Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-4

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே,

என்னை தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி.... :love:
இதோ அடுத்த பதிவு....



"நீங்க என்ன சொல்றீங்கனே புரியல"...மகிழினி..


"புரியலனு சொல்லாதே!!!புரியாத மாதிரி நடிக்கேனு சொல்லு நம்புறேன்...ஏன்னா நீ சொல்றது அனைத்தும் பொய்"..
இவ்வளவு வசதி,பணம், கார்,பங்களா, நகை என்று வசதியா வாழலாம் என்று உன் பெற்றோர் உன்னைஇங்கே வந்து விட்டு விட்டு போய்விட்டார்களோ!!! ஏன்னா ஒருதடவை கூட நீ எப்படி இருக்கனு பார்க்க கூட வர்லேயே!".... ஹர்சித்.

மணி இரண்டாகி விட்டது... குழந்தைகளை அழைத்து வர வேண்டிய நேரம் ஆகிவிட்டது...நான் குழந்தைகளுக்கு ஏதாவது சிற்றுண்டி செய்கிறேன் என்று சாப்பிடாமலே மனம் முழுவதும் ஆயிரம் யோசனையோடே எழுந்து சென்றாள்....

அவனும் குழந்தைகளை அழைத்து வரக் கிளம்பினான்....

சிறிது நேரத்தில்அழைப்பு மணி ஓசை கேட்டதில் கதவை திறந்தாள்...
"வாங்க அத்தை,வாங்க மாமா,வாங்க கொழுந்தனாரே,வாமா ஸ்வேதா" னு அழைத்து அமரச் சொல்லி தண்ணீர் குடுத்து விட்டு அனைவருக்கும் டீ போட்டாள்...

ஏற்கனவே செய்ய ஆரம்பித்த பால் கொழுக்கட்டையை முடித்து விட்டு வாழைக்காய், உருளைக்கிழங்கு பஜ்ஜியும்,தொட்டுக்க தேங்காய் சட்னி யும் செய்து பரிமாறினாள்....

அனைத்தையும் பார்த்த கஸ்தூரி "எப்பொழுது நாங்க வந்தாலும் முகம் சுளிக்காமல் அனைத்தும் செய்ற.... என்னையும் எதுவும் செய்ய விடமா பார்த்துக்கிற....ஏன்மா?"னு கேட்டார்..

"நம்ம குடும்பத்துக்கு தான் செய்றோம்... ஆதலால் சந்தோசமா தான் இருக்குத்த"என்றாள்...

அப்பொழுது கார்த்திக் மற்றும் காவ்யாவை அழைத்து வந்த சித் இதை கேட்டாலும் கண்டு கொள்ள வில்லை...

குழந்தைகளை குளிக்க வைத்து உடைமாற்றி விட்டு சிற்றுண்டி சாப்பிட வைத்து அனைவருடனும் விளையாட விட்டு விட்டாள்....

இரவு என்ன சமைக்கலாம்னு கற்பகத்தின் கேட்க அவர் "நீங்கள் அனைவரும் கிளம்பி எங்க கூடவே பெரிய வீட்டிற்கு போக போறோம்...நாளை விடுமுறை தானே ... எங்கேயாவது வெளியே சென்று வரலாம்... குழந்தைகள் தான் பெரியவர்கள் ஆகிவிட்டனரே....இனியென்ன..என்றார்....

மகிழினி ஹர்சித் முகத்தை பார்க்க அவன் யோசித்தான்... சிறிது நேரம் யோசித்து ,"சரி ....நாளை காலை அங்கு வருகிறோம்..... வெளியே சென்று விட்டு இரவு இங்கு திரும்பி விடுவோம்.... "என்றான்..

இரவு உணவை பெண்கள் மூவரும் சேர்ந்தே செய்தனர்.... அனைவரும் உண்டு முடித்த பின் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் கிளம்பி சென்றதும் குழந்தைகளை உறங்க வைத்து விட்டு அவள் சமையலறையில் போய் முந்தைய இரவு போல் படுத்துக் கொண்டாள்.....


அவனும் குழந்தைகளுடனே உறங்கினான்..

காலை எழுந்து குளித்து குழந்தைகளை குளிக்க வைத்து சாப்பிட வைத்து ஒன்பது மணியளவில் மூன்று பேரும் தயாராகி இருந்தனர்..

அவன் கிளம்பியதும் காரில் பெரிய வீட்டிற்கு சென்று அங்கிருந்து அனைவரும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று விட்டு மதியம் வெளியே சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பீச் சென்று இரவு உணவும் வெளியே முடித்து விட்டு அவரவர் வீட்டிற்கு வந்து விடுவதாக முடிவு செய்தனர்.......

இதுவரை இப்படி வெளி இடங்களுக்கு சென்றிராததால் மகிழினி தான் ரொம்ப தினணறினாள்.... குழந்தைகள் கூட சமாளித்து விட்டனர்.....

அனைவருக்கும் இவள் வெளியே சென்றதில்லை,இப்படி வெளி உணவு சாப்பிட்டதில்லைனு சொன்ன மகிழினியை பார்த்து ஆச்சர்யமே!!!!ஆனால் இவள் பொய் சொல்கிறாள் என்று அவன் நம்பவே இல்லை....

வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளை குளிக்க வைத்து உடைமாற்றி விட்டு பால் குடிக்க சொல்லி தூங்க வைத்து விட்டு அவளும் சென்று தூங்கிவிட்டாள்....

ஹர்சித் துக்கு தான் உறக்கம் வரவில்லை....என்ன நடந்தது,எப்படி என்று கேள்வி மேல் கேள்வியாக மனதுக்குள் பட்டிமன்றம் நடந்தது...

மெதுவாக எழுந்து போய் சமையலறை க்குள் சென்று பார்த்தான்....அவள் உறங்குவது தெரிந்ததும் கோவமாக வந்தது....

இவள் தூங்க கூடாது....நான் இப்படி நிம்மதி இல்லாமல் இருக்க இவள் உறங்குவதா??என்று தோன்றியது....

முதலில் முகத்தில் நீர் ஊற்றி எழுப்பி விடலாம் என்று யோசித்தான்...பின் சீ‌...சீ...இது என்ன சின்னப்பிள்ளைத்தனம் என்று அவனே நினைத்து வரவேற்பறைக்கு சென்று அமர்ந்தான்...

இவளை இங்கிருந்து அனுப்பவும் முடியாது.... குழந்தைகள் இவள் இல்லாமல் இருக்க மாட்டார்கள்....வேறு என்ன செய்வது?!!!

பேசாமல் இவள் மேல் மனைவிக்கான உரிமையை எடுத்து கொள்வோம்!!!அன்று ஏதோ சொன்னாளே??? யாரையும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று.....ஏன் அப்படி சொன்னாள்?!!! ஆதலால் அவளுக்கு அப்போ இது தான் தண்டனை என்று நினைத்தான்...
அடுத்த நொடியே,அச்சோ!!!எனக்கு ஏன் இப்படி தவறான செயல்லாம் தோன்றுகிறது....இது பாவமான செயல்லாச்சே....இது போல் யோசிப்பதை முதலில் நிறுத்துவோம்....என்று முடிவு செய்து தொலைக்காட்சி யில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்....

அந்தோ பரிதாபம்!!! தொலைக்காட்சி யில் பழிக்கு பழினு நிகழ்ச்சி மே ஒளிபரப்பாகி கொண்டிருந்தது...அதை மாற்றி பாடல்களை வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்....

அவள் எழுந்து அங்கிருந்த படுக்கையறை யிலுள்ள குளியலறைக்குள் சென்றாள்....அவளை காணத போது மறைந்த ‌எண்ணம் மறுபடியும் தோன்றியது...

தொலைக்காட்சியை ஆப் செய்து விட்டு அவள் சென்ற பாத்ரூமை வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு அந்த பாத்ரூமின் விளக்கணைத்து விட்டு அவனறைக்கு சென்று விட்டான்...

அவள் கரண்ட் போய்ட்டுனு நினைத்து கதவை திறக்க முயற்சிக்க முடியவில்லை...தட்டி தட்டி பார்த்தும் பயனில்லை.... ஹர்சித் தான் பூட்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்....அன்று முழுவதும் வெளியே அலைந்தது சோர்வாக வேறு இருந்தது...
இரவு முழுவதும் அங்கே இருந்தாள்...

இப்படி தனிமையோ இருட்டோ அவளுக்கு பயமில்லை...ஆனால் திடீரென்று இவன் இவ்வாறு கோவப்படுவதும் ,தன்னை ஏமாற்றுகாரி என்று ஏன் எண்ணுகிறான் என்று தான் புரியவில்லை...

காலையில் ஆறு மணிக்கு அலாரம் வைத்து எழுந்தவன் வந்து பாத்ரூம் வெளி தாழ்ப்பாள்ளை திறந்து விட்டான்...அவனுக்கு சிறு சந்தோசம்....தன்னை ஏமாற்றியதற்கு அவளை பழிவாங்குவதாக நினைத்து கொண்டான்....இதில் முகத்தில் நக்கல் சிரிப்பு வேறு....

இருவரும் எதுவும் கேட்கவில்லை.....பேசவுமில்லை... குழந்தைகளை எழுப்பி கிளம்பி வைத்து பள்ளிக்கூடம் அனுப்பினாள்....

பள்ளியில் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சோஃபாவில் அமர்ந்து தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்தான்....

மகிழினி அவன் வருவதற்குள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வந்து அவனருகே ஓர் ஆள் அமருமாறு இடைவெளி விட்டு அமர்ந்தாள்...

"எது என்றாலும் தெளிவாக கேளுங்கள்.... உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியே இப்படி செய்து என்ன லாபம்?? ... குழந்தைகள் வருவதற்குள் முடித்து விடலாம்....நம் பிரச்சனை பால் அவர்கள் நிம்மதி சிறிது கூட கெட வேண்டாம்....நான் என்ன சொல்லி ஏமாற்றி உங்களை திருமணம் செய்து கொண்டேன் என்று நினைக்கிறீர்கள்..... எனக்கு ஒன்றும் புரியவில்லை....என்ன பொய்...என்னிடம் என்ன குறைனு சொல்ரீங்க??
எனக்கு எதுவுமே தெரியாது.....அதனால் நீங்கள் சொல்ற எதுவுமே புரில...ஏன் இந்த கோபம்??" என்றாள்....

அவனுக்கும் பிரச்சனையை இழுத்தடிக்காமல் பேசி தீர்ப்பது தான் சிறந்தது என்று தோன்றியது...

"எனக்கு இது இரண்டாவது திருமணம்...அதுவும் இருக் குழந்தைகளோடு.....அதனால என் குழந்தைகளுக்கு அம்மா வேண்டும் என்று தான் முடிவு செய்தேன்....எனக்கு மனைவி வேண்டும் அல்ல....அதனால் குழந்தை பெற்று கொள்ள முடியாத பெண்ணை திருமணம் செய்ய நினைத்தேன்....அதனால் அப்படிப்பட்ட பெண் தான் கேட்டேன்....உன்னை சொன்னதும் நம்பி திருமணம் செய்தேன்....ஆனால் நீ ....உனக்கு தான் எந்த குறையும் இல்லை....அப்படி பொய் சொல்லி என்னை ஏமாற்றிருக்கீர்கள்...அதை நினைக்கும் போது கோவமாக வருகிறது..."என்று கூறினான்...

கேட்டவளுக்கு அத்தனை இரைச்சல்....
அவளுக்கு புரிந்தது....அவள் பெரியம்மா ஏதோ தகிடுதத்தம செய்துள்ளார் என்று...ஆனால் இப்படி ஒரு முடிவிலுல்லோரை ஏன் ஏமாற்றி தன்னை இங்கே கூட்டிட்டு வந்து திருமணம் செய்து வைத்தார் என்று தான் புரியவில்லை.... இவனுக்கு எப்படி தன்னை புரிய வைப்பது,தன்னை நம்புவானா??என்று சந்தேகம் வர படபடத்தது....

கண்ணில் நீருடன் அப்படியே தரையில் அமர்ந்து அவன் கையை பிடித்து"நீங்களா சொல்லும் வரை உங்க நிபந்தனை பற்றி எதுவும் தெரியாது.... வீட்டில் அவசரத் திருமணம் என்று சொல்லி கூப்பிட்டு வந்தாங்க....இப்பவும் சொல்றேன் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை..... பெரியம்மா கண்டுக்கவே இல்லை....உங்க எல்லாரிடமும் சொல்லி நடக்க விடாமல் செய்து விடத் தான் நினைத்தேன்..‌வந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி...அனுசியா குழந்தைகள அப்படியே விட மனசில்லை... நீங்களும் தாலி கட்டி விட்டீர்கள்...இனி இது தான் என் வாழ்க்கை என்று முடிவு செய்து விட்டேன்.... நான் சொன்னது எல்லாம் உண்மை.... எனக்கு எங்க அம்மா என்றால் மிகவும் பிடிக்கும்.... அவர்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பு மேல் சத்தியம்...."என்றாள்....

அவனுக்கு இவளை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை.... தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்....



உள்ளம் வசமாகுமா????.....தொடரும்...
 
Nice epi dear.
Good girl, sincere ah epi koduthingo. Intha sincerity ku sure ah balan irrukum dear.
Katha konjam break aaguthu-adutha naal leave nu koduthu pillaar school ku poranganu irruku. Ithu pol China China mistakes parthukongo.konjam humourous ah,romance kalanthu kodungo super aagidum pa. Ippovum nalla than irruku. All the best dear.
 
Nice epi dear.
Good girl, sincere ah epi koduthingo. Intha sincerity ku sure ah balan irrukum dear.
Katha konjam break aaguthu-adutha naal leave nu koduthu pillaar school ku poranganu irruku. Ithu pol China China mistakes parthukongo.konjam humourous ah,romance kalanthu kodungo super aagidum pa. Ippovum nalla than irruku. All the best dear.

நன்றி சகோதரி.....
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... :love:
என் தவறை சுட்டி காட்டியதை வரவேற்கிறேன்.....??

ரொமன்ஸ் கண்டிப்பாக இருக்கும்....முதலில் இருவருக்கும் காதல் வரனுமில்லை.....அதுக்கே இவர்கள் என்னை கொடுமை படுத்துறாங்க சகோதரி....:p:ROFLMAO:


"நாளை விடுமுறை என்று கற்பகம் கூறுவார்...
அடுத்த நாள் தானே வெளியே போறாங்க...
அதற்கு அடுத்த நாள் தானே குழந்தைகள் பள்ளிக்கு போற மாதிரி எழுதிருக்கேன்..."


பார்த்து சொல்லுங்கள் சகோதரி..
 
நன்றி சகோதரி.....
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... :love:
என் தவறை சுட்டி காட்டியதை வரவேற்கிறேன்.....??

ரொமன்ஸ் கண்டிப்பாக இருக்கும்....முதலில் இருவருக்கும் காதல் வரனுமில்லை.....அதுக்கே இவர்கள் என்னை கொடுமை படுத்துறாங்க சகோதரி....:p:ROFLMAO:


"நாளை விடுமுறை என்று கற்பகம் கூறுவார்...
அடுத்த நாள் தானே வெளியே போறாங்க...
அதற்கு அடுத்த நாள் தானே குழந்தைகள் பள்ளிக்கு போற மாதிரி எழுதிருக்கேன்..."


பார்த்து சொல்லுங்கள் சகோதரி..
No dear.
Alaja kalaippil irruntha manushi ya than mandayan bathroom la adaikiran. Thirantha pinnae randu ennamum pesikollavillai pullaar school povunnu,ivar randum discussion appadi alla irruku.
 
Top