Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 24

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----24

அதற்க்குள் ஆதித்யா சொன்னதை எழுத்தில் எழுதி அவனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு போன போலீசுக்கு மூச்சே செத்து விட்டது. அடப்பாவிங்களா…. பணத்தை காட்டி உயிரா வாங்க பாக்குறாங்களே….என்று பயத்துடன் வெளியே சென்ற அந்த போலீஸ் ஆதித்யா சொன்னது போலவே…மகேஷை அரெஸ்ட்டு செய்ய.

அந்த மகேஷ் “ எந்த சந்தேகத்தின் அடிப்படையில் என்னை அரெஸ்ட்டு செய்யிறிங்க.” என்று முரண்டு பிடிக்க.

‘சந்தேகம் எல்லாம் இல்லைடா...ஆதித்யா கன்பாம் செய்துட்டார்.”

“கன்பாமா...இருக்க முடியாதே…..அங்கு துளி வெளிச்சம் கூட இல்லையே….என்னை பார்த்து இருக்க சான்ஸே இல்லை.” என்று அவன் அடித்து கூற.

“பாக்க சான்ஸ் இல்லை தான். வடிவேலுக்கு கொண்டை காட்டி கொடுத்தது போல. உனக்கு நீ கட்டி இருக்க இந்த காப்பு தான் காட்டி கொடுத்ததுடா என் வெண்ணே….” என்று அவனை திட்ட.

பின் என்ன இவர்களை நம்பி போன பாவத்துக்கு தனக்கு ஆபாத்து ஏற்பட்டால் அவன் தான் என்ன செய்வான்.

ஆதித்யா மகேஷ் தான் குற்றவாளி என்று சொன்னவுடன். இதோ இப்போது இவன் கேட்டானே அதே கேள்வியைய் தான் இன்ஸ்பெக்டரும் கேட்டார்.

“இப்போது அவனை நிரபாரதி என்று காட்டுறதுக்கு இப்படி வலச்சி வலச்சி கேள்வி கேக்குறிங்கலே….இந்த கேள்விகள் எல்லாம் சத்யா தான் குற்றவாளி என்று சொல்லும் போது ஏன் கேட்கவில்லை….?

அப்போ இதில் ஏதோ பெரிய தலை இன்வாலாகி இருக்குன்னு தெரியுது. சரி அதை அப்புறம் நான் வந்து பார்த்துக்குறேன். மகேஷ் தான் குற்றவாளி என்று நான் ஏன் அடிச்சி சொல்றேன்னா….?

அவன் குத்தும் போது அவன் மணிக் கட்டை நான் பிடித்தேன்.அவன் சிங்கம் முகம் இட்டது போல் ஒரு காப்பு கட்டி இருப்பான். அதுவும் மிக பெரியதாக.அவன் காப்போடு தான் நான் பிடித்து அமுக்கினேன்.

என் கணிப்பு படி பார்த்தால் அவன் கையில் ரத்தம் காயம் கூட விழுந்து இருக்கலாம்.” என்று ஆதாரத்தோடு விளக்கும் போது அந்த இன்ஸ்பெக்டரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“என்ன காப்பா…?

“ஆம், உன் காப்பு தான்.”

என்று சொல்லி விட்டு அவன் கைய் பிடித்து பார்க்க ஆதித்யா சொன்னது போல தான் மகேஷின் கையில் காயம் ஏற்பட்டு இருந்தது. மகேஷ் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.

ஆதித்யா பிழைத்தால் சத்யாவை வெளியே விட்டு விடுவார்கள் என்று தான் நினைத்தானே தவிர தான் மாட்டுவோம் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.

ஆதித்யாவின் கட்டளை படி சத்யா வெளியே வர மகேஷ் உள்ளே போனான்.தாமரைக்கு தான் ஆதித்யாவை அப்படி படுக்கையில் பார்க்க மிக கஷ்டமாக இருந்தது.

அவனை அவளுக்கு பிடிக்காது தான்.ஆனால் தன் கழுத்தில் தாலி கட்டியதால் தான் அவனுக்கு இப்படியாகி விட்டதோ என்ற குற்ற உணர்வும். பெண்களுக்கே இருக்கும் தாலியோட மகிமையோ என்னவோ….?

அவனை நன்கு பார்த்து பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து ஆதித்யாவிடம் “அங்கு வந்திடுங்க. நான் பார்த்துகுறேன்.” என்று சொல்ல.

“ இல்லே நான் அங்கயே போறேன்.” என்று ஆதித்யா சொன்னவுடன் தாமரையின் முகம் வாடி விட்டது.

அதை பார்த்து “நீ கவலை படதே தாமரை சத்யா என்னை நல்லா பார்த்துப்பான்.” என்று சொல்லியும் அவள் முகம் தெளிவில்லாது இருக்க.

“என்ன தாமரை.”

“இல்லே நான் இருக்கும் வீடு கூட உங்களது தானே...பின்ன அங்க வர என்ன பிரச்சனை. ஏன் அங்கு வந்ததே இல்லையா….?” முதலில் ஆதாங்கத்துடன் கேட்டவள். பின் கோபத்துடன் முடித்தாள்.

“நீ சொல்வது போல அதுவும் என் வீடு தான் தாமரை. இப்போ நான் இருக்கும் வீடு நீ கோவிலா நினைச்சே...அதனால் இப்போ என்னால் வரமுடியாதுன்னு சொன்ன.

நீ நினைப்பது போல தான் தாமரை இப்போ நான் இருக்கும் வீடு எனக்கு கோயில் தான். என் அப்பா அம்மாவோடு நான் இருந்த வீடு.என் கிட்ட பணவசதி பெருகினாலும் அந்த வீட்டை விட்டு போக மனம் வரவில்லை.

அது போல அந்த கோயிலில் தான் நம் வாழ்க்கை வாழனும் என்று நான் ஆசைப்படுறேன்.நீ சொல்ல வருவது புரியுது. இனி என்ன புதுசவா வாழ போற என்று தானே…

அது நான் தெரியாமல் செய்து விட்டேன் தாமரை. இனி நான் தொடுவது என்றால் நம் வீட்டில் தான் அதுவும் உன் விருப்பத்துடன் தான்.” என்று சொல்லி முடித்தவன் கண்ணை மூடிக் கொண்டான்.

அவ்வளவு பேசயதாலோ என்னவோ...ஆதித்யாவின் முகத்தில் களைப்பை காண தாமரையும் ஒன்றும் பேசாது வெளியேறினாள்.

ஆதித்யாவை பார்த்து விட்டு வெளியில் வந்த தாமரையின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்த வசந்தி “என்ன தாமரை என்ன விஷயம் அய்யா என்ன சொன்னாங்க.”

“இல்லே நான் நாம இருக்கும் வீட்டுக்கு கூப்பிட்டேன் அவர் வரவில்லை.” என்று சொன்னவளை பார்த்து.

“ஏன் அங்கே கூப்பிட்ட தாமரை.” என்பவளை பார்த்து இவள் என்ன லூசா என்பதை போல் பார்த்து அதை கேட்டும் விட.

“ஆமாடி ஆமா செய்வது எல்லாம் நீங்க. கடைசியில் லூசு என்ற பட்டம் எனக்கு.” என்று அவள் தாமரையிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே….அப்போது தான் அங்கு வந்த சத்யா வசந்தியை பார்த்து “வசந்தி தலைவருக்கு ஒன்னும் இல்லையே….? என்று பதட்டத்துடன் கேட்க.

அவன் கேள்விக்கு பதில் அளிக்காது வசந்தியின் பார்வை அவன் உடல் முழுவதும் ஒரு முறை வலம் வந்தது. “எனக்கு ஒன்னும் இல்லே வசந்தி முதலில் நீ தலைவர் எப்படி இருக்காருன்னு சொல்லு.” என்றதும்.

“நல்லா இருக்கார். போய் பார்ப்பது என்றால் பாருங்களே….? என்று சொன்னவள் சத்யாவின் முகம் பார்க்க.

சத்யா உள்ளே போகாமல் வசந்தியே தான் பார்த்துக் கொண்டு இருந்தான் . ஏதோ பேச நினைத்து வாய் திறக்கும் வேளையில் அப்போது தான் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த தாமரையைய் பார்த்து தான் பேச வந்ததை நிறுத்தி விட்டு அவளை பார்த்து ஒரு புன் சிரிப்புடன் “நான் தலைவரை பார்த்துட்டு வந்துடுறேன் அண்ணி.” என்று சொல்லி விட்டு உள்ளே மறைய.

அவன் செல்வதையே பார்த்திருந்த தாமரை வசந்தியிடம் “அவர் எப்படி இருக்கார் என்று என் கிட்ட தானே கேட்கனும் ஏன் உன் கிட்ட கேட்குறார்.” என்று இதை மட்டும் வக்கணையாக கேட்டு வைத்தாள்.

“என் கிட்ட ஏன் கேட்கிற…..உன் கணவரின் அடிமை இப்போ வந்துடுவாரு. நீ அவருக்கிட்டயே நேர கேட்டு விடேன்.” என்று அவள் சொல்லிக் கொன்டு இருக்கும் போதே அங்கு வந்த சத்யா தாமரையைய் பார்த்து.

“தலைவர் உங்களை வீட்டுக்கு போக சொல்லிட்டாரு அண்ணி..” என்றவன்.

பின் வசந்தியைய் பார்த்து “நீ அண்ணி கூட போ வசந்தி .அவங்க கொஞ்சம் ரெஸ்ட்டு எடுக்கட்டும். இந்த சமயத்தில் இரவு கண் முழித்தது அவங்களுக்கு ஒத்துக்க வில்லை போல பார்க்கவே டல்லா இருக்காங்க.” என்று சொல்ல.

அப்படியா என்பது போல் வசந்தி தாமரையைய் பார்த்தாள். அவள் கண்ணுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அவள் பார்வையைய் புரிந்துக் கொண்ட சத்யா….”காதல் பார்வைக் கொண்டு பார்த்தால் புரியும் போல.” என்று சொல்ல.

இவன் என்ன சொல்கிறான் என்பது போல் பார்க்க.”தலைவர் தான் சொன்னார். தாமரை டையர்டா இருக்கா வீட்டுக்கு அனுப்பி விடு. என்று.”

பின் “நீயும் டையர்டா தான் இருக்கே வசந்தி நீயும் வீட்டுக்கு போய் ரெஸ்ட்டு எடு. வீட்டுக்கு போனவுடன் சமையல் கட்டு பக்கம் போயிடாதே….வாச் மேனிடம் சொல்லி ஒட்டலில் இருந்து ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கோங்க.

எனக்கும் தலைவருக்கும் நிறைய வேலை இருக்கு. நாளை எலெக்க்ஷன் உனக்கு தெரியும் இல்லே…..முதலில் தலைவர் ஜெயிக்கட்டும். அப்புறம் இருக்கு அவனுங்களுக்கு.” என்று கருவ.

இவர்களின் பேச்சில் தலையிடாது இவ்வளவு பேசுவார்களா….?இவர்கள் என்று இவர்களின் வாயைய் பார்த்துக் கொண்டு இருந்த தாமரை சத்யா சொன்ன தலைவருக்கு எனக்கும் வேலையிருக்கு என்ற பேச்சில்….

“இன்னும் என்ன வேலை இருக்கு உன் தலைவருக்கு. கட்சி கட்சி என்று பார்த்தால் தான் என்னையும் இப்படி ஆக்கிவிட்டுட்டு அவரும் இப்படி படுத்துட்டு இருக்காரு. இன்னும் என்ன ஆகவேண்டும் என்று அந்த கட்சியை பிடிச்சிட்டு இப்படி தொங்கிட்டு இருக்காரு.” என்று சொன்னவள்.

அதே கோபத்துடன் ஆதித்யா படுத்துக் கொண்டு இருந்த அறைக்கு செல்ல. அதை பார்த்த சத்யாவும் பின்னே செல்ல நினைத்து ஒரு அடிக்கூட எடுத்து வைத்து இருக்க மாட்டான்.

“இப்போ நீ எங்கே வாலு பிடித்துத்துக் கொண்டு போக பார்க்ககுறே….அவங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி….என்ன தான் உன் தலைவருக்கு விசுவாசியா இருந்தாலும் இப்படியா…..?” என்று கேட்டு வைக்க.

ஒரு அசட்டு சிரிப்புடன் “ஆமாம் இல்ல…..” என்று சொன்னவன்.

பின் “தேங்ஸ் வசந்தி சூழ்நிலையைய் சரியா புரிஞ்சிட்டு நீ செய்துட்டே…..” என்று சொல்ல.

“எனக்கு எதுக்கு இந்த தேங்ஸ் எல்லாம்.” என்று சொன்னவள்.

பின் என்ன நினைத்தாளோ….”ஆமாம் நீங்க இதை தாமரையிடமே சொல்லி இருக்கலாமே….ஏன் என்னிடம் சொன்னிங்க.” என்று கேட்க.

அதற்க்கான விளக்கத்தை அளித்தா சத்யாவை ஒரு புரியாதா….ஒரு பார்வை பார்த்த வசந்தியைய் பார்த்து “என்ன வசந்தி என்னிடம் ஏதாவது சொல்லனுமா…..? என்று கேட்டதுக்கு அதே பார்வையிடன் இல்லை என்று சொன்னவள்.

பின் தன் பார்வையைய் வெளியே செலுத்தியவள் பின் மறந்தும் சத்யாவை பார்க்கவில்லை. அவள் பார்வையில் சத்யாவுக்கு என்னவோ இருப்பது போல் இருந்தது.

கண்டிப்பாக இவள் ஏதோ நினைக்கிறாள் என்று நினைத்தவன் சரி இதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் கட்சி வேலை நிறைய இருக்கிறது. பாவம் அண்ணி உள்ளே போனதை பார்த்தா தலைவர் நிலை என்னவோ என்று தெரியவில்லையே என்று நினைத்து ஆதித்யாவின் அறைவாயிலேயே பார்த்துக் கொண்டு இருந்தான்.

உள்ளே சென்ற தாமரை அவன் தூங்கிக் கொண்டு இருப்பதையும் பொருட்படுத்தாது அவனை எழுப்ப…..மருந்தின் உபயத்தில் தூங்கிக் கொண்டு இருந்த ஆதித்யாவுக்கு மூன்று முறை தாமரை உலுக்கிய பின் தான் கண்ணை திறக்க முடிந்தது.

தன் முன் கோபத்துடன் இருக்கும் தாமரையைய் பார்த்து “என்ன தாமரை ஏன் இவ்வளவு கோபமா இருக்கே….?” என்று கேட்க.

“என்ன கோபமா நீங்க செய்ற காரியத்துக்கு உங்களை கொஞ்சவா முடியும்.” என்றதுக்கு.

“ஆ இது கூட நல்லா இருக்கே….” என்று சொல்லி அவள் கோபத்தை இன்னும் கூட்ட.

“ இருக்கும் இருக்கும்.” என்று சொன்னவள்.

பின் “இன்னும் ஏன் அந்த கட்சியைய் கட்டிட்டு அழறிங்க.அதை விட்டு ஒழியலாமே……” என்று கேட்க.

“விட முடியாது தாமரை. கட்சியில் இருக்கும் போது நான் எத்தனையோ பேரை பகைச்சிட்டு இருப்பேன்.அவர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை என்றால். அது நான் இருக்கும் பதவி தான் காரணம்.நான் இதை விட்டு விலகினால் ஆபாத்து எங்கே இருந்து முளைக்கும் என்று எனக்கே தெரியாது.” என்றதற்க்கு.

“ஏன் இப்போ ஆபாத்து இல்லையா….?”

“இருக்கு ஆபாத்து இருக்கு தான். ஆனால் இந்த பதவி என்னை காப்பத்தி விட்டு விடும். இப்போ என்னை குத்தினவனை நான் சும்மாவா வீட்டு விடுவேன். இவனுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து ஆயுசுக்கும் எவனும் என்னை தொட யோசிக்கனும்.”

“வேண்டாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று தாமரை சொல்ல தான் அவள் முகத்தை பார்த்தான். அப்படி ஒரு பயம் தெரிந்தது அவளின் முகத்தில்.

அவசரப்பட்டு அனைத்தும் சொல்லி அவளை பயமுறுத்தி விட்டமோ….என்று நினைத்தவன் “பயப்படதே தாமரை எனக்கு ஒன்னும் ஆகாது. உன் தாலி பாக்கியம் தான் என்னை காப்பாத்தி இருக்கு… அதுவும் என் கூட சத்யா இருக்கும் போது எதற்க்கு கவலை….?”

“ம் அவர் இருக்கும் போது தான் உங்களை குத்தி இருக்கானுங்க.”

“ஆமாம் நான் இல்லைன்னு சொல்லலே….ஆனா அவன் இருந்ததால் தான் நான் பிழைத்தே இருக்கேன். என்ன புரியலையா….? அவன் புத்திசாலி தனமா என்னை இழுத்தால் தான் குத்து சாடு வாக்கில் பட்டது.

அதுவும் முன் ஜாக்கிரதையாக வசந்திக்கு போன் செய்து சூழ்நிலையைய் சொல்லி ஹாஸ்பிட்டலில் எனக்கு வரும் ஆபாத்தை தடுத்தவனும் அவன் தான்.

இதை விடு தாமரை இந்த சமயத்தில் நீ கண்டதையும் நினைத்து பயப்பட கூடாது. வீட்டுக்கு போ….” என்று சொல்ல.

“உங்களுக்கு எப்போவும் குழந்தை நினைப்பு என்னை பத்தி எங்கே யோசிக்க போறிங்க.”

“உன்னை பத்தி எவ்வளவு யோசிக்கிறேன் என்று பிறகு சொல்றேன் முதலில் நீயும் வசந்தியும் வீட்டுக்கு போங்க தாமரை. ப்ளீஸ் இப்போ நிறைய வேலை இருக்கு.”

“ இப்போ தான் சர்ஜரியே முடிஞ்சு இருக்கு இப்போ போய் வேலை வேலைன்னு கட்டிட்டு அழறிங்க.”

“இப்போ வேலையைய் மட்டும் தான் கட்டிட்டு அழமுடியும். என்று சொன்னவன் தாமரையின் முறைப்பில் “சரி சரி நான் இருக்கும் இடத்தை விட்டு அசைய போறது இல்லே….எல்லாம் சத்யா தான் பார்த்துப்பான்.” என்று சொல்லி ஒரு வழியாக இருவரையும் அனுப்பிய பிறகு தான் சத்யாவிடன் நாளை நடக்கும் தேர்தல் பற்றி ஒழுங்காக பேச முடிந்தது.
 
Top