Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருடத்தின் இரண்டு சிறப்பு நாட்கள்

Advertisement

Joyram

New member
Member
ஒருவருக்கு வாழ்வில் எவ்வளவோ நல்ல நாட்கள் அமைகின்றது
இருப்பினும் இரு நாட்களே ஒருவருக்கு முக்கியமாக இருக்கிறது
முதலாவது,ஆண்டில் ஒருமுறை ஒருவருக்கு வரும் பிறந்த நாள்
இன்னொன்று, ஆண்டில் இருவருக்கு ஒருமுறை வரும் மணநாள்

இனிய உற்றார் நண்பர்களுடன் கூடி மெழுகுவத்தியை ஏற்றி ஊதி
கேக்கு, இனிப்புகள், வகையான பானங்கள் அருந்தும் பிறந்த தேதி
மேலோட்டமக விமரிசைகள் இருப்பினும், மனதில் ஒரு அதிர்ச்சி
அது ஒன்றுமில்லை, ஆயுளை குறைய வைக்கும் வயது முதிர்ச்சி

காதலித்தோ அல்லது நிச்சயிக்கப்பட்டோ அமைகின்ற திருமணம்
இருமனம் ஈருடல்கள் மனதார இணைந்து அமைக்கும் ஒருமனம்
இன்ப துன்பங்களை ஒன்று சேர்ந்து தங்குவார் இருவர் அனுதினம்
இருவர் ஆவலுடன் எதிர்நோக்கும் இன்பம் பொங்கும் இந்த தினம்

பிறந்த நாளில் ஆழமாக சிந்திக்கவைக்கும் வருங்கால வாழ்க்கை
ஒரு புறம் கேளிக்கை மறுபுறம் பக்குவம் கற்பிக்கும் ஒரு தனிமை
பிறந்த நாள் சிறந்த நாள் முதிர்ச்சியினை பயில்விக்க உகந்த நாள்
இனிதாக கொண்டாடுங்கள், கூடவே விழிப்புணர்வை கூட்டுங்கள்

திருமணநாள் இருவரின் அன்பை மெருகேற்றும் பொன்னான நாள்
இருவரும் அளப்பரிய அன்புடன் மகிழ்ந்து குலாவும் ஒரு நன்னாள்
இன்பம் மட்டும் அல்ல துன்பமும் கலந்து ரசிப்பது தான் வாழ்க்கை
மகன் மகள் ஈன்று அவர்கள் திருமணம் கண்டு உதிக்கும் வழுக்கை

பிறந்த நாளில் நம்மை நாமே ஆராய்ந்தறிவோம், தெளிவடைவோம்
திருமண நாளில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து உணர்வோம்
இடையில் வரும் பண்டிகை தருணங்களை கொண்டாடி மகிழ்வோம்
இருவர் உடல் உள்ளத்திற்கு சிறு சேதங்கள் ஏற்படினும், உறுதியுடன்
மனம்விட்டு பேசி, அன்பு கரம் பற்றி மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திடுவீர்!

???
 
Top