Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 18

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 19

காரை சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஓட்டினான் அனில்.
சூட்டிங் ஸ்பாட் வந்ததும் கேரவனில் போய் ஏறிக் கொண்டாள் ஸ்ரீலதா. செவ்வந்தி, அனிலும் உடன் வந்தார்கள். பி.ஏ. வந்ததும் அவனை ஏறிட்டாள் ஸ்ரீலதா.
'மேடம். இப்ப ஷூட்டிங் முடிஞ்சதும் காலைல திருவனந்தபுரம் போகணும். அங்க இருந்து பக்கத்துல இருக்கற கோவளத்துல ஒரு மலையாளப்பட ஷூட்டிங். அங்க ரெண்டு நாள்.. இடைல தீபாவளி மலருக்கு பேட்டி கேட்டு பொம்மைல இருந்து வந்திருக்காங்க. ஒரு ஹிந்தி பட ப்ரொடியூசர் ஒங்களப் பாத்து கால்ஷீட் வாங்கணும்னு ஒரு வாரமா அலஞ்சுகிட்டு இருக்காரு.' என்று சொல்லி விட்டு அவளது பதிலை எதிர்பார்த்தார்.
ஒரு நிமிடம் யோசித்த ஸ்ரீலதா தீபாவளி மலர் பேட்டிய திருவனந்தபுரத்துல ஷூட்டிங் கேப்ல வச்சுக்க முடியுமானு கேளு. ஹிந்தி ப்ரடியூசர பிளைட் லவுஞ்ச்ல மீட் பண்றேன்னு சொல்லிரு. வேற ஒண்ணும் இல்லல?'
'இல்லம்மா,'
'ஓ.கே. எனக்கு ஒரு பெர்ஷனல் வேல இருக்குது. டைரக்டர் கிட்ட ஒரு ஒரு மணி நேரம் என்ன ஃப்ரீயா விடச் சொல்லு. அப்புறம் என் போர்ஷன எடுத்துக்கலாம்னு சொல்லு.'
'சரிம்மா.'
'ஒரு ஒரு மணி நேரம் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லு. வெளில புல்லட்ல ஒரு பையன் நிப்பான் திரு திருன்னு. அவன இங்க கூட்டிட்டு வந்து கேரவன்குள்ள அனுப்பிட்டு நீ ஒரு ஒரு முக்கா மணி நேரம் கழிச்சு உள்ள வா.'
'சரிம்மா'
பி.ஏ. போய் விட, ஸ்ரீலதா ஷ்யாமுக்காக காத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து முகத்தில் வியர்வையோடு அவன் உள்ளே வர, அவனை எதிர் சோபாவில் உட்காரச் சொன்னாள். அவனை ஒரு நிமிடம் மேலும் கீழும் பார்த்தாள். அவன் செவ்வந்தியைப் பார்த்தான். கண்களில் உண்மை தெரிந்தது.
'தம்பி நீ?'
அவன் ஒரு நிமிடம் தயங்கிவிட்டு தொடர்ந்தான்.
'நான் ஷ்யாம். எங்க அப்பா குவைத்ல இருக்காரு. அம்மா பத்து வயசுல செத்துப் போயிட்டாங்க. அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணாம அம்மா நினைவாவே இருந்துட்டாரு. காசுகு பஞ்சமே இல்ல. ஒங்க அளவுக்கு இல்லாட்டாலும் செவ்வந்திய வச்சு பாத்துக்கற அளவுக்கு என் கிட்ட பணம் இருக்கு. எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். அப்பா கூட குவைத் போனேன்னா நல்ல ஆபர் இருக்கும். மொதல்ல என்ன மன்னிச்சிருங்க.'
'எதுக்கு?' என்றாள் ஸ்ரீலதா.
'உங்க தங்கச்சிய ஹோட்டல் கூட்டிட்டுப் போனதுக்கு? எங்க அப்பா என்ன நல்லாத்தான் வளத்திருக்காரு. பொண்ண கூட்டிட்டு ஊர் சுத்தற லோபர் இல்ல நான். எப்படியாவது உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கணுமேன்னு...'
அப்பா மனைவியின் நினைவாய் இருந்ததால் கல்யாணம் பண்ண வில்லை. நம் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி இத்தன பெத்து விட்டுப் போய் விட்டு செத்து விட்டார். அவரும் இவனோட அப்பா மாதிரி இருந்திருந்தா சேகர் அண்ணா இந்த ஷ்யாம் போல இருந்திருந்திருப்பானொ?
'சரிப்பா. உங்க அப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பாரா?'
அவன் முகம் மலர்ந்தது.
'கண்டிப்பா? என் சாய்ஸ் மேல அவருக்கு என்னிக்குமே எதிர் கருத்து இருந்ததில்ல?'
'மத்தது ஓகேப்பா. இது கல்யாண விஷயம். ஒன் வாழ்க்கைப் பிரச்சினை. உங்கப்பா இதுக்கு எப்படி ரிஆக்ட் பண்ணுவாருன்னு தெரியாது. ஒண்ணு பண்ணு. அடுத்த வாரம் எனக்கு துபாய்ல ஒரு கலை நிகழ்ச்சி. நீ அங்க வந்துரு. நான் செவ்வந்தியையும் கூட்டிட்டு வந்திர்றென். அங்க வச்சு உங்க அப்பாட்ட பேசலாம்.'
அவன் முகம் மேலும் மலர்ந்தது.
'அப்புறம் என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா இல்ல உங்க தங்கச்சிக்கு பிடிச்சதினால...'
'ஒன் கண்ணப் பாத்தாலே கண்டுபிடிச்சிருவேன்பா. எத்தன ஆண்களப் பாக்கறவ நான். செவ்வந்தி! என்ன சொன்னே. நான் லக்கியா. இல்ல. நீ தான் லக்கி. உன் மேல உசிரயே வச்சிருக்கு இந்த தம்பி. ஆமாம். உங்க அப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா?'
'எனக்கு எங்க அப்பாவப் பத்தி தெரியும். அப்படியும் அவருக்கு டிபரன்ஸ் ஆஃப் ஒபினியன் இருந்ததுன்னா நான் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவேன். அப்படியும் அவர் கன்வின்ஸ் ஆகலன்னா நான் காலம் பூராவும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்.'
'ஆஹா. எல்லாம் இப்படிதான் இப்ப சொல்லுவீங்க. சரி நாம நல்லதே நினைப்போம். அப்புறம் அது கடவுள் இஷ்டம். அதுக்கு முன்னால இனி இவள கைக்குள்ள வச்சுக்கணும்னு சொல்லி இந்த ரூம் போடற பிசினஸ் எல்லாம் கூடாது.'
'ஐயயோ. சாரி. இனிம அப்படி பண்ண மாட்டேன். நீங்க தான் சொல்லிட்டீங்கள்ல. செவ்வந்தி எனக்குத் தான்ன்னு. சரி நான் வர்றென்.'
'ஒரு நிமிசம். அப்படியே செவ்வந்திய எங்க வீட்ல ட்ராப் பண்ணிரு. நான் அவள விட ஒன்ன நம்பறேன்.'
அவன் வலது கையை பின்புறம் இழுத்து இழுத்து யெஸ் யெஸ் யெஸ் என்று மூன்று முறை சொல்லிக் கொண்டான்.
சிரித்தாள் ஸ்ரீலதா.
'மேடம்' என்றவாறு பி.ஏ. வர அவர்களை அனுப்பி விட்டு ஷூட்டிங்கிற்கு தயாரானாள் ஸ்ரீலதா.
பிரேக்கில் கேரவனுக்குள் வந்த ஸ்ரீலதா அனிலைக் கண்டு அவன் மார்பில் சாய்ந்தாள். கேவினாள்.
'ஒன்ன நான் மொதல்லயே பாத்திருந்தா கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருப்பேன் அனில். இப்ப கெழவன் கூட டூயட் பாடி அவங்க கூட படுத்து ஆம்பளங்களே வெறுத்துப் போனாலும் ஒன்ன மாதிரி, ஷ்யாம் மாதிரி ஆம்பளங்க எனக்கு உண்மையான அன்புள்ள ஆம்பளைங்களும் இருக்காங்கற நம்பிக்கை குடுக்குது. நான் தான் ஒம் மேல வந்து வந்து சாயறென். நீ ஒரு தடவ கூட என்ன தப்பா தொட்டது கிடையாது.'
'எனக்கும் ஆச இல்லாம இல்ல லதா. ஆனா நீ ஒன்ன வளச்சுப் போட இப்படி நான் நடந்துக்கறென்னு நெனச்சா... அதான் நான் கட்டிப் பிடிக்கறதோட நிறுத்திக்கறென். இல்லன்னா...'
'இல்லன்னா... ஐயா என்ன பண்ணுவாரு.'
'என்ன பண்ணுவாரா?' சொல்லியபடி பட் பட் என்று சட்டை பித்தான்களைக் கழட்டி சட்டையை வீசி விட்டு வெற்று மார்பில் கொச கொச முடி தெரிய அவள் அருகில் வந்தான் அனில். அவளை இறுக அணைத்து இதழில் முத்தமிட்டான்.
முத்தத்தை ஏற்றுக் கொண்டு அவன் முதுகில் இறுகப் படிந்திருந்த கைகளை விலக்கிக் கொண்டு அவனிடம் இருந்து விலகினாள் ஸ்ரீலதா.
'இப்போதைக்கு இது போதும். இனி கல்யாணத்துக்கு அப்புறம் தான். ஷூட்டிங் வேற இருக்கு. மொகம் காமிச்சி தந்திரும். நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். கைல இருக்ற படத்த முடிச்சிட்டு செவ்வந்திக்கு முன்னால நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.'
'ம்ஹூம்! எனக்கு இப்பவே வேணும். மூடு ஏத்தி விட்டுட்டு வெலகறது எல்லாம் என் கிட்ட நடக்காது.' அனில் கட கட என்று முன்னேறவே ஸ்ரீலதா அனுமதித்தாள்.
அவர்கள் பெட்டில் சாய, பெட்டின் மேல் ஒட்டி இருந்த குழந்தைப்படம் ஒன்று வாயில் விரலை வைத்து சைலன்ஸ் என்றது.

(தொடரும்)
 
அனிலாவது கல்யாணம் பண்ணிக்குவானா.பாவம் தான் ஆறு
இந்த update ம் 18 என வந்திருக்கு instead of 19
 
Top