Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 18

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 18:

பதினொரு மணிவாக்கில் தன் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து உளுந்து உடைத்துக் கொண்டிருந்தார் மதுரவல்லி. அவரைப் பார்க்க அவரது மகன்கள் ரவிச்சந்திரனும் சிவச்சந்திரனும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

தாய் வேலை செய்வதைக் கண்ட ரவி,
“என்னம்மா நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்ற… மத்த பொம்பளைங்களாம் எங்க…?” எனத் தாயின் மீதுள்ள அக்கறையில் கத்த,

“டேய்.. ரவி.. சும்மா இருக்கேன்னு நான் தான் இதை எடுத்துட்டு வந்தேன்.. சரி நீங்க இரண்டு பேரும் என்னடா இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்திருக்கீங்க…?” என விசாரிக்க

“சிவா சொல்லு..” எனயஜ் தம்பியை ரவிச்சந்திரன் ஊக்க,

“அது அம்மா…. சின்ன மாப்பிள்ளை போன் செஞ்சிருந்தார்மா..”
“அப்படியா.. மது எப்படி இருக்காளாம்டா… நல்ல இருக்காளா..?”

“மது நல்லா இருக்காம்மா.. மாப்பிள்ளை ஒரு விசயம் சொன்னாரு.. அதைப் பத்திப் பேசத்தான் நானும் அண்ணனும் வந்தோம்…”

“சொல்லுங்கடா… ”

“அம்மா… மதுவோட நாத்தனார் அதான் கீர்த்திகா அந்த பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்.. மாப்பிள்ளைத் தம்பிக்கு அவர் தங்கச்சிக்கு நம்ம சரணைப் பார்க்க விருப்பம்… அதான் பேசிட்டுச் சொல்லுங்கன்னு சொன்னாரு… அண்ணன் கிட்ட பேசினார்… நாங்க
வீட்டில பேசிட்டு சொல்றோம்னு சொன்னோம்மா..” என சிவா சொல்ல

மதுரவல்லி மகன்களைப் பார்த்து, “நீங்க என்னடா நினைக்கிறிங்க…?” எனக் கேட்க

ரவி, “அம்மா… சரணுக்கு இப்பக் கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு செய்யலாம்னு தான் நினைச்சிட்டு இருக்கேன் ….” எனச் சொல்ல

“இதனால மாப்பிள்ளை எதாவது தப்பா எடுத்துக்குவாரோன்னு வேற பயமா இருக்கு..” எனக் கவலையோடு சொல்ல

“அதனால என்னடா…?... நம்ம பிள்ளைக்கு எப்ப விருப்பமோ அப்ப தான் செய்ய முடியும்..? நான் கொஞ்சம் யோசனை செஞ்சு சொல்றேன் டா.. பொம்பளை புள்ளை விஷயம் சட்டுப் புட்டுனு முடிவு சொல்ல கூடாது.. அவங்க பொண்ணை வேண்டாம்னு சொன்னா என்ன குறைன்னு நினைக்கத் தோணும்… நமக்கா இருந்தாலும் அப்படித்தான்… நீ முதல்ல ஜாதகம் கேளு…” என மதுரவல்லி கூற

“ஏம்மா… அண்ணனுக்கும் சரி எனக்கும் சரி இப்ப சரணுக்குக் கல்யாணம் செய்ய இஷ்டம் இல்லை… அவனே இப்ப தான் புத்தி வந்து ஆபிஸ்க்கு வந்திருக்கான்…. அதனால் எதுக்கும்மா ஜாதகம் எல்லா வாங்கிட்டு…?” என சிவா சொல்ல

“இல்லடா சின்னவனே…. ஜாதகம் நல்லா இருந்தா பார்ப்போம்… அதற்கு அப்புறம் மேற்கொண்டு பேசலாம்… இப்ப இந்தப் பேச்சை விடுங்க..” என்றதோடு அவ்விஷயத்தை முடித்துக் கொண்டார்.
சென்னை..

மருத்துவமனைக்குச் சென்று வந்த அன்று இரவு மதுரவசனி ராஜாவிடம்,

“ என்ன செஞ்சிங்க… சரண் விசயமா வீட்ல பேசுனிங்களா..?” எனக் கேட்க

“பேசியிருக்கேன்…. உங்க பெரியப்பா கீது ஜாதகம் கேட்டார்.. நானும் மெயில் பண்ணிருக்கேன்…. பார்ப்போம்…” என்றான்.

“அப்படி ஒத்துக்கலன்னா…?” என சந்தேகமாய் மது இழுக்க

“ஒத்துக்க வைப்பேன்.. அப்படியும் முடியலன்னா.. தூக்கிட வேண்டியதுதான்…” என்றான் அவளை ஆழமாய்ப் பார்த்தவாறே.

“தூக்குவிங்க… உங்களுக்கு என்ன வேலை…?”

“பின்ன என் தங்கச்சி ஆசையை நிறைவேத்தறத விட என்ன வேலை எனக்கு…?” என்றவனிடம்

“அதான் ஊருக்குத் தெரியுமே… ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. மறந்துட்டேன்… ஹம்சா தெரியுமா…?”

“ஹ்ம்ம்.. உன் ப்ரண்ட் தானே.. உன் கூட நம்ம ஆபிஸ்ல வேலைப் பார்த்த பொண்ணு…..”

“ஹ்ம்ம்.. ஆமா அவளை உங்க தம்பி லவ் பண்றார்..” எனச் சொல்லவும்

“வாட்…??” என அவன் அதிர்ச்சியோடு கேட்க
“ஆமா… அவருக்கு ஆபிஸ்ல நாங்க வொர்க் பண்ணப்போவே அவளை பிடிக்கும்.. அவ கிட்டையும் சொல்லிட்டார்.. ஆனா அவ ஒத்துக்கல… இப்ப அவளுக்கு வரன் பார்க்கிறாங்க… நான் அவ கூட இரண்டு நாள் முன்னாடி ஃபோன் செஞ்சிப் பேசினப்போ உங்க தம்பி எங்கிட்ட வந்து ஹம்சாவுக்கு கல்யாணம் பார்க்கிறாங்களான்னு கேட்டார்.. நானும் ஆமா சொன்னேன்.. பாவம் அவர் முகமே சரியில்லை…” எனச் சொல்லவும்

“ஓஹ்… இவன் ஆபிஸ்லயே ரூட் விட்டிருக்கானா..?” எனக் கிண்டல் போல் சொல்லவும்

“நீங்க மட்டும் என்னவாம்…?”

“ஹே..!! நான் ஒன்னும் உன் அழகுல மயங்கல… அப்படி மயங்கிறதா இருந்தா ஆபிஸ்ல உன்னை எதுவுமே சொல்லியிருக்க மாட்டேனே.. ஹாஸ்பிட்டல தான் நான் கவுந்துட்டேன்… அதுக்குக் காரணம் இந்த கண்ணு… அதுல தெரிஞ்ச அன்பும் எனக்கான அக்கறையும்…” என அவள் கண்களை வருடிச் சொல்ல,

“அப்போ நான் அழகா இல்லன்னாலும் நீங்க காதலிச்சி இருப்பீங்க…?” எனக் கேள்வி கேட்க

“அன்பான கண்ணுக்கு எல்லாமே அழகு தான் மது… அழகுன்றது ஹோட்டல் சாப்பாடு மாதிரி.. கவர்ச்சியா இருக்கும்.. டேஸ்டா இருக்கும்… ஆனா தினமும் சாப்பிட முடியுமா… ஒரு கட்டத்தில் அலுத்திடும்.. ஆனா அன்பு அம்மா சாப்பாடு மாதிரி… ஆரம்பத்துல புரியாது…. ஆனா ஆயுசுக்கும் அது தான் நிலைச்சு நிற்கும்…” என வசனம் பேச

“ஆஹான்… ரொம்ப நல்லா பேசுறிங்க… சரி..இ ப்ப என்ன என் ப்ரண்ட் ஹம்சாவையும் தூக்க ப்ளானா…? ஏன்னா அவ கண்டிப்பா அவங்க அம்மாவை மீற மாட்டா… அப்படியே நீங்க கட்டாயப்படுத்தி எதாவது செஞ்சாலும் அவங்க லைஃப் நல்லா இருக்காது… அதனால் பார்த்து செய்யுங்க.. உங்க தம்பி தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதாவது அதிகப்ரசங்கித்தனம் செய்யாதிங்க…என்ன..?” என அவள் மிரட்டலாக சொல்ல

“சரி…. சரிடி பொண்டாட்டி.. நீ முதல்ல இப்படி டென்ஷனாகிறதை விடு… தூங்கு..” என்றபடி அவள் காலைப் பிடித்து அமுக்கி விட

“அய்யோ. விடுங்க.. எனக்கு ஏற்கனவே வலிக்குது…” என அவள் கத்த

“மூச்… வலிக்குதுன்னு தான் டி அமுக்கிறேன்…. நீ படு…” என அவன் அதட்ட

“ப்பா… புள்ள மேல என்ன பாசம்..?” என அவள் வம்பிழுக்க

“புள்ள மேல உள்ள பாசம் இல்ல… என் புள்ளயோட காலா இது.. உன்னோடது தானே.. நீ என்னைப் புரிஞ்சிக்கவே மாட்ட…. சும்மா பேசாம படு… அம்மா கிட்ட வலிக்குதுனு சொல்லி வெந்நீர்ல வைச்சும் குறையல தானே.. நான் பிடிச்சு விடுறேன்… தூங்கு நீ..”

“சாரி…” என அவள் முணுமுணுக்க

“நல்லா பேசிட்டு எந்த வெங்காயத்துக்கு சாரி சொல்ற.. படுடி.. இம்சை” எனத் திட்ட அவளுக்குமே மசக்கையில் உடல்சோர்வைத் தாங்க இயலாது கண்ணயர்ந்தாள்.

இன்னமும் என் அன்பை இவள் அடிமைத்தனமாய் நினைக்கிறாளோ என ராஜாவுக்குத் தான் யோசனையாக இருந்தது.

**************************************************************
கீர்த்தியை சரணுக்குப் பார்க்க மதுரவல்லி சம்மதம் தெரிவித்து விட்டார். உயிருடன் இருக்கும்போதே தன் பேரப்பிள்ளைகள் கல்யாணம் செய்வதைப் பார்க்கவே விருப்பம் என்றவர் ஜாதகமும் பொருந்தி வர, நிச்சயம் செய்ய சம்மதித்தார். அதனால் மகன்களும் தாய் சொல்லத் தட்டாமல் தலையாட்டினர். அடுத்த நாள் மாலையில் ரவிச்சந்திரன் ராஜ் நந்தனுக்குப் போன் செய்தார்.

“மாப்பிள்ளை… இரண்டு பேர் ஜாதகமும் நல்லா இருக்குன்னு எங்க ஜோசியர் சொல்லிட்டார்…. ஆனா இன்னும் ஒரு வருஷமாவது போகட்டும்.. சரணுக்கும் கொஞ்சம் பொறுப்பு வரட்டும்.. இப்ப தான் அவனே கொஞ்ச நாளா ஆபிஸ் வரான்.. அதனால் வேணும்னா நிச்சயத்தை செஞ்சுட்டு ஒரு வருஷம் போனதும் கல்யாணம் செய்யலாம்.. என்ன சொல்றிங்க மாப்பிள்ளை..?” எனக் கேட்க

அவர்கள் இந்தளவு பேசுவதே பெரிது என்றும் அவர் கூற்றில் இருந்த நியாயமும் புரிய “சரிங்க மாமா.. நீங்க சொல்ற யோசனை நல்லா தான் இருக்கு… நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்.. மாமா அப்படியே மது ப்ரண்ட் ஹம்சா ஜாதகம் வாங்கி அனுப்புறீங்களா.. தீபனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்காம்.. மதுவும் நல்ல பொண்ணு தான் சொல்றா.. அதான்..?” எனக் கேட்க

“அதுக்கென்ன தம்பி… ஹம்சா நம்ம பொண்ணு.என் பங்காளி கந்தசாமி பொண்ணு தான்.. ரொம்ப அமைதியான பொண்ணு… இப்ப அந்த புள்ளைக்கும் வரன் தான் பார்க்கிறாவோ… நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்…” என்று போனை வைத்தார்.

மாமனாரிடம் பேசி முடித்தவன் நேரே தந்தையைத் தனியாகச் சென்று அவர் அறையில் சந்தித்தான்.
அவன் எல்லா விஷயத்தையும் அவரிடம் சொல்ல,

“ஏன் டா… இந்த பொண்ணுக்கு ஏன் இந்த வேலை.. சம்பந்தி வீட்ல என்னை நினைப்பாங்க…” எனக் கத்த

“அப்பா… எதுக்கு இப்படி கோவப்படுறீங்க… நான் ஆசைப்பட்டேன்னு தானே மதுவைப் பொண்ணுக் கேட்டுப் போனிங்க.. அதுவும் நான் உங்கக் கூட நல்ல ரிலேஷன்ஷிப்ல இல்லாதப்பவே… நான் பையன்… அவ பொண்ணுங்கறதால அவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிற உரிமையைப் பறிக்கக் கூடாதுப்பா.. அவ எங்கிட்ட வந்து தானே சொன்னா.. அவ விருப்பத்தை சொல்ல அவளுக்கு உரிமை இருக்குப்பா.. நம்ம கருத்தை அடுத்தவங்க மேல திணிக்கறது ரொம்ப தப்பு.. அவ ஒருத்தனைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா நாம விசாரிச்சு நல்லவனா இருந்தா கட்டி வைக்கனும்.. அதான் நம்ம கடமை…” என அழுத்தமாகப் பேச
 
“சரிடா. ஆனா சுரேனை விட எந்த விதத்தில் சரண் பெஸ்ட் சாய்ஸ்…? சொல்லு பார்க்கலாம்.. சுரேனோட டர்ன் ஓவர் எவ்வளவு தெரியுமா..? அவன் தனியாளா அவன் பிஸீனஸைப் பார்க்கிறான்.. சரண் அவங்கக் குடும்ப பிஸீனஸைப் பார்க்கிறான்.. நீயே சொல்லு.. உன் தங்கச்சிக்குப் பெஸ்டைத் தர மாட்டியா நீ…?” என மகனிடமே கேட்க

“கண்டிப்பா பெஸ்ட் தான்ப்பா தருவேன்.. டர்ன் ஓவரெல்லாம் பார்த்துக் கொடுக்க நம்ம காசுக்காக நம்ம பொண்ணைக் கொடுக்கலப்பா… கல்யாணத்துல அவ மனசு தான் முக்கியம்.. என் தங்கச்சி அவ மனசுக்குப் பிடிச்சவனைக் கட்டிக்கறது தான் என் விருப்பம்” என்றான் காட்டமாகவே.

“டேய்…. என்ன பேசுற நீ..?.. காசுன்னு நான் சொல்லலை… திறமையை சொன்னேன்…” என சுந்தர் விளக்க
“அவன் உயிரைக் கொஞ்சம் கூட யோசிக்காம அன்னிக்குத் தண்ணில குதிச்சுக் காப்பாத்தினான்… சுரேன் செய்வானா..? அது மாதிரி அவன் திட்டத் திட்ட நம்ம கீர்த்தி எப்படி அமைதியா நின்னா..? ஆனா சுரேனால நம்ம கீதுவை ஹாண்டில் செய்ய முடியுமா…?”

:love::love::love::love::love::love:
“ராஜா.. நீ முடிவெடுத்திட்டேன்னு எனக்குத் தெரியுது.. சரி ஆனா எதுக்கு ஒரு வருஷம் வெயிட் செய்யனும்..?”

“இல்லப்பா.. கீர்த்திக்கு சமையல் எல்லாம் அவ்வளவா வராது.. வேலைக்காரங்க இருந்தாலும் சமைக்கத் தெரியுறது நல்லது தானே… அவளும் நம்ம வீட்ல கொஞ்சம் நாள் இருக்கட்டும்.. நானும் இப்ப தானே வந்தேன்.. அதுக்குள்ள சரணும் ஒரு லெவலுக்கு வந்துடுவான்.. அப்புறம் அப்பா…” என்றவன் ஹம்சாவைத் தீபன் காதலிக்கும் விஷயத்தைச் சொல்ல,

அவரோ மகனை முறைத்துப் பார்த்தார்.

“ஏன் டா… மூணு பேரும் இதே வேலையா இருப்பீங்களா..? இவன் என்னோட தானே ஆபிஸ் வரான்.. எங்க இவனுக்கு லவ் பண்ண டைம் கிடைக்குது..?” எனக் குதிக்க

“அப்பா.. அந்த பொண்ணை இவனுக்குப் பிடிச்சிருக்கு.. அவ்வளவுதான்… அந்த பொண்ணு எனக்கு சரிப்படாதுன்னு சொல்லிட்டா… இப்ப அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறாங்கனு மது சொன்னாப்பா…. பாவம் தீபன் முகமே சரியில்லப்பா…” எனத் தன்மையாகப் பேச

“டேய்… அவங்க இரண்டு பேரைக் கூட விடுவேன் டா… ஆனா நீ எல்லாத்தையும் முடிவெடுத்திட்டு எங்கிட்ட இன்ஃபார்ம் செய்ற.. ஹ்ம்ம்… உன் பிடிவாதம் எனக்குத் தெரியும்.. உன் தம்பி தங்கச்சிக்கு என்ன செய்யனுமோ செய்…. யார் என்னை மதிக்கிறா…?” என்றபடி அவர் எழுந்து செல்ல

“அப்பா…” என அவன் அழைக்க, அவரும் சிரித்த முகமாகவே திரும்பி

“ராஜா நீ எது செஞ்சாலும் சரியா இருக்கும்… கொஞ்சம் வருத்தம் தான் அப்பாவுக்கு.. விடு.. சீக்கிரமே தஞ்சாவூர் போய் தீபனுக்குப் பொண்ணுக் கேட்க ஏற்பாடு செய்..” என்றார்.

அன்றிரவு மதுரவசனி ராஜாவிடம் ,
“என்னாச்சுங்க…. வீட்ல என்ன சொல்றாங்க..?” எனக் கேட்கவும்

“ராஜா கையை வைச்சா அது ராங்கா போனதில்லை…ம்ம்” எனப் பாட

“அப்போ எல்லாம் ஓகேவா… ஒத்துக்கிட்டாங்களா..?” என ஆர்வமாய் மதுரவசனி வினவ,

எல்லாவற்றையும் அவன் மனைவியிடம் சொல்ல,

“சூப்பரோ சூப்பருங்க.. நீங்க….” என அவள் கணவனைக் கொஞ்ச,
“நீ கூட சூப்பரோ சூப்பர் மது…. நம்ம பாப்பா உன்னை ரொம்ப அழகா காட்டுதுடி..” என்றவன் அவளைப் பின்னிருந்து அணைத்த வண்ணம் அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்தான்.

“ஓஹ்..அப்போ நான் முன்னாடி அழகா இல்லையா..?

“முன்னாடி அழகு... இப்ப பேரழகு..!!”

“ சிங்கர்…. இப்போ கவிஞராகிட்டே போறிங்க…?? நீங்க விட்டா பேசிட்டே இருப்பிங்க.. நந்து தூக்கம் வருது….” என அவள் இழுக்க

“எனக்கு வரல மதும்மா…” என்றபடி கிறங்கி மயங்கியவன் அவளிடம் தன் மயக்கத்தைக் காட்டினான்.

****************************************************************************

இரண்டு மாதங்களுக்குப் பிறகு…

தஞ்சையில் இருந்த பிரபல திருமண அரங்கமே களைக்கட்டியது. பட்டுவேஷ்டி சட்டையில் ராஜ தீபன் மணமகனாய் அமர்ந்திருக்க, நீல வண்ண பட்டில் ஹம்சா அழகுற அலங்கரிப்பட்டு நடந்து வந்தாள்.

ராஜ் நந்தன் ஓடி ஆடி அனைத்து வேலைகளையும் அவன் மேற்பார்வையில் செய்துக் கொண்டிருந்தான். வைரத்துக்கும் சுந்தர் ராஜனுக்கும் ஏக திருப்தி. அவர்களுக்கு எந்த வேலையும் வைக்காது அவனே ஹம்சாவின் வீட்டில் பேசி நிச்சயம் திருமணம் என அனைத்தையும் தடபுடலாய் செய்தான்.

இரண்டு நாட்களுக்கு முன் தான் ஸ்ரீசரண்-கீர்த்திகாவின் நிச்சயத் தாம்பூலம் சிறப்பாய் நடைப்பெற்றது.
ஐயர் மந்திரங்கள் ஓத, அவர் சொன்னதை மணமக்கள் செய்துக்
கொண்டிருக்க,

மதுரவசனியிடம் வந்த சரண்,

“ஹே மது.. எங்கடி கீர்த்தி..?” என வந்து கேட்க

“அவ இங்க தான் இருந்தா… எங்கன்னு தெரிலயே…?”

“என்னது தெரிலயா..? ஒரு அண்ணன் பொண்டாட்டி காணோம்… ஒரு அக்கறை இருக்கா.. சீக்கிரமே என் செல்லத்தைத் தேடி தா…” எனக் கட்டளைப் போல் சொல்ல

“அடே நீ அண்ணனா டா… உன்னை… இரண்டு நாள்ல பொண்டாட்டியைத் தேட ஆரம்பிச்சாச்சு… ம்ம்..சரி சரி.. பொழச்சுப் போ… அவ வந்தா சொல்றேன்..”

“என்னது சொல்வியா..? மது..ப்ளீஸ் டி.. நான் மேல உள்ள ரூம்ல இருக்கேன்.. நீ எப்படியாவது அவளை அனுப்பி வைடி.. இனிமே அவ சென்னைக்குப் போயிடுவா… பாவம்டி உன் அண்ணன்..” எனக் காலில் விழாத குறையாகக் கெஞ்ச

“சரி சரி சரண்.. நீ போ.. ஆனா அஞ்சு நிமிஷம் தான்…”எனச் சொல்ல அவனும் மேல செல்ல

கீர்த்தியை மேலே அனுப்பி வைத்து விட்டு மதுரவசனி படிக்கட்டுகள் அருகிலேயே நின்றாள். அவள் வெகு நேரம் மேடிற்ற வயிற்றோடு நிற்பதைக் கண்ட ராஜா அவளருகில் வந்து,

“என்ன மது.. ஏன் இங்க நிக்கிற.. கால் வலிக்கும் வா.. வந்து உட்காரு…” என அவன் வழக்கம்போல் அக்கறையாகச் சொல்ல

மேலே போனவர்கள் இன்னும் கீழே வரவில்லையே என்ற டென்ஷனும் யாராவது பார்த்தால் என்னவாகிறது என்ற பயமும் சேர, அந்த கடுப்பை கணவனிடத்தில் காண்பித்தாள்.

“சும்மா என் பின்னாடியே சுத்தாம போய் வேலையைப் பாருங்க… எனக்கு என் மேல அக்கறை இருக்கு… என்னைப் பார்க்கிறதைத் தவிர வேற வேலை இருந்தா செய்யுங்க..” என எரிந்து விழ, அவனுக்கு வந்த கோபத்தைத் திருமண வீடு என்பதால் அடக்கியவன் அவளைச் சன்னமாய் முறைத்து விட்டு சென்றான்.

மேலேயோ கீர்த்தி அறைக்குள் சென்றதும் அவள் இடையில் கைக்கொடுத்து இழுத்துக் கொண்ட சரண்,

“ஹே…. கீர்த்தும்மா… செமையா இருக்கடி சாரில…” என அவள் சூடியிருந்த மல்லிகைப் பூவைப் பிடித்து விளையாடிக் கொண்டே சொல்ல,

“மாமா.. ப்ளீஸ்….. யாராவது வரப்போறாங்க.. என்ன விஷயம்னு சொல்லுங்க… அண்ணி அஞ்சு நிமிஷத்துல வரனும்னு சொல்லி அனுப்பினாங்க..” என அவசரப்பட

“ஹே.. ஹே… நமக்குப் பேச விசயமா இல்ல.. உங்க அண்ணி கிடக்குறா… அவ என்ன என் பொண்டாட்டிக் கூட இருக்க நேரம் தரது… நிச்சயமானாலே பாதி பொண்டாட்டி தான்..” என உரிமையாகச் சொல்ல

“மாமா… பாதி பொண்டாடின்னா உரிமையா வந்து கூப்பிடாம ஏன் அண்ணிகிட்டக் கெஞ்சுட்டு இருந்திங்க..” எனச் சொல்லி சிரிக்க

“அடியே… வாய் ஜாஸ்தி உனக்கு…. இப்படியே பேசினா பாதி ஃப்ர்ஸ்ட் நைட்டை இன்னிக்கே முடிச்சிட்டு மீதியை கல்யாணத்தனைக்கு வைக்க முடிவு செஞ்சிடுவேன்” என மிரட்ட

அவள் ஆவென அதிர்ச்சியோடு பார்க்க , அவள் நெற்றியில் முட்டி,

“இப்படி ஷாக்கா பார்க்காத…. எனக்கும் மூணு தங்கச்சிங்க இருக்காளுங்க….” என்றவன்

“எப்படி உனக்கு என் மேல இவ்வளவு லவ்வு..?” என அவன் முதல் முறை இவர்களுக்குத் திருமணம் என்று பேசி முடித்தப் பின் கேட்டக் கேள்வியையே திரும்பக் கேட்க

“எத்தன வாட்டி கேட்பிங்க… அதெல்லாம் தெரியாது.. ஆனா உங்களைத் தான் எனக்குப் பிடிக்குது..” என அவள் சொல்ல

“உயிரைக் காப்பாத்தினேனா அதனாலயா..?”
“ப்ச்.. அப்போ பாதி பேர் டாக்டரை தான் லவ் பண்ணனும்… காதலுக்குக் கண்ணு மூக்கு அப்புறம் காரணம் கூடக் கிடையாது..சரியா…?”
“சரிதாங்க மேடம்….” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, கன்னத்தில் அழுந்த இதழ்ப்பதித்து,

“ம்ம்… இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. அப்ப அப்ப சாக்குக் கிடைச்சா மாமாவை மீட் பண்ண வந்துடுடி… என்னை இவனுங்க.. ஆபிஸைப் பார்க்கனும்னு விட மாட்டாங்க… போன் செஞ்சுப் பேசு… ஐ மிஸ் யூ” என சொல்லி அனுப்பினான்.

கீர்த்தி வரும்வரை அங்கேயே நின்றவள் அவளை முறைத்து விட்டு, சரணிடம்,

“எரும.. மணி பார்க்கத் தெரியாதாடா உனக்கு… கால் வலி உயிர் போகுது.. உன்னால…” என்று திட்டி விட்டு செல்ல, கீர்த்தி பாவமாய் அவளைப் பார்க்க, சரணோ ,

“விடு.. அவ சரியாகிடுவா..” எனச் சொல்லி விட்டு சென்றான்.

அதன்பின் திருமணம் இனிதே நடைப்பெற, அதுவரையில் வலியைப் பொறுத்தவள் மிகவும் சோர்வாக உணர்ந்து மாமியாரிடம் சொல்லி விட்டு அறைக்குள் போய் உட்கார்ந்து கொள்ள, பூம்பொழில் மகளின் பின் சென்று,

“என்னடா…முடியலயா..?” என அன்பாய்க் கேட்க

“ஆமாமா… டயர்டா இருக்கு.. காலையில சீக்கிரமே எழுந்தேன் இல்ல..” என்றவளின் பேச்சிலே அவளது அதீத சோர்வுத் தெரிய,

“இரும்மா.. நான் போய் உனக்குக் குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்..” என்றபடி அவர் வெளியே செல்ல எத்தனிக்க, ஹரிணி கையில் ஜூஸ் கோப்பையோடு வர,

“அடடே ஹனிம்மா… நான் இப்ப தான் இவளுக்குக் கொடுக்க எதாவது கொண்டு வரனும்னு நினைச்சேன்… அதுகுள்ள நீயே வந்துட்ட… பொறுப்புடா என் மருமகளுக்கு..” என அவர் அவளைக் கொஞ்ச

“அத்தே… இது உங்க மருமகன் கொடுத்த ஜூஸ்… ராஜாண்ணா கொடுக்கச் சொன்னார்..” என்றபடி ஜூஸை நீட்ட, மது அதை குடித்தாள்.

ஜூஸோடு சேர்ந்து கணவனையும் கடிந்து ஜூஸ் போட்டு உள்ளே இறக்கினாள்.

‘ஏன் அவரே வந்து கொடுக்க மாட்டாராமா… ஏதோ டென்ஷன் கத்தி விட்டேன்.. இவர் கத்தாத கத்தா…. நம்ம பொண்டாட்டி ஏன் கோவப்படுறானு… புரிஞ்சிக்க வேண்டாம்… சும்மா.. பேசாட்டி போகட்டும்… எனக்கென்ன.. எப்பவுமே நான் தான் விட்டுக்கொடுக்கனுமா…? அவரா வரட்டும்..’ எனக் கோபமாய் நினைத்துக் கொண்டாள்.

அதன்பின் தீபன் மாமனார் வீடு சென்று அங்கு செய்முறைகள் நடக்க, அன்றிரவு ஸ்விட்சர்லாந்து செல்ல டிக்கெட் போட்டிருந்தான் ராஜா.

அதனால் ராஜாவின் குடும்பத்தினரும் சென்னைக்குக் கிளம்ப தயாராக, மதுரவல்லி வைரத்திடம்
“ஏம்மா.. மதுவுக்கு இப்ப அஞ்சாம் மாசமில்ல.. அதனால் அவளுக்கு மருந்து கொடுக்கனும்.. இன்னும் இரண்டு நாள்ல நல்ல முகூர்த்தம். அன்னிக்கே கொடுக்க நினைக்கிறோம்… இல்லன்னா பாவம் புள்ளத்தாச்சிப் புள்ளை அலைய வேண்டி இருக்கும்… நீ என்ன சொல்றம்மா..?” எனக் கேட்க

அவரோ கணவனிடமும் மகனிடமும் கேட்கிறேன் என்றார்.

மதுரவசனி ராஜாவிடம் போய் விஷயத்தை சொல்லி, “நான் நாலு நாள் கழிச்சு வரேன்… நீங்க என்ன சொல்றீங்க..?” என்று கேட்க

“உன்னிஷ்டம்..” என்றதோடு அவன் சென்று விட, அவனின் கோபத்தைக் கண்டு அவளுக்கு அதை விட அதிகமாய்க் கோபம் வந்தது.

வைரம் மதுரத்திடம், “அம்மா… இவருக்கு ஆபிஸ்ல நிறையா வேலை இருக்கும்.. அவரால தனியா சமாளிக்க முடியாது.. ராஜாவுக்கும் வேலை இருக்காம்.. இல்லனா நான் மது கூட இருந்திருவேன்.. நீங்க நல்ல விசயத்தைத் தள்ளிப் போட வேண்டாம்மா… இவளுக்கும் இங்க இருக்கனும்னு ஆசை இருக்கும் இல்ல… அவ இருந்துட்டு வரட்டும்..” என்றார்.

அதன்பின் மதுவுக்கு மருந்து கொடுத்து இரண்டு நாட்கள் கழிந்தும் ராஜா ஊருக்குச் சென்றதிலிருந்து அவளுக்கு ஒரு போன் செய்து பேசவில்லை.

இவளும் ‘அவன் கோபத்தை நான் தாங்குறேன்ல என் கோபத்தை அவன் தாங்கட்டும்.. அப்படி என்ன திமிர்… அவனே இறங்கி வரட்டும்…’ என்று நினைத்துக் கோண்டாள்.

அவனுக்கோ , ‘என் காதல் புரிந்தால் அவளே இறங்கி வரட்டும்… என்னிடம் பேசாமல் அவளால் எப்படி இருக்க முடிகிறது..? அவளால் முடிந்தால் இந்த ராஜாவால் முடியாதா..?’ என்று கர்வமாய் நினைத்தான்.

இறங்கப்போவது யார்.. ராஜாவா… அவனது ராணியா..??

ஆட்டம் தொடரும் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~

thanksssssssssssssssssssssss so much each and everyone:love::love::love::love::love::love:

Lets see who let down their ego firsttt...any guess do tell..
More two updates to go then story will be completed...டக்குன்னு முடிஞ்சுப் போச்சான்னு நீங்க ஷாக் ஆகக் கூடாதுன்னு என்பதால் இன்றே சொல்றேன்.
happiee reading..and அந்த பாட்டு

'இவன் யாரோ இவன் யாரோ ?' from மின்னலே...

thanks for ur participation??:love::love::love::love::love::love:
 
Last edited:
Vanthuten.. ???

Innum rendu epi thaana.. nalaki mudinchiruma kaa.. ?? ok ok..

Ada moonu jodi onnagiruche.. aana paarunga serthu vacha jodi mooncha thoonkittu poratha.. haiyoo ivangaloda mudiyalaye.. yaaru eranguva ellam antha paiyan thaan.. mathu mudivu pannitta.. ???
 
Last edited:
Vanthuten.. ???

Innum rendu epi thaana.. nalaki mudinchiruma kaa.. ?? ok ok..

Ada moonu jodi onnagiruche.. aana paarunga serthu vacha jodi mooncha thoonkittu poratha.. haiyoo ivangaloda mudiyalaye.. yaaru eranguva ellam antha paiyan thaan.. mathu mudivu pannitta.. ???
actually un speed pathu wow..poten..ana nee irukeeye da..enai nalla sirika vaikra..god bless you babee❤so changed to haha

ethuku mukai sindhura....anga onnu..inga onnuna nan than rendu ezuthurenee da...?
 
Top