Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் "விதி" அத்தியாயம் 2

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 2

சௌம்யா நினைத்த மாதிரியே நடந்தது.
மறுநாள் மதியம் ஒரு மணிக்கு செல்போனில் பதிவு பண்ணாத எண்ணிலிருந்து ஒரு கால் வந்தது. க்ரீன் சிம்பலை கீழே இழுத்தாள்.
"சௌமி! நான் சுமதி."
சுமதியின் கணீர் குரல் காதை பிளந்தது.
"சொல்லு சுமதி."
"நல்ல வேளை உன் பையன்கிட்ட இருந்து நம்பர் வாங்கினெனோ பொழச்சேன்.. இல்லன்னா.. சௌமிய மிஸ் பண்ணிட்டோமே.. இனி எப்ப பாக்க போறோமோன்னு தவியா தவிச்சிருப்பேன். ஒம் பையன் செம க்யூட்.நம்பர கரக்டா சொல்லிட்டான். இப்ப நீ ப்ரீ தானே.. வேலைக்கு எங்கயும் போறியா... நீ போக மாட்டேன்னு நான் பீல் பண்றேன்.. ஏன்னா... நீ சொல்லிட்டே இருப்பியே.. படிக்கிறது எல்லாம் மாமா சொன்னதுனால...படிச்சு முடிச்சுட்டு நல்ல ஹௌஸ் வைப்பா மாமாக்கு பிடிச்ச மாதிரி நடந்துப்பேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வியே.."
சுமதி மேற்கொண்டு எப்படி கேட்பதென்று தயங்குவது தெளிவாகத் தெரிந்தது.
"எல்லாம் போன்ல பேச முடியாது. நீ ப்ரீயா இருந்தா.. வீட்டுக்கு வாயேன். விபரமா பேசலாம்."
ஒரு நிமிடம் மௌனித்த சுமதி தொடர்ந்தாள்.
"அதுக்கென்ன வந்துட்டா போச்சு. கோயம்புத்தூர்ல எங்க இருக்க?"
"சிங்காநல்லூர் பக்கத்துல வசந்தா மில்ஸ்."
"நான் கீரணத்தம் பக்கத்துல இருக்கேன். பரவால்ல. அவர் நைட் எட்டு மணிக்கு தான் வருவாரு. இப்ப மணி பன்னண்டு தானே ஆவுது..நான் கெளம்பி வர்றென். லஞ்ச் ஒன் வீட்ல தான்."
"சரி. பாத்து வா. நீ தான் அப்பவே சன்னி ஓட்டுவியே."
"ஆமாம். இப்ப ஸ்கூட்டி வச்சிருக்கேன். விளாங்குறிச்சி ரோட்ட புடிச்சேன்னா.. முக்கா மணி நேரத்துல வந்துருவேன். சரி. போன வச்சிரட்டுமா?"
"ம்" காலை கட் செய்து விட்டு சோபாவில் ஆயாசமாய் அமர்ந்தாள் சௌம்யா.
ஒரு பக்கம் உயிர்த்தோழியை சந்தித்து பத்து வருட கதையைப் பேசப் போகிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் பழைய கதைகளை-மறக்க நினைக்கும் பக்கங்களை மீண்டும் புரட்டப் போகிறோம் என்ற எண்ணம் தாங்க இயலாத வேதனையைத் தருகிறது. சுமதியைப் பத்தி தெரியாதா என்ன.. ராத்திரி முழுக்க தூங்கி இருக்க மாட்டாள். கணவனிடம் பழைய கதைகளை எல்லாம் கூறி இருப்பாள். அரவிந்தின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாளே! அவன் முகத்தில் சந்துரு மாமாவைத் தேடி இருப்பாள். சந்தேகம் வரவே மண்டைக்குள் பூச்சி அரிக்க விடை தேடி இங்கு வருகிறாள்.
எப்போது இந்த சுமதியை சந்தித்தோம்? இன்றும் பசுமையாய் அந்த காட்சி கண்ணுக்குள் வந்து நின்றது.
திருநெல்வேலி பக்கம் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவள் சௌம்யா. பத்தாம் வகுப்பில் கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண். பேப்பரில் எல்லாம் போட்டா வந்தது. அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாரிடமும் காட்டி பீற்றிக் கொண்டு ஊரையே வலம் வந்தான் சந்துரு. அவன் சௌம்யாவிற்கு முறைப்பையன். அதாவது சௌம்யாவின் அப்பாவினுடய அக்காள் மகன். கிராமத்தில் உள்ள வழக்கம் போலவே அவளுக்கு இவன் என்று பெரியவர்கள் சிறு வயது முதலே சொல்லி சொல்லி இவர்கள் மனதிலும் ஆசை ஆலமரம் மாதிரி வளர்ந்து நின்றது.
தலைமை ஆசிரியை 'நல்ல படிக்கிற பெண். திருநெல்வேலியில் கன்னிகாஸ்திரீகள் நடத்தும் புகழ் பெற்ற அந்த பள்ளியில் படிக்க வைத்தால் ஓகோ என்று வருவாள். கிராமத்துக்கே பெருமை தேடித் தருவாள்.'என்று சொல்ல சௌம்யாவின் அப்பா ஒரே மகளது பெருமை ஊருக்கே தெரிய வேண்டும் என்று அந்த பள்ளிக்குச் சென்று அப்ளிகேஷன் வாங்கி வந்து விட்டார்.
சௌம்யா ஓவென்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள். டவுண் போய் விட்டால் தினமும் மாமாவைப் பார்க்க முடியாது போய் விடுமே என்று நினைத்து அப்ளிகேஷனில் கையெழுத்து போடமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
அன்று மாலை..
வழக்கம் போல் அவள் சந்தி சுடலை கோயிலுக்கு வர, சொல்லி வைத்தாற்போல் சந்துருவும் ஆஜர். அவனைப் பார்க்கவும் அவளுக்கு கண்களில் நீர் தாரை தாரையாய் பெருக ஆரம்பித்தது.
கோயில் மெயின் ரோட்டின் மீது அமைந்திருந்தது. மேலே கூரை இல்லாது வெட்ட வெளியாய் இருந்தது. சாத்தி இருக்கும் இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தால் கிடா மீசையும், உருட்டி விழிக்கும் விழிகளும், நெற்றி மீது வைத்திருக்கும் அரிவாளுமாய் சுடலை சாமி உக்கிரமாய் செதுக்கப்பட்டிருந்தார். கைகளை கூப்பியபடி கண்களை மூடிக்கொண்டு அவரை வலம் வர ஆரம்பித்தாள் சௌம்யா. கோயிலில் யாரும் இல்லை. பூசாரி காலை ஒரு நேரமும், பின்பு கொடை நாட்களில் மட்டும் வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
"சௌம்யா..."
மாமாவின் குரல் தான் என்று தெரிந்தும் அழுகையை அடக்கிக் கொண்டு வலம் வருவதைத் தொடர்ந்தாள்.
"சௌம்யா.. நில்லு.."
பிரேக் போட்டதைப் போல நின்றாள்.
கண்களைத் திறந்து திரும்பிப் பார்க்க, அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
சந்துரு சௌம்யா போல சுண்டினால் தெறிக்கும் நிறம் அல்ல. கண்ணனின் காந்தல் நிறமான கருப்பு. அவள் அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார். 'எங்க குடும்பத்திலேயே எங்க அக்கா மட்டுந்தான் கருப்பு. அதே போல அவ குடும்பத்தில இருக்ற ஒரே வாரிசான சந்துருவாவது மாப்ள மாதிரி கலரா இல்லாம அக்கா மாதிரியே கருப்பு. பரவால்ல. நீ செவப்பா இருக்கேல்ல. மாப்ளயும் அக்காவும் மாதிரியே நீயும் சந்துருவும் நாளைக்கு பார்க்க குன்றிமணி முத்து மாதிரி இருப்பீங்க.'
"ஏய். சௌம்யா..இப்ப எதுக்கு அழுற?"
சௌம்யா பதில் கூறாது கேவத் தொடங்கினாள்.
"இங்க பாரு. ரோட்ல போறவங்க இங்க பாத்திட்டே போவாங்க. இன்னும் ரெண்டு சுத்து சுத்து மாதிரி சுத்து.. நானும் பின்னாலேயே வந்து பேச்சு குடுக்கிறேன். மொதல்ல கண்ண தொடச்சுக்கோ."
சௌம்யா தாவணி தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு மெதுவாக மறுபடியும் வலம் வர ஆரம்பித்தாள்.
"இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி அழுதுட்டு இருக்கற? படிக்கத்தானே டவுனுக்குப் போற?"
டக் என்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் சௌம்யா.
"ஓ! உங்க மாமா மாப்ளய தூது அனுப்பி இருக்காரோ?"
"இல்ல சௌம்யா. எனக்கும் தினமும் ஒன்ன பாக்க முடியாதுங்கற வருத்தம் இருக்காதுன்னு நெனக்கறியா?"
"அப்படி இருந்தா என்ன நடந்து போச்சுன்னு கேப்பீங்களா?"
மறுபடியும் நடையைத் தொடர்ந்தாள்.
"இங்க பாரு சௌமி! நான் தான் படிப்பு வராம பாதியிலெ நிறுத்திட்டு ட் ரைவரா ஆயிட்டேன். நீயாவது படிச்சாதானே நாளைக்கு நம்ம குழந்தைகளுக்கு சொல்லிக் குடுக்க முடியும்."
சௌம்யாவிற்கு அழுகை நின்று முகம் வெட்கத்தால் சிவந்தது. மௌனமாக நின்றாள்.
"நான் தான் படிப்பு வராம ட்ரைவரா ஆயிட்டேன். ஒனக்கு தான் படிப்பு வருதில்ல. நம்ம சித்திகா டீச்சர் சொன்ன மாதிரி மேற்கொண்டு படி. நீ படிச்சு முன்னுக்கு வந்தின்னா நம்ம கிராமத்துல இருக்கற பொம்பளைபுள்ளைங்க படிக்க ஆரம்பிச்சுரும். பீடி சுத்தி இந்த கிராமத்திலேயே வாழ்க்கய முடிச்சுக்கற நெலம மாறி பொம்பளைங்க வெவ்வேற வேலைக்கு போக ஆரம்பிப்பாங்க. ஒரு பொண்ணு படிச்சா அந்த குடும்பத்துக்கே நல்லது. நம்ம சித்திகா டீச்சர் அவங்க பையன வளத்த விதம் தான் நம்ம கண்ணாலேயே பாத்துக்குறோமே! மத்த ஆம்பளைங்கல்லாம் குடி, சீட்டாட்டம், ஊர சுத்தறதுன்னு இருக்கறப்போ அவங்க பையன் நல்லா படிச்சு ஒரு கெட்ட பழக்கமும் இல்லாம கஸ்டம்ஸ்ல ஏதோ பெரிய வேலைல இருக்கிறானே!"
சௌம்யா சட் என்று கூறினாள்.
"ஏம் மாமா! நீங்க இல்லயா ஒரு கெட்ட பழக்கமும் இல்லாம?"
"கெட்ட பழக்கம் இல்ல தான். ஆனா படிப்பு இல்லயே! சிறு வயசில இருந்து அம்மாக்கு பீடி சுத்த எல வாங்கறது, பீடி கட்டு கொண்டு போய் வள்ளியூர்ல கொடுக்கறது, அப்பாக்கு ஒதவியா ரைஸ்மில்ல இருந்தது.. அவர் போன பின்னாடி வீட்ட கௌரவமா காப்பாத்த ட்ரைவிங் கத்துகிட்டு ட்ரைவரா ஆனது..இப்படி என் படிப்பு கெட்டு போச்சே! எங்க அம்மா ஏதாவது படிச்சிருந்தா ஏதாவது ஒரு வேலைக்கு போயி என்ன படிக்க வச்சிருப்பாளே! உத்தியோகம் புருஷ லச்சணம்.. ஆம்பளைப்புள்ள காசு சம்பாதிச்சா போறும்னு விட்ருக்க மாட்டாளே.."
சௌம்யா அமைதியாய் இருக்க, மேலும் தொடர்ந்தான்.
"இப்பல்லாம் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்லாம் வந்துடுச்சி.. நாளைக்கி குழந்தைங்க இங்கிலீஷ்ல ஏதோ டௌட் கேட்டா சொல்லிக் கொடுக்க யாராவது ஒருத்தருக்கு தெரிஞ்சா தானே நல்லது."
சௌம்யா அவனை நேருக்கு நேர் பாத்து சிரித்தாள்.
"என்னமா வருங்காலத் திட்டம் மாமாவுக்கு! பேசாம நீங்க அரசியல்ல இறங்கலாம். நல்ல எதிர்காலத் திட்டம் போடறீங்க. எனக்கும் புரியுது மாமா.. ஆனா, நித்தமும் ஒங்கல பாத்து பேசிட்டு இருந்துட்டு ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை தான் பாக்க முடியும்னா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்."
சௌம்யா மறுபடியும் அழுது விடுவாள் போல் இருக்க, சந்துரு தொடர்ந்தான்.
"இங்க பாரு சௌமி. ஒரு ரெண்டே வருஷம் தான். நம்ம குடும்பத்துக்குன்னு நெனச்சுக்கோ. ஸ்கூல் ஹாஸ்டல்லே தான் இந்த கட்டுப்பாடு. காலேஜ் போயிட்டா பிரச்சினயே இல்ல. டவுண்லெயெ அத்தய கூட்டிட்டு போயி நீ தங்கி படிக்கலாம். அல்லது எங்க அம்மாவ அனுப்பறேன். நானும் கூட அங்க வந்திர்றென். ட்ரைவர் வேலைக்கு அங்க எப்பவுமே கிராக்கி தான்."
சௌமியா ஒருவிதமாக சமாதானமாக, கோயில் வாசலில் இருந்து குரல் கேட்டது.
"டேய் மாப்ள. இப்பவே பேசிட்டா கல்யாணத்துக்கு அப்புறம் பேச ஒண்ணும் இருக்காது. இருட்டிப் போனது கூட தெரியாம அப்படி என்ன தான் பேசுவீங்களோ! நான் கூட மாமன் பொண்ண தான் கட்னேன். கல்யாணத்து வர வெறும் பார்வ மட்டும் தான். இந்த காலத்து புள்ளைங்க இப்படி ரோட்லேயே இவ்ளொ நேரம் பேசிட்டு நிக்குதுங்க."
சந்துருவின் பக்கத்து வீட்டு சந்திரன் மாமா சொல்லிக் கொண்டே நடக்க, சந்துருவும், சௌமியாவும் 'ஆமாம்ல, இருட்டிடுச்சு' என்று ஒரே குரலில் சொல்லி பின்பு சட் என்று சிரித்தார்கள்.
 
Nirmala

Nirmala vandhachu ???
 
படிக்கனும் என அழகா சொல்லி எதிர்கால திட்டமெல்லாம் போட்டாங்களே அப்புறம் என்ன ஆச்சு. அருமையான எபி (y) ?:D
 
படிக்கனும் சொல்லி பிரிஞ்சிட்டாங்களோ ??
 
Top