Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(07)

Advertisement

சே புடவை கட்ட கூட சொல்லித்தராம இருந்திருக்காளே சுந்தரி. ஏற்கனவே ருத்ரனை பார்த்திருக்காளா தென்றல்.
 
ஜானவிக்கே அந்த வீட்டுல மரியாதை இல்லை இதுல செல்வி புள்ளை வேறையா???? ரொம்ப கஷ்டப்பட போகுது
 
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(07)



சின்னாத்தாவின் முகத்தில் இருந்த கோவத்தை பார்த்த தென்றல் ‘ என்ன இந்த ஆத்தா இப்படி கோவமா இருக்கு. ஒருவேளை நாம கோவிலிலையே விட்டுட்டு வந்துட்டோம்முனு கோவமா இருக்கோ. ஆனா அத்தை தானே இழுத்துட்டு வந்தாங்க’ என்ற யோசனையுடன் சின்னாத்தாவை கண்களால் அருகே வர சொல்லி சமிக்கை செய்தாள் தென்றல்.

ஆனால் அதனை எதுவும் கவனிக்காது வேகமாக மணமேடையின் அருகில் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த சுந்தரியிடம் வந்த சின்னாத்தா சுந்தரிக்கு கன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைத்தார்.

அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க, கண்ணன் வேகமாக,

“ அம்மா!!!!.... என்ன பன்றிங்க???.....” என கோவமாக கத்திகொண்டே சுந்தரிக்கும் சின்னாத்தாவுக்கும் இடையே வந்து நின்றார்.

கண்ணனை உறுத்துவிழித்த சின்னாத்தா அடுத்த அடியை கண்ணனின் கன்னத்தில் இடிபோல இறக்கினார். ஏற்கனவே வயதானாலும் உழைத்து முறுக்கேறிய சின்னாத்தா கையில் அடிவாங்கி வலி பொறுக்க முடியாது கோவத்தோடு நின்ற சுந்தரி, கண்ணன் அடி வாங்கியவுடன் அதிர்ச்சியுடன் ஒரு அடி தன் பின்னால் நகர்ந்து நின்றாள்.

இதுவரை சுந்தரி எவ்வளவோ கெடுதல் செய்துருக்க; ஏன் சின்னாத்தாவையும் தென்றலையும் பேசாத பேச்சு இல்லை கேட்காத கேள்வியும் இல்லை. அப்பொழுது எல்லாம் அமைதியாக இருந்த சின்னாத்தா இப்பொழுது கோபத்துடன் இத்தனை பேரின் முன் அடிக்கும் அளவிற்கு என்ன தவறு செய்து இருப்பார்கள் என எண்ணிக்கொண்டு சின்னாத்தாவின் கோவத்தை கண்டு தென்றலே சிறுது ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏற்கனவே ஜானவி பரம்பரை தாலியை கொண்டு கல்யாணத்தை முடித்த கடுப்பில் நின்று கொண்டிருந்த மாயாவதி சின்னாத்தாவையும் அவரின் செயலையும் கண்டு எரிச்சல் அடைந்து,

“ இந்தாம்மா நீ யாரு ???. எதுக்கு இப்போ பொண்ணோட சொந்தகாரவங்களை அடிச்சுகிட்டு இருக்க. கல்யாணத்துல பிரச்சனை பண்ண வந்துருக்கியா??. ஒழுங்கா இடத்தை காலி பண்ணுமா” என கத்த

“ ஏய்!!!... இந்தா…. என்ன சொன்ன??. கல்யாணத்துல பிரச்சனை பண்ணுறேன்னா. இங்க நடந்ததுக்கு பேரு கல்யாணம் இதுல நான் பிரச்சனை பண்ணுறேன்” என சின்னாத்தாவும் ஆவேசமாக கத்த

அதில் மேலும் கோவம் கொண்ட மாயாவதி

“ ஏய்!!... என்ன மரியாதை இல்லாம பேசுற இங்க நடக்குறது கல்யாணமோ காதுகுத்தோ அது எங்க வீட்டு விஷயம் முதல்ல இங்கேருந்து போ” என கத்த

“ மரியாதையா????.... உனக்கா????.... நீ முதல்ல மரியாதை குடுத்து பேசுடி. என்னைய இங்க இருந்து போக சொல்ல நீ யாரு???. நான் உன் கிட்ட வந்து எதாவது பேசுனேனா???. முதல்ல இந்தா இங்க உட்கார்ந்துருக்கானே மாப்பிள்ளைன்னு ஒருத்தே இவனுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணனும்ன்னு முடிவு பண்ணி கூட்டத்தை சேர்த்த கூமூட்டை யாரு??.

அவனை வர சொல்லு நான் அவன்கிட்டத்தான் பேசணும் உன்னமாதிரி ஊடால உருண்டு வந்த பூசணிகாய்கிட்ட எல்லாம் பேச முடியாது. போடி அங்குட்டு” என சின்னாத்தாவும் கத்த

அதை கேட்டு லீலாவதி கோவமாக எதோ பேச வருகையில் சூழ்நிலையை புரிந்துகொண்ட திருவாசகமும் சின்னாத்தாவின் பேச்சில் கோபம்கொண்டு அதே நேரம் சின்னாத்தாவின் கோவத்திற்கான காரணம் அறியும் பொருட்டு சற்றே நிதானத்துடன் லீலாவதி பேசுவதற்கு முன் பேச ஆர்மபித்தார்.

“ அம்மா ஒரு நிமிஷம். நீங்க யாரு???. உங்களுக்கு என்ன வேணும்??. இப்போ எதுக்கு தேவை இல்லாம பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க??” என சற்றே நிமிர்வாக திருவாசகம் சத்தமாகவே கேட்க

அவரின் தோற்றமும் பேச்சும் சின்னாத்தாவின் கோவத்தையும் வேகத்தையும் சற்றே மட்டுப்படுத்த

“ என்ன கேட்டீங்க நான் யாரா??. இதோ இங்க எப்படி தனக்கு கல்யாணம் ஆச்சு, நம்ம புருஷன் எந்த நிலையில இருக்கான், இந்த உலகத்துலயே முதல் ஏமாளி அவதான்னு கூட தெரியாம தன்னோட வாழ்க்கையை ஏமாந்துட்டு கோட்டான்மாதிரி முழுச்சுகிட்டு நிக்குறா பாருங்க. அவளோட பாட்டி நான்” என தென்றலை கை காட்டி சின்னாத்தா கூற

சின்னாத்தாவின் பேச்சை கேட்டு திருவாசகம் ஓர் அளவிற்கு புரிந்துகொண்டார் பாட்டிக்கும் பேத்திக்கும் ருத்ரவர்மனின் நிலை தெரியாமலையே இந்த திருமணம் நடந்துள்ளது என்பதை. அதனை தெளிவுபடித்திக்கொள்ளும் நோக்கத்துடன் திருவாசகம் எதோ கேட்க வருகையில்,

“ நல்லா இருக்கே நீங்க பேசுறது. கல்யாணம் முடிஞ்சப்புறம் தான் எங்க ருத்ரனோட நிலைமை உங்களுக்கு தெரியுதோ. எல்லாம் சொல்லி உங்களோட சம்மதத்தோடதானே இந்த கல்யாணம் நடந்துச்சு. இப்போ வந்து நாங்க எதோ ஏமாத்திட்ட மாதிரி இல்ல பேசுறீங்க” என லீலாவதி பேசிக்கொண்டிருக்க

அதுவரை தன் அருகில் நிற்பவனை காணும் சிந்தனை இல்லாது சின்னாத்தா கூறுவதை புரியாத பாவனையுடன் கேட்டுக்கொண்டிருந்த தென்றல் எதோ ஒரு உந்துதலில் தன் அருகில் சற்று முன் தன் வாழ்க்கை துணை ஆனவனை காணும் பொருட்டு தன் தலையை சற்றே திருப்பி விழி உயர்த்தி காண.

சராசரி உயரத்தை விட சற்றே கூடுதல் உயரமும் நல்ல சிவந்த நிறமும் முகத்தில் சற்றே பொலிவு இல்லாது தாடியும் மீசையும் இல்லாது, நன்றாக உடற்பயிற்சி செய்த உடற்கட்டும் ஆனால் கண்கள் எங்கோ வெறித்துக்கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்த அவளவனின் நிலையை கண்டு கண்கள் இருட்டிக்கொண்டு வர அங்கேயே மயங்கி சரிந்தாள்.

அதனை கண்டு பதட்ட மடைந்த ஜானவி “ யாராவது இங்க கொஞ்சம் வாங்க. பொண்ணு மயங்கி விழுந்துட்டா” என கத்த

அந்த வயதிலும் வேகமாக தென்றலின் அருகில் சென்று ஜானவியிடம் இருந்து தன் பேத்தியை மடிதாங்கி
கருப்பா என்னப்பா இப்படி என் பேத்தி வாழ்க்கையில சோதனையை குடுக்குற. அவ யாருக்கு என்ன தீங்கு பண்ணா??” என சின்னாத்தா சத்தமிட்டு அழ

சூழ்நிலையை புரிந்துகொண்டு வேகமாக திருவாசகம் மாறவர்மன் விவேகனின் உதவியோடு வந்தவர்களை கவனிக்க சொல்லிவிட்டு ருத்ரவர்மனையும் தென்றலையும் வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வீட்டிற்கு அழைத்தும் சென்று விட்டார்.

திருவாசகத்தின் இல்லத்தில் பெரிய அறையில் கட்டிலில் படுத்திருந்த தென்றல் தன் விழிகளை திறந்து பார்க்க தன அருகில் அழுகையுடன் உட்கார்ந்திருந்த சின்னாத்தாவை கண்டு “ ஆத்தா…..” என்ற கூவலுடன் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“ செல்வி எதுக்கு பிள்ளை கண்ணு கலங்குற?. ஆத்தா நான் இருக்குறவரைக்கும் நீ கவலை படாத. நீ இப்போவே கிளம்பு இங்க இருக்க வேணாம்” என சின்னாத்தா கூற அதனை கேட்டு தென்றல் அதிர்ச்சியாக

“ என்ன ஆத்தா!!!.... என்ன சொல்றிங்க??.... நா……. நான் எதுக்கு ஊருக்கு வரணும்.”

“ செல்வி உன் வீட்டுக்காரருக்கு நினைவே இல்லயாம். ஒரு வேலை குணமாகி உன்னைய ஏத்துக்கலைன்னா நீ என்ன பண்ணுவ??. ரொம்ப ஒடைஞ்சுருவத்தா. அதனாலதான் சொல்றே வா ஊருக்கு போகலாம்”

“ என்ன நினைவே இல்லையா!!!.....’ என அதிர்ந்த செல்வி சிறுது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாள். பின்,

“ ஆத்தா இப்போ உறுதியா சொல்றே நான் இங்குனதான் இருப்பேன் நீ என்னைய வலுக்கட்டாயமா கூட்டிட்டு போக நினைச்சா உன் மக மாதிரிதா நானும் உன் வீட்டுக்கு வருவேன்” என திடமான குரலில் கூற சின்னாத்தா பதறிவிட்டார்.

“ என்ன செல்வி இப்படி பேசுற??. அப்புறம் இங்கயே வேலைக்காரியா இருக்க போறியா??” என கோவமாக சின்னாத்தா வினவ

“ ஹ்ம்ம் அப்போ அங்க வந்தா மட்டும் மாகாராணியாட்டம் இருக்க போறேனா??. அங்கேயும் வேலைக்காரி தான். அதுக்கு உனக்கு பாரமா இல்லாம இங்குன ஒரு ஓரத்துல இருந்துப்பேன்” என தென்றல் சோர்வுடன் தன் முடிவை கூற

“ செல்வி…” என சின்னாத்தா எதோ கூற வருகையில்

“ அவ சொல்றது சரிதான் ம்மா. இந்த வீட்டு மருமக எங்கையும் வர மாட்ட. அவளை நாங்க பத்திரமா பார்த்துக்குறோம்” என சத்தமாக கூறிக்கொண்டு அந்த அறையினுள் நுழைந்தார் ஜானவி.

அவரை கண்டு எழ பார்த்த தென்றலை “ நீ அப்படியே இரும்மா” என கூறிவிட்டு சின்னாத்தாவிடம்

“ அம்மா நீங்க எந்த பயமும் இல்லாம தைரியமா உங்க பேத்தியை இங்க விட்டு போங்க. நான் என் மருமகளை நல்லா பார்த்துக்குறேன்” என சத்தமாக கூறினார்.

சின்னாத்தாவிற்கு சத்தமாக பேசினால்தான் கேட்கும் என்பது தென்றல் மயங்கிவிழுந்து எழுவதற்கு இடைப்பட்ட நேரத்திற்குள் அனைவரும் அறிந்துகொண்டனர். அதே நேரம் இந்த கல்யாணத்தில் மாப்பிளை பற்றிய உண்மையை மறைக்காமல் திருவாசகம் குடும்பம் முன்னரே கூறிவிட்டது ஆனால் ஏமாத்தியது முழுக்க முழுக்க சுந்தரிதான் என்பதையும் இந்த இடைப்பட்ட நேரத்தில் சின்னாத்தா தெரிந்து கொண்டார்.

என்னதான் ஜானவி பார்த்துக்கொளவதாக கூறினாலும் கோவிலில் மாயாவதி லீலாவதி பேசிய பேச்சும் அவர்களின் முக பாவனையே எதோ சரி இல்லை என்பதை உணர்ந்தார் சின்னாத்தா.

அதோடு புகுந்த வீட்டில் கட்டியவனின் துணை இல்லாது சிறு கல்லை கூட அசைக்க முடியாது இங்கு தென்றலின் கணவனிற்கு நினைவே இல்லை இந்த நிலையில் பேத்தியை தனியாக விட்டு செல்ல மனமும் இல்லாது என்ன செய்வது என தெரியாது முழித்து கொண்டிருந்தார்.

“ என்னம்மா ரொம்ப யோசிக்குறீங்க. என் மகன் குணமடைஞ்சவுடன் அவனையும் செல்வியையும் சேர்த்துவைக்குறதுதான் என் வேலையே. அதுவரைக்கும் என் பொண்ண போல பார்த்துக்கறேன்” என பேசி பேசி தென்றல் திருவாசகத்தின் இல்லத்தில் தங்குவதற்கு சின்னாத்தாவை ஒத்துக்கொள்ள வைத்தார் ஜானவி.

“ சரிம்மா அவ இங்கையே இருக்கட்டும் ஆனா அவளுக்கு ஏதாவது சின்ன பிரச்சனை வந்தாலும் நான் மனுசியாவே ஒருக்கா மாட்டேன். உங்களை முழுசா நம்பித்தான் இந்த தாய் இல்லாத பிள்ளையை விட்டு போறேன்” தென்றலை பார்த்தார் சின்னாத்தா அவரின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்த தென்றல் எதுவும் கூறாது அமைதியாக அமர்ந்திருந்தாள்.

தென்றலின் தலையை தடவியபடி “ நான் வேணும்ன்னா ஒரு பத்துநாள் இங்க தங்கட்டும்மா செல்வி”

“ வேணாம் ஆத்தா. நீ இன்னைக்கு சாயங்காலம் கிளம்பு”

“ இன்னைகேவா!!.... இல்லை நான் நாளைக்கு கிளம்புறேன்”

“ இல்லை வேணாம் ஆத்தா. நீ இங்க தங்குனா என் வாழ்க்கை பத்தின கோவத்துல கவலைல ஏதாவது பிரச்சனையை பண்ணுவ. அதனால இன்னைக்கே கிளம்பு” என கூறிவிட்டு கண்ணை மூடி அமர்ந்துகொண்டாள் தென்றல்.

பின் எதுவும் பேசாது அமைதியாக சின்னாத்தா அந்த அறையை விட்டு வெளியேற

“ ஏன்மா அவுங்க உன்னைய எவ்வளவு பாசமா வளர்த்தவங்க ஒரு நாள் உன்கூட இருந்துட்டு நாளைக்கூட போகட்டுமே ம்மா ஊருக்கு” என ஜானவி கூற

“ இல்லைங்க அது சரிவராது நீங்க சொன்ன மாதிரி ஆத்தா தான் எனக்கு எல்லாம். ஆனா இப்போ இங்க அவுங்க தங்குனா என் வாழ்க்கை பத்தின பயத்துல எதாவது இங்க சண்டை போட்டுட்டே இருப்பாங்க. அது தேவை இல்லாம இங்க உங்க எல்லாரோட நிம்மதியையும் கெடுக்குற மாதிரி ஆகிடும் அதான்.”

“ ஓ சரிம்மா. நீ போய் உன்னோடைய சேலைய மாத்திட்டுவா நான் உனக்கு சாப்பிட எதாவது கொண்டுவரேன்”

“ இல்ல எனக்கு பசிக்கலைங்க வேணாம்”

“ பசிக்கலையா அது எப்படி பசிக்காம இருக்கும் காலையில ஒன்னும் சாப்பிடலைன்னு உன் ஆத்தா சொன்னாங்க”

“ இல்ல இப்போ எனக்கு பசிகலை”

“ சரி அப்போ குடிக்க எதாவது கொண்டுவரேன்”

“ இல்லைங்க எனக்கு எதுவும் வேணாம்”

“ இங்க பாரு செல்வி. செல்விதானே உன் பேரு”

“ ஹ்ம்ம். பூந்தென்றல் செல்வி”

“ ஓ அப்போ தென்றல்ன்னு கூப்புடவா”

“ ஹ்ம்ம்” என தென்றல் தலையை உருட்ட

“ அப்போ நீ என்னைய அத்தைன்னு கூப்புடு”

“ இல்ல அது… வந்து…”

“ இங்க பாரு. என் பையன் நிச்சயம் உன்னைய ஏத்துக்குவான் அதுக்கு நான் முழு பொறுப்பு. அதனால உன் வாழ்க்கையை பத்தி ரொம்ப யோசிக்காத” என ஜானவி கூற

அதற்கு பதில் ஏதும் கூறாது அமைதியாக எழுந்து மாத்து புடவை எடுக்க தன் பை எங்கு உள்ளது என தேட ஆரம்பித்தாள் தென்றல்.

“ என்னமா??. என்ன தேடுற??”

“ இல்ல அது என் பை”

“ பையா??”

“ ஹ்ம்ம். என்னோட சேலைய எடுக்க”

“ ஓ!!.. சரி இரு. நான் போய் உன் ஆத்தா கிட்ட வாங்கிட்டு வரேன்” என கூறிவிட்டு ஜானவி வெளியே சென்றுவிட தென்றல் தன் வாழ்க்கையை பற்றிய சுய சிந்தனையில் இருந்தாள்.

‘ இவுங்களுக்கு எப்பிடி இந்த நிலைமை ஆச்சு. அன்னைக்கு நாம பார்குறப்போ நல்லாத்தானே இருந்தாங்க. ம்ப்ச் பாவம் நல்ல ராசா கனக்கா இருந்துட்டு இப்போ படுத்த படுக்கையா இருக்குறது எவ்வளவு கஷ்டம். கருப்பா அவுங்கள சீக்கிரம் குணமாக்கிடுப்பா’ என வேண்டிக்கொண்டிருக்கையில் அறையில் நுழைந்த ஜானவி

“ இந்தம்மா உன்னோட பை”

“ ஹ்ம்ம் நன்றிங்க”

“ உன்னோட நன்றி எல்லாம் இருக்கட்டும். என்னைய என்ன மூணாவது மனுசி மாதிரி கூப்புடுற. உன்னைய எப்பிடி கூப்புட சொன்னே”

“ இல்ல அது…. நா… நான்…. உங்கள அம்மான்னு கூப்புடட்டுமா???”

“ அம்மாவா!!!....”

“ ஹ்ம்ம். அது நான் விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மாவ பார்த்தது இல்ல. யாரையும் அப்பிடி கூப்பிட்டதும் இல்ல. அதோட எனக்கு எல்லாமே என் ஆத்தா தான் உறவு முறையில எனக்கு அவுங்க பாட்டியா இருந்தாலும் அம்மான்னுதான் மனசுல இத்தனை வருசமா நினைச்சுகிட்டு இருக்கேன்.

அதோட அத்தைன்ற வார்த்தையே எனக்கு வெறுத்து போச்சு நீங்கதான் என் இத்தனை வருஷ வாழ்க்கைல என் ஆத்தாவுக்கு அப்புறம் நான் சாப்பிட்டேனா இல்லையான்னு கவலைபடுறது. அதான் அம்மான்னு கூப்புடுவான்னு கேட்டேன். கூப்புடவா??” என தென்றல் பேசி முடிக்க

ஜானவி எதுவும் கூறாது அமைதியாக தென்றலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் அமைதியை பார்த்து

“ உங்களுக்கு பிடிக்கலைன்னா அம்மான்னு கூப்புடலை. நீங்க கோச்சுக்காதீங்க” என சிறுது ஏமாற்றம் கலந்த குரலில் தென்றல் கூற

“ நீ என்னைய அம்மான்னு கூப்புடலைன்னா தான் கோச்சுக்குவேன். எனக்கு பொம்பள பிள்ளைவேற இல்லை. அதனால நீ இனிமே என் மருமக மட்டும் இல்ல மகளும் சரியா. இப்போ போய் சேலைய மாத்திட்டுவா நான் உனக்கு குடிக்க ஆப்பிள் ஜூஸ் கொண்டுவர சொல்றேன்” என ஜானவி கூறி குளியல் அறையையும் காட்டி உபயோகப்படுத்தும் முறையையும் சொல்லிவிட்டு அறையைவிட்டு செல்ல

சிறு புன்னகையுடன் தென்றல் கல்யாண புடவையை மாத்திட்டு தன்னிடம் இருந்த புடவைகளில் கரும்பச்சையில் மஞ்சள் நிற படர் வைத்த காட்டன் புடவையை பின் கொசுவம் வைத்து கட்டி தன்னுடைய இடைவரை நீண்ட கூந்தலை பின்னி கறுப்பு நிற ரிப்பன் வைத்து மடித்து கட்டி முகத்தை கழுவி அறக்கு நிற பொட்டை வைத்து கட்டிலில் அமரவும் ஜூஸ் உடன் ஜானவி வரவும் சரியாக இருந்தது.

ஜானவி தென்றலின் உடையை பார்த்து சற்றே அதிர்ந்தார்.

‘ என்ன இந்த பொண்ணு இப்பவும் நாட்டுப்புற கட்டு கட்டிருக்கு. நான் கல்யாணத்துக்கு கட்டுனப்போ அவுங்க முறைல நினைச்சேன்’ என எண்ணிக்கொண்டு தென்றலிடம் ஜுஸை குடுக்க சிறு புன்னகையுடன் அதனை வாங்கி குடித்தாள் தென்றல்.

ஜூஸை குடித்துவிட்டு அமைதியாக இருந்த தென்றலிடம்,

“ தென்றல் உனக்கு வயசு என்ன???”

“ பத்தொன்பது முடிஞ்சு இருப்பது ஆரம்பிக்குதும்மா”

“ இவ்வளவு சின்ன வயசுல ஏன் பாட்டி மாதிரி சேலை கட்டுற??. மத்தவங்க மாதிரி கட்டலாம்ல”

“ இல்ல எனக்கு அது மாதிரி எல்லாம் கட்ட தெரியாதும்மா. நான் பதினாறு வயசுல தான் வயசுக்கு வந்தேன். அப்பதுல இருந்து சேலை தான் கட்டுவேன். அதுவும் ஆத்தா தான் சொல்லிக்குடுத்தாங்க.

அவுங்களுக்கு இந்தமாதிரி தான் கட்ட தெரியும். சுந்தரி அத்தை கட்டுறமாதிரி கட்டணும் ஆசையா இருக்கும் ஆனா எப்பிடி கட்டணும்ன்னு கேட்டா தேவை இல்லாம பேசி மனச கஷ்டப்படுத்துவாங்க. அதனால இப்படியே ஆத்தா மாதிரி கட்ட பழகிட்டேன்.

அதோட கல்யாணத்துக்கு கூட ஆத்தா ஜாடைமாடையா சுந்தரி அத்தைகிட்ட புடவைக்கட்டிவிட சொன்னாங்க எனக்கு. ஆனா அவுங்க அதுக்கு மேல ஜாடையா பேசி முடியாதுன்னு மறுத்துட்டாங்க நானேதான் கட்டிகிட்டேன்”என எதார்த்தமாக தென்றல் கூற ஜானவி மனம் கனத்தது.

இந்த பெண் வாழ்கயில் கஷ்டப்பட்டதை சின்னாத்தா முன்னரே கூறியதால் தென்றலின் மீது ஒரு வித இரக்கமும் பாசமும் வந்திருந்தது. இப்பொழுது ஒரு புடவைகூட கட்ட தெரியாமல் இருபதுவயசில் எந்த ஒரு ஆசையும் நிறைவேறாமல் இப்பொழுது கல்யாணம் என்ற பெயரில் ஏமாத்தபட்டு இருக்கிறாள்.

இனியும் தென்றல் கஷ்டப்படுவாளா இல்லை ருத்ரவர்மன் குணமாகி தென்றலை ஏற்றுக்கொண்டு சந்தோசமாக வைத்துக்கொள்வானா இல்லை அவனும் சேர்ந்து இந்த பெண்ணை கஷ்டபடுத்துவானா என எண்ணி ஒரு பெண்ணாக தென்றலுக்காக வருந்தினார் .




அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் friends

thanks for the support and plz drop ur comments friends
Nice ep
 
Top