Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராசுவின் நன்றியுரை. என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

Advertisement

Rasu2023

Active member
Member
தோழமைகளுக்கு வணக்கம்.

கொஞ்சம் உங்களோடு அளவளாவ ஆசைப்படுகிறேன்.

கதை எழுதத் தொடங்கியதிலிருந்தே அந்த ஆசை உண்டு.

முதலில் எனக்கு இந்தத் தளத்தில் கதை எழுத வாய்ப்புத் தந்த “Tamilnovelwriters” தளத்திற்கு நன்றி.

இந்தக் கதை உருவானது ஒரு சிறிய சம்பவத்தின் போது நடந்த உரையாடலால்தான். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும்.

என் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கக் கூட நான் இத்தனை திணறியதில்லை.

காதல் சம்பந்தப்பட்ட கதை என்றதும், கவிஞர்களின் கவிதை வரிகளில் இருந்து சுட்டுவிடலாம் என்றால், பாரதியார் எழுதிய காதல் கவிதையில் உள்ள வரிகளை ஏற்கனவே பிரபல எழுத்தாளர்கள் கதைத் தலைப்பாக்கி இருந்தனர். என்னுடைய தலைப்பு பாரதிதாசனின் பாடல் வரியில் இருந்து எடுத்தது. (பொருத்தமாக இருக்கிறதா?)

பிறகு கதாபாத்திரங்கள். ஒரு முறை செய்தித்தாளில் அபர்ணா என்ற மருத்துவ மாணவி நிறைய பாடங்களில் தங்கப்பதக்கம் வென்றார் என்ற செய்தியை படித்தபோது அது, மனதில் பதிந்துவிட்டது.

கதையின் ஆரம்பமும், முடிவும் முதலிலேயே இதுதான் என்று நிச்சயம் பண்ணிவிட்டேன். நாட்கள் செல்லச் செல்ல கதையின் மாந்தர்கள் அதிகமாகிவிட்டனர். நீண்ட காலமாக என்னுள் உருவான கதை அல்லவா?

கதையை காலத்தோடு முடிக்க வேண்டும், அதுவும் இத்தனை வார்த்தைகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையினால் சில கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை கொடுக்க முடியவில்லை,

என் மனதில் ஆழப்பதிந்த பாத்திரங்கள் அபர்ணாவும், சித்தரஞ்சனும். அவர்களை உங்களிடம் சரியாக கொண்டு வந்து சேர்த்தேனா? என்பது இன்னும் எனக்கு சந்தேகம்தான்?

அதுவும் நீங்கள் சித்தரஞ்சனை Joker என்றதும் அவன் என் மீது கோபம் கொண்டான். என்னை அவர்களிடம் சரியாக புரிய வைக்காதது உன் தவறு என்று என்னைச் சுட்டினான்.

எல்லாத்துக்கும் காரணம் Starting Trouble தான். நீண்ட நாட்களாக மனதில் பதிந்தவர்களை தோண்டி எடுத்து உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு எனக்கு தாமதமாகிவிட்டது.

இன்றுடன் நிறைவு செய்ய வேண்டும் என்றதும், கொஞ்சம் வேகம் வந்தது. இருந்தும், சோதனையாய் இன்று எங்கள் ஊரில் மின்வெட்டு. எப்போதும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிடும் மின்சாரம் 6.45 மணிக்குத்தான் வந்தது. அப்படியும், நான் நிறைவுப் பகுதியை நிறைவு செய்வதற்குள் மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் முடித்திருக்கிறேன்.

கதைக்காக சில விதிமீறல்கள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அப்புறம், இந்தத் தளத்தில் நீண்ட நாட்கள் உறுப்பினர்களாக இருக்கும் நீங்கள் உரையாடிக்கொள்வதைக் காணும்போது எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது.

ஆனால் அப்படி என்னால் உரையாட முடியவில்லை.

நீங்கள் என் கதைக்காக பதியும் ஒவ்வொரு கருத்தும் எனக்கு மிகவும் பிடித்தமானதுதான். ஆனால் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் “நன்றி.”, “Thank You” என்று பதில் அளிக்கும்போது எனக்கே சிரிப்பாக இருக்கும்.

அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? அதற்கு நீ போட்ட பதிவு சரியானதுதானா? என்று என்னையே கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.

கதையை நிறைவு செய்த திருப்தி எனக்கு. போட்டியை நிறைவு செய்வதே பெரிய வெற்றிதான்.

என்னுடைய கதையைத் தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

மீண்டும் வாய்ப்பிருந்தால் சந்திப்போம்.

நன்றி. வணக்கம்.

என்றென்றும் அன்புடன்

ராசு
 
Last edited:
Story superb ah irunthathu mam muthalil elaborate ah irunthathu kadhai evvalavu words kul mudiya veandum enpathal Aparna Chiththaranjan kaadhal virivaka solla mudiyaamal poi vittatho entra.ennam mattum ennakul thoontruyathu martrapadi kadhai arumaiyaaka irunthathu pramaadham mam (viji)
 
Story superb ah irunthathu mam muthalil elaborate ah irunthathu kadhai evvalavu words kul mudiya veandum enpathal Aparna Chiththaranjan kaadhal virivaka solla mudiyaamal poi vittatho entra.ennam mattum ennakul thoontruyathu martrapadi kadhai arumaiyaaka irunthathu pramaadham mam (viji)
Thank you so much.🙏
 
Top