Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 19

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 19

சட் என்று லைட் எரிய தூக்கு கயிற்றைப் பிடித்தவாறு 'ஙீ' என்று விழித்தாள் சௌம்யா.
அம்மா நின்றிருந்தாள்.
அவளை ஒரு முறை பார்த்தாள்.
பின்பு ஒன்றும் சொல்லாமல் தன் கையில் இருந்த கீரை போன்ற மசியலை எடுத்தாள்.
கொண்டு வந்திருந்த டம்பளரில் கொஞ்சமாய் அதைப் போட்டு நீர் ஊற்றினாள்.
பின்னர் ஒரு கலக்கு கலக்கி விட்டு வாயில் அப்படியே ஊற்றிக் கொண்டாள்.
சௌம்யாவைப் பார்த்தாள்.
'ஏன் நிறுத்திட்ட? தூக்கு போட்டுக்கோ. ஒன்ன மேல வரவேற்க நான் இருக்க வேண்டாமா? அதான் அரளி வெதய அரச்சி குடிச்சிட்டிருக்கேன்'என்றாள்.
'அம்மா!' என்று அலறி ஸ்டூலை விட்டு இறங்கி ஓடி வந்தாள் சௌம்யா.
'வாம்மா! டாக்டர்ட்ட போலாம்' என்று பரிதவித்தாள். தாய்ப்பாசம் மனசைப் பிசைந்தது.
'வேண்டாம்மா! எப்படியோ நீ சாகத்தான் போற. வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சாலும் அது தான் நடக்கப் போகுதுனு தெரிஞ்சிடிச்சி. இனி எதுக்கு உயிரோடு இருக்கணும்? என் வம்சம் தழைக்கப் போறதில்ல. பரவால்ல. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா பாத்துக்கலாம்.' என்று விரக்தியாய் சொல்ல, சௌம்யா கண்ணீரோடு கூச்சலிட்டாள்.
'அம்மா! சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு வாம்மா! ஒன் வயசுக்கு ஒடம்பு தாங்காதும்மா!
அம்மா இறங்கி வந்தாள்.
'நான் வரணும்னா ரெண்டு விஷயம் நடக்கணும். ஒண்ணு நீ எந்த பிரச்சின வாழ்க்கைல வந்தாலும் தற்கொல பண்ணிக்க மாட்டேன்னு நீ சந்துரு மேல சத்தியம் பண்ணணும். இரண்டாவது அதில இருக்ற போட்டோஸ்ல ஒண்ண செலக்ட் பண்ணி என்கிட்ட தரணும். அவனோட குடியும் குடித்தனமுமா இருக்கணும்.'
'சரிம்மா. மாமா மேல சத்தியமா நான் வாழ்க்கைல தற்கொல பண்ணிக்க மாட்டேன்மா. வாம்மா டாக்டர்ட்ட போலாம்.'
லொக் லொக் என்று இருமிய அம்மா 'இரண்டாவது' என்றாள்.
கட கட என்று தவழ்ந்து போய் அங்கொன்று இங்கொன்றாய் சிதறிக் கிடந்த போட்டோக்களில் ஒன்றை எடுத்து யார் என்று கூட பாராமல் அம்மாவிடம் நீட்டினாள்.
'இந்தாம்மா! இவர நான் கட்டிக்கறேன்.' என்று அவள் சொல்லவும் அம்மா திருப்தியுடன் மயங்கவும் சரியாய் இருந்தது. உடனே ஹவுஸ் ஓனரிடம் சொல்லி ஆட்டோ ஒன்றைக் கூப்பிட்டு பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து அம்மாவை காப்பாற்றி விட்டாள் சௌம்யா.
சொல்லியபடியே அடுத்த மாதத்தில்
ஒரே முகூர்த்தத்தில் இவள் கல்யாணமும் சந்துருவின் கல்யாணமும் நடந்தது தனித் தனியாக.
முதல் இரவு.
பால் செம்புடன் உள்ளே நுழைந்த சௌம்யாவை ஆழமாய்ப் பார்த்தான் அரவிந்த்.
சந்துரு ஒருவித கிராமத்து அழகு என்றால், அரவிந்த் பட்டணத்து அழகு. கோதுமை நிறமும், உயரமும், நறுக்கி விட்ட மீசையும், ஷேவ் செய்த தடம் தெரியும் பச்சை தாடையும் யாரயும் கிறக்கும்.
சௌம்யா மெல்லமாய் அவன் பக்கத்தில் போய் நின்று பால் செம்பை நீட்டினாள்.
அதை அவன் வாங்கியவுடன் அவன் கால்களில் விழுந்து வணங்கினாள் சௌம்யா,
'ஹே வாட் இஸ் திஸ்! நீ படிச்ச பொண்ணுன்னு சொன்னாங்க. கால்ல விழுந்துட்டு இருக்ற! நான் ஒண்ணும் அவ்ளோ வயசானவன் இல்ல'.
கையில் இருந்த பால் செம்பை பக்கத்தில் இருந்த டீபாயின் மேல் வைத்தவன் கட்டிலில் உட்கார்ந்தவன் அவளயும் உட்காரச் சொன்னான்.
அவள் தயங்கியபடி அவன் அருகில் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்தாள்.
'மொதல்ல என்ன நல்லாப் பாரு. கல்யாணத்தில இருந்து இப்ப வர நீ என்ன சரியாவே பாக்கல.'
சௌம்யா மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
நல்ல அழகன் தான்.
மறுபடியும் குனிந்து கொண்டாள்.
'கொஞ்ச நேரம் பேசலாமா?'
அவள் மெதுவாய் தலை அசைத்தாள்.
'என் பேர் உனக்குத் தெரியும்னு நெனக்கிறேன். நான் ஆக்சுவலி கோயம்புத்தூர். அப்பா அம்மால்லாம் இங்க உள்ளவங்க தான். கவர்ன்மெண்ட் வேலனால அப்பா பாமிலியோட அங்க வர, நான் அங்க பொறக்க அப்படியே கோயம்புத்தூர் என் சொந்த ஊராயிடிச்சி. ஆனாலும் நம்ம ஊர் பக்கந்தான் பொண் எடுக்கணும்னு உறுதியாய் இருந்தேன். ஒன் ஜாதகமும், என் ஜாதகமும் மேச் ஆனதால நம்ம கல்யாணம் நடந்தது. என்ன ஒரு 'உம்' கூட கிடையாதா?'
சௌம்யாவின் சிவந்த இதழ்க்கடையில் இருந்து ஒரு 'உம்' உதிர்ந்தது.
'நாம வாழப் போறது கோவையில் தான். ஹனிமூன் கூட ஊட்டியில் தாங்கறது என்னோட ட்ரீம்.' அவன் நிறுத்த அவள் இன்னொரு 'உம்'மை உதிர்த்தாள்.
அவன் சிரித்தான்.
'ஒனக்கு உங்க மாமாவ மறக்க எவ்ளோ நாளாகும்?'
அதிர்ச்சியாய் நிமிர்ந்த சௌம்யா அவனை விழித்துப் பார்த்தாள்.
'அத்த என் கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்க. அந்த நேர்மையே ஒன்ன உடனே ஓகே சொல்ல வச்சது. காதலிச்சவங்க எல்லோருமே இணையறது இல்ல. அமரத்துவம் உள்ள காதலர்கள் சேரவே இல்ல தானே! காலம் எல்லாத்தயும் மாத்தக் கூடியது. எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க. அதுக்காக இன்னும் நான் அவங்களெயெ நெனச்சிட்டிருந்தா பொழப்பு நடக்குமா? நீயும் கொஞ்ச நாள் டைம் எடுத்துக்க. ஒனக்கு எப்ப மனசு மாறுதோ அப்ப நான் ஒனக்குன்னு வாங்கி வச்சிருக்கற இந்த டைட்டன் வாச்ச கட்டிக்க. நான் புரிஞ்சுக்கறேன். அது வரைக்கும் தனித்தனியா தூங்கிக்கலாம். நான் கீழே படுத்துக்கறேன். நீ மேல படுத்துக்கோ. இரண்டு பேரும் ஒரே பெட்டில படுத்துக்கிட்டாலும் தொடாம இருக்கலாம்னு சொல்லாத. என்னால முடியாது. ஏன்னா நீ அவ்ளோ அழகு!' என்று சொல்லியபடி அவன் கையில் தலையணை ஒன்றை எடுத்துக் கொண்டு போர்வை ஒன்றை உருவிக் கொண்டு கீழே இறங்க முயன்றான்.
'அப்புறம் காலைல எப்படி நடந்துக்கணும்னு தெரியும்ல.தலய கலச்சி பொட்ட லைட்டா கோணி.. சினிமா ஒனக்கு புடிக்கும்னு கேள்விப்பட்டேன்..'
என்று அவன் சொல்லச் சொல்ல சௌம்யா டீப்பாய் மேல் வைத்திருந்த டைட்டன் வாச்சை அதன் அழகிய உறையில் இருந்து எடுத்து கையில் கட்டிக் கொண்டாள்.
அவன் திகைப்புடன்,'அதுக்குள்ளயா காலம் ஒன்ன மாத்திருச்சு. சும்மா எனக்காக, கடமைக்காக, அம்மாவுக்காக லாம் வேணாம். ஒன் மனசுக்கு பிடிச்சிருந்தா மட்டும் போதும்.'
சௌம்யா அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகை ஒன்றை வீசினாள்.
'உங்கள புடிக்காம போகுமா? கட்டிக்கப் போற பொண்ணு இன்னொருத்தர காதலிச்சி சூழ்நிலை காரணமா தன்ன கட்டிக்கிறது தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டதோட அவ மனசு மாற டைம் குடுக்றதுங்கறது எல்லாம் நாவல்ல(!) தான் வரும். இப்படி கண் எதிரே பாக்க நான் குடுத்து வச்சிருக்கேன். தெய்வம் என்ன அப்பப்ப சோதிச்சாலும் இப்படி அப்பப்ப சந்தோஷமும் தருது. அப்புறம் மாமாவ நான் உயிருக்கு மேலா காதலிச்சது உண்ம தான். ஆனா எப்ப உங்க போட்டோவ எங்க அம்மாட்ட குடுத்தேனோ அப்பவே அந்த காதல குழி தோண்டி பொதச்சிட்டேன். நிச்சயம் நடக்கறதுக்குள்ள எங்க சம்பந்தப்பட்ட அவர் போட்டோ, லெட்டர் எல்லாம் அவர்ட்டயெ திருப்பி அனுப்பிட்டேன். இனி நான் க்ளீன் சிலேட். அவர் என் உறவுக்காரர் மட்டும் தான். நீங்க தான் என் உண்மையான 'உறவுக்'காரர்.' எனவே, அரவிந்த் ஆச்சரியப்பட்டான்.
'பாருடா, என் பொண்டாட்டி அழகி மட்டும் இல்ல. நல்லா பேசவும் செய்றா' என்றவன் அவள் கைக் கடிகாரத்தை கழட்டுவதைப் பார்த்ததும் அதிர்ந்தான்.
'ஏய் என்ன இது! இப்ப தான் மனசு மாறிடிச்சி.. அப்படி இப்படின்ன. வாட்ச கழட்ற'
'அப்புறம் என் ஹஸ்பண்ட் எனக்கு முதல் முதலா குடுத்த கிப்ட் அவர் அணைக்கறப்ப ஒடஞ்சு போச்சுன்னா..' என்று சொல்லியவாறே தலை குனிந்தாள் சௌம்யா.
வெட்கத்தில் மேலும் சிவந்த அவள் முகத்தில் இருந்த அவளது ஆரஞ்சு உதடுகளைத் தேடி அரவிந்தின் உதடுகள் குனிந்தன.


 
Nice epi.
Sowmi amma seithathu emotional blackmail. Aval oru thani manushi avalai kattayam paduthi entha seyal seya vanthalum athu thavaru.
Husband marakkan time ellam kudukurar??
enna oru athisayam??
Nijama ithuellam???
 
அரவிந்த் சூப்பர்.சௌமியும் புரிந்து கொண்டாளே. மஞ்சள் கயிறு மாஜிக் பண்ணிடுச்சு
:love: :love: :love:தலைப்புக்கு பொருத்தமாகிடுச்சு
 
Top