Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 10

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 10
'ரெடி, ஸ்டார்ட். ஆக்ஷன்' டைரக்டர் கத்தவே, சுதீஸ் ஸ்ரீலதாவைத் துரத்த துவங்கினான். ஸ்ரீலதா மார்புகள் அதிர ஓடினாள். ஒரு புதிதாய் கட்டிக் கொண்டிருந்த நான்கு மாடி கட்டிடம் தென்பட்டது. பர பர வென்று அதன் பூசப்படாத செங்கல் படிகள் மீது ஏறினாள் இல்லை ஓடினாள். கட்டிடத்தில் யாரும் இல்லாததால் தம் தம் என்று அதிர்ந்தது. நான்காவது மாடி மொட்டை மாடி. அவள் ஏறவும் சுதீஸும் பின்னாலேயே ஏறினான். ஸ்ரீலதா தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்தாள்.
'வேண்டாம். என்ன ஒண்ணும் பண்ணிராத.' என்று கைகளை கூப்பினாள்.
சுதீஸ் விகாரமான சிரிப்போடு அவளை நெருங்கினான். அவளது பாவாடையில் பூட்ஸ் காலால் மிதிக்க, அவளால் ஓட முடிய வில்லை. பாவாடையை இழுக்க முயற்சிப்பதற்குள் அவன் பூட்ஸை பின்னால் இழுத்து அவளது தாவணியை கையால் பிடித்து இழுத்து வீசினான். அவள் ஒரு சுற்று சுற்றி பொத் என்று கீழே விழவே கைகளால் மூடப்படாத அவள் இளமை கொப்பளிக்க, கேமரா சூடானது.
'கட்' என்று டைரக்டர் சொல்ல சீன் ஓகே ஆனது.
கணேஷ் அவள் நடிப்பதை வேடிக்கை பார்க்க வந்திருந்தான். அவனை நெருங்கிய டைரக்டர் ரஞ்சித்து 'ம்ம்ம். பட்டய கெளப்புறா. இண்டஸ்ட்ரில ஒரு ரவுண்ட் வருவான்னு நெனக்கறேன்.' என்று சொல்ல, கணேஷும் தலை ஆட்டினான்.
ராக்காயி ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க, சால்வையைப் போர்த்திக் கொண்டு அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் ஸ்ரீலதா.
ராக்காயி அவளைப் பார்த்து கிசுகிசுத்தாள்.
'என்னடி இதெல்லாம் காட்ட வேண்டி இருக்கு? சும்மா ஒரு மான புலி வேட்டயாட்ற மாதிரி இல்ல வண்டு பூவில தேன் குடிக்றது மாதிரின்னு காட்டக் கூடாதா?'
'ஐயோ அக்கா அதெல்லாம் பழய படத்துல வரது. இப்ப சதைக்கு தான் காசு.'
என்று முணுமுணுத்தாள்.
அப்போது அவளது அம்மாவாக நடிக்கும் குணச்சித்திர நடிகை ருக்மணியம்மா பக்கத்தில் வருவதைப் பார்த்ததும் எழுந்து கொண்டாள் ஸ்ரீலதா.
அவள் காலில் விழுந்து அசீர்வாதம் வாங்கினாள்.
'நல்லாரும்மா. எழுந்திரு.' என்று அவளைத் தூக்கி நிறுத்தினாள்.
உதவியாளர் ஒருவர் சேர் ஒன்றைக் கொண்டு வந்து பக்கத்தில் போட்டார்.
அதில் உட்கார்ந்து கொண்ட ருக்மணியம்மா, 'நீயும் இரும்மா.' என்றாள்.
தனது சேரில் உட்கார்ந்த ஸ்ரீலதா ருக்மணியம்மாவைப் பார்த்தாள்.
'நீ நல்லா நடிக்கிறம்மா. ஒனக்கு இயல்பாவே நடிக்க வருது. என் அனுபவத்துல சொல்றேன். நீ தமிழ்நாட்டை கலக்கப் போற.'
அனுபவசாலியான அந்த அம்மாளின் பாராட்டைக் கேட்டதும் ஸ்ரீலதாவுக்கு உச்சி குளிர்ந்தது. மோதிரக் கையால் குட்டு.
'டைரக்டர் விஜி எனக்கு ரொம்ப தெரிஞ்சவன். இப்ப புதுசா ஒரு படம் எடுக்றான். புதுமுகம் ஒண்ணு வேணும்மான்னா. நீ அதுக்கு நல்லா செட் ஆவேன்னு தோணிச்சு. உடனே என் பி.ஏட்ட சொல்லி அவன்கிட்ட ஒன்னப் பத்தி சொன்னேன். இப்பவே பாக்க வரேன்னான். ஒன் சம்மதம் இல்லாம சொல்லிட்டேம்மா...' என்று வருத்தத்துடன் ருக்மணியம்மாள் சொல்ல, ஸ்ரீலதா மறுத்தாள்.
கண்ணீரோடு சொன்னாள்.
'ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்கம்மா. நீங்க எனக்கு நல்லது தான் பண்ணி இருக்கீங்க. ரொம்ப நன்றிம்மா.'
'நன்றிலாம் எதுக்கும்மா. இப்படி ஒருத்தர் என்ன தூக்கி விட்டதால தான் கதாநாயகிலேருந்து இப்ப இத்தன வயசாயும் குணச்சித்திர நடிகையா நடிச்சிட்டுருக்கேன்.'
உதவியாளர் வந்து அடுத்த காட்சிக்கு டைம் ஆகி விட்டது என்று சொல்ல அவள் எழுந்து கண்களால் அந்த அம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு நடிக்கப் போனாள். உதவி டைரக்டர் சொன்ன டயலாக்கை இரு தரம் கேட்டு உள்வாங்கிக் கொண்டாள்.
'என்ன அவ்ளோ சீக்கிரம் அடஞ்சிரலாம்னு நெனச்சியா நாயே! நான் போலீஸ் வீரராகவனோன்குடா. ஒன்னயும் ஒன்ன அனுப்புன ஒன் அண்ணனயும் என்கவுண்டர்ல போட்டு மக்கள காப்பாத்தப் போறாருடா எங்கண்ணன். அதுக்கு எங்க அம்மா உயிர் தியாகம் பண்ண மாதிரி நானும் பண்ணுவேண்டா. இந்த போர்ல எங்க உசிரு தான் கடைசி உசிரா இருக்கும். இனி சாகற வரைக்கும் ஒனக்கு பயம் தாண்டா.' என்று கைகளால் மார்புகளை மறைத்துக் கொண்டே மொட்டை மாடியில் இருந்து 'அண்ணா' என்று அலறிக் கொண்டு கீழே விரிக்கப் பட்டிருந்த வலையில் விழுந்தாள். சுற்றி இருந்த கூட்டம் பலத்த கை தட்டல் தட்டியது.
'யாருடா இவ. பயப்படாம கீழ குதிச்சிட்டா.'
'செம பிகருடா.'
'நடிக்கவும் செய்யறாடா'
'அவ கண்ணயும் மூக்கயும் பாத்தியா! செமடா மச்சி'
கூட்டம் பேசியபடியே கலைந்து போக மேக்கப் போடப் போன ஸ்ரீலதாவை ஒரு வாலிபனோடு வந்து பார்த்தாள் ருக்மணியம்மா.
'லதா. நான் சொல்லல்ல. டைரக்டர் விஜி.'
ஆறடி உயரம். அறுங்கோண முகம். ரெடிமேட் சிரிப்பு. தொங்கு மீசை. கண்களில் துடிப்பு. ஸ்ரீலதாவுக்கு என்னவோ பண்ணியது.
'விஜி, இது லதா.'
அவன் சட் என்று இயல்பானான்.
'மேடம். ஒங்க டயலாக் டெலிவரியும் எக்ஸ்பிரஷனும் பார்த்தேன். என் படத்துக்கு ஹீரோயின் கிடச்சிட்டாங்கன்னு அப்பவே நெனச்சிட்டேன். இந்தாங்க அட்வான்ஸ். என் அடுத்த படம் 'காதல் மாளிகை'ல நீங்க தான் மெயின் கேரக்டர்.'
ஸ்ரீலதாவின் கையில் கத்தையாய் பணம். அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ராக்காயி பக்கத்தில் வரவே அவளிடம் அந்த பணக்கட்டைத் தந்தாள்.
அவளது கண்கள் விரிந்தன.
'பாப்பா! அம்பதாயிரம் இருக்கு போல.' என்றாள்.
'ஆமாம். மீதி பணம் படம் முடிஞ்ச பிறகு. இந்த பேப்பர்ல ஒண்ணு சைன் பண்ணுங்க.',
அவள் ருக்மணியம்மாளைப் பார்க்க, அவர் சொன்னார்.
'சும்மா போடும்மா. அதிர்ஷ்டம் ஒன்ன தேடி வருது. வேண்டாம்னு சொல்லாதே.'
ஸ்ரீலதா கைஎழுத்தைப் போட, 'அடுத்த வாரம் சூட்டிங் மேடம். சென்னைக்கு வந்துருங்க. அங்க பிரபலமான ஸ்டூடியோல பூஜை போட்டுட்டு அன்னைக்கே மொதல் சீன் எடுக்கலாம்னு இருக்கேன்.'
என்றான் விஜி.
ஸ்ரீலதா மெல்ல தலையாட்ட, 'இந்த படம் ரெண்டு நாள்ல முடிஞ்சுரும்ல. என்று கேட்டான்.
'ஆமாம். இன்னும் ஒரு சாங் தான் பாக்கி இருக்கு. ரெண்டு நாள்ல ஷூட்டிங் முடிஞ்சுரும்னு டைரக்டர் சொன்னார்.'
'படத்தோட கத என்னனு சொல்லட்டுமா?'என அவன் கேட்க, மேக்கப் மேன் 'அம்மா! சீக்கிரம் வாங்கம்மா. அடுத்த சீனுக்கு மேக்கப் போடணும். கூப்டுறாங்க.' என, விஜி 'நான் வெயிட் பண்றென்.'என்றான்.
மேக்கப் போட்டு அடுத்த சீன் நடித்து முடித்து விட்டு மேக்கப்பை கலைத்து விட்டு வந்து விஜியின் அருகில் உட்கார்ந்தாள் ஸ்ரீலதா.
அவன் ஆர்வமாய் கதை சொல்ல, அவள் காதில் எதுவும் விழ வில்லை. அவனையும், அவன் கதை சொல்லும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவன் அங்க அசைவுகளுடன் கதை சொல்லி முடித்து விட்டு' ஆமாம், ஹீரோ யாருனு தெரிஞ்சுக்க வேணாமா?' என்றான்.
அவள் 'சொல்லுங்க' என்றாள்.
'புதுசா ரெண்டு படம் நடிச்சிருக்குற விஷ்வா.'
இந்த பேரை எங்கேயோ கேட்டுருக்குறோமே என்று மண்டையைப் போட்டு உருட்டினாள் ஸ்ரீலதா.
அவன்....

(தொடரும்)
 
Nice epi.
Katha konjam vulgara than poguthu.
Oru naayagi, uruvaagiraal.
Inni veegam pakka actress aagiduva.
Rukumani yavathu nalla manushi ya??? illa athuvum ithey kuttayilla ulla 420 thaana???
 
Top