Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 10

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 10

சந்துரு மேலும் வாதாடினான்.
'இல்ல சிஸ்டர். நீங்க குடுத்த ஃபார்ம்ல கூட எங்க அத்தை, மாமாவோட படத்தோட கார்டியன்னு என் படமும் ஒட்டி குடுத்திருக்கு.'
சிஸ்டர் நம்பாமல் சௌம்யாவின் ஃபார்ம் எடுத்துப் பார்த்தார்.
சந்துரு சொன்னது உண்மை தான். அவனது போட்டோவும் ஒட்டப்பட்டு இருந்தது.
சிஸ்டர் நிமிர்ந்தார்.
'கொஞ்சம் சொல்றத புரிஞ்சுக்கப்பா. இது கேர்ள்ஸ் படிக்கிற ஸ்கூல். பேரண்ட்ஸ் வந்தாதான் அல்லோ பண்ணுவோம். நீ அழச்சிட்டு போனியானா அது ஒரு தவறான முன் உதாரணம் ஆயிடும். நீ போயிட்டு சௌம்யா அப்பாவயோ, அம்மாவயோ அனுப்பு. உடனெ அனுப்பி வைக்கறேன்.'
அதுக்கு மேலும் பேசி புண்ணியம் இல்லை என்று உணர்ந்த சந்துரு 'சரிங்க சிஸ்டர்.' என்று தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு மெல்ல வெளியே வந்தான்.
அங்கு கண்ணீர் வழிய நின்ற சௌம்யாவைப் பார்த்து சட் என்று முகத்தை மாற்றிக் கொண்டான்.
'நல்லாருக்கியா சௌம்யா. ஹாஸ்டல் ரூல்ஸ் படி அம்மாவோ அப்பாவோ தான் வரணுமாம். இன்னைக்கு இங்க தங்கிக்கோ. நாளைக்கு மாமவயோ அத்தயயோ கூட்டிடு வர்றென்.'
பின்னால் சிஸ்டர் இருப்பதை உணர்ந்து சந்துரு, 'சரி சௌம்யா. நாளைக்கு காலைல வர்ரேன்.' என்று கூறி விட்டு வெளியேற சௌம்யா முதன் முறையாக சிஸ்டர் ரோஸியை முறைத்து விட்டு பேக்கை எடுத்துக் கொண்டு ரூமை நோக்கி திரும்பினாள்.
உள்ளே இருந்த சுமதி, 'என்னடி? போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடன்னு வந்துட்ட' என்றவள் அவள் கண்களில் கண்ணீரோடு பேக்கை தரையில் வீசி விட்டு பெட்டில் குப்புறப் படுத்து அழுவதைப் பார்த்ததும் எழுந்து பக்கத்தில் வந்தாள்.
'என்ன ஆச்சு சௌம்யா?'
'கார்டியன்னு தான் எழுதி ஒட்டிருக்கில்ல. உங்க அம்மா, அப்பாவே சம்மதிச்சு தான ஃபார்ம்ல சைன் பண்ணிருக்காங்க. இவங்களுக்கு அனுப்பறதுக்கு என்ன. இவங்களும் குடும்பத்துல இருந்து தான வந்திருக்காங்க. இல்ல ஆகாசத்துல இருந்து பொத்னு குதிச்சிட்டாங்களா?'
சுமதி சௌம்யாவை ஆறுதல் படுத்த, அன்று இரவு சௌம்யா சாப்பிட வில்லை; தூங்கவும் இல்லை. மறுநாள் காலை அம்மாவுடன் சீக்கிரமே வந்த சந்துரு அவளை அழைத்துக் கொண்டு போனான். அவள் அம்மாவிடம் வேறு சிஸ்டர் உபதேசம். சௌம்யா சிஸ்டரைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை.
ஹாஸ்டலை விட்டு வெளியே வந்ததும் ஏதோ ஜெயிலில் இருந்து வந்த மாதிரி இருந்தது. இது தான் சுதந்திரம் என்பதா? சந்துரு அவளது பேக்கை எடுத்துக் கொள்ள அவள் அவள் அம்மாவுடன் மௌனமாக தொடர்ந்து வந்தாள்.
பஸ்ஸில் அவள் அம்மாவும் அவளும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ள, பின்னால் உட்கார்ந்த சந்துரு டிக்கட் எடுத்தான்.
'என்னடி சிஸ்டர்ஸ் இவ்ளோ கண்டிப்பா இருக்காங்க. அப்பா வேலயா வெளியூர் போயிருக்கிறாரு. சந்துரு தான் அடம்பிடிச்சு காலையிலேயே ஒன்ன கூட்டிட்டு வர வச்சிரிச்சி. ஒம்மேல அவ்ளொ பாசமா இருக்குறான் பையன். அவன் மனசு கோணாம நடந்துக்கடி.'
சௌம்யா ஒன்றும் பேசாமல் மௌனமாக வந்தாள்.
பல்வேறு வயல் வெளிகளைக் கடந்து டவுண் பஸ் மாட்டு வண்டியை விட மோசமாக அதுவும் ப்ரெக் பிடிக்கும்போதெல்லாம் பஸ்ஸின் அடிப்பகுதியே கிர்ரென்று அதிருவது எல்லோருக்கும் ஒருவித எரிச்சலைத் தந்தது.
எப்படியோ ஊர் வந்து சேர்ந்தார்கள்.
சந்துரு கண்ணை காட்டி விட்டு 'வரேன் அத்த. வரேன் சௌம்யா.' என்று விடைபெற, அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள்.
வந்து அரை மணி நேரம் இருந்து விட்டு 'அம்மா, சந்தி சுடலை சாமிய கும்பிட்டுட்டு வந்துர்றென்.' என்று சொல்லி விட்டு சுடலை சாமி கோயிலுக்குப் போனாள். அவள் வருகைக்கு தெரு முனையில் காத்திருந்த சந்துரு, அவளைப் பின் தொடர்ந்து வந்து கோயிலில் நுழைந்தான்.
பூசாரி கிளம்பும் தருவாயில் இருந்தார். இவர்களைப் பார்த்ததும், சூடம் காட்டி தட்டில் சந்துருவும், சௌம்யாவும் போட்ட ரெண்டு ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு கோயிலை சாத்திக் கொண்டு வெளியே போனார்.
சந்துருவும், சௌம்யாவும் கோயில் வாசலில் இருந்த திண்ணையில் எதிர் எதிரே தள்ளி அமர்ந்தனர். ரோட்டில் ஜனங்கள் போவதும் வருவதுமாய் இருந்தனர்.
'எப்படி இருக்கு சௌம்யா ஸ்கூல்?'
சௌம்யா அவன் கண்களை சந்தித்தாள்.
அவன் அவளயே விழுங்கி விடுவது போல் பார்த்தான்.
அவளும் சிறிது நேரம் உற்றுப் பார்த்து விட்டு தலை குனிந்தாள்.
மனம் பூராவும் மத்தாப்பூ கொளுத்தி விட்டாற் போன்றிருந்தது.
'ம்ம். நல்லா சொல்லித் தராங்க. ஒங்கள பாக்க முடியலேங்கறது தான் ஒரே கொற.'
'எனக்கும் அது இல்லங்கறயா? தனியா இருந்தா ஒன் நெனப்பு தாங்க முடியல'
சௌம்யாவிற்கு ஜில் என்றிருந்தது.
'அப்போ பிரெண்ட்ஸ் கூட இருக்கறப்ப என் நியாபகமே வரதில்ல அப்படித்தானே'
'அப்படி இல்ல சௌமி. அரசியல், சினிமா, வேலன்னு பேசறப்ப என்ன மறந்திர்றென்.'
'சரி. நீங்க ஏன் ஷேவ் பண்ணல?'
'நீ ஊர்ல இல்லல்ல. நீ இருந்தா நியாபகப் படுத்திட்டே இருப்பே'
'ஓ அப்டின்னா நான் படுத்திட்டே இருப்பேனாக்கும்.'
'சௌமி! இன்னும் ஒரு மாசத்துல க்வார்ட்டர்லி லீவ் வந்துரும். உன் போட்டா இருந்தா ஒன்ன கொடேன். உன் கிட்ட என் போட்டா இருக்கும். ஆனா ஒன் போட்டாவ பாக்கறதுக்கே தயிர் குடுக்க, சாம்பார் குடுக்க, பணியாரம் குடுக்கன்னு உங்க வீட்டுக்கு சாக்கு சொல்லி சொல்லி வந்திருவேன். அத்த கூட சௌமியா தான் இல்லயெ இந்தப் பையனுக்கு எப்படி இவ்ளோ பொறுப்பு வந்திருச்சுன்னு மாமாட்ட சொல்றது என் காதுல விழுந்தது.'
சௌம்யா சிரித்தாள்.
'நான் தான் உங்க நெஞ்சுல இருக்கிறென். போட்டால்லாம் வேண்டாம்னீங்க.''
'அது ஒன்ன டெய்லி பாக்க முடிஞ்சதால. இனி ரெண்டு மாசம் ஆகும் ஒன்ன பாக்க. நாளைக்கு ஒரு போட்டா எடுத்துட்டு வந்துரு. வள்ளியூர் முருகன் கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம். ஒன் ஃப்ரெண்ட்ஸ பாக்க போறென்னு அத்த கிட்ட சொல்லிரு.'

'சரி' என்று காதலுடன் தலையாட்டினாள் சௌம்யா.
 
இவங்க காதல் சூப்பரா இருக்கே.போட்டோவ பார்பதற்காக இவ வீட்டுக்கு அடிக்கடி போறது செம :) ? (y)
 
Top