Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 6

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 6

சுமதிக்கு கால்கள் வெடவெடத்தன. வாய் ஓயாமல் பேசும் சுமதி வாய் அடைத்து நின்றாள்.
சிஸ்டர் ரோஸி வெள்ளை உடையில் தலையில் கருப்பு நிற முக்காடுடன், கைகளை பின்புறம் கட்டிக் கொண்டு இருவரயும் மாறி மாறிப் பார்த்தார்.
முகம் கோபத்தால் தக்காளி போல் சிவந்திருந்தது.
'மாட்டிக் கொண்டோம்' என்று நினைத்த சுமதி ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டாள்.
'வந்த முதல் நாளும் அதுவுமா இப்படியா மாட்டணும். கடவுளே தப்பிக்க வச்சிரு. பிள்ளயாரப்பா, ஒனக்கு தேங்கா வெடல போடறேன்..'
சௌம்யா வாய் திறந்தாள்.
'குரங்குன்னு சொல்லல சிஸ்டர். இவ கூட படிச்சவங்க பேரெல்லாம் சொல்லிட்டிருந்தா. மாரியம்மா, சிவகாமி, ரோஸி, ரங்கு.. அப்டின்னு பேசிட்டே வந்துட்டிருந்தோம்.. சிஸ்டர்.'
சிஸ்டர் உடனே சௌம்யாவைப் பார்த்து நம்பவில்லை பார்வயைப் போட்டார். என்ன நினைத்தாரோ சௌம்யாவைப் பார்த்து, 'எந்த ஊரு?'என்றார். சௌம்யா ஊர் பேரைச் சொன்னாள். 'ஸ்கூல்?' என்றார். ஸ்கூல் பேரையும் சொன்னாள். 'டென்த் மார்க்?' என்று அடுத்து ஒரு கேள்வி கேட்டார். '440' என்று சௌம்யா சொன்னதும் ஒரு நொடி சிஸ்டரின் முகம் மலர்ந்தது. அடுத்த நொடி, 'சரி சரி.. இனி சத்தம் போட்டு பேசிட்டு வரக் கூடாது. பிரின்சிபல் மதர் ரௌண்ட்ஸ் வரப்ப இப்படி சௌண்ட் கேட்டா பின்னி எடுத்துருவாங்க.' என்றார்.
'சாரி சிஸ்டர்' என்றாள் சௌம்யா.
'ஏன் ஒனக்கு வாய் திறக்காதா?' என்று சுமதியைப் பார்க்கவும் அவளும் தயக்கத்துடன் ஒரு சாரி போட்டு வைத்தாள்.
'ஓகே. சீக்கிரம் டைனிங் ஹாலுக்கு போங்க.'
விட்டா போதும் சாமின்னு இருவரும் தலை குனிந்து கொண்டு வாய் மூடி டைனிங் ஹால் நோக்கி நடந்தனர்.
டைனிங் ஹால் பெரிதாக இருந்தது. மாணவிகள் தண்ணீர்க்குழாய் பகுதியில் நின்று தட்டைக் கழுவிக் கொண்டிருந்தனர். அந்த இடைவெளியில் சுமதி சௌம்யாவை நன்றியுடன் பார்த்தாள்.
'ரொம்ப தாங்க்ஸ், சௌம்யா.'
'இதுக்கெல்லாம் தாங்க்ஸா. ப்ரெண்ட்ஸ்க்குள்ள நோ தாங்க்ஸ், நோ சாரி'
'எப்படியோ அந்த பிள்ளயார் தான் ஒன் ரூபத்துல வந்து என்ன காப்பாத்தினார். அடுத்த வாரம் ஊருக்கு போரப்ப வெடல போடணும்.'
சௌம்யா தனது மூக்கைத் தடவ,
'என்ன ஆச்சு, சௌம்யா? என்று கேட்டாள் சுமதி.
'ம்ம். தும்பிக்கை இருக்கான்னு பாத்தேன்.'என குறும்புப் பார்வயோடு சொல்ல, சிரித்தாள் சுமதி.
'ச்சீ, போடி.'
'க்விக் கேர்ள்ஸ். சீக்கிரம் சாப்பிடப் போங்க.' ரோஸி மிஸ்ஸின் வாய்ஸ் கேட்க, 'அம்மாடியோ' என்று இருவரும் சீக்கிரம் தட்டைக் கழுவிக் கொண்டு டைனிங் ஹாலில் நுழைந்தார்கள். மாணவியர் வரிசையாய் டைனிங் பெஞ்ச்களில் அமர, ஆயாக்கள் பெரிய பெரிய பாத்திரங்களில் உப்புமா கொண்டு வந்து, அனைவருக்கும் பரிமாறினார்கள்.
'ஐயே, எனக்கு உப்புமாவே பிடிக்காதே' என சௌம்யா முகம் சுளிக்க,
சுமதி, 'வாழப்பழம் தர்றாங்கல்ல. என் வாழப்பழத்தயும் நீ சேர்த்து சாப்டுக்க.'என்றாள்.
சௌம்யா 'தாங்க்ஸ்' எனவே, சுமதி சட் என்று, ப்ரெண்ட்சுக்குள்ள நோதாங்க்ஸ். நோ சாரி என சௌம்யா சொன்ன ஸ்டைலில் சொல்லவே, இருவரும் சிரித்தனர்.
'ஆனாலும் சுமதி. டீச்சர்ஸ பட்டப்பேர் சொல்லிக் கிண்டல் பண்றது தப்பு. அவங்க கடமை அவங்க கண்டிப்பா இருப்பாங்க. வேணும்னாலும் பாரு அந்த ரோஸீ சிஸ்டர் நல்லா பாடம் சொல்லித் தருவாங்க பாரு. கண்டிப்பா இருக்கற டீச்சர்ஸ் நல்லா பாடம் நடத்துவாங்கங்கறது என் அனுபவம். அப்புறம், பசங்க நம்மள கேலி பண்றப்ப நமக்கு எவ்ளோ கோபம் வருது. அப்படித்தானே டீச்சர்ஸ் காதுல விழுந்தா அவங்களுக்கும் இருக்கும்."
'என்னது இது.. நீ டீச்சரா போயிருவ போலியே. இவ்ளோ அட்வைஸ் பண்ற. அது கிடக்கட்டும். அப்போ எதுக்கு பொய் சொன்ன. அது தப்பில்லயா?'
'ப்ரெண்ட காப்பாத்தணுமே. வேற வழி? பொய்மையும் வாய்மை இடத்தன்னு டென்த்ல வருமே!'
'யப்பா. நீ இவ்ளோ மூளக்காரியா? நான் கொஞ்சம் மட்டுதான்.'
சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை கழுவி விட்டு ரூமை நோக்கி போகும் போது சிஸ்டர் ரோஸி எதிரே வந்தார்.
'இந்தா பொண்ணே. நில்லு..'
இருவரும் நிற்கவும், சுமதியைப் பார்த்து,
'நீ ரூமுக்கு போ. நீ நில்லும்மா' என சௌம்யா திடுக் என்று நின்றாள்.

சுமதி திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே ரூமை நோக்கி போனாள்.
 
நல்லா தானே சமாளித்து சரி பண்ணா திரும்பவும் நிரு்த்துறாரே (y) (y)(y)
 
Nirmala vandhachu ???
 
Top