Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 13

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 13

ஸ்ரீலதா வீட்டிலேயே அடைந்து கிடந்தாள்.
செண்பகத்திற்கு பெண் குழந்தை பிறந்து அது அவளது இடுப்பில் ஏறி உட்காரும் அளவுக்கு வளர்ந்திருந்தது.
அவளுக்கு சினிமா வேலையில் ஏதாவது டென்ஷன் இருந்தால் இந்த கடைசி தங்கச்சியிடம் வந்து விளையாடி மகிழ்வாள். டென்ஷன் பறந்து போய்விடும். இப்போதும் அதைத் தான் செய்கிறாள்.
ஸ்கூலில் படிக்கும் தங்கச்சி செவ்வந்தி இந்த நியூஸ் வந்ததில் இருந்து இவளைப் பார்த்தாலே ஒதுங்கிக் கொள்கிறாள்; ராஜாவும் தான்.
எப்படி ஏமாற்றப் பட்டிருக்கிறேன்? தான் தான் அந்தப் படத்தில் இருப்பது. ஆனால் என்ன உலகம் இது? அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் நுழைந்து பார்ப்பது? இந்த அந்தரங்கம் எல்லோருக்கும் ஒன்று தானே? ஒழுக்கம், கற்பு என்பதை நிர்ணயம் செய்வது யார்? சிறுமி என்றும் பாராமல் அடுத்த வீட்டுக்காரன் என்னை அன்று தூக்கிச் சென்றது சரியா? அண்ணனே ஒருத்தனிடம் தன்னை விற்றுப் போகும் அளவுக்கு மோசமானது இந்த உலகம். ஆனால் அடுத்தவர்களை-குறிப்பாக பெண்களை இவ்வளவு வக்கிரமாகத் தேடிப் போய் ரசிக்க வேண்டும் என்றால்... யாரை குற்றம் சொல்வது?
திடீரென்று தன் மீதே கோபம் வந்தது ஸ்ரீலதாவுக்கு. நாம் மட்டும் என்னவாம்? இந்த சதையை சினிமாவில் சிறிது மறைத்து மற்ற எல்லாவற்றையும் காட்டி பணத்திற்காக ஆண்களின் ஆசையைத் தூண்டி விட வில்லையா? இப்போது முழுதும் தெரியும்போது அதே ஆண்கள் கூட்டம் மறைக்கப் பட்டதை பார்க்கத் துடிப்பது நியாயம் தானே?
அவளுக்கு மிகவும் வலித்தது விஜியின் புறக்கணிப்பு தான். எப்படி விஜியிடம் இதை சொல்ல மறந்தாள்? கணேஷ் விஷயத்தை மட்டும் சொல்லி இதை ஏன் மறைத்தாள்? மறைக்க வேண்டும் என்று மறைக்க வில்லை. அவள் அதை ஒரு பொருட்டாக நினைக்க வில்லை. இன்று இத்தனை பெரிய வில்லங்கமாக மாறி விட்டது. இதன் சூத்திரதாரி யார் என்று தெரியும் அவளுக்கு. அவளை மட்டும் கெடுத்த கணேஷ் இப்போது அவளது சினிமா வாழ்க்கையையும் கெடுக்க வந்து விட்டான்.
ஒரே ஆறுதல் அம்மாவும், ராக்காயி அக்காவும் தான்.
'விடும்மா. இந்த உலகமே அப்படித்தான். ஒரு ரெண்டு நாள் இந்த விஷயத்தைப் பேசும். அப்புறம் வேற ஒரு நியூஸ் வந்ததும் இத மறந்துரும்.'
சுதீஸ் பெரிய நடிகராக வளராததால் அவளும் அவனை மறந்தே போனாள். அந்தப் படத்திற்கு பின்னர் அவனைப் பார்த்தது கூட இல்லை. கன்னட சினிமா பக்கம் ஒதுங்கிப் போனதாகக் கேள்வி. அவனுக்கும் இந்த நேரம் இந்த நியூஸ் தெரிந்திருக்கும். விஜிக்காக அழுது அழுது முகம் சிவந்து போய் விட்டது ஸ்ரீலதாவிற்கு. சினிமா பத்திரிகைகள் கூட மோப்பம் பிடித்து விட்டு கிசுகிசுவாக்கி விட்டது. திருவில் தொடங்கும் மூன்றெழுத்து நடிகைக்கும் அவரது காதல் டைரக்டருக்கும் இடையில் விரிசல். காதல் கல்யாணம் வரை போகுமா?
காதல்.. அவளுக்கு சிரிப்பு வந்தது. அது இவ்ளொ தானா? உண்மையாக அவன் அவளைக் காதலித்திருந்தால் இந்த நேரம் அவன் அவளுடன் இருந்து ஆறுதல் படுத்தி இருக்க வேண்டும். அவனுடன் பழகியதில் இருந்து அவனுக்கு உண்மையாகத் தான் இருந்திருக்கிறேன். அவன் ஒரு கவசமாகவும் எனக்கிருந்தான். அவனுடன் இருந்த காதல் விவகாரம் எல்லா நடிகர்களையும் என்னிடம் இருந்து ஒரு எட்டு தள்ளியே வைத்திருந்தது. வேண்டும் என்றே முத்தக் காட்சி வைத்தும், டூயட்டில், முதலிரவுக் காட்சியில் என்று சற்று வரம்பு மீறியும் தங்கள் ஆசைகளைத் தணித்துக் கொண்டிருந்தனர்.
தன் காதலியை ஒருவன் இந்த கோலத்தில் அடுத்தவனுடன் பார்த்தால் கோபம் வரும் தான். ஆனால்... தான் அவனைப் பார்ப்பதற்கு முன் நடந்த சம்பவம். தன் முதல் படத்தில் நடித்த சுதீஸ் அதற்குப் பிறகு தன்னுடன் நடிக்க வில்லை ஏன் தன்னை சந்திக்கக்கூட இல்லை என்று விஜிக்குத் தெரியாதா?
போன் பண்ணினால் எடுப்பதில்லை. வீட்டிற்கு ஆள் அனுப்பினால் 'இல்லை' என்ற பதில். ஷூட்டிங் ஸ்பாட்டிற்குப் போனால் இப்போது தான் கெளம்பினார் என்ற பதில். வெறுத்துப் போனது ஸ்ரீலதாவிற்கு. தான் உண்மையாகத் தான் அவனைக் காதலித்தோம். அவனுக்கு உடல் நலம் சரி இல்லை என்றால் உருகி ஆஸ்பத்திரியில் உடன் இருந்து கவனித்து, ப்ரொடியூசர்களிடம் அவனது டைரக்ஷனுக்கு ரெக்கமண்ட் பண்ணி, தேவைப்படும்போது பண உதவி பண்ணி, சமயத்தில் தன்னையே கொடுத்து...அவளுக்கு மனது மிகவும் வலித்தது.
அம்மா மனதிற்குள் தன் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மனதிற்குள் அழுது, அவளிடம் சிரித்த மாதிரி இருந்து அவள் எதுவும் செய்து விடக் கூடாதே என்று அவளுக்குத் துணையாக ராக்காயியை கூடவே படுக்கச் செய்தாள்.
ராக்காயி அக்காவும், 'விடும்மா. ஏதாவது ஃபாரின் ஊருக்கு ஒரு மாசம் போ. அப்புறம் இந்த ஜனங்க மறந்துரும். ஒனக்கும் மனசுக்கு இதமா இருக்கும்.'
அவள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள்.
'அந்த காஸட் ப்ராப்ளம் பத்தி ஒரு ஒரு மணி நேரம் தான் ஃபீல் பண்ணேன்கா. விஜி இப்டி பேசாம இருக்காரே அதத்தான் தாங்க முடியல.' என்று மறுபடியும் உடைந்தாள்.
அப்போது ருக்மணியம்மாள் உள்ளே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை அணைத்து கதறினாள் ஸ்ரீலதா.
அவளைத் தாங்கி மெதுவாக சோபாவிற்கு அழைத்து வந்த ருக்மணியம்மாள் அவளை உட்கார வைத்து கண்களைத் தனது சேலைத் தலைப்பால் துடைத்தாள்.
'அழாதே லதா. நடந்ததெல்லாம் பாத்தேன். இதான்மா உலகம். லீவ் இட். நடக்க வேண்டியத யோசிக்கலாம்.'
ஸ்ரீலதா கதறினாள். 'விஜி இன்னும் ஒரு வார்த்த கூட பேசலம்மா'
'அதப் பத்தியும் தாம்மா நான் பேச வந்திருக்கேன்.'
'என்னம்மா சொல்றீங்க. விஜியப் பாத்து பேசினீங்களா? என்ன சொன்னார்? ஏன் என் கிட்ட பேச மாட்டேங்கறார்? என்னப் பாக்க மாட்டேங்கறார்? சுதீஸ் பத்தி சொல்லாதது என் தப்பு தாம்மா. ஆனா அது ஒரு ரூம்ல நடந்தது. இப்படி ரெக்கார்ட் பண்ணுவான் அந்த ராஸ்கல்னு நெனக்கலம்மா. எனக்கும் சினிமா புதுசு. கல்யாணம் காச்சி பத்தி நான் நெனக்க கூட இல்ல. அதனால என் விதின்னு சுதீஸ் கூட இருந்தேன். அந்த வீடியோல என் மூஞ்சியப் பாத்திங்கன்னாலே தெரியும். ஆனா அது இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும்னு எனக்குத் தெரியாதும்மா. நேத்து கத சொல்ல வந்த டைரக்டர் படத்துல ஒரு பெட் ரூம் சீன் வச்சிரலாம். தியேட்டர்லாம் ஹவுஸ்புல் தான்கிறான். இன்னொரு டைரக்டர் நாம இப்ப எடுத்துக்கிட்டு இருக்றது பெண்கள் விரும்புற குடும்பக் கத. இப்ப உங்க இமேஜ் டேமேஜ் ஆனதால உங்களுக்குப் பதிலா கமலாஸ்ரீயப் போட்டு இருக்கோம். மன்னிச்சுக்கோங்கன்னு போன் பண்றான். என் சினிமா குரு நீங்க. நீங்க தான் இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ணனும். சினிமா போனால் கூட பரவால்ல. தேவையான அளவு சம்பாதிச்சிட்டேன். என் தம்பி தங்கச்சிங்க லைப் செட்டில் பண்ற அளவுக்கு. ஆனா விஜி இப்படி பாராமுகமா இருக்றது தான் என்னால தாங்கிக்க முடியல.'
ருக்மணியம்மாள் மெதுவாகப் பேசினார்.
'நான் தான் அவன ஒன்கிட்ட அறிமுகப்படுத்தினேன். இப்ப நானே அவன ஒன்கிட்ட இருந்து பிரிக்கறதுக்கும் தூது வந்திருக்கேன். எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. நீ நல்ல பொண்ணும்மா. ஒரு படம் ஹிட் ஆனாலே சீனியர் ஆர்ட்டிஸ்ட் முன்னால கால் மேல கால் போட்டு பந்தா பண்ற நடிகைங்க மத்தியில நீ அன்பும், மரியாதயும் குடுக்ற பொண்ணு. ஒனக்கு ஹெல்ப் பண்ண எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்கும் நூறு மடங்கு திருப்பிச் செய்யற பொண்ணு. விஜிகிட்ட நீ காட்டின காதலும், பாசமும் அக்மார்க் பாசம். உண்மை. ஆனா காலம் நம்மள எப்படியும் புரட்டிப் போட்டுரும்மா. விஜி ஒம்மேல பாசமா தான் இருக்கான். ஆனா அவன் ஃபாமிலிய மீறி அவனால வர முடியலம்ம்மா
அவனும் ஒன்ன சின்சியராத் தாம்மா லவ் பண்ணான். இந்த விவகாரம் தெரிஞ்ச ஒடனே அவங்க ஃபாமிலி வேண்டாம்ட்டாங்களாம்.'
ஸ்ரீலதாவுக்கு கோபம் வந்தது.
'ஏன் நான் எத்தன படங்கள்ல கவர்ச்சியாவும், ஒண்ணு ரெண்டு படத்துல கதைக்காக கொஞ்சம் வரம்பு மீறியும் நடிச்சிருக்கிறென். அப்பல்லாம் அந்த குடும்பத்துக்கு தெரியலயாம்மா?'
'ஒன் கேள்வி நியாயமானது தான். ஆனா அதெல்லாம் சினிமான்னு சொல்லிரலாம். ஆனா இது... அப்படிங்கறாங்க. ஒனக்குத் தெரியுமான்னு கேட்டதுக்கு இவன் இல்லன்னு சொல்ல பாத்தியா மறச்சிருக்கா. அதான் ஒரு ஏழப் பொண்ணு எப்படி இவ்ளோ முன்னுக்கு வர முடிஞ்சிருக்கும்னு பாத்தேன். இன்னும் எத்தன கேஸட் எங்க எங்க இருக்கோன்னு தெரியுமா ஒனக்குன்னு கேட்க இவன் பேசாம ஆயிட்டான். ஒன்ன மறக்க முடியாம என்கிட்ட போன் பண்ணி புலம்பினான். நீ வேண்டாம்னு அவன் ஃபாமிலி சொல்லிரிச்சாம்.'
ஸ்ரீலதாவுக்கு கோபம் வந்தது.
'ஏன் என் கிட்ட பழகறதுக்கு அந்த ஃபாமிலிட்ட பெர்மிஷன் வாங்கி இருக்காரா. அவர் கூட என் கூட படுத்தார். அதுக்கும் அந்த குடும்பம் அனுமதி குடுத்துச்சா? அப்பல்லாம் இல்லாத ஃபாமிலி இப்ப என்ன? இந்த கேஸட் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் வந்திருந்தா என்ன பண்ணிருப்பாரு?'
'லதா! ஒன் பார்வ எனக்குப் புரியுது. நான் அவன் கூட ரொம்ப நாள் பழகி இருந்தும் அவன் நியாயத்துக்காக வீட்ட எதுத்துக்க முடியாத கோழண்றத தெரியாம போயிட்டேன்மா. ஏதோ நீங்க பழக நான் காரணமா போயிட்டேன். அதான் நீ மனசு ஒடஞ்சுறக் கூடாதுங்கறதுக்காகத்தான் நான் இப்ப வந்திருக்கேன். என்னையும் ஒரு நடிகர் காதலிச்சி கடைசியில இப்படி ஏதோ காரணம் சொல்லி விட்டுட்டுப் போயிட்டாரும்மா. நான் ஃபீல்டுல இல்ல. அதனால நீ இவன மறந்துட்டு சினிமால கான்சன்ரேட் பண்ணு. வேற ஒரு நல்ல பையனா பாத்து ரெண்டு வருசத்துல கல்யாணம் பண்ணிக்கோ.'
'என்னம்மா ஒரு பொண்ணா இருந்துட்டு நீங்களே இப்படி சொல்றீங்க? ஒரு பொண்ணு அவ்ளோ சீக்கிரமா ஒருத்தன மனசுல இருந்து தூக்கிட முடியுமா? ஏன் சுதீஸ் என்ன தொட்டப்போ விஜி என்ன அணச்சப்போ என்ன மொத மொதலா தொட்ட கணேஷ் நியாபகம் வரத்தான் செஞ்சுது. அப்புறம் தான் இவங்க மொகம் நியாபகம் வந்துது.'
'இல்லம்மா. நீ விஜிய மறந்து தான் ஆகணும். அவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம்.'
ஸ்ரீலதாவிற்கு தலையை சுற்றியது.

(தொடரும்)
 
Top