Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 23

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 23

எல்லோரும் மரணத்தை நோக்கி தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்றாலும் அது எப்போது வரும் எப்படி வரும் என்பதைச் சின்ன மொபைலில் இத்தனை படைத்த அறிவியலால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் இன்னும் ஆச்சரியம்.
காலையில் நன்றாய்ப் போனவன் மதியப் பொழுதில் உயிரற்ற உடலாய்த்தான் திரும்புவான் என்று யார் தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
தூங்குவது போல் நீண்டு மாலைகளோடு ஃப்ரீசர் பெட்டியில் படுத்திருக்கும் அர்விந்தயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌம்யா.
விஷயம் கேள்விப்பட்டு ஊரில் இருந்து ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர்.
சௌம்யாவின் அப்பா காலையிலேயே வந்து வீட்டின் வாசலில் சேரில் அமர்ந்தவர் தான்.தள்ளாமை காரணமாக யாராவது விசாரிக்கும்போது குலுங்கி குலுங்கி அழுவதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை.
எல்லா காரியங்களையும் பார்த்துக் கொள்வது சந்துருவும், சுமதியின் கணவனுமான ஈஸ்வரனும் தான். சந்துருவின் மகன் சிவா யஜுவோடு ஒட்டிக் கொண்டான்.
'எப்படி இருந்த பொண்ணு. இப்படி ஒண்ணு கெடக்க ஒண்ணு வந்திட்டு இருக்குதெ. யார் கண்ணு பட்டிருச்சோ' என்று ஊரில் இருந்து வந்திருந்த வயசான பாம்படப் பாட்டிகள் புலம்பிய வண்ணம் இருந்தனர்.'இந்த நேரத்துல இவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாம இவ அம்மா படுத்த படுக்கையா அழுதிட்டு இருக்காளே' என்று பேசிக் கொண்டு சேலையில் மூக்கை சிந்திக் கொண்டனர்.
காரியங்கள் வேக வேகமாக நடைபெற்றன.
எரியூட்டும் மைதானத்திற்கு ஆம்புலன்சில் அர்விந்தை எடுத்துப் போகும்போது ஊரே கண்ணீர் வடிக்குமாறு 'என்னங்க....இப்படி என்னயும் இவனயும் விட்டுட்டுப் போறீங்களே.. 'என்று அலறினாள் சௌம்யா. பெரியவர்கள் அவளைப் பிடித்து அணைத்துக் கொண்டனர். அவள் திமிறியவாறு 'இப்ப நான் என்ன செய்வேன்? யஜுவ எப்படி பாப்பேன்?' என்று கதறினாள்.
சந்துருவின் கண்களில் கட்டுப்படுத்த முயன்றும் கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. யாரும் அறியாதவாறு வீட்டின் பின்புறம் சென்று பாத்ரூமில் நுழைந்து வாயில் வேட்டியை அமுக்கிக் கொண்டு அழுதான். சிறிது நேரம் கழித்து கண்களைத் துடைத்து விட்டு ஆசுவாசமாகி வெளியே வந்தான்.
ஆம்புலன்ஸ் கிளம்பி இருக்க, சுமதியின் கணவர் ஈஸ்வரன் பைக்கோடு காத்திருந்தார்.
'வாங்க போலாம்' எனவே சௌம்யாவின் அலறல் காதைப் பிளக்க இருவரும் எரியூட்டும் இடத்திற்கு பறந்தனர்.
ஆயிற்று பத்து நாட்கள்.
இப்பொதெல்லாம் அனைவரும் பிஸி என்பதால் பதினாறை முன்னாடியே வைத்து விட்டனர். கூட்டம் கரைந்து அவரவர் ஊருக்குச் சென்றனர். சுமதி இங்கெயெ இருந்து விட்டாள். வந்திருப்பவர்களுக்கு காபி டிபன் செய்து பரிமாறி தோழிக்கு ஆறுதலாய் இருந்தாள். அர்விந்தின் கம்பெனியில் இருந்தும் அக்கம் பக்கம் இருந்தும் அவ்வப்போதும் வந்து துக்கம் விசாரித்தவாறு இருந்தனர்.
அர்விந்தின் கம்பெனி அவனது பணத்தை உடனெ செட்டில் செய்து க்ரெடிட் செய்தது. அரவிந்த்தோ போட்டோவில் ஐக்கியமாகி மாலை ஊதுபத்தியுடன் இழவு வீட்டில் சிரித்துக் கொண்டிருந்தான்.
சௌம்யாவும், சுமதியும் கிச்சனிலேயே இருந்து கொள்ள சந்துரு உள் ரூமில் சிவாவயும், யஜுவயும் பார்த்துக் கொண்டான். அப்பா ஹாலில் ஈஸி சேரில் சாய்ந்த வண்ணம் டிவியில் நியூஸ் ஓடினாலும் மோட்டு வளையயே வெறித்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறே ஓரிரு நாட்கள் கழிய..
ஒரு நாள்..
சௌம்யாவிடம் வந்தார் அவள் அப்பா.
'ஏம்மா! நீ ஊருக்கே வந்திடறியா?' என்றார்.
'இல்லப்பா. யஜுவுக்கு இங்க தான் ஸ்பெஷல் ஸ்கூல் இருக்கு.'
'எப்படிம்மா தனியா இருப்ப?'
'இருந்து தானெப்பா ஆகணும். இந்த உலகத்துல தனியா வந்தோம். தனியா போப்போறோம். யஜு அப்பா கூட என்ன கூட்டிட்டா போயிட்டாரு? அப்படி தனியா வாழ்ந்தும் பழகிக்க வேண்டியது தான். டீச்சர் வேலைக்கு எக்சாம் எழுத அப்ளை பண்ணி இருக்கேன். அது கெடச்சிடிச்சின்னா ஸ்கூல், வீடுன்னு வாழ்க்கைய ஓட்டிற வேண்டியது தான்'
அப்பா தயங்கியபடி ஆரம்பித்தார்.
'நான் ஒண்ணு சொன்னா கேப்பியாம்மா?'
'சொல்லுங்கப்பா.'
'நீயும் குழந்தய வச்சிட்டு சிரமப்படற...சந்துருவும் சிரமப்படுது... நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தொணயா இருக்கலாமில்ல.'
'அப்பா!' அலறினாள் சௌம்யா.

(அடுத்த த்ரெட்டில் முடியும்)
 
இவர்களை முன்னாடியே சேர்த்து வைத்திருக்கலாம். நல்லது நடந்த சரி
 
Nice epi.
Neega pugunthu vilayadungo authore athukku nammalu either nu per vachichu allo.pinne entha.
Katha nalla irruku. Interesting ah poguthu vera enna?
 
Top