Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரசித்த நாவலை பற்றி ஒரு வரிகள்

Advertisement

murugesanlaxmi

Active member
Member
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம் என்ற சொல்படி எல்லாருடைய நாவல் படித்தாலும், சில நாவல்களே மனதில் இடம் பெறுகிறது. இந்த நாவலை ஏன்டா எடுத்தோம் என்ற பதற்றதோடும், பக்கு, பக்குனு என்ற உணர்வோடும் படித்த நாவல், சகோதரி ஷோபா குமரனின் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி என்ற நாவல், சேற்றில் விழுந்த செந்தாமரை, ஏன்? தெய்வசன்னதிக்கு போககூடாது என்ற கேள்வியும், அந்த மலரை சேற்றில் தள்ளியேதே, பழுது பட்ட ஆண்கள் தானே என்ற உண்மையையும் எடுத்து சொன்ன நாவல். செம நாவல். மனதில் வலி தந்தாலும், கீழே வைக்க முடியாத நாவல். அருமையான எழுத்து நடை. இவர் எழுத்தில் படிக்கும் முதல் நாவல். செம சூப்பர்.

அழகான உரையாடல்கள், சில செய்திகள் என நாவலை கொண்டு சென்றவிதம் அருமை. நாவல் ஆரம்பமே, இதான் கதை என சொல்லிட்டு, அதன் எதிர்பார்ப்பை, நாவலின் இறுதி அத்தியாயம் வரை பதறலோடு கொடுத்தது அருமை. மூர்த்தி சாரும், துளசிமாவும் நினைவுகளிலேயே பதிந்து விடுகிறார்கள்.
தன் உணவு பசியைப் போக்க, பிறர் உடல்பசியைப் போக்கும் உத்தமிகள் நடமாடும் இடத்தை களமாக கொண்டாலும், அதில் உறவுகளின் உன்னதங்கள் (பானுமா), நட்புகளின் நலன்களை (சத்யன், செல்வம்), தவறுகளின் தண்டனை(மணி) என அனைத்தையும் கலந்து சொன்னது அருமை. இரு காதல்கள் (மூர்த்தி, மணி), இரண்டுமே பயணப்படட விதம் அருமை. எது உண்மை காதல்? கிடைக்கவில்லை என்றால் கீழ்தரமாக இறங்குவாயா? இதயத்தை கூறுப்போடும் ஈசனின் தண்டனை இது என மணி மூலம் உணர்த்தியது அருமை. வினைகளுக்கு என்றுமே விதி உண்டு.

போகிற போக்கில் சொன்ன ஒரு வரி, நிறைய நண்பர்கள் கவனித்தார்களா என தெரியவில்லை. ஒரு நாள் காலை துளசி அடுப்படியில் சுடுப்படும் போது முத்து சொல்வார். “போய் படுத்து, வலது பக்கம் எழுந்து வா” என்று. அது என் அம்மா சொல்லும் வார்த்தை. எப்போதும் வலது பக்கம் எழவேண்டும். (அதில் உள்ள அறிவியல் நண்பர்களுக்கே தெரியும்). குறை சொல்ல முடியாத எழுத்து. சின்ன சின்ன கவனமீறல்கள் மட்டுமே.( துளசியோடு முதன் முதலில் ரயிலில் வரும் போது அந்த பெரியவர் இறங்கிவிடுவார், பின் ஒரு பெண்மணி ஏறி இருப்பார். ஆனால் மீண்டும் அந்த பெரியவர் வருவது போல் இருக்கும். இது போல் சில சில கவனங்கள்). இந்த நாவலை படிக்க சொன்ன என் சகோதரியை வறுத்தெடுத்துக்கொண்டு படித்தேன். ஆனால் இந்த நாவலை, இந்த எழுத்தை மிஸ் செய்து இருத்தால், நான் வருத்தம் பட்டுக்கொண்டு இருந்திருப்பேன். செம நாவல். வாழ்த்துக்கள் சகோதரி.
 
@murugesanlaxmi
konjam help please... neenga sonadha kandu pidika mudiyala. indha epi dhana?

எபி 11_2:

பேசிக்கொண்டே சத்யன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த உணவை இருவருமாக உண்டு முடிக்கவும் எதிர் இருக்கையில் ஒரு முதியவரும் அவர் பத்து வயது பேரனும் வந்து அமர்ந்தனர். சாமியாடிக் கொண்டே வந்த சிறுவன்.. வந்ததும் மேல் பர்த்தில் குறட்டை விட ஆரம்பித்தான். பெரியவருக்கு அருகிலிருந்த இருக்கையில் வயதான பெண்மணி ஒருவர் அமர்ந்தார்.

மூர்த்தி அருகில் அமர வேண்டியவன், வந்ததும் மேல் பரத்தில் படுத்துக் கொண்டான்.

இரயில் கிளம்ப.. ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

இங்க பெரியவர் இறங்கலியே..? நீங்க சொன்னத நான் புரிஞ்சுகலியா? நான் எதையாவது மிஸ் பண்றேனா?
தப்பிருந்தா சொல்லுங்க திருத்திக்க உதவும்.

thanks for taking time to pen ur thoughts.. ? ?
 
வழக்கம் போல அருமையான விமர்சனம், சகோதரரே
மறக்க முடியாத மிகவும் அருமையான நாவல், ஷோபா டியர்
 
@murugesanlaxmi
konjam help please... neenga sonadha kandu pidika mudiyala. indha epi dhana?

எபி 11_2:

பேசிக்கொண்டே சத்யன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த உணவை இருவருமாக உண்டு முடிக்கவும் எதிர் இருக்கையில் ஒரு முதியவரும் அவர் பத்து வயது பேரனும் வந்து அமர்ந்தனர். சாமியாடிக் கொண்டே வந்த சிறுவன்.. வந்ததும் மேல் பர்த்தில் குறட்டை விட ஆரம்பித்தான். பெரியவருக்கு அருகிலிருந்த இருக்கையில் வயதான பெண்மணி ஒருவர் அமர்ந்தார்.

மூர்த்தி அருகில் அமர வேண்டியவன், வந்ததும் மேல் பரத்தில் படுத்துக் கொண்டான்.

இரயில் கிளம்ப.. ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

இங்க பெரியவர் இறங்கலியே..? நீங்க சொன்னத நான் புரிஞ்சுகலியா? நான் எதையாவது மிஸ் பண்றேனா?
தப்பிருந்தா சொல்லுங்க திருத்திக்க உதவும்.

thanks for taking time to pen ur thoughts.. ? ?
சகோதரி, இரவு சொல்கிறேன். ஆபீஸில் இருக்கேன். இரவு சொல்கிறேன்
 
Top