Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 25

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---25

அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்த சத்யாவிடம் அங்கு இருந்த டாக்டர் சுரேந்தர் “சத்யா இது ஐ.சி.யூ வார்டு. இங்கு அதிக நேரம் இருக்க கூடாது.” என்று சொல்ல.

ஆதித்யா “அப்போ என்னை ரூமுக்கு மாத்தி விடுங்க.” என்று சொன்னதும்.

“ வேண்டாம் ஆதித்யா சார் இன்பெக்க்ஷன் ஆயிட்டா பிரச்சனை.” என்று சொல்லியும் கேட்காது ரூமுக்கு மாற்றிக் கொண்ட ஆதித்யா தன் ரூமையே கட்சி ஆபிசாக மாற்றிக் கொண்டு தனக்கு நம்பிக்கையானவர்களை வரவழைத்து பேசிக் கொண்டு இருந்தான்.

“தலைவா இது யார் வேலையா இருக்கும் என்று நினைக்கிறிங்க. மகேஷ் வாயைய் திறக்க மாட்டேங்கிறேனாம்….”

“எப்படி திறப்பான் விசாரிப்பது அவனுங்க ஆள் தானே….” என்று சொன்னவன் போனை எடுத்து என்ன சொன்னானோ போனை அணைத்தவன்.

சத்யாவிடம் “நாளை நமக்கு வேண்டிய ஆள் நம் ஏரியா இன்ஸ்பெக்டராய் வர்றார்.” என்றதும்.

“சரி தலைவா…..ஆனா அவங்க கண்டுபிடிப்பதற்க்கு முன் நாம் தெரிஞ்சுக்கனும் தலைவா அது யார்…..?என்று.”

திரும்பவும் “உங்களுக்கு யார் மேலாவது சந்தேகமா தலைவா…. என்று கேட்டதுக்கு.

அங்கு இருப்பவர்கள் “யார் எல்லாம் தலைவருடைய பழைய தலைவர் அந்த ஜாதி கட்சி தலைவராய் தான் இருப்பார்.” என்று சொல்ல.

ஆதித்யா, சத்யா இருவரும் ஒரு சேர “இருக்காது….” என்று சொல்லி விட்டு பின் ஆதித்யா “ அவருக்கு எத்தனையோ கெட்ட பழக்கம் இருக்கலாம். ஆனால் முதுகுக்கு பின் குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

அது போல் அவர் செய்வது எதையும் ஒளித்து வைத்து செய்ய மாட்டார். அந்த பழக்கத்தால் தான் அவரால் தேர்தலில் நிற்க முடியாமல் என்னை நிக்க வைத்தார்.

அவருடன் நான் இருபது வருடமாக இருந்து இருக்கிறேன் கண்டிப்பாக அவர் செய்து இருக்க மாட்டார். எனக்கு என்னவோ இது எதிர் கட்சி வேலையாக தான் இருக்கும்.

என்னை கொன்று விட்டு சத்யாவை உள்ளே வைத்து விட்டால் பழி ஜாதி கட்சி தலைவர் மேல் போட்டு விடலாம் அது சுலபமும் கூட ஏன் என்றால் என்னிடம் பழகுவது போல தான் சத்யாவிடமும் நன்கு பழகுவார்.

இது அனைவருக்கும் நன்கு தெரியும்.ஜாதி தலைவர் தான் சத்யாவை வைத்து என்னை கொன்றதாக கதை கட்டி விட்டால். அவனையும் ஒழித்த மாதிரி ஆயிடுச்சி.

ஜாதி தலைவரும் வேறு யாரையும் அடுத்து தேர்தலில் நிற்க வைக்க முடியாத மாதிரியும் செய்து விட்டால் தான் சுலபமாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று எண்ணி இருப்பான்.

நான் இறந்து இருந்தால் கண்டிப்பாக அவன் நினைத்த மாதிரி தான் நடந்து இருக்கும் என் நல்ல நேரமோ….இல்லை அவன் கெட்ட நேரமோ….நான் பிழைத்துக் கொண்டேன்.” என்று சொன்னவன்.

“இது என் யூகம் தான் ...சொல்ல முடியாது நம் கண்ணுக்கு தெரியாத….எதிரி யாராவது இருந்தாலும் இருக்கலாம்.” என்று சொன்னவன் பின் அனைவரையும் பார்த்து.

“சரி இப்போ இந்த பேச்சை விடுங்க நாளை நடக்கும் தேர்தல் என்ன நிலையில் உள்ளது.”

அங்கு இருப்பதிலேயே அதிக வயதுடையவர் “உங்களுக்கு நடந்ததும் ஒரு வகையில் நல்லதா போயிடுச்சி தலைவா….அனுதாப ஓட்டு விழும் இல்லே…..?” என்று சொல்ல.

“ஏய் கிழவா…..பல்ல பேத்துடுவேன். என்ன பேச்சி பேசுற….” என்று அவனை அடிக்கும் அளவுக்கு சத்யாவுக்கு கோபம் வர.

அவனை தடுத்த ஆதித்யா “விடு சத்யா….அவர் இல்லாததை சொல்லவில்லையே….? இது தான் அரசியல் என்று தெரிஞ்சி உள்ளே வந்துட்டு இது மாதிரி விஷயத்துக்கு எல்லாம் கோபப்பட கூடாது.” என்று சொன்னவன்.

பின் “ஆனால் ஒன்று இவர் சொல்வதையும் கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டும்.இதையே எதிர் கட்சி ஆளுங்க சொன்னா….?”

“புரியலே தலைவா அவனுங்க என்ன சொல்ல போறாங்க…..?”

“அது தான் ஓட்டுக்காக நானே ஆளை வைத்து குத்துவது போல் குத்திக் கொண்டால் அனுதாப ஓட்டு எனக்கு விழும் என்று நானே செய்துக் கொண்டது என்று சொன்னால்.”

அவன் சொன்னது சரியாக தான் ஆகிவிட்டது.எதர் கட்சியில் அதையே தான் பேசிக் கொண்டார்கள். என்ன ஒன்று இந்த பேச்சை மேடை கட்டி பேச முடியவில்லை.

நாளை தேர்தல் நடப்பதால் கட்சி மீட்டிங் வைக்க கூடாது என்பதால் பேசமுடியாமல் போய் விட்டது.ஆதித்யா கட்சி நினைத்த மாதிரியும், எதிர் கட்சிகள் பயந்த மாதிரியுமே…. அடுத்த நாள் நடைப் பெற்ற தேர்தலில் ஆதித்யா எதிர் பார்க்க முடியாத அதிக ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்றான்.

ஆதித்யா, சத்யாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாது போய் விட்டது. சத்யாவுக்கு தேர்தல் வெற்றி என்றால் ஆதித்யாவுக்கு “நான் உங்களை பார்த்துக் கொள்ள அந்த வீட்டுக்கு உங்களுடன் வருகிறேன்.” என்ற மனைவியின் வார்த்தையில்.

தாமரை இரு நாட்கள் மட்டும் தான் வீட்டில் இருந்தாள். பின் ஆதித்யா பேச்சை கூட கேட்காது “நான் ஹாஸ்பிட்டலில் தானே இருக்கிறேன். இங்கு எனக்கு ஏதாவது ஆனால் கூட …” என்று சொல்லி முடிக்க வில்லை.

அவள் வாயைய் மூடிய ஆதித்யா “வார்த்தைக்கு கூட அப்படி சொல்லாதே தாமரை.” என்று சொல்ல.

அவன் வார்த்தை அவள் புண்பட்ட மனதுக்கு மருந்தாக இருந்தாலும் அவன் தொடுகையைய் சாதரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் உதட்டில் இருந்த அவன் கையைய் எடுத்தவள்.

“நான் சாதரணமாக தானே...சொன்னேன்.” என்று சொல்லி அவனுக்கு பழரசம் கொடுக்க வேண்டிய நேரம் சென்று விட்டதை நினைத்து தானே தலையில் குட்டிக் கொண்டவள்.

“பேச்சில் நேரம் போவதை பார்க்கவில்லை பாருங்க.” என்று சொல்லி பழரசத்தை பிழிய ஆராம்பித்தாள்.

அவள் செயல் அனைத்தும் பார்த்த ஆதித்யாவுக்கு ஒன்று மட்டும் விளங்கியது. அவள் என்ன தான் தன்னை கணவனாக ஏற்றுக் கொள்ள முனைந்தாலும்...முன்பு நான் செய்த செயல் அவளை தடுக்கிறது என்று நினைத்தவன்.

இனி நான் செய்வதற்க்கு எதுவும் இல்லை.அது தான் செய்ய கூடாததை அனைத்தையும் முதலிலேயே செய்து விட்டனே….இனி அவள் மனது தானாக தான் ஆரும். அது வரை நான் பொருத்துக் கொள்ள தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவளையே பார்த்திருக்க.

அவன் தன்னை பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று தெரிந்தும் அவன் பக்கம் பார்வையைய் திருப்பாது என் கடமை பழம் பிழிவது மட்டும் தான் என்று கண்ணும் கருத்துமாக பிழிந்து அவனிடம் நீட்டினாள்.

தன் பார்வையை மாற்றாது அதை வாங்கி குடித்தவன். பின் “தாமரை நீ எனக்காக கஷ்டப்பட வேண்டாம்.”

“பழம் பிழிவதில் என்ன கஷ்டம்.”

“நான் இதுக்கு சொல்லலே….அங்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே….அதுக்கு.”

“ஏன் வீட்டுக்கு வருவதில் எனக்கு என்ன கஷ்டம்.” என்று அவன் முகத்தை பார்க்காது சொல்ல.

“என் முகத்தை பார்த்தே சொல்லலாம் தாமரை.”

அவன் சொல்லியும் அவன் முகத்தை பார்க்காது குனிந்திருக்க அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்ணில் வழியும் கண்ணீரை பார்த்து “என்னை மன்னிச்சிடு தாமரை. இதை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியலே….நிச்சயமா உன் மனசை இவ்வளவு பாதிக்கும் என்று தெரிஞ்சி இருந்தா...நான் இதை செய்து இருக்க மாட்டேன்.

அப்போ நான் நினைச்சது எல்லாம் எப்போவும் எனக்கு நீ தானே…..இதில் என்ன தவறு என்று தான் நினைச்சனே தவிர உன் மனசை நினைக்காம விட்டுட்டேன். உன்னால் முடியலேன்னா அங்கு வரவேண்டாம் தாமரை நீ அந்த வீட்டிலே இருந்துடு.”

அவன் பேச்சிக்கு தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே “இல்ல நான் வர்றேன்.இப்படி இருந்தா நான் எப்போதும் இப்படியே இருந்துடுவேன்.

நீங்க நினைப்பது சரி தான். நான் உங்க கூட சாதரணமா இருக்கனும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் முடியலே….அதுவும் உங்க கைய் என் மேல் பட்டா எனக்கு பழையது தான் நியாபகம் வருது.” என்று அவள் சொன்னதும்.

அவள் தோள் மீது வைத்திருந்த கையை எடுத்து விட்டு அவளை ஒரு கையாளாக தனத்துடன் பார்க்க.

அந்த பார்வையையும் அவளாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “நான் பழக்க படுத்திக்கிறேங்க. உங்களுக்காக எனக்காக இல்லேன்னாலும் நம் குழந்தைக்காக மாத்திக்கிறேன்.

நீங்களும் சின்ன வயசிலேயே அப்பா அம்மாவை இழந்துட்டு கஷ்டப்பட்டிங்க…..நானும் என்னுடைய நினைவு தெரிவதற்க்கு முன்னவே அவங்களை இழந்துட்டேன்.

நம்ம குழந்தையைய் நாம இரண்டு பேரும் சேர்ந்து தான் வளக்கனும். நம்ம குழந்தைக்கு முன்னாலே நாம வித்தியாசமா தெரிய கூடாது. கண்டிப்பா என்னை மாத்திக்க முயற்ச்சி செய்றேன்.” என்று சொல்லி விட்டு. அவனை பார்க்க.

அவன் பார்வையில் என்ன கண்டாளோ….”என்ன….?” என்று தடுமாற்றத்துடன் கேட்க.

“இப்போ புரியுது நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப என்று.”

“என்ன கஷடம்…?என்ன புரியுது….?”

“குழந்தைக்காக நான் உன்னை திருமணம் செய்ய கேட்ட போது உனக்கு எப்படி வலித்து இருக்கும் என்று.” அதற்க்கு ஏதோ சொல்ல வந்த தாமரையைய் தடுத்து.

“வேண்டாம் தாமரை….உன் மேல் எந்த தப்பும் இல்லே...நான் செய்த பாவத்துக்கு தண்டனை எனக்கு வேண்டாமா…..? பாவத்தில் ஏதோ கொஞ்சுண்டு எங்கேயாவது நான் புன்னியம் செய்து இருந்தால்… நீ எனக்காகவே….ஏற்றுக் கொள்ளும் நாள் வரும்.” என்று சொல்லி கண்ணை மூடிக் கொண்டான்.

அதற்க்கு பின் தாமரையும் இதை பற்றி பேசவில்லை. ஒரு பத்து நாள் தாமரையின் கவனிப்பில் ஆதித்யாவின் உடல் நலம் பெற்று விட. சீப் டாக்டர் “ஆதித்யா நீங்க வீட்டுக்கு போகலாம். கவனம் ஒரு மூன்று மாதம் கனமானதை தூக்க கூடாது.” என்ற அறிவுரை சொல்லி அவர் சென்று விட்டார்.

எப்போதடா வீட்டுக்கு போகலாம் இங்கு தன்னோடு தாமரையும் கஷ்டப்படுகிறாளே….என்று நினைத்திருந்த ஆதித்யாவுக்கு சந்தோஷமாக இருந்தது என்றால்…..

வீட்டுக்கு செல்லலாம் என்ற டாக்டரின் பேச்சில் சத்யாவின் முகம் தான் கூம்பி விட்டது. ஆதித்யாவின் வீட்டில் பெண் என்று ஒரு வேளையால் கூட இல்லை.

வள்ளியம்மாவுக்கு பிறகு ஒரு பெண் சமையல்காரம்மாவை தான் முதலில் வைத்தான்.அது என்னவோ….. சத்யாவுக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லையா…?அவள் சமையல் பிடிக்கவில்லையா…..? என்று தெரியவில்லை.

ஆதித்யாவிடம் சொல்லி சமையல்காரியைய் சமையல்காரனாய் மாற்றிய பெருமை நம் சத்யாவையே சேரும். இப்போது அதை நினைத்து வருந்தினான்.

பின் வருந்த மாட்டானா….?தாமரை ஆதித்யாவின் மனைவியாய் அங்கு வருவாள்.ஆனால் வசந்தியை எப்படி அங்கு அழைக்க முடியும். தன் விருப்பத்தை சொல்லி இருந்தாலாவது வெளியில் பார்த்துக் கொள்ளலாம்.

அது தான் இங்கு இல்லையே….என்ற நினைப்பிலேயே அவன் முகம் வாடி விட…

அதை பார்த்த ஆதித்யா வீட்டுக்கு போக அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் அடிக்கி வைத்துக் கொண்டு இருந்த தாமரையையும் வசந்தியையும் பார்த்து “தாமரை நம் அந்த வீட்டில் இருந்து உன்னுடைய பொருட்கள் எல்லாம் நம் வீட்டில் வைத்து விட்டாயா….?”

“ம் என்னதும் வசந்தியோடதும் நேத்து தான் பேக் செய்து டிரைவர் கிட்ட கொடுத்துட்டேன்….நீங்க தானே...நேத்து சொன்னிங்க….இப்போ என்ன புதுசா கேட்கிறிங்க….?”

“இல்ல ஒருத்தர் ரொம்ப சோக கீதம் வாசிச்சிட்டு இருந்தார். அது தான் கேட்டேன்.” என்று சொல்லி சிரிக்க.

ஆதித்யாவின் பேச்சி தாமரைக்கு புரியவில்லை என்றாலும் புரியவேண்டிய வசந்திக்கு புரிந்து விட்டது. இருந்தும் தன் முகத்தில் எதுவும் காமிக்காது அமைதியாக பொருட்களை அடுக்கி முடித்தவள்.

தாமரையிடம் “பாத் ரூமில் இருந்து சோப்பு எல்லாம் எடுத்துட்டியா….?”

“இல்ல வசந்தி.” என்றதும்.

அதை எடுக்க சென்ற வசந்தியைய் தடுத்த சத்யா “வேண்டாம் வசந்தி அதை விட்டு விடு.”

“ஏன்…..?”

“ அதை எல்லாமா எடுப்ப….வேண்டாம்.” என்று சொல்லியும் வசந்தி பாத் ரூமுக்கு சென்று சோப்பை எடுத்துக் கொண்டு வர.

அதை பார்த்த சத்யா “நான் தான் வேண்டாம் என்று சொன்னனே….”

“நான் அவங்களதை எடுக்கலே என்னுடையதை தான் எடுத்தேன். எனக்கு அப்படியே விட்டு விடும் அளவுக்கு வசதி கிடையாது.” என்று விட்டு எடுத்ததை தன் பையில் போட்டு கொள்ள.

ஏதோ சொல்ல வந்த சத்யாவை எதுவும் பேசாதே என்று ஜாடையில் தடுத்த ஆதித்யா யோசனையுடன் வசந்தியை பார்த்தான்.அன்று தான் ஆதித்யா கவனித்து பார்த்தான்.

கைய் அது பாட்டுக்கு வேலைகள் எல்லாம் செய்துக் கொண்டு இருந்தாலும் முகம் ஏதோ யோசித்துக் கொண்டே இருப்பது போல் இருந்தது. எப்போதும் இப்படி தானா...?இல்லை சத்யா சொன்னதால் அப்படி இருக்கா….? என்று அவளையே பார்த்திருக்க.

ஆதித்யா வசந்தியையே பார்த்திருப்பதை பார்த்த தாமரை என்ன என்பது போல் கேட்க “ஒன்றும் இல்லை” என்று சொன்னவன்.

சீக்கிரம் வீடு போக எண்ணி தாமரை, சத்யா, வசந்தியோடு வீட்டுக்கு சென்றான். வசந்தி ஆதித்யா தாமரையை வெளியிலேயே நிக்க வைத்து விட்டு ஆராத்தி கலக்க உள்ளே செல்ல.

சத்யாவும் உடன் சென்றான். “நீ எதுக்குடா போற…?”

“இல்லே எந்த பொருள் எங்கு இருக்குன்னு தெரியாதுல்லே….”

“உனக்கு தெரியுமா…..சரி சரி போ….ஆனா பேசி மட்டும் வைச்சிக்காதே…..அவ ரொம்ப யோசிக்கிறா…..”

தாமரை “ஏன் பொம்பளைங்க யோசிக்க கூடாதா…..?”

“அய்யோ நான் அப்படி சொல்லலேம்மா…..” என்று ஒரு அந்த பல்டி அடித்து சாதுர்யமாக அவள் பேச்சிக்கு ஒத்து ஊதினான்.

இனி இது போல் நடந்தால் தான் நம் வாழ்க்கை சக்கரம் ஓடும் போல் நினைத்துக் கொண்டே அவன் நின்றுக் கொண்டு இருக்க வசந்தி ஆலம் கரைத்த தட்டோடு வர.

கூட வந்த சத்யா “ அண்ணி கூட சேர்ந்து நில்லுங்க தலைவா….” என்று சொன்னதும். தாமரையின் அருகில் போய் நிற்க.

வசந்தி தட்டை எடுத்து சுத்த போகும் போது சத்யாவின் போன் “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா….? அட ஓடி போயி கல்யாணம் தான் கட்டிகிலாமா….?

தாலியா தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா…இல்லே பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா….?” என்று பாடல் இசைக்க.

அவனை முறைத்துக் கொண்டே ஆலத்தை சுத்தி விட்டு வீட்டுக்குள் போக. தாமரையும் அதே போல் ஆதித்யாவை முறைத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள்.
 
???

பாட்டு :D:D:D

வீட்டுக்குள் போயாச்சு.......... இனி மனசுக்குள் போறது MLA சாமர்த்தியம்......

வசந்தி சத்யா விஷயம் தாமரை தவிர எல்லோருக்கும் தெரியுது.........
தாமரைக்கு புரியுமா இல்லை ஆதி சொல்லனுமா???

எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிரிகட்சிகள் தான்........
 
Last edited:
Top