Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 11

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 11

கணேஷுடன் தங்கச்சியாக ஸ்ரீலதா நடித்த படம் எல்லா செண்டர்களிலும் வசூலைக் குவித்தது. இவளைக் காணவே கூட்டம் கூடியது. எல்லா பத்திரிகைகளிலும் விமர்சனங்கள் இவளைப் பாராட்டின. கடைகளில் தொங்கும் பத்திரிகைகளில் மேலட்டைகளில் இவள் கவர்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
பெரிய பங்களாவிற்கு வாடகைக்கு சென்றாள். ருக்மணி அம்மாள் அவளது ஃபாமிலி ஃபிரெண்டானாள். ராக்காயி ஃபாமிலியும் இவளுடனே தங்கி விட்டது. தினம் தினம் வீடு பத்திரிகையாளர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களால் நிரம்பி வழிந்தது. முன்னேறி வரும் இளம் ஹீரோக்களில் இருந்து முன்னணி ஹீரோக்கள் வரை இவளுடன் ஜோடி சேர விருப்பப் பட்டனர்.
காதல் மாளிகை ஷூட்டிங்கில் நிறைய கதை கேட்டாள். செலக்ட் பண்ண கம்பெனிகள் பற்றி ருக்மணியம்மாளிடம் யோசனை கேட்டாள். ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆயிருந்தும் ஒரு டஜன் படங்கள் கையில் வந்தன. ராப் பகலாய் உழைத்தாள்.
விஸ்வா யாரென்று பின்னர் நியாபகம் வந்தது. கணேஷின் மனைவியோடு தொடர்பில் உள்ளவன். மனதில் வெறுப்பு வந்தாலும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு காதல் காட்சிகளில் அவனை கட்டிப் பிடித்து நடித்தாள்.
அவன் கை அங்கு இங்கு தெரியாமல் என்று தெரிந்தே படவே அதைப் புரிந்தும் அவனை நெருங்காமல் இருந்தாள். அதற்கு டைரக்டர் விஜி மிகவும் உதவியாய் இருந்தான். இவளுக்கு வேண்டியதெல்லாம் ஏற்பாடு செய்தான். செட்டில் அவள் கூடவே இருந்தான். உதவி டைரக்டர்கள் சீன் எடுக்கும்போதும் அவளை விட்டு விலகாமல் இருந்தான்.
ரெண்டெழுத்து டைரக்டருக்கும் முதல் படத்திலேயே முன்னழகைக் காட்டி மார்க்கெட்டைப் பிடித்த தங்கச்சி நடிகைக்கும் 143யாம். என்று கிசுகிசு பரவியது. ஸ்ரீலதா அதைப் படித்து சிரித்துக் கொண்டாள். நான் சொல்வதற்குள் அவனிடம் பத்திரிகை சொல்லி விட்டதே.
இருவரும் மணிக்கணக்கில் பேசினார்கள். அவளுக்கு ஒன்று என்றால் அவன் துடித்துப் போனான். ஒரு நாள் ஷெட்டில், ஒரு பாட்டிற்கான ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஸ்ரீலதா பரத நாட்டிய உடையில் டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் குடுத்ததை அப்படியே காப்பி எடுத்தாள். ரிகர்சல் செய்யும்போது பின்னால் நின்று இருந்த துணை நடிகர்களில் ஒருத்தி 'ஒரு அடவு ஒழுங்கா பிடிக்கத் தெரியல. இவள்லாம் நடிக்க வந்துட்டா. மத்த அடவ நல்லா பிடிப்பா போல.' என்று கமெண்ட் செய்ய அது அவள் காதில் விழுந்தது. யார் சொன்னாள் என்பதும் தெரிந்து விட்டது. 'அக்கா' 'அக்கா' என்று மற்ற நேரங்களில் குழைபவள் அவள் காதில் விழாது என்று சொல்லி விட்டாள்.ல
பொங்கி வந்த கண்ணீரை விழுங்கி விட்டு சட் என்று தன் ரூமுக்குள் வந்தாள். டைரக்டர் சீட்டில் இருந்த விஜி எழுந்து அவளைப் பின் தொடர்ந்தான்.
ரூமில் அவனைப் பார்த்ததும் முதன் முறையாக அவனைக் கட்டிக் கொண்டு நெஞ்சில் முகம் புதைத்து கதறினாள். அவன் திடுக்கிட்டு பின்பு அணைத்துக் கொண்டு 'என்னாச்சு லதா?' என்றான்.
விக்கலோடெ 'எனக்கு.. எனக்கு.. டான்ஸ் தெரிய மாட்டெங்குதாம்.. ஒரு அடவு கூட... கூட... பிடிக்க வர மாட்டெங்குதாம்.. வேற..வேற..' என்று நிறுத்தினாள்.
விஜி அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தான்.
'இங்க பாரு விஜி. ஆர்ட்டிஸ்ட்டுகளே இப்படித்தான். சீக்கிரம் உணர்ச்சிவசப் பட்டுடுறீங்க. பொறாமைல வர்ற வார்த்தைகளை சீரியஸா எடுத்துக்க கூடாது. இன்னைலருந்து நீ பரத நாட்டிய க்ளாஸுக்கு போற. வீட்லயெ வந்து சொல்லிக் குடுக்க நான் ரெடி பண்றேன். இதிக்கெல்லாம் அழலாமா. பாரு மேக்கப் கலைஞ்சுரப் போவுது. மொதல்ல ஒனக்கெல்லாம் எதுக்கு மேக்கப்?' என்று சைலண்டானவன் தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அவள் கீழுதட்டைக் கவ்வினான்.
'க்ளிக்' ஒரு ப்ளாஷ் வெளிச்சம் அடித்தைக் கூட உணராமல் முத்தத்தின் சுவையில் ஆழ்ந்திருந்தனர் இருவரும்.
அடுத்த நாள் அந்த சினிமா பத்திரிகை அநேகப் பிரதிகள் விற்றது. காரணம் அட்டைப் படமாக விஜியும் ஸ்ரீலதாவும் கொடுத்துக் கொண்ட க்ளோஸ் அப் முத்தம். நடிகை ஸ்ரீலதாவின் காதல் உறுதியானது. விரைவிலேயே கல்யாணம் செய்து கொள்வார்கள் போல என்று உதவி டைரக்டர் நம் காதைக் கடித்தார். ஸ்ரீலதாவை நம்பி பணத்தைப் போட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீலதாவின் வீட்டிற்கு அன்று நிறைய போன் கால்கள்! பத்திரிகைகாரர்கள் எடுத்ததும் விஜியைப் பற்றித்தான் கேட்டார்கள். ருக்மணியம்மாள் அவளைத் தேடி வந்தாள் விஜியுடன். மூவரும் ஒரு அறையில் அமர்ந்தனர்.
'விஜி நல்ல பையன் தான் லதா. நீங்க கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோஷம் தான். ஆனா நீயும் இப்ப தான் ரெண்டு படம் முடிச்சிருக்கிற. அவனும் வளர்ந்து வர்ற டைரக்டர். நீ பெரிய ரவுண்டு வர்ற வேண்டியவ. அவனுக்கு பிரச்சின இல்ல. ஆனா ஒனக்கு தம்பி தங்கச்சிகள கரை ஏத்த வேண்டிய பொறுப்பு இருக்கு.'
இடை புகுந்தான் விஜி.வா
'அம்மா. இவ தம்பி தங்கச்சிங்க என் தம்பி தங்கச்சிங்க மாதிரி. நான் எல்லாரயும் பாத்துக்க மாட்டேனாம்மா.' என ஸ்ரீலதா கண் கலங்கினாள்.
'கொஞ்சம் பிராக்டிகலா தின்க் பண்ணுப்பா. ஒரு ரெண்டு மூணு வருஷம் நீங்க காதல யாருக்கும் தெரியாம தொடருங்க. இவளுக்கு எப்போ மார்க்கெட் கொறயற மாதிரி இருக்கோ அப்பவே பீக்ல இருக்றப்பவெ நீங்க மேரேஜ் பண்ணிக்குங்க. இவ சம்பாதிச்சு அவ தம்பி தங்கச்சி பேர்ல சேத்து வச்சிட்டான்னு வை. நாளைக்கு அவ கடமயும் தீந்திரும். ஒனக்கும் தொந்தரவு இருக்காது. நான் ரெண்டு சைடையும் பாக்கணும் விஜி.'
அவன் மௌனமாய் இருந்தான். ஸ்ரீலதா பொங்கினாள்.
'பணம் என்னம்மா பணம்? இந்த ரெண்டு படத்துலயும் பத்து விளம்பரப் படத்துலயும் நடிச்ச பணத்துலேயே நான் என் குடும்பத்த கரை ஏத்திருவேன். குடிசைல இருந்தவங்க இந்த மாளிகைக்கு வந்திருக்கோம். சொந்தமா ஒரு வீடு மட்டும் இருந்தா போதும். இவருக்கு நல்ல மனைவியா இருந்துட்டு இவர் வருமானத்த வச்சுகிட்டே என் வாழ்க்கயையும் என் குடும்பத்தயும் என்னால பாக்க முடியும்.'
ருக்மணியம்மாள் சிரித்தாள்.
'காதல் மனுஷனை எப்படி எல்லாம் மாத்திருது? நீ ஆரம்பத்துல என்கிட்ட பேசுன பேச்சு எனக்கு நல்லா நியாபகம் இருக்கு லதா. அரவான் தன்னை பலி குடுத்த மாதிரி கணேஷ் கிட்ட ஒன்ன எழந்தும் அதுல இருந்து மீண்டு தன் குடும்பத்துக்காக வாழறேன்னு சொன்ன லதாவா நீ? பாருப்பா!' என்று விஜியிடம் திரும்பினாள்.
'இந்தப் பொண்ணு ஒன்ன அந்த அளவுக்கு லவ் பண்ணுது.'
விஜி வெட்கப் பட்டான்.
'எனக்காக ஒண்ணு செய்றீங்களா ரெண்டு பேரும்?'
இருவரும் என்ன என்பது போல் பார்த்தனர்.
'லதா ஒன் கைல வச்சிருக்ற படம் அத்தனயும் முடி. இந்த வருஷம் போயிரும். புதுசா எதுவும் கமிட் ஆகிக்காத. அந்தப் பணத்த முழுசும் ஒங்க ஊர்ல மெயினா எடம் வாங்கிப் போடு. நான் ஒரு லேண்ட் ப்ரோக்கர அனுப்பறேன். எல்லா படமும் முடியற வரைக்கும் பத்திரிகைக்கு தீனி போடாம ஒங்க காதல வளத்துக்குங்க.'
சரி என்று இருவரும் தலை ஆட்டினார்கள்.
'சரி நான் கெளம்புறேன்.' என்று ருக்மணியம்மாள் விடை பெற்றுக் கொள்ள, இருவரும் இறுகக் கட்டிக் கொண்டனர்.
'மாப்பிள்ளைக்கு ஜூஸ் கொண்டு வரவா லதா?' என்று செண்பகத்தின் குரல் வாசலில் இருந்து கேட்க இருவரும் சட் என்று விலகினர்.
'கொண்டு வாம்மா' என்று சொல்லி விட்டு காதலுடன் விஜியைப் பார்த்தாள் லதா.
அவர்களது முத்தக் காட்சியே காதல் மாளிகைக்கு விளம்பரமாகிப் போனது. பட்டி தொட்டி எங்கும் படம் பட்டையை கிளப்ப விருதுகள் அவளது வரவேற்பறையை நிறைத்தன. பெரிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், ஹீரோக்கள் அவளை நெருங்க முடியாமல் விஜி பார்த்துக் கொண்டான். ஹீரோக்கள் சினிமா காட்சியில் அவளைக் கட்டிப் பிடித்து அங்கங்கு தொட்டு தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொண்டனர். ஸ்ரீலதாவிற்குத் தெரிந்தாலும் என்ன செய்வது என்று சகித்துக் கொண்டாள். ஸ்ரீலதா படங்களே எங்கும் வழிய தெலுங்கில் இருந்து ஆஃபர் வந்தது. அவள் 'நோ'சொல்லி விட்டாள்.
அவள் முதல் இரண்டாம் வரிசைக் கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்து விட்டாள். கணேஷ் தவிர. பேட்டி எடுக்கும் அனைவரும் 'எப்போது கணேசுடன் நடிப்பீர்கள்?' எனக் கேட்க இவளும் வழக்கம் போல 'கால்ஷீட் டைட்டா இருக்கு. அவருடன் நடிப்பதே என் லட்சியம்' என்று சொன்னாள். கணேஷின் படங்கள் நான்கு வரிசையாய் ஊத்திக் கொள்ள அதில் ஒன்று மிக மோசமான தோல்வியைத் தழுவ, இத்தனை நாள் கோலோச்சிய அவனது ராஜாங்கம் ஆட்டம் காணத் துவங்கியது. கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கணேஷ், ஸ்ரீலதாவைத் தேடி வந்தான். வீட்டிற்கு வந்தால் சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதாகவும், சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் வெளிநாடு ஷூட்டிங் போய் இருப்பதாகவும் சொல்லி டபாய்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீலதா.
ஒரு அவார்ட் பங்க்ஷனில் கணேஷுக்கு அழைப்பு இல்லாமலும் இவளைப் பார்ப்பதற்காகவே வந்தான் கணேஷ். சினிமாவில் மானம் அவமானம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியுமா?
முன் வரிசையில் அவளும் பக்கத்தில் விஜியும் இருக்க ரெண்டு வரிசை தள்ளி கணேஷ் இருந்தான். ஸ்ரீலதா அழகான கவர்ச்சியான ட்ரெஸில் கண்ணைப் பறித்தாள். அவள் மேடைக்கு அவார்ட் வாங்கப் போகவும் வாலிபர் கூட்டம் 'லட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஉ' என்று கத்தி ஊளை இட்டது. அவார்ட் வாங்கி விட்டு மைக்கில் கொஞ்சினாள் லதா. விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது.
கணேஷ் வியந்தான். ஒண்ணுமே தெரியாத பெண்ணாக அன்று வந்தவள் இப்படி நாகரிகமாக ட்ரெஸ் அணிகிறாளே இப்படி கூட்டத்தை கவருமாறு பேசுகிறாளெ என்று ஆச்சரியப்பட்டான். ஆனால் இவளிடம் வந்து கெஞ்சுமாறு தனது நிலைமை அமைந்து விட்டதே என்றும் எரிச்சலடைந்தான்.
அவார்ட் ஃபங்க்ஷன் முடிந்ததும் டின்னர் டைமில் அவள் அருகில் சென்றான் கணேஷ். அவள் கண்டும் காணாதது போல திரும்பிக் கொண்டு விஜியோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். பத்திரிகையாளர்கள் அனைத்து நட்சத்திரங்களையும் தங்கள் கேமிராவில் அடைத்துக் கொண்டிருந்தனர்.
பத்திரிகையாளர்களைக் கண் காட்டினான் விஜி. புரிந்து கொண்ட ஸ்ரீலதா அப்போது தான் பார்ப்பது போல் கணேஷைப் பார்த்து போலியாக ஒரு 'வாவ்' சொல்லி டக் என்று அவன் காலில் விழுந்தாள். பத்திரிகையாளர்கள் அதையும் 'ஷுட்' செய்தனர்.
எழுந்து'எப்படி இருக்கீங்க சார்? எல்லார் கூடயும் நடிச்சிட்டேன். உங்க கூட மட்டும் ஜோடியா நடிக்க முடியல. தங்கச்சியா நடிச்சதயே ஜென்ம சாபல்யமா நெனச்சிட்டிருக்கேன்.' பக்கத்தில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் ஷார்ட் ஹாண்டில் அவள் சொல்வதை நோட் செய்ய கணேஷ் அவனிடம் சொன்னான்.
'ப்ளீஸ். கொஞ்சம் பெர்சனாலாப் பேசணும்.'
அவன் நகர பக்கத்தில் யாரும் இல்லாததை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு விஜியிடம் 'கொஞ்சம் பெர்சனலாப் பேசணும்' என்றான்.
விஜி நகர முயலவே 'அவர் தான் என் பெர்சனல். அவர் இங்க தான் இருப்பாரு' என்றாள் லதா. அவன் நிற்கவே கணேஷ் ஒரு நிமிடம் சுதாரித்துக் கொண்டு 'வேற ஒன்னும் இல்ல லதா. நீ என் கூட அடுத்த படத்துல ஹீரோயினா நடிக்கனும்'
முகத்தை சிரித்த மாதிரியே வைத்துக் கொண்ட லதா 'அது இந்த ஜென்மத்துல நடக்காது.' என்று குரலில் கடுமையைக் காட்டினாள்.

(தொடரும்)
 
Nice epi.
The ball is in your court.nee midikki ya.
Oru innocent life athukum pol ithu nadakkum nu yosikkathu viteengale hero.
 
நல்லா இருக்கு பதிவு
இவ வாழ்க்கைல விளையாடினவன
நல்லா பழி வாங்கும் நேரம்
 
Top