Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 18

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 18

கல்யாணப் பத்திரிகையில் சந்துருவின் பேரோடு இன்னொரு பெண்ணின் பேரைப் பார்த்த சௌம்யா அந்த கணமே மயங்கி சரிந்தாள்.
முகத்தில் நீர் பட்டதும் விழித்த சௌம்யா மலங்க மலங்க முழித்தாள்.
பின்னர் சுவற்றில் தலையை பட் பட் என்று அடித்துக் கொண்டாள்.
அடிவயிற்றிலிருந்து ஏமாற்றமும், துக்கமும் தாளாமல் 'அம்ம்ம்ம்ம்மாஆஅ' என்று அலறினாள்.
நெஞ்சே வெடித்து விடும் போல கதறினாள்.
சினிமாவில் வரும் வில்லி போல் அவள் அம்மா இதை அனைத்தையும் பார்த்தவாறு பேசாமல் இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து ஒரு செம்பு நீரைக் கொண்டு வந்து மகளை குடிக்க வைத்தாள்.
'சந்துரு படிக்கலன்னாலும் புத்திசாலி. ஏதோ சேல தாவணின்னு எல்லாம் சொன்ன. பாத்தியா? எப்படி மனச மாத்திகிட்டான்னு.'
'மாமா மனச மாத்திருக்காது. அத்த தான் மாத்த வச்சிருக்கும்.'என்று கேவலோடு சொன்னாள் சௌம்யா.
'எப்படியோ மாறிச்சா இல்லயா?'
'ஏம்மா.. ஏம்மா. நாங்க எங்கெயோ போயி சந்தோஷமா இருந்துக்கறோம். எங்கள ஏம்மா இப்பிடி பிரிக்கிறீங்க. நாங்க என்னம்மா பாவம் செஞ்சோம்? ஒரு அம்மா புள்ளைக்கு நல்லது தானம்மா செய்வா. நீ மட்டும் ஏம்மா என் வாழ்க்கய நாசம் பண்ற.'
'நான் ஏன் இப்டி பண்றேன்னு நீயும் ஒரு அம்மா ஆனா தான் தெரியும்.இந்தா இந்த போட்டோக்கள பாரு. யாரு புடிச்சிருக்குன்னு சொல்லு. முடிச்சிர்ரலாம். அவன் கல்யாணம் நடக்கற அதே முகூர்த்தத்துல ஒனக்கும் கல்யாணம்.'
நாலைந்து போட்டோக்களை அவள் முன் நீட்டினாள்.
'ஏம்மா இந்த இடியயே தாங்க முடியல. அதுக்குள்ள அடுத்ததா? நான் எத்தனயம்மா தாங்குவென்? எனக்கு கல்யாணமே வேண்டாம்மா. மாமா நெனப்புலயே ஆயுசு பூராவும் கழிச்சிர்றென்...'
'நீ எவ்ளொ அழுது புலம்பினாலும் எனக்கு கவல இல்ல. எனக்கு ஒன் எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதுக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன். நாளைக்கு காலைல இதுல ஒரு போட்டோவ நீ எடுத்து எனக்குத் தரணும். இல்ல நடக்றதே வேற.'
உறுமி விட்டு அடுக்களையில் நுழைந்தாள் அவள் அம்மா.
சௌம்யா தலைவிரி கோலமாய் தரையில் விழுந்து துடித்தாள்.
அன்று இரவு சாப்பிட வில்லை. அம்மா ஒரு தடவை கேட்டாள். பின்பு போய் விட்டாள்.
இரவு.
சௌம்யா ஒரு முடிவுக்கு வந்தாள்.
மெல்ல எழுந்து நடு ஹாலில் இருந்த ஸ்டூலை சத்தம் இல்லாமல் நகர்த்தினாள்.
தாவணி ஒன்றை எடுத்து அதன் மேல் ஏறி குழந்தை தூளி போட வைத்திருந்த கம்பியில் அதை மாட்டி இன்னொரு பக்கம் இழுத்து சுருக்காக முடிச்சிட்டாள்.
மெதுவாக அதில் தலையை நுழைத்தாள்.
சந்துருவின் நியாபகம் வந்தது.
வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மனதிற்குள் 'ஒன் மேல எனக்கு கோபம் இல்ல மாமா. சீக்கிரமே நான் ஒனக்கு புள்ளயா பொறக்கணும்' என்று நினைத்தபடி சுருக்கில் தலையை விட்டாள்.

கால்களால் ஸ்டூலை நகர்த்த முயலும் போது அது நடந்தது.
 
அச்சோ இந்த புள்ள
என்ன இந்த மாதிரி செய்றா
 
அற்காக இப்படியா முடிவெடுப்பா. அம்மா பாத்துட்டாங்களா
 
Top