Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 8

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 8

'மேக்கப் டெஸ்ட் ரிசல்ட் பாஸிடிவ் தான் சார். அந்த ரோல்ல இந்த பொண்ணயே போட் ரலாம்.' டைரக்டர் ரஞ்சித்து சொல்ல, கணேஷ் ஆச்சரியத்துடன் ஆறுமுகத்தைப் பார்த்தான். போதை தெளிந்திருந்ததால் புத்தி யோசிக்க ஆரம்பித்திருந்தது.
இன்று காலையில் தான் வந்தாள். ஏழையாய் இருந்தாலும் அழகாய் இருந்தாள். முதலில் உதாசீனப் படுத்தினாள். பின்னர் மனமுவந்து வந்தாள். நடிகை ஆக வேண்டும் என்றாள். மதியமே பாஸிடிவ் ரிசல்ட் வருகிறது. உலகத்தில் நடப்பதை புரிந்து கொள்ளவே முடிய வில்லையே. அல்லது தன் கைராசியோ!
'சரி. நாளைக்கு எங்க ஷூட்டிங்?'
'பக்கத்து பஞ்சுகுடோன்ல.'
'காலைல 10 மணிக்கு ஷூட்டிங். இவங்க போர்ஷன் தான் வரப்போது.மூணு நாள்ல இவங்க போர்ஷன் முடிஞ்சுரும். அப்புறம் ஒரு சாங் மட்டும். ஸ்டோரி லைன உங்களுக்கு மறுபடியும் சுருக்கமா நியாபகப் படுத்தறென் சார். போலீசான உங்க நேர்மைய புடிக்காம வில்லன் உங்க குடும்பத்த சிதைக்கப் பாக்கறான். உங்க அம்மாவ மொதல்ல கொல்றான். அப்புறம் உங்க தங்கச்சிய கெடுத்து கொல்லப் பாக்கறான். ஆனா அதுகுள்ள அது மாடியில இருந்து விழுந்து தற்கொல பண்ணிக்குது. அடுத்து உங்க மனைவி குழந்தைங்க கிட்ட வரதுக்குள்ள அவன நீங்க புடிச்சு ஜெயில்ல போடறீங்க. செத்துப் போன உங்க அம்மாவும், தங்கச்சியும் உங்க கனவுல பாட்டுல ஆவியா வந்து ஒங்கள ஆறுதல் படுத்தறாங்க. அம்மா செண்டிமெண்டும், தங்கச்சி செண்டிமெண்டும் இந்த படத்த வெள்ளி விழா கொண்டாட வைக்கற மாதிரி திரைக்கத அமச்சிருக்கேன் சார்.'
'ம்ம்... பார்த்தேன். டூயட் பாட்டு, அப்புறம் போலீசா ஒரு சோலோ பாட்டு ரெண்டும் கூட சூப்பரா எடுத்திருகீங்க. ரசிகர்கள் இந்த பாட்டுகள கொண்டாடப் போறாங்க.'
'சார்.. அப்புறம் ஒரு விஷயம். இவங்க..'
'ம்ம் பேர் ஆறுமுகம். என் ரசிகை. இந்த ஊருக்காரி தான். ரொம்ப கெஞ்சுனா.. சரி ரோல் இருந்தா ஏதாவது குடுக்கலாமேன்னு. மத்தபடி நடிப்பு வரலன்னா தூக்கிரலாம். எனக்கு படத்தோட சக்ஸஸ் தான் முக்கியம்.'
'சரிங்க சார். நாம வழக்கமா எடுக்ற மேக்கப் டெஸ்ட்?..' என்று இழுத்தான் ரஞ்சித்து.
ஒரு நிமிடம் யோசித்த கணேஷ், ஆறுமுகத்திடம் திரும்பி 'ஏம்மா, இன்னிக்கி நைட் ஒரு ஷூட்டிங் இருக்கு. ஒரு பதினோரு மணி ஆவும். நாளைக்கு காலைல பத்து மணிக்கு வேற வரணும் ஓகேவா?' என, ஆறுமுகம் வேக வேகமாக தலை ஆட்டி விட்டு கணேஷின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள்.
'ரொம்ப தாங்க்ஸ் சார்' என்று கண்ணீர் நிரம்பிய கண்களுடன் எழுந்தாள்.
'பரவால்லம்மா. சினிமால வாய்ப்பு கிடைக்கறது ரொம்ப கஷ்டம். ஒன் அதிர்ஷ்டம். மொத படமே பெரிய ஸ்டார் கூட அமஞ்சிருச்சி. இனி நீ இத எப்படி யூஸ் பண்ணிக்கிறேன்கறத பொறுத்து தான் ஒன் எதிர்காலம். ஒரு அட்வைஸ் மட்டும் சொல்றென். சினிமா திடீர்னு தூக்கி உச்சந்தலைல வைக்கும். திடீர்னு கீழ போடும். அதப் புரிஞ்சுகிட்டு அப்புறம் நீ பொண்ணா இருக்றதால நெறய அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டியது வரும். அதெல்லாம் மீறி வந்துட்டேன்னா ஒன் வாழ்க்க ஒளிமயம் தான்.'
'கண்டிப்பா என்ன அறிமுகம் பண்ணி வச்ச உங்கள மறக்கவெ மாட்டேன் சார். எங்க வீட்ல இனி சாமி படத்துக்கு பக்கத்துல உங்க படமும் இருக்கும் சார். நீங்க தான் எங்க குலதெய்வம்.'
'சரி. நீ வீட்டுக்கு போயிட்டு நைட் எட்டு மணிக்கு இந்த ஊர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்துரு. ரஞ்சித்து கார்ல வந்து ஒன்ன கூட்டிட்டுப் போயிட்டு பதினொரு மணிக்கு வந்து உங்க வீட்டு பக்கத்துல விட்ருவாரு.'
அவள் சரி என்று தலையாட்டி விட்டு 'நான் வரேன் சார்.' என்று ரஞ்சித்திடமும் விடை பெற்றுக் கொண்டு தாவணியை இழுத்து சொருகிக் கொண்டு வெளியேறினாள்.
'சா......ர்.. எங்க சார் புடிச்சீங்க? தீயா இருக்றா... அவ கண்ணும்..செதுக்கி வச்ச மூக்கும்..கண்டிப்பா டெஸ்ட் எடுத்து வச்சுக்கணும் சார். பியூச்சர்ல இல்லன்னா நம்மள விட்டு போயிருவா.' என ரஞ்சித்து கண்ணடிக்க, கணேஷ் 'எப்படி என் செலக்ஷன்' என்ற பாவத்தில் சிரித்தான். இவர்கள் பேச்சு மதுவோடு நீண்டு கொண்டே போக
அங்கே வீட்டில் அடி வாங்கிக் கொண்டிருந்தாள் ஆறுமுகம்.
'ஏண்டி, இது கூடத் தெரியாமத்தான் நான் இத்தன புள்ளைங்கள பெத்தேனோ? நேத்து வயசுக்கு வந்த ஒனக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியமா போச்சோ? கீழ விழுந்து அடிபட்ட ஒதட்டுக்கும், கடிச்சு கிழிச்ச ஒதட்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா? ஒன்ன வீட்ட விட்டு வெளிய போகக்கூடாதுன்னு சொன்னேன்ல. எங்கடி போயி தொலஞ்ச? யார்ட்ட போய் விழுந்த? இப்படி தொலச்சுட்டு வந்து நிக்கறியே முண்டமே! சனியனே! செத்து தொலய வேண்டியது தான. ஒன் அப்பன தூக்கி குடுத்த மாதிரி ஒன்னயும் ரெண்டு நாள் அழுது தேத்திப்பேனே! இப்ப மத்த குழந்தைங்கள்லயெல்லாம் எப்படிடி கர சேக்கப் போறேன்' அவளது ஒவ்வொரு புலம்பலுக்கும் ஆறுமுகத்தின் மீது வெளக்குமாறு அடி விழுந்தது. இருந்த நாலஞ்சு ஈர்க்குச்சிகளும் ஆறுமுகத்தின் தலை முடியில் சிக்கிக் கொள்ள கைகளால் நாலு மொத்து மொத்தினாள் செண்பகம். ஆறுமுகம் ஒன்றும் பேசாமல் மொழுக் என்று நின்று கொண்டிருந்தாள்.
சத்தம் கேட்டு வந்த ராக்காயி ஆறுமுகத்தயும் செண்பகத்தயும் மாறி மாறிப் பார்த்து விட்டு ஆறுமுகத்தின் பக்கம் வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
'சின்னப் புள்ளய இப்படி தான் அடிக்கிறதா? வயசுக்கு வந்த புள்ளய கை நீட்டி அடிக்கக்கூடாது செம்பகம்.'
'ஆமா. வயசுக்கு வந்த புள்ள.. அந்த வயசுக்கு வந்த புள்ள என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்குன்னு கேளு. ஏன் வயசுக்கு வந்தோம்கறத வெளில போய் தெரிஞ்சுக்கிட்டு வந்துருக்குறா.. சண்டாளி!' மறுபடியும் கோபம் வர இன்னும் ரெண்டு மொத்து மொத்தினாள். 'கீழ வுழுந்துட்டாளாம்.. பொய் வேற.' அவள் மீது அடி படாதவாறு ராக்காயி அவளை நகர்த்த அவள் மீது ஒரு மொத்து விழுந்தது.
'இங்க பாரு செம்பகம். மொதல்ல கத்தி கூப்பாடு போடாத. நான் அவகிட்ட என்ன நடந்ததுன்னு பொறுமயா கேட்டுட்டு வாரேன். ஆமா.. ஆறு..சேகர் எங்க?'
திடுக்கிட்டு திரும்பினாள் செண்பகம்.
'என்னது சேகரா? அவனோடத்தான் போனியா நாயே? அவன் கூட போகாத போகாதன்னு எத்தன தடவ படிச்சு படிச்சு சொன்னேன். ஏண்டி அவன் தான் ஒன்ன....' என்று மூச்சிரைக்க இழுத்தாள்.
ஆறுமுகம் எரிந்து விழுந்தாள்.
'ஏம்மா! ஒனக்கு புத்தி இல்லயா? இந்த நெலமக்கு காரணம் அவன் தான். ஆனா நீ நெனக்கற மாதிரி அவன் நடந்துக்கல. கூடப் பொறந்த அண்ணன் எப்படிம்மா... கொஞ்சமாவது யோசிச்சு பேச மாட்டியா?'
'அடி லூசு. அவன் ஒன் கூடப் பொறந்தவன் இல்லடி.' என்று செண்பகம் அலற, அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தார்கள் ஆறுமுகமும், ராக்காயியும்.

(தொடரும்)
 
அதனால் தான் இப்படி பண்ணானா. அம்மா சினிமாக்கு எப்படி ஒத்துக்குவாங்க
 
Nice epi. Unexpected twist. Cinna kutty ah amma va paathu kakala,ammava adi maathram poduthu. Aval mugam kandu nadantha kaariyam purichathu,but too late.nadantha pinne enthu seyaan.
 
Top