Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 26 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----26

வீட்டுக்குள் வந்த சத்யா செய்த முதல் வேலை தன் போனின் ரிங் டோன் மாத்தியது தான். அதை பார்த்த ஆதித்யா “இதை முதலிலேயே செய்து இருக்கலாம் இல்லையா…?பாரு தாமரை என்னை முறைச்சிட்டு போறா…”

“ உங்களை ஏன் முறைக்கனும்……?”

“ஏன்டா அந்த பாட்டு எனக்கு தான் பொருந்துm….அப்போ என்ன முறைக்காமா….உன்னையா முறைப்பா…?”

“ஆமாம் இல்லே...சாரி தலைவா.”

“சரி இனி சாரி சொல்லி ஒன்னும் ஆக போவது கிடையாது.”

“ஏன் தலைவா அப்படி சொல்றிங்க. அண்ணி ரொம்ப கோபமா இருக்காங்களா….?”

“ கோபம் என்று சொல்வதை விட வருத்தம் என்று சொல்லலாம் சத்யா. அவளும் குழந்தைக்காக என்னை ஏத்துக்க தான் பார்க்குறா….ஆனா அது அவளாலையே முடியலே…..

எப்படி முடியும் நான் செஞ்சு வைச்சது அது மாதிரி தானே…..சரி என்னுடையதை விடு. உன் விஷயம் என்ன….? வசந்தி கிட்ட பேசிடு. அவளுக்கு நாம் பேசியதில் இருந்தே ஒரளவுக்கு விஷயம் தெரிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன்.

சீக்கிரம் பேசிடு.வசந்தி புத்திசாலி பெண். பேசும் போது பார்த்து பேசு…என்னை மாதிரி நீயும் வாழ்க்கையைய் சிக்கல் ஆக்கிக்காதே….” என்று அனுபவஸ்தன் சொல்ல.

அதை கேட்ட சத்யாவுக்கு தான் மிக வருத்தமாக இருந்தது. தலைவரின் கஷ்டத்தில் எனக்கும் பெரும்பங்கு இருக்கிறதே….என்று யோசித்தவன்.தலைவர் இப்படி வருத்தத்தில் இருக்கும் போது நாம் வசந்தியிடம் தன் விருப்பதை சொல்வது சரியா….?என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே….

ஆதித்யா “ என்னை நினைச்சி நீ எதுவும் செய்யாதே…..வசந்தியிடம் சீக்கிரம் பேசு. அவள் குடும்பத்து மீது ரொம்ப பாசம் வைத்து இருக்கா…..அவங்க வீட்டில் அவளுக்கு ஏதாவது ஒரு இடத்தை பார்த்து வைச்சிட்டா பிறகு பிரச்சனை.” என்று சொன்னவன்.

பின் “காதலில் ரொம்ப அவசரப்படவும் கூடாது. அதே போல் அதிக காலம் எடுத்துக்கவும் கூடாது.” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான்.

அங்கு தாமரை கட்டில் மீது அமராமல் அங்கு இருந்த சேரின் நுனியில் அமர்ந்துக் கொண்டு அந்த அறையையே சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் முகத்தை வைத்து ஆதித்யாவால் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. “தாமரை உனக்கு கஷ்டமா இருந்தா நீ அடுத்த அறையில் தங்கிக்கோ…..”என்றதும்.

“அடுத்த அறையில் இருந்தா உங்களை எப்படி பார்த்துக் கொள்வது.” என்று சொன்னவள்.

பின் “நானும் பழகிக்கனும் தானே….?” என்று சொல்லி விட்டு தன்னுடைய மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றவளையே யோசனையுடன் பார்த்திருந்தான்.

அவனுக்கு நன்கு புரிந்தது தாமரையும் தன்னுடம் வாழ வேண்டும் என்று தான் முயற்ச்சி செய்கிறாள். ஆனால் நான் செய்த செயல் அவள் ஆழ் மனது வரை சென்று இருக்கிறது.

அதனால் தான் அவள் முயற்ச்சி செய்தும் அவளாள் முடியவில்லை. இனி நான் என்ன அவளின் கையில் கூட இல்லை. இனி காலம் தான் தங்களின் வாழ்க்கைக்கு வழி சொல்ல வேண்டும் என்று நினைத்தவனை போன் நடப்புக்கு கொண்டு வர.

போனை ஆன் செய்ததும் அந்த பக்கத்தில் சொன்ன செய்தியில் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. அவன் சந்தேகப்பட்டது போல இவனை கொலை செய்ய முயற்ச்சி செய்தது எதிர் கட்சி ஆட்கள் தான் என்று தெரிந்ததும் சில கட்டளை இட்ட பிறகு போனை அணைத்தவன்.

எதிர் கட்சி ஆட்களை முற்றிலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் இதை காரணம் காட்டி கொஞ்சம் அடக்கி வைக்கலாம் என்று நினைத்தவன் உடல் அசதியால் கீழ போகாமல் இந்த விஷயத்தை போனிலேயே சத்யாவுக்கு சொன்னவன் அப்படியே உறங்கியும் விட்டான்.

குளித்து விட்டு வெளியில் வந்த தாமரை கூட இதையே தான் நினைத்திருந்தாள். தான் சகஜமாக அவனிடம் இருக்க வேன்டும் என்று முயற்ச்சி செய்தால் கூட முடியவில்லையே….

தூங்கிக் கொண்டு இருக்கும் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே என் மீது ஆசைபட்டாயே நான் தாலி கட்டு என்றவுடனாவது கட்டி இருக்கலாமே….இப்போ உன்னுடைய வாழ்க்கையும் தானே நீ சிக்கல் செய்துக் கொண்டாய். சரி இனி நம் கையில் எதுவும் இல்லை என்று நினைத்து ஆதித்யா எழுவதற்க்குள் சாப்பிட ஏதாவது செய்யலாம் என்று சமையல் அறைக்கு செல்ல.

அங்கு வசந்தியும் சமையல் அறை மூலையில் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து “என்ன வசந்தி நின்னிட்ட …..?” என்று கேட்டதுக்கு.

அங்கு வேலை செய்துக் கொண்டு இருக்கும் ஒரு ஆளை காண்பித்து “அவன் சாம்ராஜ்ஜியத்தை நான் பிடித்து விடுவேன் என்று என்னை பக்கத்தில் கூட விட மாட்டேங்கிறார்.” என்று சொன்னவள்.

“நீ போ உன்னையாவது விடுறாரா என்று பார்ப்போம்.” என்று சொல்ல.

தாமரையும் சிரித்துக் கொண்டே சமையல்காரனின் அருகில் செல்ல. அவளை பார்த்த சமையல்காரர் மாணிக்கம்.

“அம்மா நீங்க இங்கே எல்லாம் ஏனும்மா வர்றிங்க இருந்த இடத்தில் இருந்தே என்ன வேண்டும் என்று ஒரு குரல் கொடுத்தா போதும். நீங்க கேட்டது உங்க கையில் இருக்கும்மா….” என்று சொன்னவன்.

அதற்க்கு தாமரை எதுவும் சொல்லாது வசந்தியைய் பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பதை பார்த்து பதட்டத்துடன் “நான் நல்லா சமைப்பேன் அம்மா…..” என்று தன்னுடைய சமையலுக்கு அவனே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ள.

அவன் எதற்க்கு பதட்டபடுகிறான் என்று தெரிந்த தாமரை “கவலை படாதீங்க அண்ணா.இங்கு எங்க எல்லோருக்கும் நீங்க தான் எப்போவும் சமைப்பீங்க.நான் இப்போ உங்க அய்யாவுக்கு வெஜ்ஜிடேபில் சூப் வைக்க வந்தேன். எனக்கு ஒரு கால் மணி நேரம் இந்த சமையல் அறையில் இடம் கொடுத்தால் போதும்

நான் செய்துட்டு போயிடுவேன். அப்புறம் நீங்க உங்க வேலையைய் தொடரலாம்.” என்று சொல்லி விட்டு அங்கு இருந்த காய் கரிகளை வெட்ட.

முதலாளி அம்மாவால் தன் வேலைக்கு ஆபாத்து இல்லை என்றவுடன் தாமரையைய் பார்த்து சிரித்து “அதுக்கு என்னம்மா நீங்க தாரளமா கால் மணி நேரம் என்ன ஒரு மணி நேரம் கூட எடுத்துக்கலாம்.” என்று பெருந்தன்மையுடன் தாமரைக்கு வழிவிட்டவன்.

இப்போது வசந்தியைய் பார்த்து முறைக்க …..

வசந்தியும் அவனை முறைத்துக் கொண்டே தாமரையிடம் “அப்போ என்னை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்த வெட்டியா இருக்கவா…?” என்று அவளிடம் சண்டைக்கு போக.

அதற்க்கு மாணிக்கம் “நீ வெட்டியா இருப்பியா….வேக வைச்சி இருப்பியான்னு எனக்கு தெரியாது. ஆனால் இது என் வேலை. என் வேலைக்கு நடுவில் யாராவது வந்தா எனக்கு கோபம் வந்துடும் சொல்லிட்டேன்.” என்று சொல்ல.

“என்னது வேக வைச்சி இருப்பியாவா….? நான் என்ன நீ செய்யும் சமையலா வேக வைக்க.” என்று மாணிக்கத்திடம் மல்லுக்கு நிற்க.

சமையல் அறையில் போடும் சண்டை ஹால் வரையும் கேட்டதால் சத்யா ஓடி வந்து “இங்கு என்ன சண்டை.” என்று விசாரிக்க.

அதற்க்கு மாணிக்கம் “பாருங்க அய்யா இந்த பொண்ணு வீணா…..என்னிடம் சண்டைக்கு வருது.” என்று குற்ற பத்திரிக்கை வாசிக்க.

அதற்க்கு சத்யா என்ன என்பது போல் வசந்தியைய் பார்க்க. தெனவெட்டாக “ஆமா வந்திட்டாரு நாட்டாமை தீர்ப்பு சொல்ல.” என்று சொல்லி விட்டு ஒரு சுழிப்போடு திரும்பவும் தாமரையிடம் “ என்னை எதற்க்கு இங்கே கூட்டிட்டு வந்தே….?” என்று விசாரிக்க.

இப்போது மாணிக்கம் வசந்தியின் பேச்சிக்கு வாய் திறக்கவில்லை. மாணிக்கம் ஆதித்யாவுக்கு என்ன மரியாதை கொடுப்பானோ….அதே மரியாதையைய் தான் சத்யாவுக்கும் கொடுப்பான்.

அப்படி பட்டவனை வசந்தி மிக தெனவெட்டாக பேசுவதும். அதற்க்கு சத்யா ஒன்றும் சொல்லாது அவள் பேசுவதை ரசித்து பார்ப்பதையும் பார்த்த மாணிக்கம் அய்யோ நம்மை போல் அவள் வேலைக்காரி.

இவளாள் எங்கே நம் வேலைக்கு ஆபாத்து வந்து விடும் என்று வாய் விட்டது தப்போ….என்று யோசித்துக் கொண்டே இங்கு நமக்கு இனி வேலை இருக்குமா….? இருக்காதா….? என்று அங்கு பேசுவதை பார்த்து நின்றான்.

சத்யா “இங்கு உன்னை வேலை செய்யவா…..கூட்டிட்டு வந்தோம்.”

“வேலை செய்ய கூட்டிட்டு வரலேன்னா வேறு எதற்க்கு….?”

ஒரு நிமிடம் வசந்தியைய் ஆழபார்த்தவன் பின் “அண்ணியை பார்த்துக்க தான் வேறு எதுக்குன்னு நீ நினைச்ச…..”

“நான் எதுவும் நினைக்கலே….நீங்க நிகைக்காம இருந்தா போதும்.”

“ஏன் நினைச்சா என்ன…..?”

என்று இவர்களின் பேச்சி எதுவும் புரியாது ஏதோ ஊமை படம் பார்ப்பது போல் கேட்டுக் கொண்டே சூப்பை செய்து முடித்த தாமரை இருவரையும் பார்த்து “என்ன பேசுறிங்க……?” என்று கேட்டதுக்கு.

“ஆ என்னையும் உன்னை போல் இழுத்து விட பார்க்குறார்…..” என்ற பேச்சில்.

“என்ன வசந்தி என்னை போய்…..” என்று பேசிக் கொண்டு இருந்தவன்.

அங்கு இவர்களின் பேச்சை வாய் பிளந்து கேட்டுக் கொண்டு இருந்த மாணிக்கத்தை பார்த்து “இங்கு தொடர்ந்து வேலை பாக்குற எண்ணம் இருக்கா…?இல்லையா….?” என்ற கேள்வியில் அவ்விடத்தை விட்டு அகல.

தாமரைக்கு அப்போது தான் அவர்களின் பேச்சே புரிய ஆராம்பித்தது இப்போது நாம் இங்கு இருப்பதா போவதா என்று யோசித்துக் கொண்டே வசந்தியைய் பார்க்க.

அவள் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை அவ்விடத்தை விட்டு போகாமல் தடுக்க அங்கயே நின்றுக் கொண்டாள்.

சத்யாவுக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது. இப்போது பேசாது பிறகு பேசலாம் என்று நினைத்தாலும் வசந்தி பேச்சி இப்போதே இதை பேசிவிட தூண்டியது.

என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கா….அப்போ கூட என்னை ஒரு மாதிரி தான் பார்ப்பா...இப்போ என்ன என்றால் இப்படி பேசுகிறாள். என்னை பார்த்தால் அப்படி பட்டவனாகவா தோன்றுகிறது என்று நினைத்தவன் அவளை முறைத்து பார்க்க.

உன் பார்வை எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்ற வகையில் அவளும் மறு பார்வை பார்த்து வைக்க. அவளையும் தாமரையையும் மாறி மாறி பார்க்க.

தாமரை “எது என்றாலும் என் எதிரிலேயே பேசு சத்யா……அவளை நான் தான் இங்கு கூட்டிட்டு வந்தேன்.இங்கு ஏதாவது பிரச்சனை ஆவாதற்க்கு நான் விட மாட்டேன்.”

“அய்யோ அண்ணி என்ன பேசுறிங்க. நான் என்ன செய்ய போறேன் அவளை.”

“என்ன அவளா…..?பார்த்து பேசு சத்யா…..”

“அண்னி அண்ணா உங்களை பார்த்தா பேசுறாங்க.”

“நீ எது சொல்வது என்றாலும் நேரிடையாக பேசு சத்யா….உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு மூளை கிடையாது. அப்படி இருந்தால் நீங்க நடந்துக் கொள்வதை வைத்து முதலிலேயே எனக்கு தெரிந்து இருக்குமே…..”

“என்ன அண்ணி என்ன என்னவோ பேசுறிங்க. இப்போ பழைய கதை எதுக்கு அண்ணி.”

“இல்லே பழைய கதை திரும்பவும் புது கதையா தொடர கூடாது இல்லையா….?அதுக்கு தான்.” என்று சொல்லி வசந்தியைய் பார்க்க.

“அண்ணி என்னை தப்பா நினைச்சி இருக்கிங்க. நான் அவளை கல்யாணம் செய்ய தான் ஆசை படுறேன்.” என்று பட்டென்று விஷயத்தை போட்டுடைக்க.

அதற்க்கு தாமரை யோசனையுடன் வசந்தியைய் பார்க்க.

வசந்தி “ஓ அப்போ உனக்குன்னா கல்யாணம் மத்தவங்க என்றால் தான் வேறு மாதிரி யோசிப்பீயா…..?’ என்று கேட்டு வைக்க.

“போதும் வசந்தி நீ ரொம்ப பேசுற….சத்யாவை ஏதவாது சொல்லனும் என்றால் சொல்லலாம். அதுக்கு உண்டான முழுஉரிமை உனக்கு இருக்கு.ஏன்னா அதை அவனே உனக்கு கொடுக்க ரெடியா இருக்கான். உங்களுக்கு நடுவில் எங்களை பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை” என்று சொன்னது. தாமரை என்று நினைத்தால் அது தவறுஅப்போது தான் அங்கு வந்த ஆதித்யா தான் இதை சொன்னான். அவன் இந்த ஐடியா கொடுத்தான் தான் இல்லை என்று சொல்வதுக்கு இல்லை.

அது தன் மீது அவனுக்கு இருந்த அதிக பாசத்தால் தான். அதுவும் இல்லாம இந்த ஐடியா அவன் எனக்கு கொடுக்கும் போது தாமரை அவனுக்கு யாரோ தான்.

அவன் நினைவில் என் சந்தோஷம் மட்டும் தான் தெரிந்தது. ஆனால் நான்….? தாமரை எனக்கு வேறு யாரோவா….?இல்லை தானே…. அப்படி இருக்கும் போது அவன் கொடுத்த இந்த ஐடியாவை நான் ஏத்துக் கொண்டேன் என்றால் என் மனதிலும் அந்த மாதிரி எண்ணம் மறைந்து இருந்ததால் தானே…

அப்படி இருக்கும் போது தவறு முழுவதும் என்னுடையது தானே தவிர அவன் இல்லை என்று தான் தன் மனது சொன்னது. அதுவும் இல்லாமல் வசந்தி சத்யாவின் மனைவியாக ஆக போகிறவளாய் இருந்தாலும் கூட தங்களின் தனிப்பட்ட விஷயத்தை பேசுவது பிடிக்காமல் தான் அவன் அப்படி சொன்னது.

ஆதித்யாவின் இப்பேச்சி வசந்திக்கு ஒரு மாதிரியாகி விட்டது. உடனே அவ்விடத்தை விட்டு போக..சதயாவுக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது. ஒரு பக்கம் தன் தலைவன் என்றால் இன்னொரு பக்கம் தன் மனதை கவர்ந்தவள்.

இப்போது இங்கு நிற்ப்பதா வசந்தி பின் செல்வதா என்று விழித்திருக்க. அவன் நிலையைய் பார்த்த ஆதித்யா “ஏன்டா இன்னும் என் மூஞ்சியை பார்த்துட்டு நிக்கிற போ ...போய் அவளை சமதானப் படுத்து.” என்று சொல்லி தாமரையைய் பார்த்து.

“அவங்க இரண்டு பேரும் பேசுறாங்க தானே….அவங்க வாயைய் பார்த்துட்டு அப்படியே நிக்குற…..”

“நான் போக தான் பார்த்தேன். ஆனால் வசந்தி தான் தடுத்துட்டா….”

“சரி சரி ரொம்ப பசிக்குது. நீ ஏதாவது எடுத்துட்டு வருவேன்னு பார்த்தா ஒன்னும் காணும். நான் ஒரு தூக்கம் தூங்கியே எழுந்துட்டேன்.” என்று சொன்னதும்.”

“சாரிங்க இதோ சூப்பு செய்துட்டேன்.” என்று சொல்லி அவனிடம் நீட்ட “இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்.” என்று சொல்லி வாங்கி குடித்தவனுக்கு ஏனோ வள்ளியம்மாவின் நியாபகம் அதிகமாக வந்தது. தாமரை கைய் பக்குவம் அப்படியே வள்ளியம்மாவை ஒட்டியே இருந்ததே அதற்க்கு காரணம்.
 
:love::love::love:

தாமரை :D:D:D எஜமானி வேலை பார்க்குறாங்களே.......
வந்ததும் எனர்ஜி பூஸ்ட் வெஜிடபிள் சூப் சூடா.......
குடித்ததும் வள்ளியம்மா நியாபகம்.......
இனி ஆதித்யாக்கு சூப்பர் சமையல் தான் போல.......

ஆதித்யாக்கு அவன் கதை சொன்னதும் கோபம் வருது.......
இப்போ சத்யாக்கு வசந்தி என்ன பதில் சொல்ல போறா???
 
Last edited:
சூப்பர்
"இங்கு என்ன சண்டை"-ன்னு நீ
கேட்கக் கூடாது சத்யா
அதுக்கு பதிலா "இங்கே என்ன
சத்தம்"-ன்னு நீ கேட்டிருந்தால்
"பேசிக்கிட்டிருந்தோம் மாமா"-ன்னு
வசந்தி சொல்லியிருப்பால்ல
 
Last edited:
Top