Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 3

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Hiiii ladiess and girlsss?????

thankssssssss much all...enjoy reading...here comes the next update....இது 2 years back எழுதியது....என்னோட நாலாவது ஸ்டோரி வேற....முதன் முதலா நிறைய கதாபாத்திரம் வைச்சு கூட்டுக்குடும்ப concept ல எழுதினது... நான் கண்ணுக்கு நேரா என்னோட உறவுலேயே இது போல் நான்கு அண்ணன் தம்பி ஒரு தங்கைன்னு பார்த்திருக்கேன்....ஒரு கட்டத்தில் குழந்தைங்க பெரிவங்க ஆகறப்ப அவங்க சுமூகமா தனித்தனியா கட்டின வீட்டுக்குப் போனப்ப அவங்களை விட.....பார்த்த நாங்க தான் ஃபீல் செஞ்சோம்.....ஆனா அவ்வளவு ஒத்துமையா அப்படி இருக்கறது கஷ்டம்...விட்டுக்கொடுக்கறது..தட்டிக்கொடுக்கிறது ரொம்ப அவசியம்....இந்த கதை முழு காதலா இல்லாம கருத்தெதும் சொல்லாம ஒரு அக்மார்க் குடும்ப கதை...ஆரம்ப காலங்களில் எழுதியதால் பிழைகளும் இருக்கலாம்..

எதாவது குறை இருந்தா adjust கரோ...?

share your thoughtssssssss..will post next epi tmr.
 
Last edited:
காதல் 3:

ராஜதீபனின் அறையிலிருந்து வெளிவந்த மதுரவசனி அவளது இருக்கையில் அமர்ந்தாள்.

ஹம்ச கீதா அவளிடம், “என்னடி ஆச்சு….. ஏன் சார் ரூமுக்குப் போனே…?” எனக் கேட்க

இவளிடம் சொன்னால் மேலும் குழம்புவாள் என்றெண்ணிய மது, “இல்ல….. அது…. ஒரு மெயில் வந்துச்சு.. அதை சொல்லப்போனேன்…” என்றாள்.

அப்போது ஒரு யுவதி ராஜதீபனின் அறைக்குள் நுழைந்தாள். யாரென அருகில் இருந்த மாலாவிடம் ஹம்சா கேட்டதுக்கு , “சாரோட சிஸ்டர்…” என்றாள் அவள்.

உள்ளே சென்ற கீர்த்தி என்றழைக்கப்படும் கீருத்திகா தீபனிடம், “டேய் அண்ணா.... சின்னதம்பி கச்சேரி இருக்கு… டிக்கெட்ஸ் எடுத்து தா” என நாற்காலியில் அமர்ந்து கொண்டுச் சொல்ல,

“சின்னதம்பியா…??” என அவன் புரிந்தும் புரியாமல் விழிக்க

“ம்ம்… நந்தன் சாரோட கான்சர்ட் இருக்குடா.. அவர் பாடினா பாப்பா தூங்கும்… பூ பூக்கும்... பாறையிலும் நீர் வரும்… அப்படின்னு நான் சொல்லவில்லை…. ராஜமாதா சொல்றாங்க…… அப்போ அவர் சின்னதம்பிதானே”

“என்னமோ….. அம்மாக்கு மட்டும் தான் அவரோடப் பாட்டு பிடிக்கிற மாறி சொல்ற… உனக்குப் பிடிக்காதா…?”

“ஹே..! என்ன வார்த்தை சொல்லிட்ட…. நான் அவரோட வெறித்தனமான ரசிகைப்பா… அப்புறம் எங்களுக்கு முன்னாடியே சீட் வேணும்…”

“எங்க இருந்தாலும் பாட்டுக் கேட்கும்.. அது என்ன முதல் சீட்..?”

“முன்னாடி இருந்தா தானே அவர சைட் அடிக்க முடியும்..”

“அடிச்சேனா பாரு.. சைட்…. அது இதுன்னு….” என அவன் அதட்ட,

“ஹே…! ஸ்டாப் ஸ்டாப்… நானா சைட் அடிப்பேன்… அம்மா சைட் அடிப்பாங்கடா….”

“ரொம்பப் பேசுற நீ கீர்த்தி…. என்னால டிக்கெட் எடுத்துத் தர முடியாது…..” என அவளைச் சீண்ட

“என்னடா… மேஜர் சார் சொன்னாரா..? எனக்கொன்னுமில்லை… நான் கேட்டாலே சார் பாடுவாரு… அம்மாவுக்காகத் தான் நான் கேட்கிறேன்..”

“ஒஹ்.. சார் உங்கிட்டப் போன்ல பேசுவாரா…?”

“…பேச மாட்டாருடா…. பாடுவாரு....” எனப் பெருமையாகச் சொல்ல

“அது சரி… மேஜரா….? அப்பாவை இப்படித் தான் மரியாதை இல்லாம பேசுவியா நீ…?”

“அய்யோடா… வந்துட்டாரு நல்லவரு… அவர் அப்பா மாறியா நடந்துக்கிறார்… மிலிட்டரி மேன் மாறித் தானே நடக்கிறாரு… அதனால் அவர் மேஜர் தான்…” என்று தன் தந்தையைத் திட்ட

அவனோ சலித்துக்கொண்டு, “வைரத்துக்குப் பொறந்தது வைரமா இல்லாட்டியும் தங்கமா இருக்கலாம்.. இப்படி தகரமா இருக்கியே….. தகரடப்பா வாய் டி உனக்கு…” என அவளை வைய,

“நான் மட்டுமா தகரம்… நம்ம வீட்டில எல்லாருமே தகரம்…. தான் நம்ம அம்மாவைத் தவிர…” என்று கோபமாகச் சொல்ல

“ஹே…!! சாரி கோச்சுக்காத…. நான் டிக்கெட் ஏற்கனவே புக் பண்ணிட்டேன்.. ரெண்டு பேரும் பத்திரமாகப் போய்ட்டு வாங்க… அப்பா வரதுக்கு முன்னாடி வீட்டுக்கு வாங்க….” என எச்சரிக்க

“ஏன் லேட்டா வந்தா… க்ரவுண்டைச் சுத்தி ஓட விடுவாரா மேஜர்… எங்களுக்கு எப்ப முடியுமோ… அப்போதான் வருவோம்…” எனத் திமிராகச் சொல்ல

“ப்ளீஸ் கீர்த்திமா…. வம்பை விலைக்கு வாங்காதடா… சந்தோசம் இல்லாட்டியும் இருக்கற அமைதி நம்ம வீட்ல உன்னால கெட வேண்டாம்… பார்த்துப் போடா..” என்று அனுப்பி வைக்க
 
“சரி.. சரி… என்னதான் நீ ட்ரை பண்ணாலும் நீ என்னோட பாசமலர் அண்ணனாக முடியாது….. சீன் போடாத…” என்றபடி வெளியேறினாள் கீர்த்தி.


சென்னையிலிருந்து அந்த பேருந்து தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கண்ணாடி வழியே காற்று அந்த கன்னிகையரைத் தழுவ வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்த மதுரவசனியைக் கலைத்தது அவளது தோழி ஹம்ச கீதாவின் குரல்.

மதுரவசனியும் ஹம்சாவும் தஞ்சாவூருக்கு மூன்று மாதம் கழித்து செல்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஸ்ரீராம், ஹம்சாவின் அண்ணன் எல்லாம் மாதம் ஒருமுறை வந்துப் பார்த்து விட்டுச் சென்றனர். மூன்று மாதம் ஆகிவிட்டமையால் ஒருமுறை ஊருக்கு செல்லலாம் என இருவரும் விடுப்புக் கேட்டு, இப்போது பேருந்தில் ஊருக்குச் செல்கின்றனர்.

“என்ன ஹம்சா..?”

“இல்ல…. இன்னிக்கு அந்த லலிதா கிட்ட உங்க வீட்டை விட்டுக்கொடுக்காம பேசினியே… என்ன திடீர்னு… இந்த மாற்றம்…. எப்போவும் அவங்களைக் குறை சொல்லத்தானே செய்வ…?”

“என்னது விட்டுக்கொடுக்காமப் பேசினேனா…. விட்டுக் கொடுக்கிற அளவுக்கு என் வீட்டுக்கு என்னடி குறை…?”

“இல்ல…. அவ நம்மளை சினிமாவுக்குக் கூப்பிட்டா.. நீ முடியாதுன்னு மறுத்திட்ட…. ஊர்ல என்னடான்னா சினிமாவுக்கு அழைச்சிட்டுப் போக மாட்றாங்கன்னு புலம்புவ….”

“அட……. ஹம்சா…… என்ன இருந்தாலும் அவங்க என் வீட்டு ஆளுங்க… அந்த லலிதா முன்னாடி எப்படி அவங்களைக் குறை சொல்ல முடியும்… குறை சொல்ற அளவுக்கு என்ன இருக்கு…? என்னால சினிமாவுக்குப் போக முடியாம இல்ல… எப்போவுமே வீட்டுல எல்லாருக்கு வேலை இருக்கு… அப்பாவுக்கு இல்லனா… பெரியப்பாவுக்கு இருக்கும்… சித்தப்பா ஃப்ரீயா இருந்தாருனா.. ராமண்ணாவுக்கு வேலை இருக்கும்…. நாங்க எல்லாமே ஒரே குடும்பமா வெளியே போகனும்னு ஆசை….. அதான் அப்படிச் சொல்வேன்….. சினிமாவுக்குத்தான் சரணும், வத்சனும் கூட்டிட்டுப் போவானுங்களே… ஆனா ஒன்னா போக முடியலன்னு கடுப்பில சொல்வேன் டி…”

“ஒஹ்… அப்படியா டி… சாரி… நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்… ஆனா ப்ர்ண்ட்ஸ் கூடச் சேர்ந்து போகனும்னு ஆசைப்படுவ இல்ல… இப்போ சான்ஸ் கிடைச்சும்… இப்படிப் போகாம…. என்னையும் போக விடாம செஞ்சிட்டியே மது…. சென்னைக்கு வந்து எத்தனை நாளாச்சு…. பீச்சைத் தவிர எதாவது பார்த்தோமா டி… நம்ம கூடப் படிச்சாளே அந்த மேனகா… அவ சென்னைவாசியாவே மாறிட்டா… ஒரே மாசத்தில சென்னையில ஒரு இடம் பாக்கி விடாம சுத்திட்டா… தெரியுமா…. நீயும் இருக்கியே…” எனப் புலம்ப,

“கிறுக்கி…… ப்ரண்ட்ஸ் கூடப் போகனும்னு எனக்கும் ஆசைதான்.. இப்போவும் வீட்ல விடமாட்டாங்கத்தான்… அது எனக்குக் கோபம் தான்… ஆனா இப்போ… என்னை நம்பி வேலைக்கு அனுப்பிருக்காங்க… தெரியாத ஊரு… இதே நம்ம ஊர்னா… எதாவது பிரச்சனைனா தெரிஞ்சவங்க ஓடி வருவாங்க… இங்க அப்படியா…. அதுவும் அந்த லலிதா நைட் ஷோவுக்குக் கூப்பிடுறா… வீட்டை விடு.. எனக்கே அதெல்லாம் பிடிக்காது… நம்ம பாதுகாப்பை நம்ம தான் பார்த்துக்கனும்… அவ கூடப் பசங்களும் வருவானுங்களாம்.. நமக்கு அதெல்லாம் ஒத்துவருமா..? அதான் ஒதுங்கிட்டேன்… உனக்கு வேணும்னா போக வேண்டியதுதானே……”
“நீ இல்லாம எப்படி டி…? சினிமாவுக்குப் போகனும்னு ஆசையில கேட்டேன்… கோவப்படாதடி…”

“இங்க பாரு ஹம்சா…. நம்மளை நம்பி அனுப்பியிருக்காங்க… என் ஆத்தா கிட்டக் கஷ்டப்பட்டு நான் அனுமதி வாங்கியிருக்கேன்… சுதந்திரத்தை தப்பா பயன்படுத்தக் கூடாது… the price of freedom is responsibility. எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு சுதந்திரம் தராங்களோ அவ்வளவுக்கு நாம பொறுப்பா இருக்கனும் டி…. நீ கவலைப்படாத…. நம்ம வீட்ல கேட்டு சினிமாவுக்குப் போகலாம்.. ராமண்ணாவோ இல்ல உங்கண்ணாவோ சென்னை வரட்டும்… நம்ம கேட்டு நம்ம அண்ணனுங்க மாட்டேனா சொல்வாங்க….? என்றவளுக்கு அண்ணன்களைப் பற்றியப் பெருமையே குரலில் நிரம்பி வழிந்தது.

ஹம்சாவின் வீடும் மதுவின் வீடும் பங்காளிகள். அதனால் ஹம்சாவின் அண்ணன் தமிழ்செல்வனும் மதுவிடமும் பாசமாக பழகுவான்.

“நீ சொல்றது சரிதான் மது… இதே நம்ம ஊர்னா. ஜாலியா சுத்தலாம் டி.. அங்கன்னா நம்ம எப்படித் திருட்டுத்தனம் செஞ்சாலும் ஈசியா மாட்டிக்குவோம்…. இங்க மாட்ட மாட்டோமே…”

“மாட்னா தான் டி த்ரில்லே…”

“அடிப்பாவி..” என ஹம்சா வாயைத் திறக்க, மதுவோ கொட்டாவி விட்டு ,

“தூங்குடி…. எனக்குத் தூக்கம் வருது…” என்றபடியே உறங்கிப் போனாள்… அடுத்த நாள் விடியற்காலை ஐந்தரை மணிக்கு அவளது சித்தப்பா கார்த்திகேயன் காரை எடுத்துக் கொண்டு அழைக்க வந்துவிட்டார். ஹம்சாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு, அவர்களின் வீட்டுக்குச் சென்றனர்.

அனைவரும் அந்த அதிகாலையிலேயே விழித்திருந்தனர். எப்போதுமே அனைவரும் எழும் நேரம் தான் என்றாலும் அமுதன், ஸ்ரீவத்சன், ப்ரியா, ஆயுஷ் எல்லாம் சின்னவர்கள். அவர்கள் தாமதமாகவே எழுவார்கள்…. அவர்களும் கூட இவளுக்காக சீக்கிரமே எழுந்தனர். கார் கேட்டினுள் நுழைந்ததுமே ,

“அக்கா…….” என்றபடி அமுதனும் ப்ரியாவும் ஓட

“அத்த…….” என்று கத்திக்கொண்டு ஆயுஷ் ஓடினான்.

அதைப் பார்த்து மதுரவசனியின் கண்கள் கலங்கிவிட்டன.

“என்னடா அதிசயமா எல்லாம் சீக்கிரம் எழுந்திட்டீங்க…..”

“உன்னைப் பார்க்கத்தான் கா….” என்று ப்ரியா சொல்ல

“அக்கா தான் வந்துட்டாளே இன்னும் இரண்டு நாள் இங்க தான் இருப்பா... வீட்டுக்குள்ளப் போய் பேசிக்கலாம்…. வா மது… டேய் வத்சா… அக்கா கிட்டயிருந்து பேக்கை வாங்கு…..” என்று கார்த்திகேயன் சித்தப்பா சொல்ல

“வந்தவுடனே என்னை வேலை வாங்குறியா…” என வத்சன் அக்காவிடம் கேட்க,
“ஹே… நான் எங்கடா சொன்னேன்… சித்தப்பா தானே சொன்னாரு… நீ தூக்க வேண்டாம் விடு… நானே தூக்கிக்கிறேன்……” என்று தம்பியிடம் சொல்ல

“ஹே…! கீழா (லூசு) கோச்சுக்கிட்டியா… சும்மா.. மூனு மாசம் நான் வம்பிழுக்க ஆள் இல்லாம இருந்தேனா.. அதான்... அக்கா… இந்த ப்ரியாவை வம்பிழுத்தா உடனே கத்தி ஊரைக் கூட்டுறா…” என்றவன் அவள் கையைப் பிடித்துப் பையை வாங்கி ,

“ஐ மிஸ் யூ கா…” என்றான் உண்மையாக. பிரிவின் தாக்கம் அவனின் குரலில் தெரிய, தம்பியின் தலையைக் கலைத்தவள்,

“நானும் டா..” என்றாள். மதுவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை… தன் தம்பியா இப்படி பேசுவது என… இத்தனை நாள் அருகில் இருக்கும்போது அவளின் அருமை அவனுக்குத் தெரியவில்லை. இப்போது பிரிந்தவுடன் தெரிகிறது போல என்று நினைத்துக் கொண்டாள். மது எப்போதுமே மஹாவும் வத்சனும் நெருக்கம்… அவள் மீதுதான் பாசம் ஜாஸ்தி என்று நினைத்திருந்தாள். ஆனால் தம்பியின் இன்றைய செயலால் அது உண்மையில்லை, தம் மீதும் அவனுக்குப் பாசம் உண்டு என்பதை அவள் அறிந்துக் கொண்டாள்.

எல்லாரிடமும் பேசி மகிழ்ந்து, காலை உணவை உண்ட பின், ஆண்கள் அனைவரும் வேலைக்குப் போனதும், ஒரு பெட்டியை எடுத்து வந்து சுலோச்சனாவிடம் நீட்டினாள் மதுரவசனி. அனைவரும் என்னவென்று பார்க்க, அதில் அழகான ஜோடி தங்கவளையல் இருந்தது.

அதைக் கண்ட சுலோச்சனாவின் கண்கள் கலங்க,
“உங்களுக்குத் தான் பெரிம்மா… இந்த மது சோழர் வம்சம்னு நிரூபிக்க வேண்டாம்.. வேலைக்குப் போய் உங்களுக்கு வளையல் வாங்கித் தருவேன்னு சொன்னேன்ல..” என

மதுரவல்லிக்குத் தன் பேத்தியை நினைத்துப் பெருமையாக இருந்தது.

“தேங்க்ஸ்டா மது….ரொம்ப நல்லாயிருக்கு…”

“மது….. எப்படி இப்படி…. சம்பளம் மொத்தமும் காலியா….” என ஹரிணி கேட்க

“அதானே…. மது… எப்படி டா… நீ சரியா சாப்பிட்டியா இல்லையா… இல்ல மிச்சம் பிடிக்கிறேன்னு பட்டினி கிடந்தியா …” என்று மோகனா சித்தி கேட்க,

“பட்டினியா போங்க சித்தி… மிச்சம் பிடிச்சின்ன… நானு.. மொத்தமா பிடிச்சேன்… ஊருக்குப் போறதுக்கு முன்னாடி…. அம்மா கிட்ட சொல்லாதன்னு நீங்க கொடுத்த ஆயிரம், பெரியம்மா கொடுத்த ஆயிரம், அம்மா கொடுத்த ஆயிரம்…. அப்புறம்.. பெரியப்பா, அப்பா, சித்தப்பா, அண்ணா, மகா, மாமானு நீங்கக் கொடுத்தப் பணம், அதில்லாம மூணு தடவை என்னைப் பார்க்க வந்துட்டு செலவுக்குன்னு காசு கொடுத்தாங்க… எல்லா சாமானையும் செந்தில் அண்ணாவையே வாங்கித் தர சொல்லிட்டீங்க.. ஒரு சோப்பு கூட என் செலவுல வாங்கல…. அப்புறம் என்ன செலவு… எனக்கு…..?” என்றதும் அனைவரும் முகத்திலும் அசட்டுப் புன்னகை.

“சரி மது.. உங்க பெரியம்மாவுக்கு மட்டும் வாங்கியிருக்கியே… இந்த சித்திக்கு ஒன்னுமில்லையா…?”

“சித்தி.. உங்களை எப்படி மறப்பேன்.. இந்தாங்க உங்க பார்சல்…”என்றபடி அவள் கொடுத்த டப்பாவைப் பிரிக்க, அதில் அவருக்குப் பிடித்த மாதிரி கதைப் புத்தகங்கள்.

“ஹே… மது… தேங்க்ஸ்மா…. சூப்பர்… நான் எதிர்ப்பார்க்கவே இல்லை..” என்று அவர் மகிழ

தனது அம்மாவுக்கும் ஆத்தாவுக்கும் தான் வாங்கிய புடவையைக் கொடுத்தாள். குழந்தைகள் அனைவருக்கும் சாக்லெட்ஸ் தந்தவள் ,

“அடுத்த தடவ அக்கா.. உங்களுக்கு கிஃப்ட்ஸ் வாங்கித்தரேன்…” என
 
மதுரவல்லியோ , “கட்டுக்கட்டாக சம்பாரிக்கறது பெரிசு இல்ல ராசாத்தி..கட்டுச்செட்டா குடும்பம் செய்யனும்…முதல் தடவ வாங்கின சரி….. அடுத்தத் தடவ நீ சேர்த்து வைச்சிக்கோ… பிள்ளைகளுக்குத்தான் துணிமணில்லாம் இங்க வழியழியுதே (அதிகமாக இருக்கிறது)” என்றார்.

“சரி ஆத்தா……” என்று மதுரவசனியும் உடனே ஒத்துக்கொண்டாள்.

அன்று மாலையில் வீட்டுக்குள் ஓடி வந்த ஆயுஷ், “அம்மா பட் தாத்தா வந்திருக்கா…” என்று ஹரிணியின் சேலையைப் பிடித்துக் கொண்டுக் கூற

“என்ன சொல்ற கண்ணா..?”
“அண்ணி… ஆனால் ஒன்னு தாத்தா வந்திருக்காரு.. அதான் அவன் அப்படி சொல்றான்..” என்று பிரியா சொன்னதும் தனது மாமியாரிடம் சென்று,

“அத்தை…..பொலுவாயன் தாத்தா வந்திருக்காராம்…..” என ஹரிணி சொல்ல

“அய்யோ அண்ணி ஆனால் ஒன்னு தாத்தா…பொலுவாயன் இல்ல..” என்று ப்ரிகுட்டிச் சொல்ல

பூம்பொழில், “ப்ரிக்குட்டி... அந்த தாத்தா பேரு தர்மராசுடா… அவருக்குப் பல்லெல்லம் கொட்டிப் போனதால்ல பொலுவாயன்னு சொல்வாங்க…. அது மாதிரி…. எது சொன்னாலும் ஆனா ஒன்னுன்னு சொல்வாரு.. அதான் அப்படியும் சொல்வாங்க..” என விளக்க

“அப்போ.. இப்பவும் அப்படி சொல்வாரா பெரியம்மா..” என அமுதனும் ப்ரியாவும் கேட்க

“ம்ம்.. சொல்வாரு…. அவர் பேசுறதைக் கேட்டா தெரியும்..” என்றபடி திண்ணைக்குச் செல்ல, அதற்குள் சுலோச்சனா மதுரவல்லியை அழைத்து வந்துவிட்டார்.

“வாங்கண்ணே..” என மதுரம் வந்தவரை வரவேற்க,

மோகனா கலக்கிய காபியை ஹரிணிக் கொண்டு வந்து தந்தாள். அதை வாங்கியவர் ,

“ஆனா ஒன்னு… மதுரம்…. பேரனுக்கு ஏத்தப் பேத்தியத்தான் பிடிச்சிருக்க….. என்ன இருந்தாலும் நம்ம தீபாவோட பொண்ணாச்சே.. வெளியூர்ல படிச்சு வளந்தாலும் நம்ம பழக்கவழக்கம் அறிஞ்ச புள்ளையா இருக்கு....” எனப் பாராட்ட,

“ஆமாண்னே….. நீங்க எப்படி இருக்கிங்க…. இந்த பக்கம் ஆளையே காணோம்..” என்றவர் ஹரிணியை மெச்சுதலாய்ப் பார்த்தார்.

“வயல்ல கொஞ்சம் வேலை…. ஆனா ஒன்னு.. உங்கிட்ட ஒரு சேதி சொல்லனும்னு தான் நான் ஓடியாந்தேன் மதுரம்..”

“என்ன சேதி?”

அதற்குள் அவர் ‘ஆனால் ஒன்னு’ சொன்னதைக் கண்டச் சின்னவர்கள் பூம்பொழிலைப் பார்த்துக் கண்ணால் சிரிக்க, ஏதோ முக்கியமான விசயம் அதை சிறியவர்கள் கேட்கக் கூடாது என்று நினைத்தவர் அவர்களை ஹரிணியிடம் மெதுவே கூட்டிச் செல்ல சொன்னார்.

சின்னவர்கள் உள்ளே செல்ல, மோகனா ஹரிணியிடம் ,

“என்ன மருமகளே….என் காபினால நீ நல்ல பேர் எடுத்திட்டியா….?”

“அத்தை…. அவர் என் பழக்க வழக்கத்தைதான் பாராட்டினார்… உங்க காபியை இல்ல….”

“ஹே.. நீ போய்.. காபி கொடுத்தவாசிதான் அவர் அப்படி சொன்னாரு.. பார்த்தியா….. சரி.. சரி... இந்த பாராட்டுக்குப் பதிலா என்ன தர எனக்கு…?”

“என்ன அத்தை…. மாமியார் கொடுமைல்லாம் பண்றிங்க..?” என ஹரிணி சிணுங்க

“என்ன செய்றது…. பெரியக்காவும் சின்னக்காவும் உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க…. அப்போ நானாவது மாமியார்னு கெத்துக் காட்ட வேண்டாமா…?”

“இப்போ.. என்ன வேணும்…”

“ஹி ஹி.. உன் மொபைல்ல ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணு ஹரிணிமா…”

“ஹா ஹா… இதுக்குத்தான் இவ்வளவு சீனா அத்தை… உங்க நெட் பேக் என்னாச்சு..?”

“அது ஒரு நாலு சீரியல் பார்த்தேனா… அதுவும் ஒரு டர்கிஷ் சீரியல் சமயா இருக்கும்… அப்படியே எல்லாம் போச்சு..”

“ஓஹ்… ஒரே நாள்ல காலி செஞ்சா மாமா திருப்பிப் போட மாட்டாங்க.. அதான் எங்கிட்ட கேட்கிறீங்களா..?”

“ம்ம்.. ஆமா.. நான் என்ன செய்றது…. ஒரு எபிசோட் பார்த்தா அடுத்துப் பார்க்கவும் தோணுது…. அக்காங்க ரெண்டு பேருக்கும் இருக்க ஒரே எண்டர்டெயின்மெண்ட் சீரியல் தான்.. அதுவும் மூணு ஆளுங்களும் நியூஸ் பார்க்காம இருந்தா தான்.. நம்ம வீட்டு குட்டிப்பிசாசுங்க வேற டிவி தராதுங்க… எனக்கோ கதை புக்காவது படிப்பேன்… அக்காகளுக்கு அதுவும் இல்ல.. அதான் நான் டிவி பார்க்காம போன்ல பார்த்துக்கிறேன்..” என்று புரிதலோடு சொல்ல ஹரிணிக்கு அந்த குடும்பத்தில் தானும் ஒருத்தியாய் இருப்பதில் மனம் நிறைந்தது.

ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், தாங்கிப் பேசி, தட்டிக்கொடுக்கும் உறவுகள் எத்தனை பேருக்கு வாய்க்கும்.. ? அதுவும் வேலை தெரியா விட்டால் கூடத் தன்னைக் குறைக் கூறாது, உதவி செய்யும் உள்ளம் கொண்ட மாமியார்கள் வாய்த்ததற்குத் தன் ஈஷ்ட தெய்வம் ஸ்ரீராமனுக்கு நன்றி சொன்னாள்.

அங்கே திண்ணையில் வந்திருந்த தர்மராசு அதாகப்பட்டது ஆனால் ஒன்னு அவர்கள் ,

“எப்போ மதுரம்…. சிவா பொண்ணுக்கு மாப்பிள்ள பார்க்கப் போற… பொண்ணுப் படிச்சு முடிச்சிட்டாளா…?”

“முடிச்சிட்டா அண்ணே…. இனிதான் பார்க்கனும்..”

“ஆனா ஒன்னு தங்கச்சி.. பொம்பளைப் புள்ளைய காலாக்காலத்துல கரை சேர்த்திடனும்..”

“ஆமா..நீங்க சொல்றது சரிதாண்ணே.”

“சரி அப்போ சின்னவளுக்கு பாருங்க… ஆனா ஒன்னு நான் நல்ல வரனா கொண்டு வந்தா அவனைத் தான் கட்டிவைக்கனும்..”

“அதுக்கென்ன நீங்க தான் சின்ன மருமகளைக் கூட்டிட்டு வந்தீங்க.. தங்கமா இருக்கா…. மூத்தவளுக கூட ஒத்துப்போறா… நீங்களே உங்க பேத்திக்கும் பாருங்கண்ணே…” என்று சொல்லப் பெரியவரின் மனம் நிறைந்து போனது.

மதுரவல்லியும் சீக்கிரம் தன் காலத்துக்குள் மதுரவசனியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அவரது முடிவை தன் மகன்களிடமும் தெரிவித்தார். இரண்டு நாள் பிறந்த வீட்டில் தங்கி விட்டு மீண்டும் சென்னைப் பயணப்பட்டாள் மதுரவசனி தன் தோழியுடன்.

**********************************************************************************
ரகுவுக்குப் பயத்தில் வேர்த்துக் கொட்டியது. நந்தனிடம் கடந்த ஏழு ஆண்டுகளாக அவன் வேலை செய்கிறான். அவனுக்குக் கோபம் வராது. வந்தால் அவ்வளவு தான்.. எதிரில் இருப்பவர் காலி.

நந்தன்….. பெயருக்கேற்றார் போல் அந்த கண்ணன் ஆயர்பாடியில், பாடிக் கோபியரை மயக்கியது போல் இவனது குரலுக்கு மக்கள் அடிமையாயிருந்தனர். அப்படிப்பட்ட வசியம் செய்யும் குரல் அவனது. அதை விட அவனது தோற்றம் அப்படி வசீகரமானது. அதற்கே அவனுக்கு ஏகப்பட்டப் பெண் விசிறிகள்.

நந்தன் அதிகம் பேச மாட்டான். அழுத்தம் ஜாஸ்தி. பாட மட்டுமே வாய்த்திறப்பான். மற்ற நேரம் அமைதி. அமைதி… அமைதிதான்…!! அந்த அமைதியில் அவன் என்ன தேடுகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம்…. நந்தனின் கோபத்திற்குக் காரணம் அவனைப் பற்றிப் பத்திரிக்கையில் வந்த செய்தி.

அவன் பாடகனாகி இத்தனை ஆண்டுகளில், ஒருமுறைக் கூட அவனைப் பற்றி இப்படி செய்தி வந்ததில்லை. அதுவும் இப்படி அவதூறாக..!

இந்த அடையாளத்திற்காக அவன் பட்ட கஷ்டங்கள் எத்தனையோ...? அதையெல்லாம் பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக இப்படி செய்திப் போட்டு கொச்சைப்படுத்தலாமா…?அவன் மனம் கொதித்தது.

அந்த பத்திரிக்கையைப் பார்க்க விடாமல் ரகு தடுத்து விட்டாலும், சில விஷமிகள் போன் செய்து நந்தனை கேள்வி கேட்க, உடனே ரகுவை பத்திரிக்கை வாங்கி வரச் சொன்னான்.

‘பிரபல பாடகர் நந்தன் நடிகை சுவப்னாவிடம் காதல் சொன்னார்’ என்ற செய்தியைக் கண்டவன் அந்த பத்திரிக்கையைக் கிழித்து வீசினான்.

சுவப்னாவை அவன் சில விழாக்களில் பார்த்துள்ளான். அவள் இவனிடம் மயங்கிப் போய் வந்து விழுந்து விழுந்துப் பேச, அதையெல்லாம் பிடிக்காத நந்தன் அவளிடம் விலக, அவளோ மீண்டும் அவனைத் தேடி வந்து போன் போட்டெல்லாம் டார்ச்சர் செய்து அவனுக்கு எப்போதாவது வரும் அதீத கோபத்தைத் தர, அவளைக் கண்டபடித் திட்டித் தீர்த்துவிட, அந்த கடுப்பில் இப்படி ஒரு பேட்டியை வெளியிட்டிருக்கிறாள். தங்களது பாப்புலாரிட்டிக்காக பத்திரிக்கையும் செய்தியை ஆராயாமல் வெளியிட்டு விட்டது.

இப்போதும் அந்த சுவப்னா போன் செய்து, “பார்த்தியா நந்தன்…. இப்போ என்ன செய்யப் போற… இனிமே நீயே விரும்பாட்டியும் என் பேரும்.. உன் பேரும் சேர்ந்து பத்திரிக்கையில் வருமே…” என்று கடுப்பேற்ற உடைந்து போனது நந்தனின் ஐபோன்..

“ரகு.. எனக்கு இப்போவே அந்த ஸ்வப்னாவைப் பேட்டி எடுத்தது யாருன்னு தெரியனும்…” எனக் கத்த

“பாஸ்…. வேண்டாம்... நீங்க இப்போ எப்படி ரியாக்ட் செஞ்சாலும்.. அதைப் பத்தி எழுதுவாங்க… வேண்டாம் விட்டுடலாம்… செலிப்ரட்டினாலே இப்படிதான்…” என சமாதானம் சொல்ல

“இப்போ விட்டா இனிமே இப்படி செய்வாங்கடா… இதான் முதலும் கடைசியுமா இருக்கனும்…. இப்போ நீ செய்யப்போறியா இல்லையாடா?” என அவன் கர்ஜிக்க

“பாஸ்….பத்திரிக்கைத் தர்மம்னு சொல்லி நமக்கு டீடெய்ல்ஸ் தர மாட்டாங்க…”

“அந்த ஈர வெங்காயம் எனக்குத் தெரியாதாடா…… இப்போ எனக்குத் தேவை என்னைப் பத்தி எழுதுன ஆளோட முழு விவரம்….. நீ செய்றீயா… இல்ல.. நானே கண்டுபிடிச்சிக்கவா…?”

“இதோ பாஸ்…” என்றவன் பயந்துப் போய் அவனுக்குத் தெரிந்த ஆட்கள் மூலம் விசாரித்து சொன்னத் தகவல்கள் நந்தனை ஆத்திரத்தின் விளிம்பில் கொண்டு சென்றன….
விவரம் அறிந்தப் பின் தனது காரை எடுத்துக்கொண்டு அவன் சீறிப்பாய்ந்தான். ரகுவும் பயத்தில் அவனைத் தனது காரில் பின் தொடர்ந்தான்.

ஆட்டம் தொடரும்..!!!
 
Top