Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 7

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 7

எல்லாம் முடிந்தது. நேற்று பூத்த பூவை ஒரு குரங்கு முகர்ந்து நசுக்கி வீசி விட்டது. நகக் குறிகளும், பற்தடங்களுமாய் பெட்ஷீட் போர்த்தப்பட்டு பெட்டில் உட்கார்ந்திருந்தாள் ஆறுமுகம். வெற்று மார்பில் முடிகளில் புரளும் புலி நகச் சங்கிலியோடு கையில் பொன்னிற திரவம் நிரம்பிய க்ளாசை 'சிப்'பிக் கொண்டிருந்தான் கணேஷ்.
ஆறுமுகத்தின் உதடு ஒரு புறம் வீங்கி வலித்தது. மெதுவாக பெட் ஷீட்டை மூடிக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். கதவை இறுகத் தாளிட்டு விட்டு பெட் ஷீட்டை ஹாங்கரில் போட்டுவிட்டு பக்கெட்டில் இருந்த தண்ணீரை மொண்டு மொண்டு தலையில் ஊற்றினாள். நகக் குறி, பற்குறி பட்ட இடங்கள் சுர் என்று எரிந்தன. கீழுதட்டை அழுத்திக் கடித்துக் கொண்டு எரிச்சலை அடக்கிக் கொண்டாள். ஜில்லென்ற தண்ணீரோடு கற்பு கரைந்து போன நினைப்பில் கண்ணீரும் கலந்து கொண்டது. மெல்ல விசும்பி விசும்பி அழுதாள். சோப் இருக்கும் டப்பாவை எடுத்து சோப்பை உடல் முழுவதும் தேய்த்தாள். மறுபடியும் பல இடங்கள் எரிந்தன. சோப்பை வைக்கும்போது தான் ஷேவ் செய்ய வைக்கப்பட்ட பிளேடு கண்ணில் பட்டது. ஒரு படத்தில் இதை வைத்து தான் கதாநாயகி கையை அறுத்து செத்துப் போவாளே! இதே கணேஷ் தானே அவள் தற்கொலைக்கு பழிவாங்கி வேறு ஒரு நாயகியுடன் ஜோடி சேர்வான்.
ப்ளேடை எடுத்தாள். மணிக்கட்டின் மீது அதை வைத்த அடுத்த கணம் வீட்டின் நியாபகம் வந்தது. அம்மா, தம்பி தங்கைகள், குறிப்பாய் சிவா. அம்மாவின் வயிற்றில் இருக்கும் குட்டிப் பாப்பா. என்ன செய்வார்கள் அவர்கள் எல்லாம்? சிக்னலில் சிவாவுடன் கிழிந்த துணியில் பிச்சை எடுக்கும் செவ்வந்தி நியாபகம் வந்தாள். செவ்வந்தி! அவளும் என்னை மாதிரி ஒரு நாள் எந்த நாயிடமோ அண்ணனால் தள்ளப்படாமல் போக மாட்டாள் என்பது என்ன நிச்சயம்.
'எந்த உயிரினமும் தற்கொலை பண்ணாது. ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் தற்கொலை பண்ணிக் கொள்கிறான். நீங்கள் வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் உயிரை மட்டும் மாய்த்துக் கொள்ளக் கூடாது' என்று அறிவுரை சொன்ன மாலா டீச்சர் நியாபகத்துக்கு வந்தாள்.
டக் என்று ப்ளேடை வீசினாள். இன்னும் ரெண்டு மக் தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றினாள். மூளை சிந்தித்தது. ஒரு தடவை போனாலும் கற்பு போனது போனது தான். உயிரை மாய்த்துக் கொள்ளாமல் நம் வீட்டு கஷ்டம் என்னால் தீர நான் பலி ஆடாய் ஆனால்...
கஷ்டம் என்னோடு போகட்டுமே! என் குடும்பம் நன்றாய் இருந்தால்... ஆறுமுகத்திற்கு எப்படி அப்படி ஒரு யோசனை வந்ததோ தெரியவில்லை. ஆனால் அதை செயல்படுத்த துணிந்தாள்.
பக்கத்தில் தொங்கிய டவலை எடுத்து தலையை, உடம்பை நன்கு துடைத்து டவலை மார்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டாள். அது அவளது செழித்த துடைகள் வரை வந்து அதற்கு கீழே போக மாட்டோம் என்று அடம் பிடித்தது. மெதுவாக பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.
கதவைத் திறந்து வந்த ஆறுமுகத்தை பார்த்ததும் ஏற்கனவே போதையில் இருந்த கணேஷ் கிறங்கினான். வானத்தில் இருந்து வந்த அப்சரஸோ என்று கண் சிமிட்டிப் பார்த்தான். இப்போது தான் அனுபவித்த உடல் என்றாலும் அவளது இளமை அவனை அசைத்துப் பார்த்தது. மெல்ல எழுந்து அவளருகில் வந்தான்.
'செகண்ட் ரவுண்ட் போலாமா பேபி?' என்று காமத்துடன் குளறினான்.
முகத்தில் வெட்கத்தை வரவழைத்துக் கொண்ட ஆறுமுகம் சொன்னாள்.
'அதுக்கு முன்னால ஒரு கண்டிஷன்.'
'வாவ்! வெட்கத்தப் பாரு. மூடு ஜிவ்வுன்னு ஏறுது. சீக்கிரம் சொல்லு டார்லிங்.'
'எனக்கு... எனக்கு.. ஒங்க கூட ஒரு படத்துல நடிக்கணும்.'
ஷாக்கானான் கணேஷ். உடனே சிரித்தான்.
'என்னது நடிப்பா? நடிப்ப பத்தி ஒனக்கு என்ன தெரியும்? என்ன விளயாடற?
'விளயாடல. ஒரு ஆச தான். ஒரே படம். ஒரு சின்ன கதாபாத்திரம் போதும். நான் எடுபட்டுட்டா நடிக்கிறேன். இல்ல உங்க கூட திரைல வந்த படத்த திரும்ப திரும்ப பாத்து ரசிச்சுக்கறேன். உங்க படம்னா தியேட்டர்ல நின்னுகிட்டே உங்களயே பாத்துட்டுருந்தவ நான்.'
'என் மேல ஆசன்னா நான் நடிச்ச படம்லாம் தரேன். காஸட்டா. டெக்கும் வாங்கித் தாரேன். போட்டு போட்டு பாத்துக்க. நடிப்பு எல்லாம் விபரீத ஆச.'
'இல்லங்க. நான் ஸ்கூல்ல ட்ராமால நடிச்சிருக்கேன். டான்ஸ் ஆடி இருக்கேன். ஒரு தடவ.. ஒரே ஒரு தடவ ஒரு சின்ன கதாபாத்திரம்.. உங்க கூட ஒரு பத்து நிமிஷம் திரைல வந்தா போதும். நீங்க எனக்கு எதுவுமே தரல. பணம் எங்க அண்ணனுக்குத் தான். நான் ஒங்களுக்கு என் வாழ்க்கைலேயே முக்கியமா நான் நெனக்கறத ஒங்களுக்குத் தந்திருக்கேன். கொஞ்சம் மனசு வையுங்க.'
கணேஷ் பட் என்று கை தட்டினான்.
'வாவ்! சூப்பரா டயலாக் எல்லாம் பேசுற. ஒன் பேர் மட்டும் இல்ல. நீயும் வித்தியாசமா தான் இருக்ற. இது வர எங்கூட படுத்த பொண்ணுங்கள்ளாம் ஒண்ணு மறுநாள் சூசைட் பண்ணிக்கும். அல்லது ப்ராஸ்டிட்யூட் ஆயிரும். அல்லது ஊர் மாறிப் போய் ஒண்ணும் நடக்காதது மாதிரி கல்யாணம் பண்ணிக்கும். நீ ரொம்ப வித்தியாசம் தான்.'
'இத செஞ்சு தாங்க. அப்புறம் நான் ஒங்க கிட்ட நடந்துக்கற மொறயே வித்தியாசமா இருக்கும்.' என்று அவள் கிறக்கமாய் கூற, தேன் குடித்த நரி போல் கணேஷ் இண்டர்காமை எடுத்தான்.
'ராஜேஷ்! நான் ஒடனே டைரக்டர்ட்ட பேசணுமே!'
'.....'
'ஆமாம். இப்பவே தான். இம்மீடியட்டா கால் பண்ணச் சொல்லு.'
ஆறுமுகத்திடம் திரும்பினான்.
'சொல்லிட்டேன். ஒடனே கூப்டுவாரு. ஏதாவது ரோல் போட்டுத் தரச் சொல்றென்.' என்று சொல்லியவாறு க்ளாஸை டீப்பாயில் வைத்து விட்டு அவளருகில் வந்தான். அவளை மெதுவாகக் கட்டி அணைத்து அவளது தோளில் மணம் வீசும் லக்ஸை முகர்ந்தான்.
'உம்ம்ம்ம்ம்.. வாசன தூக்குது.'
அவள் அவனை மெல்ல தள்ளி விட்டாள்.
அவன் கோபமானான்.
'ஏய்! ஏன் தள்ளி விடற? நீ என் கோட்டைல இருக்றத மறந்துறாத.' என்று கர்ஜித்தான்.
மெல்ல சிரித்தாள் ஆறுமுகம்.
'உங்க கோட்டை தான். ஒத்துக்கறேன். ஆனா இனி நீங்க என்ன தொடறது என் விருப்பத்துல இருக்கு. நான் நெனச்சிருந்தேன்னா பிளேடுனால கையை கீறி உயிர விடலாம். என்ன தான் நீங்க தப்பிச்சாலும் ஒரு கிசு கிசுவாவது வரும். கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டியது வரும். அப்படியே இந்த ரூம விட்டு போக விடாம பண்ணாலும் எத்தனயோ வழி இருக்கு. தூக்கு இல்லன்னா மாடிலருந்து கீழ விழறது. சாவணும்னா எவ்ளொ வழி இருக்கு. வாழ்ந்துட்டுப் போவோமேன்னு தான் நான் துடிக்கிறேன். ஏதோ சினிமால நடிச்சோம்னா என் குடும்பம் முன்னுக்கு வந்துராதா எங்க கஷ்டம் நீங்கி அடுத்த கட்டத்துக்கு என் குடும்பம் போயிராதான்னு ஒரு ஆதங்கம். நீங்க மனசு வச்சா அது நடக்கும். இல்ல நான் சாவறது தான் வழி.'
ஆறுமுகத்துக்கு தான் தான் இப்படி பேசுறோமா என்று சந்தேகம் வந்தது. கணேஷ் அவளைத் தொடுமுன் இருந்த ஆறுமுகம் வேறு. இப்போதய ஆறுமுகம் வேறு.
கணேஷ் யோசித்தான். டெலிபோன் அடித்தது. எடுத்தான். டைரக்டர் தான்
'ஒண்ணும் இல்ல ரஞ்சித்து. எனக்குத் தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு என் படத்துல ஒரு ஓரமாவது வந்து நிக்கறேன்னு கெஞ்சுது. ஏதோ ஒரு சின்ன ரோல் இருந்தா போட்றேன்.'
'.....'
'அப்படியா! நல்ல கலர் தான். அந்த ரோலுக்கு ஒத்துப் போவா. அதயே அவளுக்கு பிக்ஸ் பண்ணிரு. சாயங்காலம் நம்ம பங்களாவுக்கு வந்துரு. அவள வரச் சொல்றேன். ஒரு சின்ன மேக்கப் டெஸ்ட் எடுத்துறலாம். வச்சிரட்டுமா? ஷூட்டிங் நாளைக்குத்தானே?'
'..."
'சரி. வச்சிர்றென்.'
ஆறுமுகத்திடம் திரும்பினான்.
'நீ லக்கி. என் தங்கச்சி ரோல் நடிக்க வேண்டிய பொண்ணு திடீர்னு கால்ஷீட் ப்ராப்ளம்னு வெலகிட்டாளாம். அந்த ரோல்ல நீ நடிக்கிற. ஆனா ஒண்ணு மேக்கப் டெஸ்ட் ஒத்து வரல்லன்னா நான் ஒனக்குத் தர பணத்தோட வெலகிறணும். என்ன சொல்ற?'
ஆறுமுகம் பளிச் என்று மலர்ந்தாள்.
'நமது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்த்திட வேண்டியது தான். வந்தால் மலை. போனால் முடி. இவன் பொன் முட்டை இடும் வாத்து. இவனை விடக் கூடாது.' என்று எண்ணியவாறு தன் உடலைப் போர்த்திய டவலை சட் என்று நீக்கினாள். அது அவள் உடலை விட்டுப் போக வேண்டியதிருக்கிறதே என்ற கோபத்தில் தட்டாமாலை ஆக அவள் கால்களின் கீழ் சுற்றி விழ அதத் தாண்டி வந்து கணேஷின் அருகில் சென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். கணேஷ் நாடி நரம்பு எல்லாம் இன்பம் பொங்கி வர அவளை அணைத்துக் கொண்டே பெட்டில் விழுந்தான்.
சினிமா பார்த்து விட்டு வந்த இரவில் கனவில் வரும் கணேஷைக் கட்டி அணைத்து முத்தமிட்ட நினைவு வரவும் அதன்படியேஅவன் இதழ்களில் தன் சிவந்த இதழ்களைப் பதித்தாள் ஆறுமுகம். போலிகளையே கண்டிருந்த கணேஷ் ஒரு உண்மையான விருப்பத்தோடு வந்த பெண்ணின் சுவையை அறிந்தான். ஃபோம் மெத்தை வெட்கத்தோடு குலுங்கியது.
(தொடரும்)

'
 
என்ன சொல்ல அவ விவரமா
யோசிக்கிறானு நெனச்சாலும்
ரொம்ப வருத்தமா இருக்கு

இப்படி எத்தனை சின்ன
பெண் குழந்தைகள் வாழ்க்கை
சிதைந்து போயிறுக்கும்னு
?
 
கடைசியில் குடும்பத்திற்காக அவளையும் பிஸ்னஸ் பேச வச்சுட்டானுங்களே. சினிமாவில் நல்லா வர முடியுமா
 
Top