Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 21

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 21

'எப்படியோ எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சிடிச்சி' என்று சுமதி கூற,
'இல்ல' என்றாள் சௌம்யா.
'விதி எங்கள விடவே இல்ல'
'ஏன் என்ன ஆச்சு சௌம்யா?'
சுமதி அதிர்ச்சியாக, சௌம்யா தொடர்ந்தாள்.
பிரசவ வார்டில் நார்மலாகத்தான் நடந்தது டெலிவரி.
ஆண் குழந்தை.
குழந்தையை நர்ஸ் காட்ட அதன் முகத்தை பார்த்து விட்டு சந்தோஷமாக மயங்கினாள் சௌம்யா.
அவள் ரூமுக்கு வந்ததும் பால் குடுக்க குழந்தையை எடுத்ததும் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தாள் சௌம்யா.
முதலில் அப்படித்தான் இருக்கும் என்று சமாதனமடைந்த சௌம்யாவுக்கு சிறிது நேரத்தில் டாக்டர் கூப்பிட்டு சொன்ன தகவல் உச்ச பட்ச அதிர்ச்சியைத் தந்தது.
'வெரி சாரி சௌம்யா. நீங்க இத தாங்கிகிட்டு குழந்தைக்கு ஏத்த மாதிரி நடந்துகிட்டாதான் அதுக்கு நல்லது.'
சௌம்யா முழித்தாள்.
'உங்க குழந்தைக்கு ஆட்டிசம் சிம்பல்ஸ் தெரிது. மைல்டாதான். ஆனா நார்மல் குழந்தைங்க மாதிரி வளராது. இந்த புத்தகத்த படிச்சி இந்த மாதிரி குழந்தைங்கள எப்படி வளக்கறதுன்னு தெரிஞ்சிக்கோங்க.' என்று அடுத்த பேஷண்டை கவனிக்க நகர, 'ஒரு நிமிஷம் டாக்டர். நான் ஒருத்தர அனுப்பறேன். அவர்ட்டயும் இந்த தகவல சொல்லிருங்க.' என்று சொல்லி விட்டு அவள் அம்மாவை வரச் சொன்னாள். அவள் அம்மா இந்த தகவல் கேட்டதும் அப்படியே திகைத்துப் போனாள். பிள்ளயார் பிடிக்க குரங்காய் போனதே என்று அதிர்ந்தாள். சரியாய் தப்பாய் முடிவெடுத்து விட்டோமே என்று கலங்கினாள். இரு உள்ளங்களைப் பிரித்ததற்குத்தான் தனக்கு தெய்வம் இப்படி தண்டனை தந்து விட்டதோ என்று மருகினாள். சட் என்று சௌம்யாவின் கைகளைப் பிடித்து 'என்ன மன்னிச்சுக்கோ சௌமி' என்று சொன்னவள் தான் அப்படியே மயங்கி விழுந்தாள்.
அவளுக்கு ஸ்ட்ரோக் அட்டாக் ஆகி பக்கத்து ரூமில் படுத்த படுக்கை ஆனாள். அர்விந்த் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என்று சந்தோஷமாய் நண்பர்களுக்கு லேண்ட் லைனில் சொன்னவன் விஷயம் தெரிந்ததில் இருந்து மனம் உடைந்து போனான். குழந்தையைப் பார்க்க வந்த சந்துரு கண் கலங்கி வெளியேற, சின்னம்மாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
'என்ன ஒன் ப்ராப்ளம் சரி ஆய்டுச்சில்ல' என்று சௌம்யா கேட்க, 'இந்த மன நிலையிலும் உங்களாலே எப்படிக்கா இப்படி இருக்க முடியுது?' என்று விசும்பினாள் சின்னம்மாள்.
'அழுதா பிரச்சினை தீர்ந்துடப் போகுதா என்ன? அந்த எனர்ஜிய இவனுக்காக சேர்த்து வைக்கப் போறேன் இவன வளக்கறதுக்கு.' என்றாள் .
உடனே சுமதி பக்கத்தில் ஒரு பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்த யஜுவைப் பார்த்தாள்.
'நல்லாதான இருக்கான். ஒண்ணுமே தெரியலியேடி' என்றாள்.
'ஆமாம். மைல்ட் தான். ஆனாலும் அவனால சாதாரண குழந்தைக போல இருக்க முடியாது.'
'போன் நம்பர் கரக்டா சொன்னானெடி'
'அது இந்த குழந்தைங்களோட வரம். ஒரு தடவ ட்ரில் கொடுத்துட்டா மறக்கவே மறக்காது. இவங்களப் பத்தி நான் பேச ஆரம்பிச்ச பேசிக்கிட்டெ இருப்பேன். அந்த அளவுக்கு ஆராய்ச்சி பண்ணி வச்சிருக்கேன்.'
சுமதி சோகமாய் சிரித்து விட்டு 'சரி, மாமாவுக்கு என்ன குழந்தை?' என்றாள்.
'அதுவா? மாமா கத என் கதய விட வலி நெறஞ்சது.'
'என்னடி சொல்ற?'
'மாமாவுக்கும் ஆம்பளப் பையன் தான். இவன விட ஒரு வருஷம் சின்னவன். ஆனா பிரசவ டைம்ல தொப்புள் கொடி சுத்தி சின்னம்மா இறந்துட்டா. குழந்தைய மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது.'
'ஆ' என்று பிளந்த வாயோடு சௌம்யாவைப் பார்த்தாள் சுமதி.
'ஆமாம் சுமதி. மாமா இப்ப கைக்குழந்தயோடு போராடிகிட்டு இருக்கு. அவன வளக்கறதுக்குள்ள அது ஒடுங்கிடிச்சி. முடி எல்லாம் நரச்சு ஆளே மாறிப் போச்சு.'
பேச்சை மாற்ற விரும்பியவளாய் சௌம்யா சாப்பாடு கதைக்கு வந்தாள்.
'பழைய நெனப்புலயே இருந்தேனா சமைக்க மறந்துட்டேன்.ஹோட்டலுக்கு போலாமா இல்ல ஸ்விகில ஆர்டர் பண்ணட்டுமா'
'ஹோட்டலுக்கே போலாம்' என்றாள் சுமதி.

ஒரு கால் டாக்சி புக் பண்ணி சிங்கா நல்லூரில் இருந்து கோணிஅம்மன் கோயிலுக்கு அருகில் இறங்கிக் கொண்டார்கள். யஜுவை கையில் பிடித்தபடி நடந்த சௌம்யா அன்னபூர்ணா ஹோட்டல் வாசலில் நின்ற உருவத்தைப் பார்த்ததும் ரோடு என்றும் பாராமல் அழுது கொண்டே அந்த உருவத்தின் கால்களில் விழுந்து கதறினாள்.
 
Nice epi.
Enna than plan panni veedu kattinalum earthquake vanthal???theivam allo mudivu edukane.
Ammakku velankicha???
Yaru antha uruvam Rosy sister ah???
 
Ippo therinju irrukkume Sowmiya ku ozhukkam evalavu mukkiyam??teens la self discipline solli kudupathu than nijamavae education.
 
இவளுக்காவது பரவாயில்லை. ஏங்க சின்னம்மாவை கொன்னு சந்துருவை இப்படி ஆக்கீட்டீங்க. எல்லாம் விதின்னு சொல்லிடாதீங்க. இன்னும் என்ன இருக்கோ...
 
Top