Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் 'விதி' அத்தியாயம் 5

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 5

வந்த இரண்டாம் நாளே தன் ரகசியம் அம்பலமாகி விட்டதோ என்ற அதிர்ச்சியிலும், மாமா போட்டோ கீழே விழுந்து விட்டதே என்ற எரிச்சலிலும் கத்தினாள் சௌம்யா.
'கொஞ்சம் கூட அறிவு இல்ல.. இப்படித்தான் அடுத்தவங்க என்ன பண்றாங்கன்னு பாக்கறதா? இனி இந்த மாதிரி நடந்துகிட்ட வேற ரூம் கேட்டு மாறிப் போயிருவன் பாத்துக்க.. கன்ட்ரீப்ரூட்ஸ்..'
சுமதியின் குண்டு முகம் சுண்டி விட்டது. மூஞ்சைத் திருப்பிக் கொண்டு தன் பெட் பக்கம் வந்தாள். தன் சூட்கேசில் இருந்து ஒரு உடையை எடுத்துக் கொண்டு கதவைத் தாழ் போட்டு விட்டு உடை மாற்றிக்கொண்டாள்.
ஸ்பீக்கரில் 'மாணவியர் அனைவரும் ப்ரெயர் ஹாலுக்கு வரவும்' என்று சிஸ்டர் ஒருவரின் குரல் அசரீரீ போல் கேட்கவும், சுமதி மூஞ்சிக்கு பவுடர் அப்பிக்கொண்டு சௌமியாவைக் காணாதது போல் ரூமை விட்டு உர்ரென்று வெளியே அகன்றாள்.
சௌமியாவும் போட்டோக்களை அவற்றின் மறைவிடத்தில் வைத்து விட்டு சட் என்று உடை மாற்றி பவுடர் போடாமல் சிங்கார் சாந்து பொட்டு மட்டும் வைத்துக் கொண்டு தன் கையில் உள்ள சாவி கொண்டு ரூமைப் பூட்டி விட்டு வெளியே வந்தாள்.
பக்கத்து அறை மாணவிகள் சிரித்த மாதிரி இவளைப் பார்த்தனர். இவளும் சிரித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தாள்.
மாணவியர் கூட்டம் மெள்ள நடந்து செல்ல, சிஸ்டர் ஒருவரின் குரல் கேட்டது.
'ம்.. லைன்ல போங்க..'
கும்பலாக சென்ற மாணவியர் டக் என்று தமக்குள் வரிசையை ஏற்படுத்தி எறும்புகள் போல் ஊர்ந்தனர்.
ப்ரேயர் ஹாலுக்குள் சென்றதும் எல்லா கிறித்தவ ப்ரேயர் ஹாலில் தென்படும் அக்மார்க் விஷயங்கள் கண்ணில் பட்டன.
ஆங்காங்கே மாதா மற்றும் ஜீசசின் திரு உருவப் படங்கள், பைபிள் வாசகங்கள், பலிபீடம், அதன் மீது போர்த்தப்பட்டிருந்த பளபளக்கும் துணி, பீடத்தின் பின்புறம் 'வா, உன் பாவங்களுக்காகவே நான் உயிர் துறந்தேன்; உயிர்த்தெழுந்தேன்' என்று இருகை நீட்டி வரவேற்கும் இயேசு கிறிஸ்துவின் பெரிய திரு உருவச்சிலை.
சௌம்யா சுடலை மாடனைக் கும்பிட்டாலும், கருணாமூர்த்தி படம் பார்த்ததில் இருந்து ஜீசசைக் காணும்பொதெல்லாம் அவள் மனதில் ஒரு இனம் புரியாத மென்மை சுரக்கும். அவளும் ஊரில் உள்ள கிறித்தவ பேராலயங்களுக்கு நண்பிகள் உடன் சென்றிருக்கிறாள். அங்கு நிலவும் பேரமைதி அவளை மிகவும் கவரும். ஆங்கில ஆசிரியர் சொல்லும் பின் ட்ராப் சைலன்ஸ் அங்கே நிலவுவதை அவள் உணர்வாள். பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் என்று குளோரி சொல்வதைக் கேட்டு அவளும் கற்றுக் கொண்டு எங்கு குருசடிகளைத் தாண்டினாலும் அவ்வாறே அனிச்சையாக செய்ய ஆரம்பித்தாள்.
குடும்பத்தில் எல்லோரும் ஒரு முறை கன்னியாகுமரி டூர் சென்ற போது தென்படும் தேவாலயங்களைக் கண்டு இவள் இப்படிச் செய்யும்போது சந்துரு கூட வியந்து பார்த்திருக்கிறான்.
அவள் அப்பா தான் உறுமுவார்.
'சௌமி... இதெல்லாம் வேண்டாம்..'
அம்மா வக்காலத்து வாங்குவாள்.
'நீங்க சும்மா இருங்க. உங்களுக்கென்ன ஆம்பள. நாங்க பக்கத்து வீடு எதுத்த வீடுன்னு பேச வேண்டாமா? அது போக, பொம்பளைங்களுக்குத் தான் எத்தன பிரச்சன... எல்லா சாமியும் கும்பிட்டு வச்சிகிட்டா ஏதாவது ஒரு சாமியாவது ஆத்திர அவசரத்துக்கு உதவாதா?'
அவள் கிறித்தவ பள்ளியில் படிக்க அனுமதி தந்ததே அவள் தலைமை ஆசிரியை சொன்ன ரெக்கமண்டேஷனில் தான்.
சந்துரு எதுவும் சொல்ல மாட்டான்.
அவனும், அவளும் ஒரு முறை வீட்டிற்குத் தெரியாமல் வள்ளியூர் சென்று அருணா தியேட்டரில் ஜமீன் கோட்டை படம் பார்த்து விட்டு வரும்போது பாத்திமா சர்ச் வழியே வர நேர்ந்தது.
'ஒரு நிமிடம் இருங்க மாமா வந்திர்றென்.' என்று சொல்லி விட்டு சர்ச் உள்ளே சென்று முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டு வெளியே வந்து சிறிது காணிக்கை உப்பை எடுத்து தானும் வாயில் போட்டுக் கொண்டு சந்துருவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட வைத்தாள்.
சந்துருவோடு வள்ளியூர் சென்று இரண்டே படங்கள் பார்த்திருக்கிறாள்.அருணாவில் ஜமீன் கோட்டை.
சித்ராவில் பாம்பே.
அப்போதெல்லாம் தியேட்டருக்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து போவார்கள். ஆனால் தியேட்டரில் ஆண்கள் தனி, பெண்கள் தனி என்று பிரிவுகள் இருக்கும். படம் பார்த்து முடித்து விட்டு வெளியே காத்திருந்து சேர்ந்து வருவார்கள். பால்கனிக்கு அதிக பணம் (ரூ.5!) தர வேண்டி இருக்கும். மேலும் பெண்கள் பொது இடத்தில் இணையோடு ஒரு இடைவெளி காக்கும் பழக்கம் அப்போது இருந்ததால் புதிதாக கல்யாணம் முடிந்தவர்கள், பணக்காரர்கள் மற்றும் வெட்டி கௌரவம் படைத்தவர்களின் இடமாக பால்கனி அன்று இருந்தது.
மாமாவுடன் சைக்கிளில் சென்ற நினைவுகள் இப்போது நினைத்தாலும் இன்பமாக இருந்தது.
ப்ரேயர் முடிந்ததற்கான அறிகுறிகள் தெரிய, சௌம்யா சட் என்று நிகழ்காலத்திற்கு திரும்பினாள்.
மாணவிகள் வரிசையாக அவரவர் அறைகளுக்குத் திரும்பினர். வழியில் நின்ற சிஸ்டர், 'கேர்ள்ஸ்! ஒன்லி ஹாப் அன் அவர். ரூம்ல போயி தட்டை எடுத்துட்டு வந்து அந்த டைனிங் ஹாலுக்கு போங்க.. அங்கேயே உங்க தட்டை அதுக்கான எடத்துல வச்சிரலாம். சாப்பிட்டு முடிச்சுட்டு பத்து நிமிஷத்துல ரெடி ஆயி ஸ்கூலுக்கு வந்திரணும். ஹாஸ்டல் கேர்ள்ஸ் லேட்டா ஸ்கூலுக்கு போனீங்கன்னு தெரிஞ்சது.. பின்னிருவேன்...' என்று கண்டிப்போடு அறிவுறுத்த, எல்லோரும் மௌனமாய் தலை ஆட்டிக் கொண்டு அவரவர் ரூமை நோக்கி போயினர்.
சௌம்யா ரூமைத் திறந்து உள்ளே வரவும், 'உர்'ரென்று சுமதி பின்னே வந்தாள்.
மூஞ்சைத் திருப்பிக் கொண்டு சூட்கேசைத் திறந்து அவள் தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.
சௌம்யாவிற்கு கஷ்டமாய் இருந்தது.
'சுமதி' என்றாள்.
அவள் ஒரு கணம் திரும்பாமல் நின்றாள்.
'சாரி சுமதி.. சட்னு கோபத்துல ஏதோ சொல்லிட்டேன்.. மன்னிச்சுக்க..' என்று உண்மையான வருத்தத்தோடு சொல்ல, சுமதி திரும்பினாள்.
சௌம்யாவின் கண்களில் உருவாகும் கண்ணீர்த்துளிகளைக் கண்டதும், சுமதியின் இறுக்கம் தளர்ந்தது.
'பரவால்ல.. எம் மேலயும் தப்பு இருக்குது தான்.'
சட் என்று இயல்பாகி அவள் கையை பிடித்தாள்.
'சரி. சரி. சீக்கிரம் வா..கீழே அந்த ரோஸி குரங்கு நிக்குது.. சள்ளுனு விழும்.. கீழே எங்க பக்கத்து ஊரு பொண்ணு மாரியம்மா இருக்குறா. ப்ரேயர் ஹால்ல மீட் பண்ணேன். இங்க தான் ஆறாம் க்ளாஸ்ல இருந்து ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறாளாம். அந்த ரோஸி அசிஸ்டண்ட் வார்டன் ஆமாம். அதோட ஸ்கூல்ல மேத்ஸ் எடுக்குதாமாம். அடி பின்னி எடுத்துறுமாம். நம்ம க்ளாசுக்கு அது வரக் கூடாதுன்னு வேண்டிகிட்டேன். இன்னொரு மேத்ஸ் டீச்சர் மெர்லின்னு இருக்காங்களாமாம். அவங்க நமக்கு வந்தா பரவால்ல.'
பட பட என்று பேசியவாறே வந்த சுமதியை வியப்புடன் பார்த்தாள் சௌம்யா. அதற்குள் எத்தனை தகவல் சேகரித்து விட்டாள்! சட் என்று தன் கோப வார்த்தைகளைக் கூட ஜீரணித்து விட்டாளே!
மாடிப்படி இறங்கி கீழே வந்த அவர்களின் எதிரே நின்றிருந்தார் ரோஸி சிஸ்டர். அவர்களை முறைத்தார்.
'யாருடி குரங்கு?' என்று கத்தவே சுமதிக்கு விக்கித்தது.

Nirmala vandhachu ???
Teacher kku name vekkarathu oru kutthamaya
Nanum taan vachrukken ???
 
அச்சோ மாட்டிக்கிட்டாளா... உடனடி சமாதானம் அழகு.
எல்லா சாமியும் கும்பிடுவோம் ஒரு சாமி இல்லன்னா இன்னொரு சாமி உதவும் சூப்பரா இருக்கு (y) :LOL:?
 
சிஸ்டர்ஸ் எல்லாம் அப்போ அப்படி தான், எப்பிடி கண்டு பிடிக்கிறாங்கன்னு இருக்கும். இப்ப எப்படியோ ??
 
Top