Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 22

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 22

'சீக்கிரமே பொறந்துட்டியாடா என் சிங்கக்குட்டி.. பாட்டி பாருடா..'
என்று மேரி டீச்சர் குழந்தையை எடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தார். உடன் ஜேம்ஸ்.
முத்தம்மாள் மகளுக்கு ஹார்லிக்ஸ் ஆத்தி கொடுத்துக் கொண்டிருந்தார். 'உங்க அப்பாட்ட சொன்னேன். அவருக்கு பேரன பாக்க அவ்ளோ ஆர்வம். எப்படா நீ வருவன்னு காத்திட்டு இருப்பாரு.'
கல்யாணி களைப்படைந்த முகத்துடன் மெதுவாய் முறுவலித்தாள்.
'ஏம்மா! நித்யா எங்க ஆளக் காணோம்?'
முத்தம்மாள் ஏதோ சொல்ல வந்தவள் ஜேம்ஸ், மேரி டீச்சரைப் பாட்து வாயை மூடிக்கொண்டாள். அப்புறம் சொல்கிறேன் என்று ஜாடை காட்டினாள்.
கல்யாணிக்கு ஏதோ விபரீதமாய் பட்டது.
அமைதியாய் இருந்தாள்.
சிறிது நேரம் கழித்து ஜேம்சும் மேரி டீச்சரும் கிளம்ப முத்தம்மாள் வாயைத் திறந்தாள்.
'ஆண்டவன் நல்லவங்கள தான் எப்பவும் சோதிப்பாரு போல. நித்யாவுஆஸ்பத்திரியில டெஸ்ட் எடுக்கப் போனா கர்ப்பப்பை வலுவில்ல கொழந்த பெத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். புள்ள மயக்கமாயி விழுந்துட்டா. இப்ப ஹாஸ்பிட்டல்ல குளுக்கோஸ் ஏத்திக்கிட்டு இருக்காங்களாம். இந்த டீச்சருக்கு தான் எவ்ளோ நல்ல மனசு! புள்ள அப்படி கிடந்தாலும் ஒன் பையனயும் சொந்த பேரனா நெனச்சு கொஞ்சுறாங்க. செயின் போடுறாங்க...'
முத்தம்மாவால் பேச முடிய வில்லை.
'என்னது?' என்று அதிர்ந்தாள் கல்யாணி.
நித்யாவால் குழந்தை பெத்துக்க முடியாதா?
ஐயோ கடவுளே! இது என்ன சோதனை! எனக்கு இப்படி ஒரு குழந்தை குடுக்குற? அவளுக்கு குடுக்க மாட்டெங்கற. இதுவே முந்தி பொறந்ததுக்கு யாரும் ஒண்ணும் கேக்கல. எனக்கு மனசாட்சி குத்தி குடஞ்சுட்டே இருக்கு. ரவிய கண் கொண்டு பாக்க முடியல. ரவியும் நானும் நெருங்கிப் பழகுறதுனால முந்திப் பொறந்துருக்கலாம்னு எல்லோரும் நெனச்சாலும் ரவிக்கு தெரியும் இல்லயா? அவன் ஒரு வார்த்தை கூட கேட்கலயே!
'அம்மா அவரு எங்கம்மா?'
'வெளில ப்ரெண்ட்சோட பேசிக்கிட்டு இருக்காரு. வரச் சொல்லட்டா?'
'ம்'
முத்தம்மாள் எழுந்து வெளியே சென்று ரவியை உள்ளே விட்டாள்.
ரவி சிரித்து மலர்ந்த முகத்துடன் கல்யாணி அருகில் வந்து அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் கண்களை மூடி கண்ணீர் விட்டாள்.
'எதுக்கு அழற கண்மணி? எல்லாம் தான் நல்லபடியா முடிஞ்சிருச்சே?'
என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.
அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள் கல்யாணி.
அழுகை பிரவாகமாய் வந்தது.
அவனது கைகளை கண்களில் அவளது கண்ணீரால் நனைத்து அழுதபடியே சொன்னாள்.
'என்ன மன்னிச்சிருங்க. நான் ஒங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்.'
'என்ன சொல்ற கல்யாணி?'
'இது.. இது.. உ..ஒங்க குழந்த இல்ல.'
'என்ன சொல்ற கல்யாணி. இது நம்ம குழந்த தான்.'
'ப்ச்.. இல்லீங்க. இதுக்கு மேலயும் என்னால மறைக்க முடியாது. மனசாட்சி குத்தி கிழிச்சி தினம் தினம் சாவறதுக்கு ஒங்க கிட்ட உண்மைய சொல்லணும்னு தோணிச்சி. அதான் என்ன நடந்தாலும் பரவால்லன்னு சொல்றென்.'
கல்யாணி கோவா டூர் போனதையும் அங்கே ப்ராங்க்ளின் போன்றவனால் கற்பை இழந்ததையும் திருவுளச்சீட்டு சொல்லக்கூடாது என்று வந்ததும் கல்யாணத்தப்போ தான் பீரியட்ஸ் தள்ளிப் போனதை உணர்ந்ததையும் உயிரை அழிக்க கூடாது என்று உயிர் வளர்த்ததையும் சொன்னாள். மனம் பாரம் குறைந்து லேசாகியது.
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த ரவி மெதுவாய் சொன்னான்.
'எனக்கு தெரியும் கல்யாணி.'
'என்னது தெரியுமா?' அதிர்ந்தாள்.
'ம்ம்..'
'எப்படி?'
'தற்செயலா ஒன் கைப்பைல கிடந்த நியூஸ் பேப்பர் கண்ல பட ஹிந்தி பேப்பர் நீ ஏன் இவ்ளோ பத்திரமா வச்சிருக்கன்னு தோணி பிரிக்க அங்க ஆபிச்சுவரி காலத்துல ப்ராங்க்ளின் போட்டோ இருக்க அதுல இருந்த நம்பருக்கு போன் பண்ணேன். அது ஒரு அனாதப் பொணங்கள எரிக்கிற அமைப்பாம். சூரஜ்ங்ற அந்த ரவுடிய தேடி யாராவது வர மாட்டாங்களான்னு போன் நம்பரோட அவன் போட்டாவ பேப்பர்ல போட்டிருக்காங்க. ஆனா யாரும் வராததுனால அவங்களே ஈமக் கிரியை செஞ்சுட்டாங்க. சரி அவன் போட்டோ பேப்பர் நீ எதுக்கு வச்சிருக்கணும்னு மனசுல கேள்வி இருந்துட்டே இருந்தது. ஒரு நாள் நீ நித்யாட்ட கொழந்த ஸ்ட்ராங்கா கருப் பிடிச்சிருச்சி. ரவிட்ட சொல்லாம மறைக்கறது எனக்கு மனசுக்கு ரொம்ப வலிக்குதுன்னு அழுதுட்டு இருந்த. அதுக்கு நித்யா அதான் அன்னைக்கே கலச்சிருன்னு சொன்னென்ல அப்படின்னு சொல்ல நீ உயிர காப்பாத்தற டாக்டர் நான். எப்படி அதுவும் ஒரு சிசுவ கொல்ல முடியும்னு கதறுன. அவன் உசிரோட இருந்தான்னாவது அவனயே கல்யாணம் பண்ணி இருப்பேன் என் காதல கூட மறந்துட்டு. அதானே தமிழ் பண்பாடு. அவனும் போயிட்டானேன்னு நீ கதறுன்னப்ப ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு எனக்கு புரிஞ்சிடிச்சி. என்ன நான் ஒன்ன எவ்ளோ லவ் பண்ணி இருந்தாலும் ஒரு நண்பிகிட்ட இருந்த அந்த நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் என் கிட்ட ஒனக்கு வரலயேன்னு ஒரு செகண்ட் தோணிச்சு. அப்புறம் ஒன் மேல இருந்த காதல் அத எல்லாம் மறக்கடிச்சிடிச்சி.'
கல்யாணி இமைக்காமல் அவனையே பார்த்தாள்.
'அப்படின்னா எல்லாமே ஒங்களுக்கு தெரிஞ்சும் பேசாம இருந்துட்டிங்க. அப்படித்தானே.'
'இதயே நானும் சொல்லலாம்ல?'
கல்யாணி அழுதபடியே கேட்டாள்.
'அப்போ ஏங்க என் கிட்ட ஒரு வார்த்த கேக்கல? கொழந்த பொறந்த பொறகாவது ஏன் கொற மாசத்துல பொறந்துச்சுன்னு ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்ல?'
'கல்யாணி! நீ பெத்து எடுத்த குழந்த என்னோட கொழந்த மாதிரி தான். நான் ஒன் ஒடம்ப நேசிச்சிருந்தேன்னா எனக்கு அப்படி எல்லாம் கேட்க வந்திருக்குமோ என்னமோ நான் அத மீறி ஒன்ன லவ் பண்ணது இதுல என்ன இருக்கு ஏதோ தெரியாம நடந்திருக்கும்னு நெனக்க வச்சிருச்சி.'
'உண்ம தாங்க. தெரியாம நடந்தது தான். அந்தப் பாவி என் விருப்பத்துக்கு மீறி என்ன பாழ் படுத்திட்டு போயிட்டான். நான் ஒங்க கிட்ட சொல்லணும்னு துடிச்சேன். என்னென்னமோ வந்து என்ன தடுத்துடிச்சி. உண்மையா பாத்தா என்ன விட காதல்ல நீங்க தான் ஆழமா இருந்திருக்கீங்க. என்ன மன்னிச்சிருங்க.'
கதறினாள் கல்யாணி.
'ப்ச். அழக்கூடாது என் கண்ணம்மா. கொழந்த பெத்த ஒடம்பு. என் கன்னத்துல செருப்பால அடிச்ச பொண்ணா நீ? அந்த தைர்யமெல்லாம் எங்க போச்சு? இத நெனச்சு வருந்தாத கல்யாணி. எத்தனயோ பேருக்கு கொழந்த வரம் கிடைக்க மாட்டெங்குது. எல்லோரும் நாம ரெண்டு பேரும் முன்னாலயே தப்பு பண்ணிருப்போமோன்னு நெனச்சு பேசாம விட்டுருப்பாங்க. நாமளும் அப்படியே எடுத்துக்கலாம். இந்த குழந்தையை நல்லபடியா வளக்கலாம். இன்னொண்ணும் பெத்துக்கலாம். ஆமா கல்யாணி சரியான விசயத்த தப்புன்னு நம்ம மக்கள் ஏன் சொல்றாங்க.'
கண்களைத் துடைத்து சிரித்த கல்யாணி,' சீ சும்மா இருங்க.' என்று வெட்கப்பட்டவள் 'ஏங்க. ப்ராங்க்ளின் எப்படி இருக்காரு? நித்யா பத்தி ஏதாவது சொன்னாரா?' என்றாள்.
'ஆமாம் கல்யாணி. சகல மனசுக்குள்ள வருத்தம் இருந்தாலும் அவரும் என்ன மாதிரி உண்மையான லவ்வர். நித்யாவே எனக்கு குழந்த தான்னு சொன்னாரு.'
கல்யாணி நெகிழ்ந்து போனாள்.
இப்படிப்பட்ட மனிதர்களை ஏன் சோதிக்கிறாய் கடவுளே!
மனசுக்குள் திடீரென்று ஒரு யோசனை தோணியது.
'ஏங்க! நான் எந்த முடிவு எடுத்தாலும் அதுல ஒங்க சப்போர்ட் எனக்கு இருக்கும் தானே'
'அதுல என்ன டவுட் கண்ணம்மா?'
'அந்த குழந்தைய எடுங்க.'
'ஏன் கண்ணம்மா.'
'சொன்னா கேளுங்க.'
அவன் தொட்டிலில் இருந்து குழந்தையை தலைக்கு அணை கொடுத்து எடுத்து தோளில் டவலோடு சாய்த்துக் கொண்டான்.
கல்யாணி நெகிழ்ந்திருந்த உடைகளை சரி செய்து கொண்டு 'நித்யாவ எந்த ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க?' என்று கேட்டாள்.
'இந்த ஆஸ்பத்திரில தான். ரூம் நம்பர் 17.'
'என் கூட வாங்க.'
மெதுவாய் வெளியே நடந்தாள்.
வெளியே நின்றிருந்து பக்கத்து ரூம் பாட்டி கூட பேசிக் கொண்டிருந்த முத்தம்மாள் இவளைப் பார்த்ததும் என்ன என்பது போல் பார்த்தாள்.
'நான் நித்யாவ பாத்துட்டு வந்துர்ரேம்மா' என்று சொல்லி விட்டு முன்னால் நடக்க பின்னால் குழந்தையுடன் போகும் ரவியைப் பார்த்து 'ஙீ' என்று விழித்தாள் முத்தம்மாள்.
நேரே லிப்டில் ஏறி ரூம் நம்பர் 17ஐ அடைந்தாள்.
வாசலில் ப்ராங்க்ளின் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க இவர்களைப் பார்த்ததும் எழுந்தான்.
'என்ன குட்டிப் பையா! சித்திய பாக்க வந்துருக்கியா?'
'நித்யா என்ன பண்றா?'
'உள்ள டாக்டர் அவள செக் பண்றாரு.''
அவள் ரவியிடம் 'ஒரு நிமிசம் இருங்க' என்று சொல்லி விட்டு ரூமின் கதவைத் திறந்து உள்ளே போனாள். அவளைக் கண்ட நித்யா அதிர்ந்தாள்.
டாக்டர் இவளைப் பார்க்க இவள் தானும் டாக்டர் தான் என்று சொல்லி டாக்டரிடம் நித்யாவின் நிலையை மெடிக்கல் டேர்ம்ஸில் விசாரித்தாள். டாக்டர் குழந்தை பிறக்க 100 சதம் வாய்ப்பே இல்லை. சரகேட் மதர் மூலமா வேணும்னா பெத்துக்கலாம் என்று சொல்ல கல்யாணி நன்றி சொன்னாள்.
டாக்டர் வெளியேறவும், கல்யாணி ப்ராங்க்ளின், ரவி இருவரையும் உள்ளே வரச் சொன்னாள்.
நித்யாவின் அருகில் அமர்ந்தாள்.
தோழியைக் கண்டதும் அவள் கையைப் பிடித்து வாய் விட்டு அலறினாள் நித்யா.
'இப்படி ஆயிட்டேனே கல்யாணீஈஈஈஈஈஈ'
ஒரு இரண்டு நிமிடம் அவளை அழ விட்ட கல்யாணி 'நான் இவர்ட்ட எல்லாமெ சொல்லிட்டேன் நித்யா.' என்றாள்.
சட் என்று அழுகை நிற்க அவளையும் ரவியையும் பார்த்தாள் நித்யா.
'இவர் இந்த குழந்தையை தன் குழந்தையா தான் நெனைக்கிறாரு. ஆனா நான் ஒரு முடிவெடுத்திருக்கென்.'என்றவள் ரவியிடம் திரும்பினாள்'என்னங்க அவன இவ பக்கத்துல போடுங்க.' என்றாள்.
ரவி குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு மெதுவாக நித்யாவின் பக்கத்தில் அவனை வைத்தான்.
நித்யா குழந்தையைப் பார்க்க அது பொக்கை வாயைத் திறந்து அவளைப் பார்த்து சிரித்தது.
'சிரிக்கிறான் பார்' என்று கண்களைத் துடைத்து அதன் கன்னங்களைப் பற்றி 'சிரி சிரி' என்றாள் நித்யா. அதுவும் சிரித்தது.
'நித்யா'
திரும்பினாள்.
'நித்யா. இனி இவன் ஒன் குழந்த. இவன நான் இதுவர தொட்டதில்ல. பாலும் குடுத்ததில்ல. இந்த நிமிசத்துல இருந்து இவன் ஒன்னோட பையன். நான் ஒனக்கு சரகேட் மதரா இருந்ததா நெனச்சுக்கோ. இவன வாழ்க்கைல எந்த கணமும் நானோ இவரோ எங்க அம்மா அப்பாவோ சொந்தம் கொண்டாட மாட்டோம். ஒன் பையனாவே நெனச்சு பாப்போம். என்ன சொல்ற?'

(தொடரும்)

 
Sema super update :love: :love: :love:
சந்தோசமா இருக்கு, ரவி எல்லாம் தெரிந்தும் காதலால் உயர்ந்துட்டான்.
கல்யாணியும் குழந்தையை நித்யாக்கிட்ட கொடுப்பது நல்ல முடிவு.
எல்லோருமே நல்லவர்களாக இருக்காங்க.
 
Top