Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதுகிற விதி அத்தியாயம் 4

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 4

அடுத்து சௌம்யாவின் குடும்பம் புறப்படும் தருணம் வந்தது.
சௌம்யாவின் கண்கள் கண்ணீரைப் பொழிந்த வண்ணம் இருந்தன.
அப்பாவினுடய 'வரேம்மா'வும், அம்மாவுடய 'பாத்து பத்திரமா இருந்துக்கோடி'யும் எங்கேயோ பல மைல் தூரத்தில் இருந்து பேசுவது போல் இருந்தது. கண்ணீர்த்திரை வழியே சந்துருவின் 'வரேன் சௌமி. பத்திரமா இருந்துக்கோ' மாத்திரம் எக்கோவாய் எதிரொலித்தது. அவர்கள் கூட்டமாய் கலயவும் சௌம்யா மாடியின் கைப்பிடி சுவர் வழியே அவர்கள் கீழே இறங்கி வருவதைப் பார்த்தாள். சந்துரு தன் கைக்குட்டை எடுத்து கண்களை துடைப்பதைப் பார்த்ததும் ரூமிற்கு வந்து கட்டிலில் குப்புற படுத்து 'ஓ' என்று கதறினாள்.
சுமதிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் 'காலயில் எழுந்ததும் சரியாகி விடும்' என்று எண்ணிக்கொண்டு கதவை சாத்தி தாழிட்டு விட்டு லைட்டை அணைத்து விட்டு படுத்தாள்.
காலை ஐந்தரைக்கு 'ஊஊ' என்று சங்கொலி. பின்பு கிறித்தவ பாடல்கள் ஸ்பீக்கரில் ஒலிக்கத் தொடங்கின. 'கேர்ள்ஸ்.. வேக் அப்..' என்ற கணீர் குரலோடு சிஸ்டர் ஒருவர் பிரம்பு ஒன்றால் எல்லா ரூம் கதவயும் தட்டிக் கொண்டு செல்வது கேட்டது.
திடுக் என்று விழித்த சுமதி சௌம்யாவை எழுப்பலாம் என்று திரும்பினாள். அவள் எங்கே தூங்கினாள் எழுப்புவதற்கு. இரவெல்லாம் தூக்கம் இல்லாததோடு அழவும் செய்ததால் சௌம்யாவின் சிவந்த முகம் களைப்பால் உப் என்றிருந்தது. கண்கள் கோவைப்பழங்களாய் காணப்பட்டன.
'வா சௌம்யா. பாத்ரூமுக்கு போய் விட்டு குளிக்கலாம். ஏழு மணிக்குள்ளே ப்ரேயர் ஹாலுக்குள்ள இருக்கணுமாம். நேத்தே சிஸ்டர் சொன்னாங்க.' சௌம்யாவிடம் முதல் முதலாய் பேசினாள் சுமதி.
அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி முடித்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு சூட்கேஸ் திறந்து ஒரு ஈரிழைத் துண்டயும் மாற்று உடைகளயும் எடுத்துக் கொண்டாள் சௌம்யா.
'நான் ஒரு பூட்டு வச்சிருக்கேன். அதுக்கு ரெண்டு சாவியும் இருக்கு. நீ ஒண்ணு நான் ஒண்ணு வச்சிக்கலாமா?' சுமதி கேட்கவே, சௌம்யா மெல்ல தலை அசைத்தாள்.
இருவரும் வெளியே வரவும், சுமதி அறையைப் பூட்டி இரண்டு சாவிகளில் ஒன்றை சௌம்யாவிடம் கொடுத்தாள்.
சௌம்யா அதை வாங்கிக் கொள்ள இருவரும் நடந்து கீழே பாத்ரூமை நோக்கி நடந்தார்கள்.
புதிதாய் வந்த மாணவிகள் என்பதால் அதிக சப்தம் இல்லாமல் அவரவர் மௌனமாக பாத்ரூம்கள் இருந்த அந்த பகுதியை அடைந்தனர்.
அங்கு ஒரு சிஸ்டர் உர்ரென்று நின்றிருந்தார்.
'அரை மணி நேரந்தான். சீக்கிரம் குளிச்சிட்டு ட்ரெஸ் பண்ணிட்டு வந்திருங்க. மத்தவங்களும் குளிக்கணும். ஏழரைக்கு ப்ரேயர். இப்பவே டைம் ஆறு ஆச்சு. அங்க என்ன பேச்சு.. குளிச்சு முடிச்சவங்க ரூமுக்கு போயிட்டு சீக்கிரம் ப்ரேயர் ஹாலுக்கு போங்க.'
சுமதியும், சௌம்யாவும் மௌனமாய் பாத்ரூமை நோக்கி போனார்கள். டாய்லெட்டில் கூட்டம் இல்லை. ஆனால், பாத்ரூமில் தான் சிறிது நேரம் நிற்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு பாத்ரூம் வாசலிலும் ஒருவர் நிற்பதைப் பார்த்ததும் வெளியே நின்றிருந்த சிஸ்டர் 'க்விக் கேர்ள்ஸ். இது உங்க வீடு இல்ல. ரொம்ப நேரம் குளிக்க... கம் ஆன்..' என கத்தினார்.
உடனே ஓரிரண்டு பாத்ரூம்கள் திறந்து கொள்ள, சுமதியும், சௌம்யாவும் ஆளுக்கொரு பாத்ரூமில் நுழைந்தனர்.
பக்கெட்டில் இருந்து தண்ணீர் எடுத்து தலயில் ஊற்ற, ஊற்ற, சௌம்யாவிற்கு நிகழ்காலம் சிறிது சிறிதாய் உரைத்தது.
'அங்கு மாமாவும், அப்பா அம்மாவும் கஷ்டப்பட்டு அனுப்பியது படிப்பிற்கு. இனி நன்கு படித்து அவர்கள் மனம் வாடாமல் நடந்து கொள்ள வேண்டும்' என்று சங்கல்பித்து மாற்று உடை அணிந்து வெளியே வந்தாள்.
சுமதி இன்னும் வரவில்லை.
அதுவும் நல்லது தான் என்று நினைத்துக் கொண்டு தனது அறையை நோக்கி வேக வேகமாக நடந்தாள்.
சாவி எடுத்து அறையைத் திறந்து உள்ளே வந்து கதவை சும்மா சாத்தினாள்.
சூட்கேசை எடுத்து பெட் மேல் வைத்து திறந்து கவர் ஒன்றை எடுத்தாள். அதில் இருந்த குலதெய்வ போட்டோவைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பின்னர் அடுத்த போட்டாவை எடுத்து சட் என்று ஒரு முத்தம் கொடுத்து விட்டு எட்ட வைத்து சந்துருவின் அழகிய முகத்தைப் பார்த்தாள்.
'மாமா. நான் வந்த வேலய வெற்றிகரமா முடிப்பேன் மாமா.' என்று மனதிற்குள் கூறிக் கொள்ள,
'இவங்கள நான் நேத்து பாத்தேனே... யார் அது?' என்ற சுமதியின் குரல் பின்னால் இருந்து கேட்க, திடுக்கிட்டு எழுந்து நின்றாள் சௌம்யா.

கையில் இருந்த படங்கள் தரையில் சிதறின.
 
Nirmala vandhachu ???
 
அடுத்தநாளே மாமாவுடனான காதல் சுமதிக்கு தெரியபோகுதா.
Cute kutti epi ? (y)
 
மாமாக்கு முத்தமா
சுத்தம் சுமதி பாத்துட்டாளா
 
Top