Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ் -ன் என் உள்ளம் உன் வசமாகுமா!!!-7

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....

போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.... ? ? ?


இன்று சனிக்கிழமை...ஆதலால் வேலை நிறைய இருக்கு....முடிந்தால் இரவு ஒரு பதிவு வரும்.... இல்லையெனில் நாளை காலை தான் பதிவு செய்யமுடியும்.... கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் சகோதரிகளே......

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....

மதியம் சாப்பிட்டு முடித்து அம்மா அப்பாவை பார்த்து வருவதாக சொல்லி கிளம்ப சொன்னான்...
கணேசனுக்கு அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு கற்பகத்திற்கு அழைத்து வீட்டிற்கு வருவதாகச் சொன்னான்...

வந்ததும், ஸ்வேதா எங்கே ?என்றான்...
அவள் அம்மா வீட்டிற்கு ? சென்றீர்க்காள் என்றார் கற்பகம்...

நடந்த அனைத்தையும் சொன்னான்.‌.
கேட்டதும் கணேசன் எதுவும் பேசவில்லை.... அமைதியாக இருந்தார்... கற்பகத்திற்கோ இவன் மேல் அவ்வளவு கோபம்...எதுவும் பேசாமல் சமையலறை க்கு சென்று விட்டார்...

மகிழினியை பார்க்க அவளோ என்ன செல்வது என்று தெரியாமல் அத்தை பின்னாடியே சென்று சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தாள்... அவளுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலை....

பின்னாலே சென்று"பேசுங்க அம்மா.... இப்படி பதிலேதும் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்?"......என்றான்...

"என்ன பேச சொல்ற....நீ செய்த அனைத்துமே தவறு சித்து....
எல்லாவற்றையும் விட அவளை அடித்தது மிகப்பெரிய தவறு...அவளை ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருக்கிறாய்....
என்ன இது??இதுதான் உன்னை நாங்கள் வளர்த்ததா???பெண் பிள்ளை கூட வளரவில்லைனாலும் அவர்களை புரிந்து நடந்து கொள்கிறாயே என்று உன்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்...
இப்படி கொடுமகாரனாக எப்படி மாறினாய்??எனக்கு உடல்நலம் சரியில்லை என்றால் நன்றாக கவனித்து கொண்டாயே அந்த குணம் எங்கே போனது???ஓர் பெண்ணிடம் ஏன் உன் மனைவி ஆனாலும் இவ்வாறு வன்முறையாக நடக்க உனக்கு உரிமையில்லை.....உன்னிடம் இருந்து இப்படி பட்ட செயல்களை நான் எதிர் பார்க்கவே இல்லை சித்து"...என்று கண்ணீர் சிந்தி அழுதார்....

அவர் கூறியதனைத்தும் கேசவனுகம் மகிழினியும் கேட்டுக் கொண்டிருந்தனர்....
அம்மாவை கையோடு அழைத்து வந்து நாற்காலியில் அமரவைத்து"நான் வேணும்னு பண்ணலமா.... கோபத்தில் தான் அடித்து விட்டேன்....அவளிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்....இனி இப்படி செய்ய மாட்டேன் அம்மா... சத்தியம்..."என்று தாயிடமும் மன்னிப்பு கேட்டான்....


"ஏன்மா இவன் மன்னிச்சிட்டியோ??"....

"மன்னிப்பு லாம் தேவையில்லை அத்தை....இது சாதாரண நிகழ்வு தானே..என் கணவர்க்கு என்னிடம் இல்லாத உரிமையா??"

இவ என்ன இப்படிலாம் பேசுறாள்???அம்மா நம்மை என்ன நினைப்பாங்க!!!ஞே னு விழித்துக் கொண்டிருந்தான்...

கற்பகமோ மனதினுள் நல்ல பெண் தான்....இவன் வாழ்க்கை இப்படியே போகிறுமோனு நினைத்ததுக்கு எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்து அவளிடம் புன்னகை சிந்திவிட்டு மகனிடம் திரும்பி,"உன்னை மன்னிக்க எனக்கு தகுதியில்லை....ஆனால் சும்மா விடப் போறதில்லை....உனக்கு ஒரு தண்டனை வைத்துள்ளேன்...நானும் அப்பாவும் பதினைந்து நாள் நம்ம கிராமத்திற்கு போகலாம்னு முடிவு செய்திருந்தோம்....போகும் போது என் மூத்த மருமகளையும் பேர்க் குழந்தைகளையும் அழைத்து போவோம்....நீ அவர்கள் இல்லாமல் கொஞ்சம் நாட்கள் தனியாக இருப்பது தான் உனக்கான தண்டனை...."என்றார்.

"அம்மா...என்னால் தனியாக லாம் இருக்க முடியாது......ஆனாலும் நான் செய்ததற்கு தண்டனையாக அவர்களை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன்.....என்றான்...

"அப்பா..... நீங்களும் என்னை மன்னியுங்கள்...."என்றான்...

சம்மதமாக புன்னகையுடன் தலையசைத்தார்...

கற்பகம் முகம் இன்னமும் வாடித்தான் இருந்தது.....

"இன்னும் ஏன் இப்படி இருக்கீங்க?"....

------

"அம்மா....சொல்லுங்கமா...."என்று அவர் காலடியில் அமர்ந்தான்...

"பின்னே!!!!நீ செய்தது அப்படி...எவ்வளவு தான் நாங்க பொறுத்து போறது....நன்கு படித்து முடித்து ஆபீஸ் போக ஆரம்பித்த போது நாங்கள் எப்படி மகிழ்ந்தோம்....நீங்க பார்க்கும் பெண்தான் உன் மனைவினு சொன்னபோது எவ்வாறு பெருமை பட்டோம்....

அதுலாம் அப்போதே முடிந்து விட்டது....
திடிரென்று எங்களிடம் சொல்லாமலே வெளியூர் போன...வரும் போது ஒரு பெண்ணை திருமணம் செய்து கூட்டிட்டு வந்த.... அப்படியே ஐந்தாம் நாளில் தனிக்குடித்தனம் போன....சரி...அவன் ஆசைப்படி வாழட்டும்னு விட்டுவிட்டோம்...ஏன்...உனக்காக தான்...நீ மகிழ்ச்சியாக இருக்கும்னு தான....
அந்த வாழ்க்கை யும் நீடிக்கவில்லையே!!!போகும் போது இருக்குழந்தைகளை தனியே விட்டுவிட்டு மகராசி போய்ட்டாள்...
உன் வாழ்க்கை இப்படியே முடிந்து விடக் கூடாது என்று அவள் உன்னை மறுமணத்திற்கு சத்தியம் வாங்கி சென்றுள்ளாள்......
அதற்கும் நீ ஒத்துக் கொள்ள வில்லையே.... இரண்டாம் திருமணம் செய்ய உள்ள பெண்ணோ அல்லது ஏற்கனவே குழந்தைகள் உள்ள பெண்ணோ வேண்டாம் என்றாய்.....குழந்தை பெற்று கொள்ள முடியாத பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்றாய்....அதற்கும் சம்மதித்தோம்....உனக்காக மட்டும் தான்....உன் வாழ்க்கை இப்படியே போகுதேனு எவ்வளவு அழுதிருப்போம்...
ஆனால் எங்கள் கண்ணீருக்கு பதிலாக கடவுள் இப்படி குறைவில்லாத தங்கமான பெண்ணை தான் மருமகளாய் கொடுத்துள்ளார்.....அப்படிப்பட்ட பெண்ணை நீ கொடுமை செய்துள்ளாய்....
மூன்று வருடங்களாக அவளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தும் நீ அவள் குணத்தை புரிந்து கொள்ள வில்லையே!! என்னால் இதை ஏற்கவே முடியவில்லை..."
என்றார்...

மகிழினியிடம் திரும்பி "இனி இப்படி செய்யவே மாட்டான் என்று உனக்கு வாக்களிக்கிறேன்மா....நீங்கள் எல்லாவற்றையும் மறந்து ஒன்றாக சேர்ந்து வாழுங்கள்..."என்றார்....

மகிழனி தலையை ஆட்டிக் கொண்டு ஹர்சித்தை பார்க்க அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்....

கணேசன்,"குழந்தைகளை அழைத்து வர நேரமாகிறது...நானும் வருவதாக கூறிச் சென்றார்....

உள்ளம் வசமாகுமா??தொடரும்....
 
Last edited:
Nice epi dear.
Ivalavu nalla mother in law va?santhoshama irruku. Nijathil ellam ippadi oru manushi kannam paadilla.
Harshith kum Anu vu Kum naduvula oru story irrukum pola?? Interesting.
மிக்க நன்றி சகோதரி...:love:
ஆமா...நல்ல மாமியார்....
பிள்ளைகள் சந்தோசமாக இருக்க தான் எல்லாம் செய்வாங்க....
ஒருவேளை எதுவும் இருக்குமோ?
 
Top