Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 26 2

Advertisement

Admin

Admin
Member


வசந்தியைய் சமாதானம் சென்ற சத்யாவின் நிலை தான் படு மோசமாக ஆகிவிட்டது. “வசந்தி கோச்சிக்காதே ..தலைவர் என் மீது இருக்கும் பாசத்தில் அப்படி பேசிட்டார்.” என்று சொல்ல.

“உங்க மீது பாசம் என்றால் என்னை என்ன வேனா பேசலாமா…..? இது சரிபட்டு வராதுப்பா….எனக்கு கணவனாக வருபவனிடம் நான் என்ன வேனா சொல்லவோ...பேசவோ….முழு உரிமை எனக்கு இருக்கனும்.

அப்படி இல்லாம போனா அவன் என்ன எனக்கு புருஷன். உங்களை ஏதாவது சொன்னா...புசுக்கு புசுக்குன்னு உன் தலைவர் நமக்கு இடையே வந்துடுவாரா…? வருவாரா…? என்று கேட்க.

“இல்லே வசந்தி அப்படி எல்லாம் அவர் வரமாட்டார்.” என்று சொல்லிக் கொண்டே சென்றவன் அப்போது தான் வசந்தி சொன்னதின் அர்த்தம் புரிந்தவனாய்.

“ஏய் இப்போ என்ன சொன்ன நீ….’” என்றதற்க்கு.

“ஆ சொன்னேன் சுரக்காய்க்கு உப்பு இல்லை என்று….”

“ உப்பு இல்லேன்னா என்ன…..டேஸ்ட்டு நல்லா இருந்தா போததா…..” என்றவன்.

“வசந்தி உனக்கு எப்போ இருந்து என்னை பிடிக்கும்.” என்று கேட்க.

தன் கைய் விரலின் பத்தையும் காண்பிக்க.” ஏய் பொய் சொல்லாதே…..?உனக்கு இப்போ வயதே இருபதோ….இருபத்தி ஒன்றோ தான்….அப்போ என்னை பத்து வயதிலிருந்து விரும்புறியா……?” அவள் விளையாட்டுக்கு சொல்கிறாள் என்று அவனும் விளையாட்டாய் கேட்க.

அவள் தீவிரமாக “எனக்கு தெரியலே….அப்போ நீங்க போகும் போதும் வரும் போதும் நான் உங்களையே தான் பார்த்திருப்பேன். அப்போ உங்க தலைவர் தேர்தலில் எல்லாம் நிக்கலே….

உங்களை அழைக்க நம்ப ஏரியாவுக்கு வரும் போது அவர் வால் பிடித்துக் கொண்டு நீங்க போவதையே பார்த்திருக்கிறேன். அது என்னவோ உங்க தலைவரை பார்த்துட்டா மத்தவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியாது போல.

ஆனால் நான் உங்களை மட்டும் தான் பார்த்திருப்பேன். அப்போ அது காதல் என்று சொல்ல முடியாது. நீங்க அங்கு இருக்கும் சின்ன பசங்களுக்கு எல்லாம் உங்க கைய் காசு கொடுத்து டிபன் எல்லாம் வாங்கி கொடுப்பிங்க.

ஒரு சில தடவை எனக்கும் வாங்கி கொடுத்து இருக்கிங்க.அப்போ இவங்க எவ்வளவு நல்லவங்கன்னு தான் பார்த்தேன். போக போகவா இல்லே என் வயசு ஏற ஏறவா அது என்னன்னு தெரியலே…

உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சி போயிடுச்சி… ஒரு சில தடவை அதை உங்க கிட்ட சொல்லலாம் என்று நினைச்சும் இருக்கேன். பிறகு எப்படி சொல்வது என்று நானே விட்டுட்டேன்.

ஏன்னா நான் உங்க முன்னாடி வந்தால் கூட என்னை உங்களுக்கு தெரியாது அப்படி இருக்கும் போது நான் என் விருப்பத்தை எப்படி நான் சொல்வது. அது மட்டும் இல்லாமல் என் அப்பாவை பற்றி உங்களுக்கே தெரியும்.

என் தம்பி தங்கையை நான் தான் படிக்க வைக்கனும் அவங்களை நினைச்சும் நான் என் விருப்பத்தை உங்க கிட்ட சொல்லாம விட்டுட்டேன். ஒரு நாள் என் அப்பா வந்து நீங்க என்னை வேலைக்கு கூப்பிட்டதா சொன்னார்.

அப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சி தெரியுமா….? என்னை உங்களுக்கு தெரியும் போல. அது தான் என்னை வேலைக்கு கூப்பிட்டு இருக்கிங்க என்று நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன்.

அப்புறம் தான் தெரிந்தது என் அப்பா தான் உங்க கிட்ட என் பொண்ணுக்கு வேலை இருந்தா சொல்லுங்கன்னு சொன்னதை வைச்சி தான் நீங்க என்னை வேலைக்கு கூப்பிட்டு இருக்கிங்க.

அதுவும் என் அப்பா கிட்ட உங்க பொண்ணு அங்க என்ன நடந்தாலும் அதை வெளியில் சொல்ல கூடாதுன்னு அவர் கிட்ட பணத்தையும் கொடுத்து இருக்கிங்கன்னு.

அவர் இதை எல்லாம் ஒரு நாள் தண்ணி அடிச்சிட்டு வந்து சொன்னாரு. அப்போ தான் எனக்கு சந்தேகம் வந்தது. அது என்ன வெளியில் சொல்ல கூடாத ரகசியம் என்று. இங்கு வந்து பார்த்த போது தான் தெரிந்தது அது என்ன என்று.

அதுவும் நீங்க என்ன செய்யிறிங்கன்னு கூட தாமரைக்கு தெரியாது உங்களை எல்லாம் நம்புவதை பார்த்து எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா….?”

உலகம் தெரியாத சின்ன பெண்ணை நீங்க ஏமாத்துவதை பார்த்து கொலை வெறியே வந்துடுச்சி…..அதுவும் அந்த பெண் வாழ்க்கை கெட்டு போவதற்க்கு நீ தான் முக்கிய காரணம் என்று எனக்கு தெரிஞ்சப்ப எப்படி இருந்தது தெரியுமா….?

ஆமா ஒன்னு கேட்கிறே...உன் தலைவருக்காக எதுன்னாலும் செய்வீயா….?நாளைக்கு அவர் என்னையே….” அவள் மேலும் பேசாது வாயைய் மூடிய சத்யா.

“வேண்டாம் வசந்தி வேறு ஒன்னும் சொல்லாதே…எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு பொண்ணு என்னை பத்து வருஷமா பார்த்துட்டு இருக்குது அது கூட தெரியாம அவளையே மிரட்டிட்டு அவள் கண்ணுக்கு என் செயலே என்னை கெட்டவனாய் காமிச்சி சே என்னை நினைச்சி எனக்கே வெக்கமா இருக்கு வசந்தி.

ஆ ஒன்னு சொன்னியே உன் தலைவர் என்னை என்று. இப்போவும் சொல்றேன் தலைவர் அண்ணியைய் தவிர வேறு யாரையும் அப்படி பார்க்க மாட்டார்.

ம் அப்புறம் நான் ஒரு பெண்ணை விரும்புன்னா அந்த பொண்ணை அவர் தங்கையா தான் பார்ப்பார். ஏன் நீயே பார்த்திருப்பியே…அவர் உன்னிடம் எது பேசுவது என்றாலும் முகத்தை பார்த்து பேசி இருக்க மாட்டார் தானே…

இப்போ கொஞ்ச நாளா தான் அவர் உன் முகத்தையே பார்த்திருப்பார். ஏன்னா என் மனசிலே நீ இருக்கே என்று தெரிஞ்ச பிறகு தான் பார்த்திருப்பார். நீ எனக்கு செட்டாவியா…? மாட்டியா….?” என்று அவன் சொல்லி கூட முடிக்க வில்லை.

“ஏன்டா இந்த செட் பண்றது உன்னை விட்டு போகவே போகாதாடா…” என்று சொல்ல.

“என்னது டாவா…..?”

“ஆமாடா…..” என்று சொல்லி விட்டு ஓட அவளை துரத்திக் கொண்டு ஓடியவன் ஆதித்யாவை இடித்துக் கொண்டு நிற்க.

அவனை பிடித்து நிறுத்திய ஆதித்யா “ஆனா நீ எல்லாம் நல்லா வருவேடா…. இந்த வீட்டில் நான் குடும்பம் நடத்தலாம் என்றால்...எனக்கு முன்னே நீ நடத்திடுவே போல.” என்று சொல்ல.

அதை கேட்டுக் கொண்டே அங்கு வந்த தாமரை ஏதோ சொல்ல வர. ஆதித்யா “இப்போ என்ன சொல்ல போற இப்போ தான் புதுசா குடும்பம் நடத்த போறியான்னு தானே கேட்க போற….

என்னலே முடியலே தாமரை நான் செஞ்சது தப்பு தான் நான் இல்லை என்று சொல்லலே….ஆனா நீ அதையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருந்தா எப்படி….? நான் மாறனும் மாறனும் என்று சொல்லிட்டு இருந்தா மட்டும் போதாது அதற்க்கு ஏதாவது முயற்ச்சி செய்யனும். எனக்கு பயமா இருக்கு தாமரை எங்கே நான் சத்யாவை பார்த்துட்டு பொறமை பட போறேனோ “ என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகல.

அங்கு இருந்த மூன்று பேரின் நிலை என்ன என்று தெரியாது அப்படியே நின்று விட்டனர். பின் சத்யா தான் “அண்ணி உங்களாளே தலைவரை மன்னிக்கவே முடியாதா அண்ணி….?” என்று கேட்டு விட்டு.

பின் வசந்தியிடம் “சாரி வசந்தி உன் கிட்ட என் விருப்பத்தை சொல்லி உன் மனசையும் குழப்பிட்டேன். தலைவர் இப்படி இருக்கும் போது நான் சந்தோஷமா இருக்க முடியாது.” என்று சொல்ல.

தாமரை “என்ன சத்யா என்னை பிளாக் மெயில் பண்றியா….?” என்று கேட்க.

“அய்யோ இல்ல அண்ணி. ஏற்கனவே என்னால நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டிங்க. இதுக்கு மேலேயும் உங்களை எதுக்கும் நான் கட்டாயப் படுத்த மாட்டேன் அண்ணி.”

“அப்போ நீ செய்யறது என்ன….?வசந்தி உன்னை விரும்புறா என்று தெரிஞ்சும் இப்படி நீ சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்….அதுவும் அவள் குடும்ப நிலை உனக்கு நல்லாவே தெரியும்.” என்று சொல்லி விட்டு.

“இப்போ என்ன நான் உன் தலைவர் கூட சந்தோஷமா வாழனும் அவ்வளவு தானே….நான் வாழறேன்.” என்று சொல்ல.

இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே வந்த ஆதித்யா “அதுக்கு நான் தாயரா இல்லே...முதலில் நீ சொன்னியே குழந்தைக்காக அது கூட ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் நீ இப்போ சொன்னதை எதில் சேர்த்துக்க.

சத்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் தான் அவன் என் தம்பி போல தான். ஆனால் அவனுக்காக என் கூட வாழறேன் என்று சொல்றது எனக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா….?” என்றதும்.

தாமரை ஏதோ சொல்ல ஆராம்பித்து விட்டு பின் சத்யாவையும் வசந்தியையும் போகும் மாறு ஜாடை காட்டியவள் அவர்கள் போனதும் ஆதித்யாவிடம் “பிறகு உங்க கூட வாழ எனக்கு விருப்பம் என்று எப்படி தான் என்னை சொல்ல சொல்றீங்க.. அதுவும் நீங்க என்னை வலுக்கட்டயமா தான் ஒவ்வொரு தடவையும் தொட்டிங்க.

குழந்தை உண்டானதில் இருந்து அந்த தொடுகை இல்லாமல் எனக்கு ஏதோ இழந்து விட்டது போல இருக்குன்னு சொல்ல சொல்றீங்களா….? உங்க கூட வாழ நினைச்சது குழந்தைக்காக தான் என்று நானே என்னை சமாதானம் படுத்தி உங்க கிட்டேயும் அதையே சொல்லி நான் என்னையே ஏமாத்திட்டு இருப்பதை சொல்ல சொல்றீங்களா….?” என்று சொல்லி கொண்டே வந்தவளின் உதட்டை மேலும் பேச முடியாது மூடிய ஆதித்யா “செல்லி செல்லி “ என்று ஒவ்வொரு உதடு பிரியும் இடைவேளையில் எல்லாம் சொல்லிக் கொண்டே முத்தமிட்டவன்.

“தேங்ஸ் செல்லி….” என்று சொல்ல.

“எதற்க்கு…..?

“எல்லா வற்றுக்கும் தான்.” என்று சொல்லி விட்டு திரும்பவும் அவளை முத்த மிட நெருங்க.

“தலைவா நாங்க இன்னும் இங்கே தான் இருக்கோம்.”

“முதலில் இவங்களுக்கு ஒரு மூக்காண கயிறு போட்டா தான் நாம் நிம்மதியா இருக்க முடியும்.” என்று சொல்ல.

“அப்போ கூட நாங்க உங்களை விட மாட்டோம்.” என்று வசந்தி சத்யா இருவரும் ஒரு சேர சொல்ல.

“அட ஒத்துமையே பார்த்தியா செல்லி…..”

“தலைவா அது என்ன செல்லி…..”

“ தாமரை செல்வி...எல்லோரும் தாமரை என்றால் எனக்கு செல்லி தான்.” என்று சொல்லி அவளை காதல் பார்வை பார்க்க. எப்போதும் இல்லாது அவன் பார்வைக்கு பதில் பார்வை அவன் செல்லியிடன் இருந்து கிடைக்க.

யார் இருக்கிறார்கள் என்று கூட பாராது அவன் அவள் செல்லியை அணைத்தான். அய்யோ பாவம் வசந்தி சத்யா தான் வெக்கப்பட்டு அவ்விடத்தை விட்டு சென்றார்கள்.நாமும் அவர்களின் இனிதான வாழ்வுக்கு இடைஞ்சல் இல்லாமல் சென்று விடுவோமா….?”

முற்றும்.
 
:love: :love: :love:
முடிஞ்சுடுச்சா :eek::eek::eek:

செல்லி :D:D:D உன்னையும்பேசவிட்டுட்டான் ஆதி......
அரசியல்வாதிங்க 2 பேர் கிட்டேயும் பேச்சில் வெல்லமுடியுமா???
வசந்தி செம...... ஏற்கெனவே காதலில் விழுந்திருக்காளே....... இந்த மாக்கான் சத்யாக்கு எப்படி தெரியாமல் போச்சு???

போங்கப்பா ஆளுக்கொரு ஓரமா......... சீக்கிரமா கல்யாணம் முடிங்க சத்யா வசந்திக்கு......
 
Last edited:
சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு. ஆதித்யாவின் செல்லி மன்னித்து வாழ ஆரம்பித்து விட்டாள். அருமையான கதைக்கு நன்றி.
 
Top