Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 20

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 20

அடுத்த இரண்டு மாதங்களில் ஷ்யாமின் தந்தையை சந்தித்தல், வீட்டில் செவ்வந்தி-ஷ்யாம் காதலை வெளிப்படுத்துதல், அதற்கு அம்மாவின் சம்மதம் வாங்குதல் (அக்கா நீ இருக்றப்போ அவளுக்கு எப்படி கல்யாணம் பண்றது-அம்மா), கல்யாண ஏற்பாடுகளை கவனித்தல் என்று இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை.
அனில் கல்யாணம் பண்ண ரெடியாகத்தான் இருந்தான். ஆனால் ப்ரொடியூசர்ஸ் நலம் கருதி அவள் கையில் உள்ள படங்களை முடித்து விட்டுத்தான் கல்யாணம் என்று உறுதியாய் இருந்தாள். புதுப்படங்கள் எதையும் சைன் பண்ண வில்லை.
அப்போது தான் தன் உடல் பற்றிய பிரக்னை வர டெஸ்ட் செய்தாள். பாஸிடிவ்! சந்தோஷப்படுவதா இல்லை இன்னும் ஒரு ஏழு மாதத்துக்கு எப்படி ஷூட்டிங்கின் போது வயிற்றை மறைப்பது என்று கவலைப்படுவதா என்று யோசித்தாள். அனிலை வரவழைத்தாள்.
அவன் அவள் கேரவனில் வந்தவுடன் அவளை கட்டிப் பிடித்தான். அவள் மெல்ல அவனை விலக்கி அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து 'அனில், நீ அப்பாவாகப் போற.' என்று வெட்கத்துடன் சொன்னாள்.
'என்னது?' ஒரு கணம் ஷாக் ஆன அனில் அடுத்த கணம் அவளைத் தூக்கி சுற்றத் தொடங்கினான்.
'என் செல்லம் ஒரு தடவையிலேயே ஒன் கிட்ட வந்துட்டானா? ம்ம்! ஒனக்கு என்ன வேணும்னு சொல்லு. வாங்கித் தரேன். ஏதாவது பிடிக்கும்னா சொல்லு. வாங்கிட்டு வர்றென். மாங்கா வாங்கிட்டு வரவா? சாம்ப? அதெல்லாம் எப்படி சாப்பிடுவ?'
'ஐயோ ராமா! அது எல்லாம் இப்ப சாப்பிட மாட்டாங்க. இன்னும் நாள் இருக்கு. சரி. எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?'
'நான் ரெடி நாளைக்கேன்னாலும். தென்னிந்திய கனவுக்கன்னிய கட்டிக்க கசக்குமா என்ன?'
'இன்னும் ஆறு மாசம் ஷூட்டிங் இருக்கெ?'
'அட்வான்ஸ திருப்பிக் கொடுத்திடு. வேற யாரையாவது புக் பண்ணச் சொல்லிரு.'
'ம்ஹும். ப்ரொடியூசர் நான் தான் நடிக்கணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு.'
'விழுந்திருப்பாரே!'
'ஐய கடிக்காத. என்ன நம்பினவங்கள ஏமாத்றது எனக்குப் பிடிக்காது. அனில் இந்த ஆறு மாசம் மட்டும் சமாளிச்சால் போதும். ஏழாவது மாசம் கல்யாணம் பண்ணிக்கலாம்.'
'எப்போ நீ டெலிவரிக்கு ஆஸ்பத்திரிக்கு போகும்போதா? கல்யாணம் பண்ணாமலே என் பையன் பொறக்றத நான் விரும்பல.'
'இப்ப ரெண்டு மாசம் தானே ஆகுது. ஆறு மாசத்துல ஷூட்டிங் முடிஞ்சுரும். கொஞ்சம் ஜாஸ்தி வேல பாத்தா அஞ்சு மாசத்துல கூட முடிய சான்ஸ் இருக்கு.'
'வயித்த தள்ளிகிட்டே தாலி வாங்கிக்கப் போறியா?'
'வேற வழி? பத்திரிகைகள்லாம் கண்டபடி பேசும். பேசட்டும். உண்மையான காரணத்த சொல்வோம். ஏத்துகிட்டா ஓ.கே. இல்லன்னா சகிச்சுக்கலாம்.'
'ஷூட்டிங்ல எப்படி சமாளிக்கப் போற?'
'நீ எங்கூடவே இரு. ராக்காயி அக்காட்டயும் சொல்லிரலாம்.'
'சரி. வயிறு தள்ளிச்சுன்னா கேமரால தெரியுமா?'
'கேமராமேண்ட்ட சொல்லிரலாம்.'
ஒருமனதாக சம்மதித்தான் அனில்.
'ஒனக்கு சரின்னா எனக்கும் சரி'
சந்தோஷப்பட்டாள் ஸ்ரீலதா.
'என் செல்லம்' என்று அனிலின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சினாள்.
'வேண்டாம் கொஞ்சாதே! மூடாகுது.'
'ஐயயோ. இன்னும் ஒரு நாலு மாசத்துக்கு வேண்டாம்.'
'அப்படின்னா.. நாலு மாசத்துக்கு அப்புறம் வச்சுக்கலாமா?'
'சே! எந்த நேரமும் அதே நெனப்பு..'
'ஓ! அப்பம் அம்மணிக்கெல்லாம் வேண்டாம்.'
'அத விடு அனில். என் குழந்தைய எப்படி எல்லாம் வளத்தணம்னு நான் யோசிச்சிருக்கேன் தெரியுமா?'
'ஆஹா! அவன் வந்த உடனே என்ன மறந்துட மாட்டியே?'
'என்ன சொல்றீங்க? நீங்க தன் என் முதல் குழந்த.'
'ஓ பர்த்டே ட்ரஸ்ல பாத்ததுனாலயா?'
தன் அழகான 'சீ'யை உதட்டில் இருந்து ரிலீஸ் செய்தாள் ஸ்ரீலதா.
அடுத்த மாதம் செவ்வந்தியின் கல்யாணம். நல்ல விமரிசையாகவே நடந்தது. செண்பகத்திற்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது. கல்யாணம் முடிந்த ராசியோ என்னவோ ஷ்யாமுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க இருவரும் மும்பை பறந்தனர்.
இரவு பகல் பாராது ஷூட்டிங்கில் பிஸியானாள் ஸ்ரீலதா. ராக்காயி கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டாள். மசக்கைப் பிரச்சினைகள் இருந்தாலும் கேரவன் இருந்ததால் தப்பித்துக் கொண்டாள் ஸ்ரீலதா. டைரக்டரிடமும் கேமராமேனிடமும் மட்டும் உண்மையை சொல்லி வைத்தாள். அவர்கள் பணியை துரிதப் படுத்தினர்.
வயிறு லேசாய் மேடிடத் தொடங்கியது.
கையில் இருந்த எல்லா படங்களயும் முடித்து விட்டாள் ஒன்றைத் தவிர.
அதில் அவளுக்கு டேன்சர் கேரக்டர்.
முடிந்தவரை கைகளில் அடவுகள் வைத்து பேஸியல் எக்ஷ்ப்ரஷன்ஸ் வைத்து சமாளித்துக் கொண்டாள்.
இடையில் அனிலிடம் மறுபடியும் டிஸ்கஸ் செய்தாள்.'
'அனில், என் சொத்தெ எல்லாம் பிரிக்கலாம்னு பாக்கறென்.'
'ம்ம். ஆகட்டும்.'
'எங்க அம்மாவுக்கு, செவ்வந்திக்கு, ராஜாவுக்கு, சிவாவுக்கு, பாப்பாவுக்கு, ராக்காயி அக்கா குடும்பத்திற்கு அப்புறம் எங்க அண்ணன் சேகருக்கு..'
'ம்! பேஷா பிரிச்சிரு.'
'இல்ல! பொம்பள பாத்தியா? நாளைக்கு என் குழந்த, என் புருஷன்னு வந்தப்புறம் புத்தி மாறிடக் கூடாதில்லயா? அதான் இப்பவே பிரிச்சிரலாம்னு பாக்கறேன்.'
'நீ புத்திசாலி ஸ்ரீலதா.'
சொன்னமாதிரியே எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டாள். நகை, சொத்து, பணம் என்று எல்லாம் பலவாறாய் பிரிந்தது. இவளுக்கு வரவேண்டிய சொத்து அனைத்தையும் அம்மாவுக்கு எழுதி வைத்து விட்டாள். அம்மா அனுபவித்துக் கொள்ளலாம். அவளுக்குப் பின்னர் ஸ்ரீலதாவுக்கு. நகை, பணம் மட்டும் அவளது பங்கை அனிலிடம் தந்து விட்டாள்.
அண்ணன் சேகர் ஓசூர் வீட்டயும் அதைச்சுற்றியுள்ள ஒரு ரெண்டு ஏக்கர் இடத்தையும் பார்த்து ஷாக் ஆகி விட்டான்.
தெரிந்தே செய்தாளோ இல்லை தெரியாமல் செய்தாளோ அடுத்த வாரம் தலையங்கச் செய்தி அவளாகத்தான் இருந்தாள்.
விமான விபத்தில் பிரபல நடிகை மரணம்.
நடிகையும் காதலனும் கருகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டனர்.
தென்னிந்தியத் திரை உலகமே சோகத்தில் மூண்டது.

(அடுத்த த்ரெட்டில் முடியும்)

 
அட கொடுமையே இப்ப தான் கல்யாணத்துக்காக குழந்தையுடன் ஆவலா இருந்தா எல்லாம் நல்ல நடக்குதுன்னு பார்த்தா அவளையே போட்டு தள்ளீட்டீங்களே
 
Top