Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 14

rishiram

Active member
Member
அத்தியாயம் 14

கண் விழித்ததும் படுக்கையில் இருந்தாள் ஸ்ரீலதா.
பக்கத்தில் அவள் அம்மா, ராக்காயி, ருக்மணியம்மா. அவள் அம்மா செண்பகம் கதறினாள்.
'நீ மன தைரியம் உள்ள பொண்ணுன்னு நெனச்சி பெருமப் பட்டேனம்மா. அந்த நாயி யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும். நீ ஏம்மா மனச விடற?'
அம்மா அழ, ஸ்ரீலதா மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
அம்மா சொல்றது நிஜம் தானே. அன்னைக்கு கற்பு போன பிறகு இருந்த தைர்யம் இப்ப எங்க போச்சு? இது தான் காதலோட சக்தியா?
ருக்மணியம்மா ஆறுதல் சொன்னாள்.
'தைரியமா இரு லதா. துரோகம் இப்படி தான் வலிக்கும். நான் நெறய பட்ருக்கேன். நீ இப்ப மொதல் மொறயா அத ஃபேஸ் பண்ணுறப்ப மனம் தைரியத்த இழக்கத் தான் செய்யும். ஒன்ன தேத்திக்கம்மா.'
ஸ்ரீலதா வெறுப்புடன் சிரித்தாள்.
'இல்லம்மா. நானும் நெறய நம்பிக்க துரோகத்த பாத்திருக்கேன். பாப்பா பாப்பான்னு கூப்ட பக்கத்து வீட்டு ஆளு முள்ளுக்காட்ல தள்ளி என் மேல விழுந்தப்ப அந்த துரோகத்த தாங்க முடியாம மயங்கினேன். அவன் பயந்து விட்டுட்டு போயிட்டான். அப்புறம் நான் ஹீரோவா பாத்து கற்பனையில ரசிச்ச கணேஷ்.. எனக்கு திறப்புவிழா பண்ணப்ப ரெண்டாவது தடவ துரோகத்தோட கொடூர முகம் தெரிஞ்சுச்சு. அதுக்கு காரணம் கூடப் பொறக்காத ஆனா நான் கூடப் பொறந்ததா நெனச்ச எங்க அண்ணன்னு தெரிஞ்சதும் ரொம்ப நொறுங்கிப் போனேன். ஆனா அதெல்லாம் தாங்கிகிட்டேன். என் வாழ்க்கையே விஜிதான்னு நெனச்சு இருந்ததால இந்த துரோகம் ரொம்ப வலிக்குது. அதுவும் நானே வீடியோ வெளியான அதிர்ச்சியில இருக்கறப்ப இப்படி இவன் நடந்துக்கறது தெரியாம தடுக்கி விழுந்து அடிபட்ட குழந்தை அம்மாவ நோக்கி அழுதுட்டே வரப்ப அம்மா 'பாத்து வர மாட்டே'ன்னு அடிக்கற மாதிரி ஷாக் ஆயிட்டேன். பட் என்னால இதயும் ஜீரணிச்சி வர முடியும். அத அவன் கல்யாணத்துக்கே போயி மொத வரிசைல உக்காந்து வாழ்த்திட்டு வந்து காட்டறென். என்ன இனி யாரயும் நம்பத் தான் என்னால முடியாது. இனி என் தொழில்ல முழு கவனம் செலுத்தறென். சினிமால அசைக்க முடியாத ஆளா மாறிக் காட்டறேன். யாராலயும் சாதிக்க முடியாததெல்லாம் சாதிச்சுக் காட்டறென். அம்மா பி.ஏ.வ கூப்டுங்க.'
அம்மா எழுந்து போக ருக்மணியம்மா ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.
'அம்மா தெலுங்குல ரெண்டு படம் நடிக்க கேட்டுருக்காங்க. அங்கன்னா கொஞ்சம் கிளாமர் தூக்கலா இருக்கும்கறதனால இதுவர ஒத்துக்கல. இனி பாருங்க. நான் என்ன பண்றேன்னு. ஆனா எனக்கு ஒங்க ஒத்துழைப்பு கொஞ்சம் தேவைம்மா. உங்களுக்கு எல்லா மொழியும் அத்துபடி. நான் கொஞ்சம் எல்லாம் தெரிஞ்சுக்கற வரைக்கும் நான் நடிக்கிற படங்கள்ல உங்களுக்கும் ஒரு ரோல் குடுக்கச் சொல்றேன். உங்களுக்கும் ஒண்ணும் பிராப்ளம் இல்லல்ல?'
'என்னம்மா இப்படி சொல்ற? மூச்சு நிக்கற வரைக்கும் நடிக்கணும்கறது தான் என் லச்சியம். அதுக்கு நீ தீனி போடற போது நான் ஏன் வேண்டாங்கறேன்?'
'அதுக்கு முன்னால இந்த வீடியோ பிரச்சினைய தீக்கணும். எனக்கு ஒரு ஐடியா இருக்கு. நீங்க ஹெல்ப் பண்ணா அது கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்.'
'சொல்லும்மா செய்யறேன்.'
அவள் ஐடியாவை சொல்ல சொல்ல வியந்தாள் ருக்மணியம்மா.
மறு நாள் அனைத்து பத்திரிகைகளிலும் சுதீஸின் பேட்டி வெளியாகி இருந்தது. அவனது புகைப்படத்துடனும் ஸ்ரீலதா போல் இருந்த சௌம்யா என்ற துணை நடிகை புகைப்படத்துடனும்.
நிருபர்: சமீபத்துல வெளியான ஸ்ரீலதா ஆபாச வீடியோல அவங்க கூட இருக்றது நீங்க தானா?
சுதீஸ்: அந்த வீடியோல இருக்றது நான் தான். ஆனா அந்தப் பொண்ணு ஸ்ரீலதா இல்ல.
நிருபர்: என்ன சொல்றீங்க?
சுதீஸ்: ஸ்ரீலதா நடிச்ச மொத படத்துல அவங்கள கெடுக்கற வில்லனோட மகனா நான் நடிச்சிருப்பேன்.
நிருபர்: அந்தப் படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட்டாச்சே!
சுதீஸ்: அப்போ நான் வளந்து வர்ற நடிகனா இருந்தேன். சினிமா எனக்கு ரொம்பவே புதுசு. வயசும் அனுபவமும் கம்மி. இப்ப கூட தமிழ் இண்டஸ்ட்ரியில என்ன அடையாளம் சொல்லணும்னா அந்தப் படம் தான் இருக்கு. மத்த படங்கள்ல துக்கடா ரோல்ல நடிச்சு அதெல்லாம் வெளியானதும் தெரியல்ல. தியேட்டர விட்டு ஓடினதும் தெரியல. ஒடனே கன்னட சினிமால ஒரு பிரெண்டு மூலமா ஆஃப் த ஸ்கிரீன் வேல பாக்க ஆரம்பிச்சேன். இப்போ அங்க பிஸியா இருக்கேன். நான் ஆஃப் த ஸ்கிரீன்னால நெறய பேருக்கு என்னத் தெரியாது. அதனால இந்த வீடியோ வெவகாரம் என்ன ரொம்ப பாதிக்கல.'
நிருபர்: சரி, அப்ப ஏன் பத்திரிகையாளர் கூட்டம் நடத்தறீங்க?
சுதீஸ்: ஒரு நல்ல பொண்ணோட பேரு கெட்டுடக் கூடாதேன்னு தான்.
நிருபர்: நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல.
சுதீஸ்: தெளிவா சொல்றேன். அந்த வீடியோல இருக்கறது நானும் இதோ இந்தப் பொண்ணு சௌம்யாவும் தான். (சௌம்யா வருகிறார்)
நிருபர்: என்ன இவங்க ஸ்ரீலதா மாதிரியே இருக்றாங்க. அவங்க தங்கச்சியா?
சுதீஸ்: இல்ல. இவங்க ஒரு துணை நடிகை. நெறய படங்கள்ல ஹீரோயின் பின்னால ஆடற பத்து பேர்ல ஒருத்தியா, ஹீரோயின் கூட ஷாப்பிங் போற கேர்ல்ஸ்ல ஒருத்தியா, களத்து மேட்ல புல்லு புடுங்கற லேடீஸ்ல ஒருத்தரா சுருக்கமா சொன்னா மொகம் தெரியாம வர்ற கேரக்டர்ஸ் நெறய பண்ணி இருக்காங்க.'
நிருபர்: சரி. இந்த வீடியோ எங்க எடுக்கப்பட்டது?
சுதீஸ்: இந்த வீடியோல முக்கிய பங்கு ஒரு சினிமா புள்ளிக்கு இருக்குதுங்க. அவர் தான் இயக்குனர் ஒருத்தர் கிட்ட எதுக்கும் இந்த பொண்ணோட வீடியோ ஒண்ணு எடுத்து வை. பின்னால யூஸ் ஆவும்னாங்க. இயக்குனர் என் கிட்டயும் இந்த சௌம்யா கிட்டயும் ஒரு பெரிய தொகைய கொடுத்து இப்படி இருக்கச் சொன்னாங்க. குடும்ப சூழ்நிலை, இது யாருக்குத் தெரியப் போகுதுங்கற அசட்டு நம்பிக்கை, பணத்தேவை காரணமா ஒத்துக்கிட்டோம்க. தப்புதான்.
நிருபர்: சரி. அப்போ அந்த வீடியோல இருக்றது ஸ்ரீலதா இல்ல இவங்கங்கிரீங்களா?
சௌம்யா: ஆமாம். அப்போ என் குழந்தைக்கு ரொம்ப முடியாம இருந்தது. வீட்டுக்காரரும் சரி இல்லெ. அந்த சூழ்நிலைல குழந்தைய காப்பாத்தணும்னு தான் தோணிச்சு.
நிருபர்: இப்ப எதுக்கு ஒங்க முகம் காட்டி இத ஒத்துக்கறீங்க?
சௌம்யா: ஸ்ரீலதா அம்மா எனக்கு எவ்ளவோ ஒதவி பண்ணி இருக்றாங்க. அவங்க படத்துல எல்லாம் டான்ஸ் ஆட கண்டிப்பா என்ன கூப்டுருவாங்க. என் குழந்தைங்களோட படிப்பு செலவுக்கு.. என் வீட்டுக்காரர் இறந்தப்போ என் குடும்ப செலவுக்குன்னு எவ்ளவோ பண்ணி இருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு கெட்ட பேரு வர வுடலாமா? அதான் என் மானம் போனாலும் பரவால்லன்னு உண்மய சொல்லணும்னு வந்துட்டேன்.
நிருபர்: அது ஏன் உடனே சொல்லாம இத்தன நாள் கழிச்சு வந்து சொல்றீங்க?
சுதீஸ்: இதுக்கு நான் பதில் சொல்றேன். நான் வெளி நாட்ல சூட்டிங்ல இருந்தேன். சௌம்யா என்ன கூப்டாங்க. விஷயத்த சொன்னாங்க. நானும் சரின்னு ஒத்துகிட்டேன். நானும் இருந்து உண்மய சொன்னாத்தான் நல்லா இருக்கும்கறதால நான் வர்ற வரைக்கும் இவங்கள வெயிட் பண்ணச் சொன்னேன். அதுக்குள்ள ஸ்ரீலதா அம்மாவோட கேரியரும் பெர்ஷனல் லைஃபும் பாதிக்கப்படறதால இப்ப ஏர்போர்ட் வந்து இறங்கவும் இந்தப் பேட்டி.
நிருபர்: சரி. ஸ்ரீலதா சௌம்யா ஃபாமிலிக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க. உங்களுக்கு ஏன் அவங்க மேல அக்கற?
சுதீஸ்: என் மனைவி அவங்க ஃபாமிலி பிரெண்டான ருக்மணி அம்மாவுக்கு தூரத்து ரிலேஷன். பொண்டாட்டி ஒரே போன். சீக்கிரம் இந்தியாவுக்கு வந்து இந்த பிரச்னைய தீத்து வைங்கன்னு.
நிருபர்: உங்க பொண்டாட்டி இது சம்பந்தமா உங்க கூட கோபப்படலயா?
சுதீஸ்: என் கல்யாணத்துக்கு முன்னாலெயெ என் பொண்டாட்டி கிட்ட முன்னால நடந்தது எல்லாம் சொல்லிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு அவட்ட உண்மயாதான் நடந்துக்கறேன். அவ பழி பாவத்துக்கு அஞ்சுறவ. செய்யாத தப்புக்கு ஸ்ரீலதாவுக்கு இந்த தண்டனையா? நாம நல்லாவெ இருக்க முடியாதுன்னு ஒரே அழுக.
நிருபர்: இவங்கள மாதிரி ஆளுங்க இருக்றதுனால தான் இன்னும் மழ வருது. ஆமாம். அந்த பிரபலமான சினிமா புள்ளி யாருன்னு சொல்லவே இல்ல.
சுதீஸ்: அவரா? அந்த அசிங்கமான ஆளோட பேர சொல்லக் கூட எனக்கு விருப்பம் இல்ல. ஒரு காலத்துல ஓஹோன்னு இருந்து பின்னால ரெண்டு வருஷமா தொடர்ச்சியா 15 படம் படு தோல்வி கொடுத்தவரு. அவரோட பெர்ஷனல் பாதிக்கப்பட்டதால ஸ்ரீலதாவ அவமானப் படுத்தணும்னு இப்படி பத்திரிகையாளர் ஒருத்தருக்கு கேஸட் அனுப்பி ஒரு பொண்ண இவ்ளோ கீழ்த்தரமா பழிவாங்கி இருக்காரு.
சௌம்யா: அவன்லாம் மனுஷனே இல்ல. அவனுக்கும் பொண்ணு இருக்கு.
நிருபர்: நீங்க கணேஷ் சார சொல்றீங்களா? அவர் தான் இதுக்கெல்லாம் காரணமா?
சுதீஸ் & சௌம்யா: அத நீங்க அங்கேயே கேட்டு தெரிஞ்சுக்கங்க. இந்த வீடியோவுக்கும் ஸ்ரீலதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கறத மட்டும் கொட்ட எழுத்துல போட்ருங்க.
இது சம்பந்தமாக கணேஷிடம் விசாரித்த போது 'நோ கமெண்ட்ஸ்' என்ற பதிலே கிடைத்தது.
பத்திரிகையை வாசித்து முடித்து முன்னே அமர்ந்திருந்த சௌம்யாவிடம் பணக்கட்டுகளையும் சொத்து பத்திரம் ஒன்றையும் கொடுத்தாள் ஸ்ரீலதா.
'என் மானத்த காப்பாத்திட்டே. ஒனக்கு எவ்ளோ செஞ்சாலும் தகும். இப்போதைக்கு இந்த 20 லக்ஷமும் நீலாங்கர தோப்பயும் வச்சுக்க. பின்னால சம்பாதிக்கறப்ப இன்னும் நெறய .'
'நான் பேசுனதிலெயெ இந்த வீடியோல இருக்றது நான் தான்னு சொன்னது ஒண்ணு தான் பொய். மத்த எல்லாமே நெஜம் தானம்மா.'
கண்ணீருடன் விடை கொடுத்தாள் ஸ்ரீலதா. சௌம்யா போன பிறகு சுதீஸ் உள்ளே வந்தான்.
அவள் எழுந்து சென்று அவனை கட்டி அணைத்தாள்.
'ரொம்ப தாங்க்ஸ் சுதீஸ்! நீ இதுக்கு ஓ.கே சொல்வேன்னு நான் நெனக்கவே இல்ல.'
'அதான் 20 லக்ஷமும் தாம்பரத்துல ஒரு கடயும் எழுதி வச்சிருக்கியே. என் பொண்டாட்டிக்கு அது போதும். அந்த நாயி இப்படி வீடியோ எடுப்பான்னு நமக்கு தெரியல பாரு.'
'துரோகி. சரி டைரக்டர் ரஞ்சித்து நாளைக்கு அது நாம தான்னு சொல்லிட்டா?'
'அவர் ஏன் வீடியோ எடுத்தார்னும்னும் சொல்லணும்ல. அதனால கண்டிப்பா சொல்ல மாட்டான்.'
'சரி. எனக்கு ஒனக்கு ஒண்ணு குடுக்கணும் போல இருக்கு. அந்த ரூமுக்குப் போலாம் வா.'
பக்கத்தில் இருந்த பெட் ரூமுக்குச் சென்று கதவைத் தாழிட்டு விட்டு அவனோடு பெட்டில் விழுந்தாள் ஸ்ரீலதா.
'நான் ரொம்ப நேசிச்ச விஜி கூட எனக்கு ஒதவல்ல. எப்பவோ படுக்கய பகிர்ந்துகிட்ட நீ ஹெல்ப் பண்ணி இருக்க.'
அவளின் ஆடைகளைக் கலைந்து கொண்டே சொன்னான் சுதீஸ்.
'நான் ஒண்ணும் சும்மா பண்ணலயே. நீ இவ்ளோ பணம் தந்திருக்க. கரும்பு திங்க கூலி மாதிரி இப்ப ஒன்னயும்.. ம்ம்ம் எப்படி அப்ப மாதிரியே இப்பவும் வச்சிருக்க. சினிமா கனவுக்கன்னி இப்ப என் கைல. நான் குடுத்து வச்சிருக்கேன்.'
'ச்சீ' என்று ஸ்ரீலதா சிணுங்கி அவனை அனுமதிக்க, அவன் அவள் மேல் படர்ந்த போது பக்கத்து டீப்பாயில் இருந்த போன் அடித்தது. முதன் முறை கண்டுக்காமல் விட்ட ஸ்ரீலதா இரண்டாவது முறை மணி அடித்தபோது சுதீஸின் முதுகின் மேல் இருந்த தன் வலது கையை எடுத்து நீட்டி ரிஸீவரை எடுத்தாள். மூச்சு வாங்கிக் கொண்டே 'ஹலோ' என்றாள்.
ஒரு நிமிட மவுனத்திற்குப் பிறகு மறு முனை 'ஹலோ நான் விஜி' என்றது.

(தொடரும்)
 




saroja

Well-known member
Member
இவ எல்லாம் சரி பண்ணிட்டாளே
அப்புறம் இப்ப இந்த
கண்றாவி எதுக்கு
விஜி எதுக்கு போன்
செய்றான்
 








Top