Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 20 [FINAL]

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 20:

ஒரு வருடத்திற்குப் பின்..

தஞ்சாவூரில் உள்ள பிரபல திருமண அரங்கில் ஜோராக நடைப்பெற்றது ஹம்சகீதாவின் வளைகாப்பு வைபவம்.

வேலைப்பார்த்துக் கொண்டிருந்த மதுரவசனியை அழைத்த ராஜா,


“மது…. முதல்ல நீ போய் சாப்பிட்டு வா…” எனச் சொல்ல


“ஆம்பிளைங்க எல்லாம் சாப்பிடுறாங்க.. போய் நீங்களும் சாப்பிடுங்க.. நான் அப்புறமா சாப்பிடுறேன்…” என்றாள் மதுரவசனி.


தன் எட்டு மாதக்குழந்தை ஆதித்யாவைக் கையில் வைத்திருந்த ராஜா,

“மது.. சொன்னா கேளு.. முதல்ல நீ சாப்பிடுடா.. அப்புறமா ஆதி அழ ஆரம்பிச்சிட்டா நீ சரியா சாப்பிட மாட்ட… இவனுக்குப் பால் கொடுக்கனும்.. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கத்து அழுவான்.. அதுக்குள்ள நீ சாப்பிட்டுடி..” என அவளிடம் வலியுறுத்திச் சொல்ல,

அங்கே வந்தாள் கீர்த்தி. கீர்த்திக்கும் சரணுக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன.

“அண்ணி… அண்ணா உங்களை சாப்பிட வைக்காம போக மாட்டார்.. ஏன் நிக்கிறிங்க… நானும் சாப்பிட போறேன்.. வாங்க…” என அழைக்க

“இல்ல…. கீர்த்தி… நான் சாப்பிட்டு வரதுக்குள்ள இவன் அழ ஆரம்பிச்சிடுவான்… அதுக்கு அப்புறம் தூங்கும்போது இவரைத் தான் தேடுவான்.. இவரும் சாப்பிடாமலே அவனைத் தூக்கிப் போட்டுப்பார்.. அப்படியே எத்தனை நாள் சாப்பிடாம தூங்கியிருக்கார் தெரியுமா… அவனைத் தூக்கிப் படுக்கையிலும் போட மாட்டார்.. கேட்டா தூக்கம் கலைஞ்சிடும்பார்… சண்டைப் போட்டு நான் ஓய்ஞ்சுப் போயிட்டேன்… புள்ளைன்னா இவருக்குக் கண்ணே தெரியாது…” எனக் கணவனின் பிள்ளைப் பாசம் கண்டு அவள் உண்மையை உரைத்தாள்.

ராஜா அப்படித்தான். அவன் மகனைக் கையில் ஏந்திய தருணம் முதல் தாங்கியது அவன் தான். அவனது ரத்த உறவை அப்படி போற்றிப் பாதுகாத்தான். குழந்தை என்று வந்துவிட்டால் அவனுக்குக் கண்ணே தெரியாது. அப்படி ஒரு பாசம்…!! என் குழந்தை என்ற கர்வம்…!

“அண்ணி.. நீங்க பேசுறதைப் பார்த்தா அண்ணா மேல உள்ள அக்கறை மாதிரி தெரியல… என் மருமகன் மேல உள்ள பொறாமை மாதிரி இல்ல தெரியுது…” எனக் கிண்டல் செய்ய

“சரியா சொன்னடா கீது… என் தங்கச்சி புத்திசாலி.” என ராஜா ச

“அண்ணா… நீங்களும் டிமிக்கிக் கொடுக்காம.. பத்து நிமிசம் சேர்ந்தே சாப்பிட்டு வாங்க…. நான் இவனை வைச்சிக்கிறேன்…” எனச் சொல்லவும் இருவரும் சேர்ந்து சாப்பிடச் சென்றனர். ஆனால் பத்து முறை பத்திரம் சொல்லியே தன் மகனைத் தங்கையிடம் விட்டுச் சென்றான் ராஜ் நந்தன்.

குழந்தையைக் கையில் வைத்திருந்த கீர்த்திகாவைத் தேடிய அவள் கணவன் சரண்,

“ஏய்… கீத்து….” என அன்போடு அழைக்க

“கீத்து.. ஓலைன்னு கூப்பிடாதீங்க மாமா…” எனச் சிணுங்க

“சரிடி… சரிடி… ஆமா என்ன சொல்றான் என் மருமகன்…?” என்றபடி குழந்தையை வாங்க முயற்சிக்க, அவனோ கீர்த்தியிடமிருந்து போக மறுத்தான்.

“பார்டா… வர மாட்டியா மாமா கிட்ட….” என அவன் சொடுக்குப் போட்டு அழைக்க

“நீங்க அவனுக்குப் பழக்கமில்ல இல்லையா… நான் அஞ்சு மாசம் அவன் கூடவே இருந்திருக்கேன்.. வயித்துல இருக்கும்போது என் பேச்சைக் கேட்டுட்டே இருந்திருப்பான் இல்லை.. அதான்…” எனக் கீர்த்தி சொல்ல

“ஆமா எங்கடி உங்க பெரியண்ணா பழக விட்டார்…? அவர் தான் என் தங்கச்சியை வீட்டுக்கு அனுப்ப மாட்டாரே…” எனக் குறைபட,

“அவரே அனுப்பினாலும் அண்ணி வரமாட்டாங்க..” என்றாள் கீர்த்தி.

ஐந்து நாட்கள் பிரிந்திருந்ததுக்கே இருவரும் அப்படி ஏங்கிப்போயிருக்க, மதுரவசனி ராஜாவிடம் முன்பே சொல்லிவிட்டாள்,

“வளைக்காப்பு இங்கேயே வைச்சிக்கலாம்… உங்களை விட்டு நான் இரண்டு மாசமெல்லாம் போய் இருக்க மாட்டேன்… அப்படி போகனும்னா நீங்களும் வாங்க… முடியாதுனா எங்க வீட்டுல பேசி சம்மதிக்க வைங்க” என மிரட்டலாக சொல்ல

“நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா.. கண்டிப்பா செஞ்சிடுறேன் மது. என் மது எங்கூட இருக்க வைக்கறதை விட வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை எனக்கு இருக்கு…?” என்றான் பெருமையாக.

இந்த ஒரு வருடத்தில் மது ஊருக்குப் போய் இருந்த நான்கு நாட்களும் ராஜாவும் உடன் வந்திருப்பான். இல்லாவிட்டால் அவள் தனியா செல்லவே மாட்டாள்.


“கீத்து… சீக்கிரமே ஒரு அழகான பொண்ணா பெத்து கொடுத்து என் மருமகனைக் கரெக்ட் செய்யனும்டி..” எனக் கண்ணடித்து சரண் கூற

“அதுக்கு அப்புறம் நீங்க இவனைக் கரெக்ட் செய்யத் தேவையில்ல… இவனே நம்ம பொண்ணை செஞ்சிடுவான்..” எனச் சொல்லி சிரிக்க

அவள் தோளில் கைப்போட்ட வண்ணமே ,

“அதுக்கு முதல்ல உன்னைக் கரெக்ட் செய்யனும்டி..” என்றான் அவள் காதில் ரகசியமாய்.

ஹம்சாவைத் தன் தாய் வீட்டில் விடச் சென்ற தீபன் கிடைத்தத் தனிமையில் மனைவியிடம்,

“ஹம்மு… டெய்லி போன் செய்… ஆபிஸ்ல இருந்தா நான் எடுக்க மாட்டேன்.. கோச்சுக்காத…” எனச் சொல்ல

“அதெல்லாம் நான் கோச்சுக்க மாட்டேன்…”

“சரி ஹம்மு.. இப்ப என்னை லவ் பண்றியா..?” எனக் கேட்க

ஆயிரம் முறையாவது அவன் இக்கேள்வி அவளிடம் இதுவரை சலிக்காமல் கேட்டிருப்பான். அவளும் சலிப்பின்றி பதில் சொன்னாள்.

“உங்களை… லவ் பண்றியாவாம்..? லவ் பண்ணாமத்தான் இப்படி இருக்கேனா…?” என அவனை அருகில் இழுத்துக் கேட்க

“அதை ஒரு நாளாவது சொன்னியா…நீ..?”

“முதல்ல உங்க மேல கோவம் தான்.. அப்புறம்… நான் வேலையை விட்டுப் போனப்போ அக்ரீமெண்ட் படி ஒரு வருசம் முடியாம போனேன்… நீங்க நினைச்சிருந்தா அதை வைச்சு என்னை மிரட்டியிருக்கலாம்… ஆனா செய்யல.. அதுல உங்க மேல மரியாதை வைச்சிருந்தேன்…”

“மரியாதைக் கொடுத்த சரி.. இப்போ..

“இப்ப தான் மனசைக் கொடுத்திட்டேனே..” என்றவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்

“இது போதும் ஹம்மு.. ஜாக்கிரதை.. டெலிவரிக்கு முன்னாடியே நான் வந்துடுவேன்…. பார்த்து இருடா..” என்றபடி பிரிய மனமே இல்லாமல் மனைவியைப் பிரிந்து சென்றான்.


ஐந்து வருடங்களுக்குப் பிறகு..

தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்திர பிஸினஸ் கூட்டத்தில் அந்த வருடத்திற்கான சிறந்த தொழிலதிபர் விருது ‘திருமதி.மதுரவசனி ராஜ் நந்தனுக்கு வழங்கப்பட்டது.

பரிசைப் பெற்றக் கையோடு கணவனுக்கு அழைத்தவள், “நந்து… நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்..” எனத் தன் சந்தோசத்தைச் சொல்ல

“ நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்..” என்றான் அவளை விட உற்சாகமான குரலில் அவளது கணவன்.

“அதான் தெரியுமே… நீங்க என்னை விட எல்லாத்திலேயும் அதிகம்னு…” என்றாள் பெருமிதமாகவே.


“சரி மது.. அடுத்து என்ன ப்ளான்…?”

“ம்… இப்ப ஆடிட்டர் கூட மீட்டிங் இருக்கு.. அது முடிச்சதும் ராஜ் டவர்ஸ் போய் கொஞ்சம் ஆபிசைப் பார்த்துட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவேன்….”

“சரி நான் போய் ஆதியையும் ஆதிராவையும் ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வீட்டுக்குப் போறேன்… நான் இப்ப ஃப்ரியாத்தான் இருக்கேன்..” என்றான்.

ஆதித்யா ராஜாவின் மகன். ஆதிரா தீபனின் மகள். இருவருமே யூகேஜி படிக்கின்றனர்.

டிரைவர் இருந்தும் சுந்தரும் கூட பேரப்பிள்ளையை அழைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிய போதும் சம்பாதிப்பது பிள்ளைக்களுக்காகத் தானே நானே அழைத்து வருகிறேன் என்று விட்டான்.

“சரி.. ஆனா பிள்ளைங்க கேட்கிறாங்கன்னு ஐஸ்கீரிமா வாங்கித் தராதிங்க… அப்புறம் சளிப்பிடிச்சா உங்களை சும்மா விட மாட்டேன்” என மிரட்ட

“சரிதான் போடி… என் பசங்களுக்கு நான் வாங்கித் தருவேன்..” என்றான் மானசீகமாய். கத்தி சொன்னால் அவள் அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவாளே என்ற பயம் தான்.

இப்படி பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று ஐஸ்கீரிம் வாங்கித் தருபவன் பின்னர் அவர்களுக்கு ஜூரம் வந்தால் மருத்துவர் ஊசிப் போட்டால் ஹாஸ்பிட்டலை ஒரு வழியாக்கி விடுவான். தன் பிள்ளை தம்பி பிள்ளை என்ற பாகுபாடே அவனிடம் கிடையாது. இரு குழந்தைகளும் அவனுக்கு உயிர்.

சாயங்காலம் வீடு திரும்பும் போது காரில் கடந்த கால நினைவுகளோடு பயணித்தாள் மதுரவசனி.
 
ஆதித்யாவுக்கு ஒரு வயதான பின் சுந்தர் ராஜனிடம் வந்தவன்,



“அப்பா… நீங்க என்னை ஆபிஸ் பார்த்துக்க சொன்னீங்க இல்லையா.. அது பத்திப் பேசனும்… எல்லாரையும் வரச் சொல்லுங்க…” எனச் சொல்ல



தீபன், வைரம், சுந்தரம், ரகு எல்லாரும் கூடியிருக்க, ராஜாவே பேசத் துவங்கினான். ஹம்சா குழந்தைப் பிறந்த காரணத்தால் ஊரில் இருந்தாள்.



“அப்பா என்னை ஆபிஸ் வர சொன்னாரு… நான் கொஞ்ச நாள் டைம் கேட்டேன்…” என ஆரம்பிக்க



“ராஜா…. நீ கொஞ்ச நாள்னு சொல்லி ஒரு வருசம் ஆச்சுடா “ என சுந்தர் சொல்ல



“சாரிப்பா…நான் இப்ப ஒரு முடிவு எடுத்திருக்கேன்..உங்களுக்கு சம்மதம்னா இதையே செஞ்சிடலாம்..” என ராஜா பேசத்துவங்கினான்.



“அப்பா… எனக்குப் பாடறது தான்ப்பா பிடிச்சிருக்கு… அது இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணல… அதனால் பிஸினஸ் பார்க்க எனக்கு இப்போ சுத்தமா இன்ட்ரெஸ்ட் இல்ல..” என்றதும்



“டேய்..” என அவர் குறுக்கீட



“அப்பா ப்ளீஸ்.. பேச விடுங்க..” என்றவன் தொடர்ந்து பேசலானான்.



“தீபனே எப்பவும் போல் பார்க்கட்டும்.. என்னோட பிஸீனஸை எல்லாம் ரகு பார்த்துப்பான்.. நான் புதுசா வாங்கின ஸ்டார் ஹோட்டலை

ரகு பெயருக்கு எழுத சொல்லிட்டேன்..” என்றதும் ரகு,



“அண்ணா..எனக்கு அதெல்லாம் வேண்டாம்..” என மறுக்க



“டேய்… உனக்கு வேணுமா வேண்டாமானு கேட்கல… அந்த ஹோட்டல் உனக்குத் தான்.. இதை உனக்கு நன்றிக்கடனா நான் செய்யலடா… என் தம்பி உனக்கு நான் செய்றேன்… குறுக்கப் பேசாத” என்று கத்தியவன்



“மதுவுக்கு வேலைப் போகனும்னு ரொம்ப ஆசைப்பா… அதனால் என் சார்பா அவ கம்பெனியைப் பார்த்துக்கட்டும்.. இதுல உனக்கு எந்த ஆட்சேபணையும் இருந்தா சொல்லுடா.. தீபு… நான் வரலன்னு நினைக்காதீங்க… எப்ப என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்றேன்… குழந்தையோட இருக்கிறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு… பிஸினஸ் பார்க்க எனக்கு இப்ப ஆர்வம் இல்ல அதான் உண்மை… நீங்க என்னப்பா சொல்றீங்க..?” என்று கேட்ட மகனிடம்



“மது ஆபிஸ்ல பொறுப்பு எடுத்துக்கட்டும்… ஆனா நீயும் வாயேன் ராஜா..” என அவர் வருந்தி அழைக்க



“இல்லப்பா.. நான் வர விரும்பலன்னா… மதுவையும் அனுப்ப மாட்டேன்… அவ வேற நான் வேற இல்ல… அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு..எனக்கு இல்ல.. என்னோட ஷேர்ஸ் கூட ரகு தான்ப்பா பார்க்கிறான்… நான் இதையெல்லாம் கவனிச்சு பத்து வருஷம் ஆகுது… அதான் சொல்றேன்… புரிஞ்சிக்கோங்க..” என்றதும் அவர் மகனது முடிவையே ஏற்றார்.



தீபனும் “அண்ணி வரதுல்ல எனக்கு சம்மதம் தான்ப்பா..” எனவும் அவ்விஷயம் முடிந்தது.



இரவில் மதுரவசனியிடம் ராஜ் நந்தன்,



“என்னடா மது… உனக்கு ஓகேவா… சந்தோஷம் தானே…?” எனக் கேட்க



அவன் தோள் சாய்ந்தவள், “ரொம்ப சந்தோஷம்.. ஆனா நான் முன்னாடி பார்த்த வேலையே பார்க்கிறேன்… படிப்படியா வேலைக் கத்துக்கிட்டு பொறுப்பேத்துக்கிறேன். எனக்கு வாய்ப்பு இருக்குன்னு தகுதியை வளர்த்துக்காம.. ஒரு உயரத்தை அடையக் கூடாது…” என்றவளை வாஞ்சையோடு பார்த்தவன் சில மாதங்களுக்கு முன் ஹம்சாவுடன் மது பேசிக்கொண்டிருந்ததைத் தான் கேட்டதாகச் சொன்னான்.



“அன்னிக்கு நீ பேசனதும் தான்.. எனக்குத் தோணுச்சு… நீ கேட்டு நான் எதையும் மறுக்க மாட்டேனே மது… எங்கிட்ட நீ சொல்லாம எப்படி தெரியும்… ஒரு முறை மறுத்தேன் தான் ஒத்துக்கிறேன்.. ஆனால் உன்னோட சுதந்திரம் உங்கிட்ட தான் இருக்கும்… அதை நான் உனக்குத் தர முடியாது.. உன்னோட சுதந்திரம் நீயே உணர வேண்டிய ஒன்று. ஒரு நல்ல ஆண் பெண்ணுக்கு எல்லைகள் வகுக்க மாட்டான்.. ஒரு பெண்ணிற்கு உண்மையில் எல்லைகள் கிடையாது மது.. ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்ட உயர்வை யாரும் எதுவும் சொல்ல முடியாது.. என்னோட பேஷன் மியூசிக்… உனக்கு பிஸினஸ்னா நீ தான் அதை அடைய போராடனும்..” எனத் தீவிரமாகப் பேச



“எப்போ இருந்து நீங்க பெண்ணியவாதி ஆனிங்க..?” என அவன் கன்னம் வருடி அவள் கேட்க



“ஏட்டி.. நான் பெண்ணியவாதி இல்ல.. பக்கா சுயநலவாதி.. என் பொண்டாட்டி.. என் குடும்பம்னு நினைக்கிற சுயநலக்காரன்.. என்னோட மனைவியோட ஆசையை அவ கனவை அடையத் துணையா நான் இல்லனா என்ன கணவன்…? எல்லாருக்கும் அப்படி அமையாது.. ஆனா சில இடத்துல பெண்கள் தங்களோட சுயத்தை அன்புன்னு ஒரு வேலிப் போட்டு அதைத் தாண்டாம இருக்காங்க… அன்பு அரண் தானே ஒழிய வேலியா இருக்கக் கூடாது…. உனக்குப் பிடிச்சதைச் செய்…” என்றான் காதலோடு.



அவன் மடியில் படுத்துக் கொண்டவள் ,



“எனக்கு சின்ன வயசில தாத்தா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் கணக்குப் பார்க்கும்போதே அக்கௌண்ட்ஸ் மேல ஈடுபாடு.. ஆனா பெரிசாக ஆக எங்க வீட்டில ஆண்கள் தான் பிஸினஸைப் பார்க்கனும்.. பொண்ணுங்க எல்லாம் படிச்சுப் பெயருக்கு ஒரு டிகிரி வாங்கனும்.. அப்புறம் கல்யாணம் நெக்ஸ்ட் குழந்தை… அப்படியே சொல்லிச் சொல்லி அதே வீட்டுல பிறந்த எனக்கு பெண் என்ற காரணத்தால கண்ணுக்குத் தெரியாத நூலிழை அளவு உரிமை மறுக்கப்பட்டப்போ தோணின வலி அது.. ஆனா நீங்க என்னை எப்பவும் அப்படி உணரவிட்டதே இல்லை…. தாங்க்ஸ்… இவ்வளவு நாளா வீட்டுல உட்கார்ந்து போர் அடிச்சுது.. நானே இன்னும் கொஞ்ச நாள் ஆனா உங்க கிட்ட சொல்லியிருப்பேன்… அதுக்குள்ள நீங்களே ஏற்பாடு பண்ணிட்டீங்க… என் ராஜா ராஜா தான்..” என்றபடி அவன் கன்னத்தில் முத்தமிட அதை நினைத்துப் பார்த்தவளின் முகத்தில் வருடங்கள் கடந்தும் காதலால் கனிந்த காரிகையின் முகம் பொலிவை இழக்கவில்லை.



இன்று கணவனுக்கு நல்ல மனைவியாக, ஆதிக்கு நல்ல அன்னையாக, பிஸீனஸ் உலகில் தனக்கென ஒரு அடையாளத்தோடு இருக்கிறாள் மதுரவசனி. வெளியே வேலைகள் இருந்தாலும் வீட்டில் தன் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டாள் மதுரவசனி. அவளது வீட்டாருக்குக் கூட அவ்வளவாகப் பிரியமில்லை அவள் மீண்டும் வேலைக்குச் செல்வது. ஆகையால் குடும்பத்தில் எந்த வித குறையும் வரக் கூடாது என்பதில் அவள் அத்தனை தீவிரமாய் இருக்க, அனைத்திலும் அதிகமாய்க் கவனமெடுத்து யாரும் குறைச் சொல்லாத அளவு நடந்துக் கொண்டாள்.



வீட்டுக்குள் நுழைந்தால் ராஜாவும் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்க, இவளைக் கண்டதும் உற்சாகத்தோடு வந்து,



“ம்மா…சூப்பர்…” என ஆதித்யாவும்



“பெரிம்மா சூப்பர்….” என ஆதிராவும் அவள் விருது வாங்கியதற்கு வாழ்த்து சொன்னார்கள்.

வைரம் சுந்தர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க,

வைரம், “நல்லபடியா இருடா மது… சீக்கிரமே எனக்கு இன்னொரு பேரப்பிள்ளையைப் பெத்துக்கொடு…” என வாழ்த்த



சுந்தரமோ மனைவியை முறைத்து விட்டு ,

“அதைத் தவிர வேற என்ன சொல்ல தெரியும் உனக்கு…. என் மருமகளுக்கு வெளியே என்ன பேரு தெரியுமா… அப்படி செய்றா பிஸீனஸ்… எந்த டீலிங்கும் உடனடியா முடிச்சிடுவா… லாபம் தர மாதிரிதான் ஸ்டாக்ஸ்ல முதலீடு செய்வா.. நீ இன்னும் நல்லா பெரிய இடத்துக்கு வரனும்டா மது” என மனதார வாழ்த்தினார்.



வைரமோ அதைக் கண்டுகொள்ளாமல் ,

“ஹம்சாம்மா… ஸ்வீட் செஞ்சோமே எடுத்துட்டு வா..” எனச் சொல்ல அவளும் தஞ்சாவூர் ஸ்பெஷல் அஷோகாவோடு வந்து,



“கங்கிராட்ஸ் டி மது..” என்று வாழ்த்தினாள். ஹம்சாவுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவளுக்குக் குடும்பம் மட்டுமே போதுமானதாக இருந்தது. அது அவளது தவறில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள்… அதற்கேற்றாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். மதுரவசனியை மாமனார் புகழ்வதைக் கண்டு ஹம்சா என்றுமே பொறாமைக் கொண்டதில்லை. மதுவின் விருப்பம் பிஸீனஸ். ஆனால் தனக்கு அதில் நாட்டமில்லை என்பது ஹம்சாவுக்குத் தெரியும். அதனால் அதனைக் கொண்டு அவள் பொறாமைக் கொள்வதில்லை.



“தேங்க்ஸ் ஹம்சா… சூப்பரா செஞ்சிருக்கடி…” என்றபடி ஸ்வீட்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் மதுரவசனி.



தீபனும், “வாழ்த்துகள் அண்ணி…” என்று வாழ்த்த



“தேங்க்ஸ்ண்ணா..” என்றாள். ஆம் அவளுக்கு அத்தான் என்றெல்லாம் அழைக்க பிடிக்காது. அதனால் தோழியின் கணவன் என்ற முறையில் அண்ணன் என்றே அழைப்பாள். அது போல் தீபனும் அண்ணன் மனைவி என்ற மரியாதையில் வயதில் சிறியவளானாலும் அண்ணி என்றே அழைப்பான்.



அனைவரும் உணவுண்டப் பின், தங்கள் அறையில் மகனோடு கதைப் பேசிக் கொண்டிருந்தான் ராஜா.



“ஆதிக்கண்ணா… அம்மாட்ட வாங்க..” என்றபடி மகனை மடியில் வாங்கியவள்,



“என்ன டா ஆதி… இன்னிக்கு எத்தனை ஐஸ்கீரிம் சாப்பிட்ட…? இரண்டா மூணா…?” என விசாரிக்க



“சாப்பிடலம்மா..”



“ஐஸ்கீரிம் சாப்பிட்டு அம்மாகிட்டச் சொல்லக் கூடாதுன்னு அப்பா சொல்லிக் கொடுத்தாராடா..” என்றதும் குழந்தையான அவன் யோசிக்காமல்



“ஆமாம்மா…” என்றதும்

“உன்னை… உடம்பு முடியாம போயிடும்டா… செல்லம்…”



“சரிம்மா… இனிமே சாப்பிட மாட்டேன்…” என உடனே தாய் சொல் கேட்டான் ஆதி. ஆதி அப்படித் தான் தாய் தந்தை இருவரின் சொல்லும் உடனே கேட்பான். ராஜா செல்லம் கொடுத்தாலும் மது கண்டித்தால் வாங்கிக் கொள்வான்.



“சாப்பிட்டுக்கோ செல்லம்.. ஆனா கொஞ்சமா சாப்பிடனும்..” என்றவள் அன்றைய தினம் நடைப்பெற்றதை மகனிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள் வழக்கம்போலவே.



அவள் வெளியே ஒரு தொழிலதிபராய் வெல்லவும் சரி தாயாக இருக்கவும் சரி ராஜா என்றுமே அவளுக்குத் தோள் கொடுத்தான். அது போல் தாயாக மகனை அவள் கண்டிக்கும்போதும் குறுக்கே பேசவே மாட்டான்.

ஷேர் மார்க்கெட் நிலவரங்களைக் கணித்து அவளுக்குத் தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் செய்வான்.



மகனும் தாயும் பேசிக் கொண்டே இருக்க, ரகு போன் செய்யவும் அவனிடம் பேசப் போனான் ராஜா. ரகுவுக்குத் திருமணமாகி இரண்டு வயதில் பெண்குழந்தை உள்ளது. ரகு ஹோட்டலை நிர்வகித்துக் கொண்டாலும் ராஜாவின் இன்றைய மேனேஜர் அவன் தான். அதை ராஜாவே மறுத்தப் போதிலும் ,



“நான் தான் அண்ணா உங்களுக்கு செய்வேன்..” என்று பிடிவாதமாய் அவனுடனே இருக்கிறான்.”



ரகுவிடம் பேசியவன் அவன் குழந்தையிடமும் மனைவியிடமும் பேசி விட்டு வர, அதற்குள் ஆதி உறங்கிப் போயிருந்தான்.



“மது…” என சத்தமாக அழைத்தவன் குழந்தை உறங்குவதைக் கண்டு சத்தம் குறைத்து, மது என்று கிசுகிசுப்பாய் சொல்ல
 
“என்னங்க..” என்றவளை அவனுக்குப் பக்கத்து அறைக்குள் இழுத்துச் சென்று அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்து, காதில் ஆழ்ந்து பல வருடங்களுக்கு முன்னால் சொன்னது போலவே சொன்னான்.



“எனக்கு ஃப்லீம்ஃபேர் கிடைச்சிருக்காம்…”



“வாவ்.. சூப்பர்…. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா…?” என்றபடி அவனை கட்டிக் கொள்ள



“நீ மட்டும் வரலன்னா எனக்கு எதுவுமே சாத்தியமில்ல மது…. தேங்க்ஸ்….” என்று அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன்



“மது.. நான் அம்மாப்பிள்ளைன்னு உனக்குத் தெரியும் தானே…?”



“அது தான் ஊருக்குத் தெரியுமே… எனக்காத் தெரியாது.. கழுத வயசாகியும் அம்மா சாப்பாடுப் போட்டா தானே சாப்பிடுவீங்க…” என அவள் கிண்டலாய் சொல்ல



“உன்னை…. போடி… அதை விடு… எங்க அம்மா எது சொன்னாலும் நான் தட்டாமல் செஞ்சிடுவேன் இல்லையா..?”



“அய்யோ.. ஆமாங்க… என்ன விஷயம்…?” என அவள் பொறுமையிழந்து கேட்கவும்



“மது.. அம்மா இன்னொரு பேரப்பிள்ளை வேணும்னு கேட்டாங்க…. இல்லையா…” என்றபடி அவளுள் தன்னைத் தொலைக்க முயற்சிக்க, அவன் மயக்கத்தைக் கண்டுக் கொண்டவள் அவனுக்கு முன்னே அவனிடம் கிறங்கி மயங்கிப் போனாள். அவர்களது கண்டதும் கொண்ட மயக்கமல்ல.. கடைசிவரை உள்ள மயக்கம்..!!





கடவுள் நீதானா..?

நான் வரம் தான் கேட்டேனா…?



***********************************************************



ஃப்லிம்ஃபேர் விருதுக்காக வந்திருந்தனர் ராஜ் நந்தனின் குடும்பத்தினர் அனைவரும். மதுரவசனியின் குடும்பம் டீவியில் முன் அமர்ந்திருக்க, அவர்களோ நேரிலே சென்று அவன் விருதை வாங்கப்போவதைக் கண்டனர்.



மதுவின் நல்வாழ்வைப் பார்த்து அவர்கள் வீட்டினர் அனைவருக்கும் பெருமையே. டீவி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்த சரண் கூட,



மனைவியிடம், “என் தங்கச்சியை இப்படி டீவியில பார்த்தா தான் உண்டு… உங்கண்ணா அவளை விட மாட்டேங்கிறார்… நீ என்னடான்னா அவங்க கூப்பிட்டா என்னை விட்டு சென்னைக்குப் போற” எனக் குறைபட



“உங்களுக்கு திறமைப் பத்தலங்க…. எங்க அண்ணா மாதிரி அண்ணியையும் விடாம என்னையும் அவர் இருக்க இடத்துக்கு வர வைக்கிறார்.. அது உங்களால முடியாது மாமா…” எனக் கீர்த்திச் சொல்ல



“அது சரிதான்..” என்றான் ஆமோதிப்பாய்.



அவனது மடியில் அவர்களது மூன்று வயது மகன் ஸ்ரீப்ரசாத் அமர்ந்திருக்க, சுலோச்சனா, பூம்பொழில், மோகனா, ஹரிணி அனைவரும் டீவி முன் இருந்து நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.



அங்கு விழா நடக்கும் ஹைதரபாத்தில் தொகுப்பாளர் விருது கொடுத்த பின் ராஜாவைப் பாட சொல்ல அவன் ,



“நேர முள்ளைப் பின் இழுத்தும்

வாரம் எட்டு நாள் கொடுத்தும்

சுற்றும் பூமியைத் தடுத்துமே

போதவில்லையே

போதவில்லையே

உன்னைப் போல் போதை ஏதுமில்லையே…!”



என்று பாடினான். ஆம் அவன் மனம் குரலாய் மாறி அவன் மனைவியின்பால் குழைந்தது. அவனது காதல் போதாது… தீராது…!!



நிகழ்ச்சியெல்லாம் முடிந்தப் பின் அவர்கள் நட்சத்திர விடுதிக்கு வரும் வழி அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்த மனைவியின் புறம் பார்வையைத் திருப்பாதவன் அவர்கள் அறைக்குள் நுழைந்ததும்,



அவளைப் பற்றி அழுத்தமாய் முகமெங்கும் முத்தங்கள் பதித்தவன் “ஏன் அப்படி பார்க்கிற… விட்டா அங்கேயே கண்ட்ரோல் இழந்து எதாவது செஞ்சிருப்பேன்.. என்னை டார்ச்சர் பண்றதே உனக்கு வேலையாப் போச்சுடி…” என்றபடி அவள் இதழில் முத்தமிட,



“நீங்க இன்னிக்கு அந்த பாட்டு பாடினதும் நான் செம ஹாப்பி தெரியுமா…? உங்க காதல் குறையாதுன்னு தெரியும்.. ஆனா உங்க வாயால கேட்கும்போது இன்னும் சந்தோசம்…. சூப்பருங்க நீங்க,” என்றவள் அவனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.



அவளை இறுக்கி அணைத்தவன், “இந்த ராணி ராஜா கூட இருக்க வரைக்கும் ராஜா சூப்பர் தான் டி… உன்னோட இந்த சூப்பருக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்..” என்றான் அவள் கன்னங்களில் இன்னும் முத்தமிட்டவாறே.



“அதை நானும் சொல்வேன்.. இந்த ராஜாவால தான் ராணி ஜெயிக்கிறேன்…” என்றாள் நிறைந்த மனதோடு. பல வருடங்கள் அவள் மனதில் உழன்ற கேள்விக்கு அவளே விடையானாள்.



காதல் வாழ்க்கையோடு இயைந்த ஒன்று. இணைப்பிரியாத ஒன்று. அது உந்து சக்தி… அந்த உந்துதலே அவளை உயிர்ப்போடு வைத்து அவள் வாழ்வின் லட்சியங்களை அடைய உதவுகிறது. அன்பைத் தடைக்கான வேலியாக அமைத்துக் கொள்வதும், பாதுகாப்புக்கான அரணாய் அமைத்துக் கொள்வதும் அவரவர் கையிலே…!



“அது என்னடி ஜெயிக்கிறேன்னு சொல்ற.. ராஜா ராணி ஜெயிக்கிறோம்னு சொல்லு… நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாதாம்.. நாம்.. சொல்லு..” என்றவன் அவளை சொல்ல விடாமல் அவள் இதழ்களைச் சிறைச் செய்தான். நான் அழிந்துப் போய் நாமாய் ஆன அழகிய சங்கமம் அது.



ஆட்டம் நிறைவு!!!





**********************

Heyyyyyyyyyyyyy friendsssssssssssss thanks soooooooooooo much it is going to be 2 years since I have completed Raja Rani....thankssssssssssss for ur support and wishes.......:love::love::love::love::love::love::love:

thankssssssssssssssssssss much
ashokar story apuram neraya episodes my favorite lines elame இந்த கதையில வரதுதான்...ரொம்ப ரொம்ப நன்றிகள்
@Kavyajaya naane maranthalum epi crt ah keta thanga ponne over over daa


:love:?
 
Enaku epi venum naa naan thaane ketkanum.. ??

Sema story kaa.. athuvum alavuku meeriyathu aabathu aabathu nae peethiya kilapi viteenga athu mattum konjam enjoy panna vidala.. ?? paahh

Raja paiyan sooper thaan.. alavukku meeri alli koduthe mayakuraan ponga.. mathu too correct pair for him.. deepan saran avanga jodi hamsa keerthi raghu and all family member nu yarayum maraka mudiyathu ellarukum ovvoru role waiting for alar and aruvi.. ??
 
Last edited:
Top