Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-6

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....

போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.... ? :love:

எனது முதல் கதை என்பதால் நிறைய நிறைகுறை இருக்கும்....ஏதேனும் தவறாக இருந்தால் தயவு கூர்ந்து கூறுங்கள்... ஏற்றுக் கொண்டு மாற்றிக் கொள்கிறேன்...(y)

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....

அழைத்தது அவன் தந்தை கணேசனே....
இன்று அவன் அலுவலகமும் வரவில்லை.. தகவலும் இல்லையே உடல்நலம் சரியில்லையோ என்று அழைத்திருந்தார்...
"நல்லாத்தான் இருக்கேன்... வேறேதும் இல்லைப்பா....நாளை வருகிறேன் என்றுக் கூறிக் கொண்டே கீழே வந்தான்..

அவள் தலை வைத்து அமர்ந்திருந்த வாக்கிலே உறங்கியிருந்தாள்..அவளை எழுப்பாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்..

அவளுக்கு தொந்தரவு இல்லாமல் சோஃபாவில் அமர்ந்தான்....உறங்கும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்...

இவள் ஏன் என் வாழ்வில் முதலிலே வரவில்லை...வந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்... நாங்களும் சாதாரண கணவன் மனைவியாக வாழ்ந்திருப்போம்... எங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்திருக்கும்....என்ன இது....நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்.... ஏற்கனவே எனக்கு இருக் குழந்தைகள் உள்ளனரே...
நான் என் உறுதியிலிருந்து பின்வாங்குகிறேனா!!!அப்போ என் அடிமனதில் இப்படி பட்ட ஆசைகள் இருக்கிறதென்று தானே அர்த்தம்.... மறுபடியும் குழம்பினான்...

நேரமாக அவளை எழுப்பினான்....
அவள் எழுந்தமர்ந்ததும்"முதலில் உன்னை தப்பாக எண்ணியதுக்கு சாரி.. மன்னித்து கொள்...இதில் உன்னை அடித்தது,நேற்றிரவு பாத்ரூமில் அடைத்தது...என மிகப்பெரிய தவறுகள் செய்துருக்கிறேன்....இதற்கு நீ கண்டிப்பாக எனக்கு நீ தண்டனை குடு...மனதார ஏற்றுக் கொள்கிறேன்...."என்றான்...

அவளுக்கு தான் காண்பது கனவா என்று தோனியது...இவன் ஏன் இவ்வாறு பேசுகிறான்.... அப்பொழுது என்னை புரிந்து கொண்டானா என்று எண்ணினாள்...

"உனக்கு விருப்பம் இல்லாமல் நடந்த திருமணம் என்று நீ சொன்னதை நம்புகிறேன்.....இந்த வாழ்க்கையை நீ ஏற்றுக் கொண்டதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்....நடந்ததை மறந்து வாழ பழகி கொள்கிறேன்....ஆனால் அதற்கு மேல் எதுவும் வேண்டாம்.... கார்த்திக் மற்றும் காவ்யா க்கு நல்ல தாய் தகப்பனாய் இருப்போம்...உனக்கு சம்மதம் தானே??.."என்றான்...

சம்மதமாய் தலையாட்டினாள்...
"இனி எதையும் மனதார பேசுவோம்...இப்படி தலையாட்டுதல்லாம் வேண்டாம்....பிடித்திருந்தால் பிடித்திருக்குனு சொல் பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லு....நான் ஏதாவது உன்னை கட்டாய படுத்தியது போல் தோனினால் அதையும் தைரியமாக வெளியே சொல்..... உள்ளுக்குள் வைத்து மருகாதே!!!....என்னை உன் நண்பனாக நினைத்து கொள்... என்றான்....

அப்போதும் சம்மதமாய் தலையை தான் ஆட்டினாள்...

"இப்போ தான சொன்னேன்....வாயை திறந்து பேசு என்று..."

ம்ம்ம் ....மிக மெல்லியதாய் சத்தம் வந்தது....

"என்னை உன் நண்பனாக ஏற்றுக் கொள்வாயா?....

ம்ம்ம்.....

கேட்கவில்லை....

"ஆமாம்... ஏற்றுக் கொண்டேன்..."என்றாள்...
அதை சொல்வதற்குள் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது....

"மன்னிப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!!!...."என்றான்....

உடனே "நீங்கள் மன்னிக்குமளவு எதுவும் தவறு செய்ய வில்லை....உங்கள் நிலைமை புரிந்து கொண்டேன்....உங்க நிபந்தனை மீறி செய்ததாக நினைத்து கோபத்தில் அடித்தீங்க...எனக்கு இப்போது தெளிவாக எல்லாம் புரிந்தது...விடுங்க...எல்லாம் நன்மைக்கே..
இல்லாட்டி நீங்க இப்படி என்ன புரிந்து பேசி ப்ரெண்ட் ஆகிருக்க முடியாதே!..." என்றாள்...

இப்போதும் அவளை பிரம்மிப்பாய் தான் பார்த்தான்....

என்னிடம் எதுவும் கேட்கனுமா?"என்றாள்...

அவனுக்கு அவளிடம் கேட்க நிறைய கேள்வி இருந்தும் வெளியில் "இல்லை"என்றான்...

நீ போய் ஃபிஷ் ஆகிவிட்டு சாப்பாடு எடுத்து வை... சேர்ந்து சாப்பிடுவோம் என்றான்...அவளும் எழுந்து சென்றாள்...

"நான் போக ஆரம்பிக்கும் பாதை சரியே....இவளை இப்படி தனியே விடாமல் நானா பேசித் தான் இவளை மாற்ற முடியும்...


இப்படியே செல்லட்டும்...காலம் போன போக்கில் வாழ்க்கையை வாழ்வோம்...என்று முடிவு செய்து எழுந்து சாப்பிட சென்றான்...

உள்ளம் வசமாகுமா???
தொடரும்...
 
Last edited:
Nice epi dear.
Eduthu sollum alavuku thavara ethuvum illa pa be confident. You can succeed.
Appo, appo, epi koduthu asathureenga le author ji.
Ayarathu ulaykireengo nu theriyuthu, hard work veen ponatha history illa,sugarthey.
மிக்க நன்றி சகோதரி:love:?...
தங்கள் அனைவரின் கருத்தும் என்னை மேன்மேலும் ஊக்குவிக்கிறது‌....
 
Top