்க

“ ஹ்ம்ம் என்ன செய்ய ஒருவேளை அவன் நாலு வருசத்துக்கு முன்னாடி அந்த யாருன்னே தெரியாத பொண்ணுக்கு இவன் உதவ போகலைன்னா அப்போவே வெளிநாட்டுக்கு போய் படிப்பை முடிச்சுட்டு போன வருஷமே வந்துருப்பான். இந்த விபத்தே நடந்துருக்காதோன்னு தோணுது . ஆனா என்ன எல்லா விதி”

“ அம்மா அந்த..... அந்த.... பொண்ணு யா.....யாரும்மா??” என தென்றல் அறியும் பொருட்டு சிறு திணறலுடன் வினவ

“ அது தெரியல தென்றல். ஆனா நம்மூரு பக்கம்ன்னு உங்க மாமனாருதான் சொன்னாரு. அதுவும் முழுசா என்ன பிரச்சனைன்னு சொல்லல . அப்பாவும் மகனும் மூடி மறைச்சுட்டாங்க. சரி அதை விடு இப்படி எல்லாம் ஆனதாலதான் உன்னைய மாதிரி தங்கமான பொண்ணு அவனுக்கு பொண்டாட்டியா கிடைச்சுருக்கு” என தன் கவலையில் இருந்த ஜானவி தென்றலின் திணறலையும் பதட்டத்தையும் கவனிக்காது கூற

‘ ஆனா நீங்க சொன்னமாதிரி நாலு வருசத்துக்கு முன்னாடி உங்க மகனோட வாழ்க்கைல குறுக்க வராம இருந்திருந்தா இன்னைக்கு அவருக்கு இந்த நிலைமை வந்துருக்காது. ஆனா.... ஆனா..... எனக்கு அன்னைக்கு இவரை விட்டா உதவி செய்ய யாருமே இல்லையே.

அன்னைக்கு மட்டும் இவரு உதவலைன்னா என்னாலா நினைச்சுக்கூட பார்க்க முடியல’ என மனதில் பரிதவிப்புடன் எண்ணிக்கொண்டு விழிகளில் கண்களில் கண்ணீர் அன்றைய தன் நிலையை எண்ணியும் தன்னவனின் இன்றைய நிலையை எண்ணியும் சிந்திக்கொண்டிருந்தது.

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே

நான் உனைப் பார்க்கிறேன் அன்பே

சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய்

உனக்கது தெரிந்ததா அன்பே

sorry for the delay update friends and thanks for voting and supporting friends
as usual plz drop ur valuable comments

:love: :love: :love: :love: :love:
 
Nice
 
Top