Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே....3.

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 3.

உடல் நலம் சரியாகி ஆபீசுக்குப் போகத் துவங்கிய பிறகும் கிளினிக்கில் பார்த்த அந்தப் பெண்ணின் முகம் ஜெயாவை வாட்டியது. அழகான இளமையான பெண். ஆனால் ஏன் கணவனை விவாகரத்துச் செய்தாள்? விவாகரத்து ஆன பிறகும் ராமகிருஷ்ணன் ஏன் கல்யாண ஃபோட்டோவை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்? இவர்களுக்குக் குழந்தைகள் இல்லையா? ஒரு வேளை அது காரணமோ இருவரும் பிரிந்து செல்ல? யாரிடம் கேட்பது? கேட்டால் நான் அடுத்தவர் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைக்கிறேன் என எண்ண மாட்டார்களா? ஆனால் தெரிந்து கொள்ளாவிட்டால் தூக்கமே வராது போல இருக்கிறதே? என எண்ணிப் பலவாறு குழம்பினாள்.

இதனிடையில் ராஜாவுக்கும் விஜிக்கும் கல்யாணம் முடிவானது. அவர்களது குலதெய்வம் கோயிலில் வைத்து எளிமையாக செய்வது என்றும் ஊரில் பெரிதாக ரிசப்ஷன் கொடுப்பது எனவும் முடிவு செய்தார்கள். கல்யாணத்துக்கு மிகவும் குறைந்த பேரையே அழைத்தார்கள். அவர்களில் ராம கிருஷ்ணனும் ஜெயாவும் இருந்தனர். கட்டாயம் வர வேண்டும். நகரத்திலிருந்து 100 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அங்கு இருக்கும் அம்மன் கோயிலில் வைத்து தான் கல்யாணம் எனச் சொன்னான் ராஜா. இது வரை அதிகமாக ஜெயா எங்கும் வெளியூர் சென்றதில்லை என்பதால் போகலாமே என்ற எண்ணம் அவளுக்கு. அதோடு விஜி வீட்டினரும் ராஜா வீட்டினரும் இணைந்து பெரிதாக ஒரு பஸ் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் வந்தால் முந்தைய இரவே போய் தங்கி விட்டுக் காலையில் கல்யாணத்தை முடித்துக்கொண்டு அதிலேயே திரும்பி விடலாம் எனவும் சொன்னான் ராஜா.

"எங்கேப்பா தங்குறது? சின்ன கிராமத்துல ஹோட்டல், லாட்ஜ் எல்லாம் இருக்குமா?" என்றாள் ஜெயா.

"அந்தக் கவலையே வேண்டாம் மேடம். எங்க சொந்தக் காரங்க வீடு மூணு காலியா இருக்கு. அதுல தான் நாம எல்லாரும் தங்கப் போறோம். வாங்க மேடம்" என்றாள் விஜி வற்புறுத்தலாக. மனதில் சந்தோஷத்தோடு ஒப்புக்கொண்டு வீட்டில் அம்மாவிடமும் சொன்னாள்.

"போயிட்டு வா ஜெயா! உனக்கும் மாறுதலா இருக்கும். நானும் கவிதா வீட்டுல போயி ரெண்டு நாளு இருந்துட்டு வருவேன்." என்றாள் அம்மா.

"அப்ப தீபன்?"

"இங்க இருந்து ஆபீஸ் போறதுக்கு பதிலா கவிதா வீட்டுல இருந்து போவான். இன்னும் சொல்லப்போனா அது தான் பக்கம் அவனுக்கு" என்றாள்.

நான் எப்போது வெளியூர் கிளம்புவேன் எனக் காத்திருப்பது போல அல்லவா திட்டம் போட்டிருக்கிறாள் அம்மா? ஏன் என்னையும் இதே வீட்டின் ஒரு நபராகக் கருதவில்லை? கவிதா வீட்டுக்கு நான் வர மாட்டேன் என இவர்களாகவே எப்படி முடிவு செய்தார்கள்? பலப்பலக் கேள்விகள் மனதில் இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மௌனமாக அம்மாவிடம் பணத்தை நீட்டினாள்.

"எதுக்கும்மா?"

"உன் மக வீட்டுக்குப் போற வெறும் கையோடவா போவ? ஏதாவது இனிப்பு, பழம் இப்படி வாங்கிட்டுப் போ" என்றாள். அம்மாவுக்கு வாயெல்லாம் பல். சட்டென வாங்கி வைத்துக்கொண்டாள். ஜெயாவும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் தனது வெளியூர்ப் பயணம் தான் பாதிக்கப்படும் என நினைத்து எல்லாவற்றையும் புறந்தள்ளி பேக் செய்வதில் முனைந்தாள்.

"உம்ம்...டிராவெல் பண்ணும் போது காட்டன் சுடிதார் தான் வசதி போகும் போது ஒண்ணு வரும் போது ஒண்ணு எடுத்து வெச்சிருவோம். போன இடத்துல துவைக்க முடியாது அதனால எல்லாமே ரெண்டு செட் எடுத்துட்டு போகணும்" என திட்டமிட்டாள். கல்யாணத்தின் போது பட்டுப்புடவை கட்டினால் நன்றாக இருக்குமே என நினைத்தாள். அம்மாவிடம் கேட்போம். அம்மா தான் மூன்று புடவை வைத்திருக்கிறாளே என எண்ணிக் கொண்டாள்.

"அம்மா! உன்னோட பச்சைப் பட்டுப்புடவையைத் தரியா? அதுக்கு மேட்சிங்கா மணி வெச்ச பிளவுஸ் எங்கிட்ட இருக்கு. கல்யாணத்துல கட்டிக்கறேன்" என்றாள்.

அம்மா திருதிருவென விழித்தாள்.

"என்னம்மா? டிரை கிளீனிங்குக்குக் குடுத்திருக்கியா?"

"ஆமா...வந்து இல்ல....." என்று இழுத்தவள் எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். ஏதோ தோன்ற அம்மாவைத் தொடர்ந்தாள்.

"என்னம்மா ஆச்சு? புடவை கிழிஞ்சு போச்சா?"

அம்மா மீண்டும் மௌனம் சாதித்தாள். சற்றே எரிச்சல் வந்தது ஜெயாவுக்கு.

"என்னம்மா நான் கேக்கக் கேக்க பதிலே சொல்லாம இருக்கே? போன தீபாவளிக்கு நான் வாங்கிக்குடுத்த அந்தப் பட்டுப்புடவை எங்கே போச்சு? சொல்லேன்? என்றாள் சற்றே குரலை உயர்த்தி.

"நீ வாங்கிக்குடுத்தது அதனால தானே கணக்குக் கேக்குற? சொல்றேன். உன் தங்கச்சி பிள்ளைப் பெத்துப் போகும் போது கேட்டா. அதனால அவ கிட்டக் குடுத்துட்டேன். உங்கிட்ட சொல்லியிருந்தா நீ கத்துவே? அதான் சொல்லல்ல. இப்ப என்ன? அதுக்காக என்னைத் தூக்குல போடுவியா?" என்றாள் அதைவிடக் கத்தலாக.

ஜெயாவின் மனம் அதிர்ந்து அடங்கியது.

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிப் பேசுறம்மா? கல்யாணத்துக்குப் போறோமே கட்டிக்கிட்டுப் போகலாமேன்னு கேட்டேன். கவிதாவுக்கு குடுத்தா நான் ஏன் வேண்டாம்னு சொல்லப் பொறேன்?" என்றாள் மெல்ல.

"ஹூம்! இப்ப இப்படிச் சொல்லுற! இதுவே கவிதாவை வெச்சுக்கிட்டு நான் கேட்டிருந்தா பிள்ளைப் பிறப்புச் செலவு போதாதுன்னு சேலையையும் குடுக்குறியான்னு கேட்டிருப்பே? உனக்குத்தான் அவளைப் பார்த்துப் பொறாமைன்னு எல்லாருக்குமே தெரியுமே?" என்றாள் அம்மா சத்தமாக.

நெஞ்சில் அடி மேல் அடி வாங்கினாள் ஜெயா.

எனக்கா? எனக்கா பொறாமை கவிதா மேல்? ஏன்? எதற்காக? அவளது நல்வாழ்வைப் பார்த்து நான் ஏன் பொறாமைப் பட வேண்டும்? அப்படி ஒரு வேளை அவள் நினைத்தால் கூட அது தவறு என்று சொல்ல வேண்டிய அம்மாவே என் மேல் பழி சுமத்துகிறார்களே? மனதின் வலி கண் வழியே வந்தது.

"அம்மா தாயே! அழாதே! என் மகனுக்கு முத மாச சம்பளம் வரட்டும், அதே மாதிரி பச்சைப் பட்டுப்புடவை வாங்கிக் குடுத்துடறேன். தெரியாம செஞ்சிட்டேன். மன்னிச்சுக்கோம்மா" என்று பெரிய கும்பிடாகப் போட்டாள். மனம் முற்றிலும் முறிந்து போனது. பேச்சே வரவில்லை. அப்படியே சென்று தன் அறையில் அமர்ந்து கொண்டாள்.

"என்ன பேச்சுப் பேசுகிறாள் அம்மா? ஒரு புடவைக்கு இத்தனை பேச்சா? நான் வேறு தீபன் வேறு என்பது போலல்லவா பேசுகிறாள்?" என எண்ணிக் குமைந்தாள். கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட மனநிலையில் வெளியூர் போனால் நன்றாக இருக்குமா என யோசித்தாள். அதே நேரம் இன்றைக்கு மீண்டும் அம்மாவிடம் பேசும் தெம்பும் இல்லை அவளுக்கு. ஆகையால் மனதைத் தேற்றிக்கொண்டு கையில் கிடைத்த புடவையையும் பிளவுசையும் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினாள். அப்படியே எங்காவது போய் விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்ற எண்ணம் தோன்றியது. அதை மறைத்துக்கொண்டு வீட்டு வாசலில் ஆட்டோ பிடித்து விஜி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஏனோ அங்கே ராம கிருஷ்ணனைப் பார்த்ததும் ஆறுதலாக இருந்தது.

சரியாக 12 மணிக்கு பஸ் கிளம்பியது. கல்யாண கோஷ்டி என்பதால் பாட்டும் நடனமும் தூள் கிளப்பின. அதில் கலந்து கொள்ளவும் முடியாமல் புறக்கணிக்கவும் முடியாமல் திண்டாடினாள் ஜெயா. கிட்டத்தட்ட அதே நிலை தான் ராமகிருஷ்ணனுக்கும் எனத் தெரிந்து போனது. அதுவும் ஜெயாவின் மனப்புண்ணுக்கு மருந்து தடவுவது போலிருந்தது. ஒரு டோல் கேட் அருகே வண்டியை நிறுத்தி அனைவருக்கும் உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. பிரியாணி மற்றும் காளான் ஃபிரை. அவரவர் விருப்பமான இடத்தைத் தேர்ந்தெடுத்து வெளியில் அமர்ந்து உண்டனர். ஏனோ ஜெயாவுக்கு பஸ்ஸை விட்டு வெளியில் செல்ல விருப்பமில்லை. கூட்டத்தோடு கலந்து மனம் விட்டுப் பேசவோம் பழகவோ அப்போதைய அவளின் மன நிலை இடம் கொடுக்கவில்லை. அதனால் தன் இருக்கையிலேயே அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்தாள்.

"ஓ! நீங்களும் பஸ்ஸுல தான் சாப்பிடறீங்களா?" என்ற குரல் கேட்க தூக்கிவாரிப் போட்டு நிமிர்ந்தாள். இரு வரிசைகள் தள்ளி ராமகிருஷ்ணன் பொட்டலத்தைப் பிரித்துக்கொண்டிருந்தார். சமாளித்துக் கொண்டு சிரித்தாள்.

"வெளியில ஒரே வெயில்" என்றாள். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததை சுட்டிக்காட்டினார் ராமகிருஷ்ணன்.

அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சாப்பிடுவதில் முனைந்தாள். வயிறு பசித்தாலும் ஏனோ சாப்பிடவே பிடிக்கவில்லை. ராமகிருஷ்ணன் தனது பொட்டலத்தை எடுத்துக்கொண்டு இவளது சீட்டுக்கு பக்கத்து சீட்டுக்கு வந்தார்.

"உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியாது ஜெயா மேடம். ஆனா நீங்களும் என்னை மாதிரின்னு நானே புரிஞ்சுக்கிட்டேன். நமக்குத் தேவையானதை நாம தான் செஞ்சுக்கணும். மத்தவங்களை எதிர்பார்க்காதீங்க. உங்க உடம்பு நல்லா இருக்கணும்னா நேரத்துக்கு சாப்பிடணும். சாப்பிடுங்க" என்றார்.

முதல் முறையாக ராமகிருஷ்ணன் ஆபீஸ் விஷயம் தவிர இப்படி தனிப்பட்ட முறையில் பேசியது ஆச்சரியமாகவும் இனிய அதிர்ச்சியாகவும் இருந்தது. மனம் சற்றே இளக அவரோடு பேசியபடியே முடிவதையும் சாப்பிட்டு விட்டாள். வயிறு நிறையவே மனதின் பல பிரச்சனைகள் காணாமல் போயின. எதையும் சமாளிக்கலாம் என்ற தெம்போடு பஸ்ஸில்ருந்து இறங்கி வெளியில போனாள் ஜெயா.
 
Nice
 
ஆக கவிதா ஏதோ அவங்க அம்மாட்ட இல்லாத பொல்லாதத சொல்லியும் கா...அதையும் இந்த கூமுட்டை அம்மா நம்பி ஜெயாவ இப்படி பேசுது...

எப்படியும் கவினும் கண்டுக்காமல் போய்ருவாறன்...
கவிதா உறிறவர லாபம்னு உறிஞ்சிட்டு அம்மாவ உதறிறுவாள்...
அப்புறம் தான் இந்த அம்மாக்கு நல்லா உரைக்கும்....
 
Top