Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 18

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 18

'என்ன சொன்ன நித்யா? திருப்பி சொல்லு திருப்பி சொல்லு.'
'ஒரு வாரமா ப்ராங்க்ளின் இங்க தான் இருக்கான்.'
அப்போ தன்னை கெடுத்தவன் யார்? இதே முகத்தோடு தானே இருந்தான்! முகம் கிட்டத்தில் வைத்து பார்த்தேனே! இதே கண்கள்! இதே நீள மூக்கு! இதே மீசை!
கல்யாணிக்கு தலையை சுற்றியது.
'அப்போ.. கோவால.. என்ன... நித்யா என்ன இது?'
'கல்யாணி! ஒனக்கு நடந்த கொடுமைக்கு நான் ரொம்ப வருத்தப் படறேன். அந்த குற்றவாளிய தேடி கண்டுபிடிப்போம். தண்டன வாங்கித் தருவோம். ஆனா ஒரு தப்பும் செய்யாத ப்ராங்கிளின நீ தப்பு சொல்றது தான் எனக்கு பிடிக்கல. இவன் ஒரு வாரமா இங்க தான் அதுவும் நம்ம வீட்ல தான் இருக்கான். அதான் என்னால சுத்தமா நம்ப முடியல. தப்பு பண்ணவனுக்கு ப்ராங்க்ளின் மாதிரி ஏதோ சாயல் இருந்திருக்கலாம். அவன் மும்பைல வேல பாக்கறதுனால அவன் அங்க வந்திருக்கலாம்னு நீ நெனச்சிருக்கலாம். நான் ஒன்ன முழுசா நம்பறென் கல்யாணி. ஆனா ப்ராங்க்ளின் மேல தப்பு இல்ல.'
கல்யாணி தலையை குனிந்து கொண்டாள்.
கடவுளே! இது என்ன சோதனை! அப்போ கோவால நான் சந்திச்சது யார? நித்யா சொன்னது மாதிரி ஏதோ ஒரு சாயல வச்சு ப்ராங்க்ளின்னு முடிவெடுத்துட்டோமோ! இவன் ஒரு வாரமா இங்கேயே இருக்கானாமே! இங்கேயெ இருக்றவன் கோவா வர வந்துட்டு ஒடனே ரிடர்ன் ஆயிருக்க சான்ஸே இல்ல. அப்போ அவன் யாரு?
மெதுவாக எழுந்து ப்ராங்க்ளின் அருகில் சென்று 'என்ன மன்னிச்சிருங்க. நான் தப்பா நெனச்சுட்டேன். இழக்கக் கூடாதத இழந்ததனால புத்தி ஸ்தம்பிச்சிரிச்சி.'
ப்ராங்க்ளின் 'அதனாலென்ன கல்யாணி! பரவால்ல. ஆனா என் பேருக்கு களங்கம் ஏற்படுத்துன அவன நான் பாக்கணும். நாம ஒடனே கோவா போகலாம்.' என்றான்.
'அதெப்படி? இப்ப தான வந்திருக்கேன். அம்மாட்ட மேரி டீச்சர்ட்டல்லாம் என்ன சொல்றது?'
நித்யா 'ஒன் சர்ட்டிபிகேட்ட ஹோட்டல்ல விட்டுட்டு வந்துட்டே. அத எடுக்கப் போறே. தனியா போற ஒனக்கு தொணயா நாங்க வர்ரோம். சரியா?' என்று ப்ளானை விவரித்தாள்.
'ம்' என்று தலை ஆட்டினாள் கல்யாணி.
அனைவரிடமும் அவர்களுக்கு வாங்கி வந்த கிப்டை கொடுத்து விட்டு ரவிக்கு வாங்கி வந்த கிப்டை எடுத்து தன் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு எல்லோரிடமும் சர்டிபிகேட் தொலைத்த கதையை ஏற்ற இறக்கமுடன் ஒப்பித்தாள்.
மேரி டீச்சர் கடிந்து கொண்டார்.'டூர் போற எடத்துக்கு எதுக்கு சர்ட்டிபிகேட் எடுத்துட்டு போகணும்? காலேஜ்ல வச்சுட்டு போயிருந்துக்கலாமே! பொம்பளப் புள்ள இவ்ளோ அஜாக்ரதயோட இருக்க கூடாது கல்யாணி'
ஆமாம் டீச்சர். சர்ட்டிபிகேட்ட விட முக்யமானத தொலச்சுட்டு நிக்கறென், டீச்சர். என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
ப்ராங்க்ளின் அவனது நண்பன் மூலம் கட் ட்ரெய்ன் புக் செய்து விட்டான் மூவருக்கும்.
'ப்ராங்க்ளின் ஜாக்ரதயா கூட்டிட்டு போயிட்டு வா. வேல முடிஞ்சதும் திரும்பி வந்துரணும்' என்றார் மேரி டீச்சர்.
'சரிங்க அத்த.'
மூவரும் ட்ரெயின் பிடித்து அதே கேரளா ரூட் வழியாக வந்தார்கள். அன்று தித்தித்த ஒவ்வொரு காட்சியும் இன்று காணப் பிடிக்க வில்லை கல்யாணிக்கு. புழையின் அழகும், நதி கடலோடு சேரும் பேக் வாட்டர் அழகும் அவளைக் கவரவே இல்லை. ட்ரெயின் கேரளாவைத் தாண்டி கர்னாடகாவிற்குள் சென்றது. கன்னடப் பெண்கள் கழுத்தில் கருகமணியோடும், ஆரஞ்சு, சிவப்பு நிறப் பூக்கள் தலையில் சொருகி வயலில் கதிர் அறுத்துக் கொண்டிருந்தார்கள்.
கல்யாணிக்கு அந்த சம்பவமே ரீவைண்ட் ஆகிக் கொண்டே வந்தது. திடுக் என்று எதிர் சீட்டில் அமர்ந்திருந்த ப்ராங்க்ளினைப் பார்த்தாள். அவன் நித்யாவிடம் சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் எந்த கபடும் தெரிய வில்லை. ஆனால் இதே முகம் தானே! கல்யாணிக்கு ப்ராங்க்ளின் என்று உறுதியாய் சொல்ல முடியாவிட்டாலும் முகம் அவனுடையது தான் என்று உறுதியாய் சொல்ல முடிந்தது. சாயல் எல்லாம் இல்லை. அவனே தான். ஆனால் அவன் எப்படி அங்கும் இங்கும்... மூளை எவ்வளவோ சிந்தித்தும் பதில் கிடைக்க வில்லை. அவள் சிந்தனையை மாற்ற பக்கத்தில் பார்த்தாள். அவள் அருகில் ஒரு இளம்பெண் பக்கத்தில் வாயை சிறிது பிளந்து தூங்கிக் கொண்டிருக்கும் இளம் வாலிபன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள். புதிதாய் கல்யாணம் முடிந்த தம்பதியர் போலிருக்கிறது. தேனிலவுக்கு கோவா செல்கிறார்கள் போலும். அவன் தூங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு கை அவளது பிடரியை இறுகப் பற்றி அணைத்திருந்தது.
அவளுக்கு ரவியின் நியாபகம் வந்தது. கல்யாணம் முடிந்ததும் தேனிலவுக்கு ஊட்டி செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவளுக்கும் தான் எத்தனை கனவுகள் வந்தன? அவனோடு கை கோர்த்துக் கொண்டு புதுத்தாலி நெஞ்சில் புரள களைத்த பார்வயோடு புல்வெளியில் நடப்பதாகவும், ரோஸ் கார்டனில் புதுப் புது வெரைட்டி ரோஸ்களை கண்டு சிலிர்ப்பதாகவும், லேக்கில் போட்டை இருவர் மட்டும் 'தாலாட்டுதே வானம்' பாடிக்கொண்டே ஓட்டுவதாகவும், பொட்டானிகல் கார்டனில் போட்டோ எடுத்துக் கொள்வதாகவும் என்று எத்தனை எத்தனை கனவுகள்...
இனி எந்த மூஞ்சியோடு ரவி முகத்தில் விழிப்பாள்? நினைத்த மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. எதிரில் நித்யாவின் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணின் மடியில் இருந்த சிறுமி அவள் அம்மாவிடம், 'தட் ஆண்டி இஸ் க்ரையிங்..' என்க, நித்யா கல்யாணியைப் பார்த்தாள்.
அவள் சட் என்று புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்ள, 'என்ன கல்யாணி இது? நீ எவ்ளோ போல்ட்? இப்படி ஒடஞ்சு போறியே'
'என்னால... இத தாங்கிக்கவே முடியல நித்யா. இனி ரவி கிட்ட எப்படி என்னால பேச முடியும்?'
'ச்சீ அசடு! ரவி ஒன் மனச மட்டும் தான் லவ் பண்றாரு. இதெல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டார். நீ பெருசு பண்ணாத.'
'அவர்ட்ட இத எப்படி சொல்லுவேன் நித்யா?'
'நீ இத சொல்ல வேண்டாம். இந்த ரகசியம் நம்ம மூணு பேருக்கு மட்டும் தெரிஞ்சதாவே இருக்கட்டும். வீணா குழப்பம் தான் உருவாக்கும். மொதல்ல அவன் யாருன்னு கோவா போய் கண்டுபிடிக்கலாம். அவன போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படச்சுட்டுத்தான் மறுவேல. நீ கண்ண தொடச்சுக்கோ.'
கல்யாணி ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
பனாஜி வந்தது. இறங்கினார்கள். ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள். அதே பைக் ஸ்டாண்ட். கல்யாணி தன்னை ஏற்றிச் சென்ற அந்த பைக் காரன் நிற்கிறானா என்று பார்த்தாள். அவனை முழுதாய் கவனிக்காததால் யார் என்று தெரிய வில்லை. டாக்ஸி ஒன்று பிடித்து அவர்கள் கல்யாணி சொன்ன ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள்.
ரிசப்ஷனில் நுழைந்ததும் ரிசப்ஷனிஸ்ட் ப்ராங்க்ளினைக் கண்டதும் சிலையாய் நின்றாள். அவளிடம் கொங்கணியில் ஏதோ பேசிக் கொண்டிருந்த ரூம் பாயும் அவனைப் பார்த்ததும், 'சூரஜ் சாப்' என்று வாய் குழற கண்ணாமுழி பிதுங்க ஒரு கணம் திகைத்து நின்றான்.
ப்ராங்க்ளின் உடனே ஹிந்தியில் கேட்டான்.
'என்னத் தெரியுமா உங்களுக்கு?'
ரூம் பாய் குழறிக் கொண்டே சொன்னான்.
'ஒங்களத் தெரியாம போகுமா சூரஜ் சாப்?'
'என்னது சூரஜா?'
'ஒங்களுக்கென்ன எங்களுக்கே டவுட்டா இருக்குது சாப்.'
'என்ன டவுட்?'
அவன் விருட் என்று ரிசப்ஷன் அருகே இருந்த ரூமில் நுழைந்தான். அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த பேப்பர் கட்டில் ஒன்றை எடுத்து பக்கங்களைப் புரட்டினான். ஒரு பக்கத்தை விரித்து ப்ராங்க்ளினிடம் நீட்டினான்.
ப்ராங்க்ளின் அதை வாங்கிப் பார்த்தான்.
ஆபிச்சுவரி காலத்தில் கொஞ்சம் பெரிதாய் அவன் போட்டோ போட்டிருந்தது. கீழே சூரஜ் என்று எழுதி இருந்தது.

(தொடரும்)



 
நல்லவேளை கஷ்ட்படாமல் எளிதாக ஹோடலிலேயே அவனிருப்பை கண்டுபிடிச்சுட்டாங்க
சூரஜ்கும் பிராங்கிளினிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா.
 
Top