Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 12

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 12

'அன்புள்ள..' என்று வாசித்து விட்டு மாணவியரை ஒரு பார்வை பார்த்த சிஸ்டர் பேரை வாசிக்க வில்லை.
நீ எப்படி இருக்க? இங்க நான், அம்மா, மாமா, அத்தை எல்லாரும் சுகம். உன் சுகத்தை அறிய ஆவல். நான் உனக்கு எழுதுற முதல் கடிதம் என்பதால் என்ன எழுதுறதுன்னே தெரியல. உன் ப்ரெண்ட்ஸ் எப்படி இருக்காங்க? சிஸ்டர் ரோஸி ரொம்ப படுத்தறாங்களா?'
இதை படித்து விட்டு மீண்டும் ஒரு முறை மாணவியர் கூட்டத்தை ஒரு முறை கோபத்துடன் பார்த்தார் சிஸ்டர். ஓரிரு மாணவியர் லேசாக புன்னகைக்க துவங்க, எரிச்சலுடன் கத்தினார்.
'என்ன இளிப்பு? நான் என்ன படுத்தவா செய்யறேன்?'
மாணவியர் மறுபடியும் சீரியஸ் லுக்கிற்கு வந்தனர். கடிதம் மீண்டும் படிக்கப்பட்டது.
அரையாண்டு லீவில் பார்த்தது. நீ போட்டோ தந்ததால் அதை பர்ஸில் வைத்தவாறே அலைகிறேன். கோவிந்தன் பார்த்து விட்டு கிண்டல் பண்ணுகிறான். அம்மா கூட ஒரு தடவை பார்த்துவிட்டு 'இங்க தான வரப் போறா? ஏண்டா இதெல்லாம்?'என்று செல்லமாக கடிந்து கொண்டாள். உனது பப்ளிக் எக் ஸாமுக்கு வாழ்த்து சொல்லலாம் என்று ரொம்ப ஆசை. அங்கு வந்தால் உனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்று தான் வாழ்த்தை கடிதமாக அனுப்புகிறேன். நல்லா தைரியமா எக்ஸாம் எழுது. நீ நல்ல மார்க் எடுத்தா திருச்செந்தூர் முருகனுக்கு மொட்ட போடறதா வேண்டி இருக்கேன்.
ஒனக்கு ஊக்கம் தர்ற மாதிரி ஒண்ணு சொல்லலாம்னு இருக்கேன். நம்ம ரொம்ப நாள் பழகினாலும் இத நான் ஒங்கிட்ட சொல்லவே இல்ல. இப்ப நீ வருத்தப்படாம சந்தோஷமா படிக்கணும்கறதுக்காக இத லெட்டர்ல எழுதறேன். ஐ லவ் யூ. இத படிச்சவுடனே கிழிச்சிடு. நீ இடைல இடைல எடுத்து இந்த லெட்டர படிச்சன்னா சிஸ்டர் கிட்ட மாட்டிப்ப. அப்புறம் தேவை இல்லாத பிரச்சினை.
உன் அன்பு மாமா,
ஒரு நிமிடம் நிறுத்தி, 'சந்துரு' என்று உரக்க வாசித்தார் சிஸ்டர்.
படிக்கத் துவங்கினப்போ மாமா எப்படி நமக்கு லவ் லெட்டர் போடும் என்று நினைத்த சௌம்யா, சிஸ்டர் மேலே படிக்க படிக்க 'நன்றாய் மாட்டிக் கொண்டோம்' என்று தேள் கொட்டியது போல் துடித்தாள். மாமா தனக்கு முதல் முதலாய் எழுதிய காதல் கடிதம் இவரிடமா மாட்ட வேண்டும்? மாமா ஐ லவ் யூ எழுதிய கடிதம் எனக்கு ஸ்பெஷல் ஆச்சே. வாழ்நாள் முழுவதும் வச்சி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாச்சே. மெதுவாக எழுந்து நின்றாள். தனது அந்தரங்கம் அத்தனை மாணவிகளுக்கும் தெரிந்து விட்டதை அறிந்து ஏதோ அனைவரும் கூடி இருக்கும் சர்க்கஸ் திடலின் நடுவில் தான் நின்று குளிப்பதைப் போல கூசினாள். கண்ணீரும், கேவலும் தன்னை அறியாமல் வந்தது.
'ஹவ் டேர் யூ சௌம்யா? நீ படிக்கற பொண்ணு. படிச்சா மட்டும் போதாதுன்னு எத்தன தடவை சொல்லி இருக்கேன்? மேத்ஸ்ல நூத்துக்கு நூறு எடுத்தா மட்டும் போறுமா? டிஸிப்ளின் வேண்டாம்?'
மூசு மூசு என்று மூச்சிரைக்க, ஒரு நிமிடம் நிறுத்தினாள்.
சுமதிக்கு சௌம்யாவின் நிலை பரிதாபத்தையும் சிஸ்டர் மீது கோபத்தையும் ஏற்படுத்தியது.
'அடுத்தவங்க லெட்டர படிக்கக்கூடாதுன்ற மேனர்ஸ் உங்களுக்கு வேண்டாம்?' என்று சிஸ்டரின் பாணியிலேயே சொல்ல, அவள் இருந்த பகுதியில் இருந்த மாணவியர் 'கொல்' என்று சிரிக்க, சிஸ்டர் திரும்பினார்.
'அங்க என்ன சிரிப்பு? சுமதி! கெட் அப்! அங்க என்ன சத்தம்?'
சுமதி எழுந்து நின்றதும் அவளது வீரம் எல்லாம் வழிந்தது.
'ஒ..ஒண்ணும் இல்ல சிஸ்டர்..'
'நீ இவளோட ரூம் மேட்டாச்சே! சொல்ல மாட்ட...'
அவளது அருகில் இருந்த மாணவியைப் பார்த்தார்.
'மோனிகா! எழுந்திரு! என்ன சொன்னா சுமதி?'
அந்த கண்ணாடி அணிந்திருந்த பெண் மெதுவாக எழுந்து தாவணியை சரிப்படுத்திக் கொண்டு சுமதியைப் பார்த்தது. சுமதி பார்வையாலேயே 'சொல்லிடாதடி' என்று கெஞ்சினாள்.
'அது..சிஸ்டர்..' என்று இழுத்தாள் அந்தப் பெண்.
'ம்! என்ன பயம்? சொல்லு...'
'அடுத்தவங்க லெட்டர்.. படிக்கிறது.. மேனர்ஸ்..இல்லன்ன்னு...' என்று மேலும் சொல்லத் தயங்கினாள்.
புரிந்து கொண்ட சிஸ்டர் அவளைப் பார்த்து 'சிட்' என்று கத்தினார்.
'சுமதி, இங்க வா'
சுமதி தயங்கியபடி மெல்ல சிஸ்டர் அருகில் செல்ல, கையில் இருந்த பிரம்பை எடுத்து அவளது காலில் டப் டப் என்று அடிக்க ஆரம்பித்தார். அது பாவாடையில் பட்டு ரப் ரப் என்று கேட்டது. சுமதி 'வேண்டாம் சிஸ்டர்..அடிக்காதீங்க சிஸ்டர்' என்று கத்தினாள்.
கை வலிக்கும் வரை அடித்து விட்டு பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டு புஸ் புஸ் என்று இரைந்தார் சிஸ்டர்.
சுமதி கண்ணீரோடு கால்களைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
'மேனர்ஸ் என்னனு எனக்கு சொல்லித் தரயா? ஹாஸ்டலுக்கு ஒருத்தன் ஒரு வயசுப் பொண்ணுக்கு லவ் லெட்டர் தருவான். அது சரி. நான் வாசிக்கிறது சரி இல்ல.. ம்?' என்றார்.
அப்போது ஹாஸ்டல் வார்டன் அங்கு வரவே, அனைத்து மாணவியரும் எழுந்தனர்.
'சிட்' என்று சிஸ்டர் சொல்லவும், சௌம்யாவும், சுமதியும் தவிர அனைவரும் அமர்ந்தனர்.
'சிஸ்டர்! நான் சொன்னேன் இல்ல அந்த பிரச்சினை தான். அந்த ஆள் லவ் லெட்டர் அனுப்பினது தப்பில்லயாம். நான் வாசிச்சது தப்பாம். சௌம்யாவுக்கு சப்போர்ட் பண்ணுது இந்த குரங்கு.' என்று சுமதியை காண்பித்தார் ரோஸி சிஸ்டர்.
உடனே சுமதியை நோக்கினார் வார்டன் சிஸ்டர்.
'உங்களுக்கு வர்ர லெட்டர்ஸ் எல்லாம் வாசிக்கிற உரிமை எங்களுக்கு இருக்கு. உங்க பேரண்ட்ஸ்க்கும் அது தெரியும். பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்ல சொல்லி இருக்கோம். இந்த லெட்டர் கூட ப்ரம் அட்ரஸ்ல சௌம்யாவோட அம்மா பேரும் விலாசமும் தான் இருக்கு. என்ன ஒரு சீட்டிங் பாருங்க.'
சுமதி துணிந்து வாய் திறந்தாள்.
'சிஸ்டர். அது சௌம்யாவோட மொறப் பையன். அவங்க பேரண்ட்ஸ்க்கும் இது தெரியும்.'
சிஸ்டர் ரோஸி கத்தினார்.
'நீ வாய மூடு. கழுதைங்களா. இதே மாதிரி எல்லா பிள்ளைங்களும் கெளம்பிட்டா.. எங்க ஸ்கூல் ஹாஸ்டலுக்குன்னு சொசைட்டில ஒரு ரெஸ்பக்ட் இருக்கு. நாங்க இந்த லெட்டர அல்லோ பண்ணிருந்தா அது பரவி எல்லா பொண்ணுங்களும், மாமா, அத்தான்னு கெளம்பிட்டா..நாங்க என்ன ஹாஸ்டல் நடத்துறோமா வேற ஏதாவது..'
'ரோஸி சிஸ்டர். கூல்..' என்று இடையில் புகுந்தார் வார்டன் சிஸ்டர்.
'இங்க பாருங்கம்மா. தப்புன்னு ஒண்ணு பண்ணினா பனிஷ்மெண்ட்னு ஒண்ணு கிடைக்கும். சௌம்யா! நாளைக்கு ஒன் பேரண்ட்ஸ் வருவாங்க. நீ ஹாஸ்டல விட்டு போயிரலாம். வீட்ல இருந்து வந்து எக்ஸாம் எழுதிக்க. நீ நல்ல படிக்கிற பொண்ணுன்னால ப்ரின்சிபல் சிஸ்டர் இத ஒத்துகிட்டாங்க. இல்ல ப்ளஸ் டூ டிஸ்கண்டினியூ தான்.' என்று நிறுத்தவே, ரோஸி சிஸ்டர் சந்துரு எழுதிய லெட்டரை நாலாய் எட்டாய் கிழித்தார். பின்பு சுக்கல் சுக்கலாய் ஆக்கினார்.
'கண்ட கண்ட புஸ்தகங்கள படிச்சிட்டு கண்ட கண்ட சினிமா பாத்துட்டு காதல் கத்தரிக்கானு இறங்கிருதுங்க.'
என்றவாறு பக்கத்தில் இருந்த குப்பைக் கூடையில் காகித துண்டுகளை வீசி விட்டு கோபமாய் நகர்ந்தார்.
சௌம்யாவின் கேவல் இன்னும் அதிகரித்தது.

 
Nice epi.
Ayyoda appo avalda degree kanavu???
Yedo unn wish yaravathu kettangala??
Oru nalla padikira, teenage girl ku, avalda kootukarikal mumbu evalav nannakedu.
Aanungalukku ithu realise panna mudiyathu, aana avalu penn alla.
 
Top