Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி இறுதி அத்தியாயம் 23

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 23

தான் பெற்ற குழந்தையைத் தன் பக்கத்தில் போட்டு விட்டு அதை பேனா, பென்சில் போல் தானமாகத் தந்ததாகச் சொன்ன தோழியைப் பார்த்தாள் நித்யா.
'கல்யாணி! ஒன் நல்ல மனசுக்கு நன்றி. ஆனா இது சரியா வருமா?'
'ஏன் வராது? என் வீட்டுக்காரர் ஒத்துகிட்டார்.' சட் என்று ப்ராங்க்ளின் பக்கம் திரும்பினாள்.'நீங்க என்ன சொல்றீங்க, ப்ராங்க்ளின்?'
ப்ராங்க்ளின் ஒரு கணம் தயங்கி பின் 'நித்யாவுக்கு விருப்பம்னா எனக்கு ஆட்சேபணை இல்ல. எப்படி இருந்தாலும் உங்க பையனா' இருந்தாலும் இவன் என் பையன் மாதிரி தான் நான் பாப்பேன்.' என்றான்.
நித்யா, 'இல்ல.. ஊரு ஏதாவது சொல்லிச்சின்னா..' என்றாள்.
'நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன், நித்யா. ரெண்டு பாமிலியும் வெளியூருக்கு ஷிப்ட் ஆயிருவோம். நம்ம பேரண்ட்ஸ் கிட்ட உண்மைய சொல்லிருவோம். ஒரு மூணு, நாலு வருசம் கழிச்சு நம்ம குழந்தைகளோட அரப்ப யாருக்குத் தெரியப் போவுது?'
நித்யாவுக்கும் சரி என்று பட்டது.
ஆனாலும் மனதில் இரு எண்ணங்கள்.
கல்யாணி ரவியிடம் திரும்பினாள்.
'ஒங்க பர்ஸ்ல காயின்ஸ் இருக்கா?'
அவன் பர்ஸின் ரேக்கைப் பார்த்து விட்டு 'ஒரு ஒரு ரூபா காயின், ஒரு ரெண்டு ரூபா காயின் இருக்கு. மத்ததெல்லாம் நோட்ஸ் தான்.' என்றான்.
அவள் ரூம் வாசலுக்கு சென்று காரிடாரில் பார்த்தாள்.
பக்கத்து ரூம் வாசலில் ஒரு சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு இளம் தாய் நின்றிருந்தாள்.
கல்யாணி அவள் அருகில் சென்றாள்.
'எக்ஸ்க்யூஸ் மி.'
அவள் திரும்பினாள்.
'ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?'
அவள் என்ன என்பது போல் நிமிர்ந்தாள்.
'அந்த ரூம்ல என் ப்ரெண்ட் அட்மிட் ஆயிருக்காங்க. எங்களுக்கு ஒரு முடிவு எடுக்க குழப்பம். திருவுளச் சீட்டு பாக்க உங்க பொண்ண அனுப்ப முடியுமா?'
அவள் சரி என்று தலையாட்டியவாறு தன் பெண்ணுடன் நித்யா ரூமில் நுழைந்தாள்.
எல்லோரும் நித்யாவின் பெட்டை சுற்றி நின்றார்கள்.
கல்யாணி சொன்னாள்.
'நித்யா! என் ரெண்டு கையிலும் ஒரு ரூபா ரெண்டு ரூபா காயின வச்சு மூடிக்கப் போறேன். இந்தப் பொண்ணு எந்த கையைத் தொடறாளோ அந்த கையில் உள்ள காயின் தான் கடவுளோட தீர்ப்பு! ஒரு ரூபா காயின் வந்தா இவன் ஒன் பையன். ரெண்டு ரூபா காயின் வந்தா என் பையன். காயின் பார்த்த பிறகு மேற்கொண்டு டிஸ்கஸ் பண்ணலாம். என்ன சொல்ற?'
ப்ராங்க்ளின் 'கல்யாணி! நீ ஒரு டாக்டர். இப்படி எல்லாம் சின்னப் புள்ளைங்க மாதிரி...' என்று இழுத்தான்.
'அறிவு முடிவு செஞ்சுருச்சு. மனசு நம்பறதுக்குத்தான் இது.'
எல்லோரும் ஒரு மனதாக சம்மதிக்க, கல்யாணி இரு கைகளையும் அந்த சிறுமியின் முன் நீட்டினாள்.
'பாப்பாவுக்கு எந்த கையில் உள்ள காசு வேணும்?'
அந்தச் சிறுமிக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தது. சிரித்த முகத்துடன் இரு கரங்களையும் மாறி மாறிப் பார்த்தது. சிரித்துக் கொண்டே கல்யாணியின் வலக்கரத்தைத் தொட்டது. அவள் கையைப் பிரிக்க அதில் ஒரு ரூபாய் நாணயம் எதிர்பார்த்த மாதிரியே இருந்தது. கல்யாணி அதை அனைவருக்கும் காட்டி விட்டு அடுத்த கையில் இருந்த இரண்டு ரூபாய் காயினையும் காட்டி விட்டு பர்ஸில் இருந்த நூறு ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து அந்த சிறுமியிடம் நீட்டினாள்.
'அம்மாட்ட குடுத்து ஒனக்கு வேணும்கற சாக்கலேட் வாங்கிக்கோங்க.'
அந்தச் சிறுமி அவள் அம்மாவைப் பார்க்க, அவள் அம்மா 'வாங்கிக்கோ' என அந்தச் சிறுமி வாங்கி அவள் அம்மாவிடம் தந்து விட்டு அம்மாவின் சேலையைப் பிடித்துக் கொண்டது.
'நான் வரெங்க.' அவர்கள் விடை பெற, எல்லோரும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நித்யா, 'கல்யாணி எடுக்கற எல்லா முடிவுக்கும் கடவுள் ஓகே சொல்லிருராரு.' என்று சொல்லியவாறே அந்த சிசுவை நெஞ்சோடு அள்ளிக் கொண்டாள்.
'எனக்கு பையன் பொறந்தா சுதன்னு பேரு வைக்கலாம்னு நெனச்சேன். இன்னைலருந்து ஒம் பேரு சுதன்.'
அந்த சிசு பொக்கை வாயைத் திறந்து 'ஙா' என்றது.
சுதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர அவர்கள் அனைவரும் ஜாகையை சென்னைக்கு மாற்றி இருந்தார்கள். ஜேம்சும், மேரி டீச்சரும் ரிடையராகி இருந்தனர். சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் எதிர்த்அட்த எதிர்த்த ப்ளாட்கள் இரண்டை வாங்கிப் போட்டனர். இரு பாமிலிகளும் அவற்றில் குடியேறின. ரவியின் பெற்றோரும், ப்ராங்க்ளினின் பெற்றோரும் இன்னும் சிறிது காலம் கழித்து சென்னை வருவதாகச் சொல்லினர்.
கல்யாணி அடுத்த கரு தரித்தாள். சுதனுக்கு ஒரு வயது பூர்த்தியாகி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கல்யாணிக்கு வலி கண்டு அன்று இரவே ஒரு ஆண் மகவு பிறந்தது. அதற்கு ஹரிஹரன் என்று பெயரிட்டார்கள்.
நால்வரும் வேலைக்குப் போக வயதான பெற்றோர் குழந்தைகளை வளர்த்தார்கள். விடுமுறை வரும்போது மெரினா பீச்சுக்கு குடும்பத்தோடு செல்வார்கள்.
ஹரிகரனும், சுதனும் நண்பர்களானார்கள். அதில் நித்யாவுகும் கல்யாணிக்கும் ஏகப் பெருமை. பள்ளியில் ஹரிஹரனை யாராவது கிண்டலோ நக்கலோ செய்தால் ஓடி வந்து விடுவான் சுதன். சுதனை டீச்சர் அடித்தாலும் தாங்க மாட்டான் ஹரிகரன்.
இருவரும் பெரியவர்களானார்கள்.
சுதன் பார்க்க ப்ராங்க்ளின் மாதிரியே இருந்தான்.
ஹரிஹரன் ரவியைக் கொண்டிருந்தான்.
அடம் பிடித்து கேடிஎம் பைக் ஒன்றை வாங்கினான் சுதன். முதலில் ஹரிஹரனை அதில் பின்னால் அமரவைத்து ஓட்டினான். ஹரிஹரசுதன் நட்புடன் ஓ என்று கூச்சலிட்டபடி சந்தோசிப்பதைக் கண்டு நட்பு தலைமுறை தாண்டி தொடர்வதை நினைத்து ரசித்தனர் நித்யகல்யாணி.

சுபம்
 
அருமையான கதை நல்ல முடிவு
அம்மாக்கள் நித்யகல்யாணி நட்பை போல்
மகன்கள் ஹரிஹரசு்தன் நட்பும் தொடருது
பெயர் தேர்வு சூப்பர்
Lovely story thanks and congrats ? ? ? ???
 
Top