Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 17

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----17

ஆதித்யாவும் சத்யாவும் வாங்கிய பொருட்களுடன் ஐந்து மணிக்கே தாமரை வீட்டுக்கு வந்து விட்டார்கள். ஆனால் பாவம் உள்ளே தான் செல்ல முடியவில்லை. ஏன் என்றால் வீடு பூட்டி இருந்தது.

வீடு பூட்டி இருப்பதை பார்த்த ஆதித்யாவுக்கு பதட்டமாகி விட்டது .” சத்யா இந்த நேரத்தில் எங்கே போயிருப்பாங்க….”

“எனக்கு தெரியலே தலைவா!!!!நீங்க பதட்டபடாதீங்க.” என்றவன் அடுத்த வீட்டு வாச்மேனிடன் போய் விசாரித்தான்.

ஆம் அடுத்த வீட்டு வாச் மேனிடம் போய் தான் விசாரித்தான். ஏன் என்றால் அந்த வீட்டுக்கு வாச்மேன் இல்லை. இருந்தால் ஆதித்யா வந்து போவது மத்தவங்களுக்கு தெரிந்து விடும் என்று நினைத்து இந்த ஏற்பாடு அனைத்தும் செய்தது சத்யா தான்.அது போல் தாமரை அந்த வீட்டுக்கு வந்ததும் வேலையாளை பாத்து பாத்து தேர்வு செய்ததும் சத்யா தான்.

ஆதித்யாவுக்கு சத்யா வாச்மேன் வேண்டாம் என்று சொன்னதை நாம் கேட்டு இருக்க கூடாதோ...என்று தான் நினைக்க தோன்றியது. தாமரைக்கு ஏதோ என்று நினைக்கும் போதே….

வசந்தி இருப்பாளே அதனால் ஒன்றும் ஆகி இருக்காது என்று யோசிக்கும் போதே அய்யோ அவளும் சின்ன பெண் தானே….நம் வசதியைய் பார்த்து அவர்களின் பாதுகாப்பில் கோட்டை விட்டு விட்டோமோ….என்று முதன் முறையாக தன்னையும் தன் பதவியைய் பற்றி யோசிக்காது தாமரை பற்றி யோசித்தான்.

பக்கத்து வீட்டு வாச் மேனிடம் பேசி விட்டு வந்த சத்யா “தலைவா அவருக்கு தெரியாது என்கிறார் .” என்று பதட்டதுடன் சொன்னான்.

ஆம் இப்போது சத்யாவுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அது அவர்களுக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்பதில் இல்லை.

தாமரையும் வசந்தியும் சொல்லாமல் கொல்லாமல் எங்கேயோ சென்று இருப்பார்களோ….என்று தான். இவர்களின் பதட்டத்தை கூட்டும் வகையில் ஆதித்யாவின் போன் இசைக்க.

“சே இப்போ இது வேற!!!” என்று ஆன் செய்து காதில் வைத்தவன் அந்த பக்க பேச்சை கேட்டவுடன்.”இதோ வந்துடுறேன்.” என்று சொல்லி போனை அணைத்தவன்.

“சத்யா வா….”என்று பதட்டத்துடன் அழைக்க.

“எங்கே தலைவா!!!தாமரையும் வசந்தியும்….” என்று நிறுத்த.

“அது தான் அவங்க நம்ம ஹாஸ்பிட்டலுக்கு தான் போயிருக்காங்க….?”

“யாருக்கு என்ன தலைவா!!!” என்று அவனும் ஆதித்யாவின் பதட்டத்துக்கு குறைவில்லாமல் பதட்ட பட.

“அது தான் அந்த டாக்டர் சொல்லவில்லைடா….நேரில் வாங்கன்னு வைச்சிட்டார்.” என்று சொன்னவன்.

“ஆனால் என்ன ஆச்சோ என்னவோ இருந்ததுக்கு இப்போ பரவாயில்லை.” என்று சொல்லிக் கொண்டே காரை ஹாஸ்பிட்டல் முன் நிறுத்தியவன் விரைந்து டாக்டர் முன் நின்று “என்ன டாக்டர் தாமரைக்கு உடம்பு சரியில்லையா….?”என்ற கேள்விக்கு இல்லை என்று அவர் தலையாட்ட.

யப்பா என்று சேரில் அமர்ந்தவன். பின் “வசந்திக்கு என்ன டாக்டர்.” என்றதற்க்கு.

இப்போது வசந்திக்கும் ஒன்றும் இல்லை என்ற பதிலில் ஆதித்யாவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

இரண்டு பேருக்கும் ஒன்றும் இல்லாத போது எதற்க்கு ஹாஸ்பிட்டலுக்கு வரவேண்டும். அதுவும் விடிய காலையில் என்று நினைத்துக் கொண்டே டாக்டரை பார்க்க.

டாக்டர் எதுவோ சொல்ல வருவது போல் இருக்க “என்ன டாக்டர் என்ன விஷயம்.” என்று ஆதித்யா கேட்கும் போதே சத்யா அங்கு வர “என்ன தலைவா!!!யாருக்கு என்ன….?” என்று கேட்க.

“வசந்திக்கு ஒன்னும் இல்லையா….போதுமா…..” என்று சொன்னவன் சத்யா ஏதோ சொல்ல வருவதை தடுத்து விட்டு டாக்டரை பார்க்க.

டாக்டர் இப்போதும் தயங்குவதை பார்த்து “என்ன டாக்டர் என்ன என்றாலும் தைரியமா சொல்லுங்க.” என்றதற்க்கு.

ஆதித்யாவின் முகம் பார்த்து “தாமரை கன்சீவ்.” என்று நேரிடையாக அவர் விஷயத்தை போட்டுடைக்க.

சட்டென்று சேரில் இருந்து ஆதித்யா எழுந்து நின்று விட்டான். டாக்டர் அவன் முகத்தை பார்க்க. அதில் தெரிவது அதிர்ச்சியா!!!மகிழ்ச்சியா!!! என்று அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன இத்தனை ஆண்டு கூடவே இருக்கும் சத்யாவுக்கும் தெரியவில்லை.

பின் “இப்போது தாமரை எங்கே…..?” என்று கேட்க.

“என் ரூமில் தான் இருக்காங்க.லேடி டாக்டர் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துட்டு இருக்காங்க.”

“கவுன்சீலிங்கா ….எதுக்கு?”

இப்போது டாக்டரின் முகம் சங்கடதை காண்பிக்க.”சொல்லுங்க டாக்டர்.” என்றதற்க்கு.

இப்போது பதில் அந்த மூத்த டாக்டர் சொல்லுவதற்க்கு பதிலாக அப்போது அங்கு வந்த அவர் மகன் சுரேந்தர். “ஆபார்ஷன் செய்யனும் என்று அடம் பிடிக்கிறாங்க.”

“என்ன ...ஆ...பார்ஷ...னா…..?”

“ஆமாம் ஆபார்ஷன் தான். அது இந்த ஹாஸ்பிட்டலில் செய்றது இல்லலே….அது தான் இந்த கவுன்சீலிங்.” என்று சொன்னவன்.

தன் அப்பாவிடம் “அப்பா இந்த ரூல்ஸ் எல்லாம் கல்யாணம் ஆனா பெண்ணுக்கு தானேப்பா….தாமரைக்கு தான் ஆகவில்லைலே…..ஆபார்ஷன் இந்த ஹாஸ்பிட்டலில் செய்யகூடாதுன்னா நான் தனிப்பட்ட முறையில் செய்யறேன்.” என்றது தான்.

“யார் குழந்தைய ஆபார்ஷன் பண்ணுவே என்று சொல்றே…. ஆதித்யா குழந்தையையா….?” என்று சொல்லிக் கொண்டே அடித்தவனை டாக்டரும் சத்யாவும் பிடித்து இழுக்க.

பின் ஒரு நிலைக்கு வந்த ஆதித்யா தன் ஒத்த விரலை காட்டி “கொன்னுடுவேன்.” என்றதற்க்கு.

தன் உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே “தாமரையுமா….” என்று தெனவட்டாக சொல்லி விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

இப்போது ஆதித்யாவின் மொத்த கோபமும் தாமரையின் மீது வந்தது. சத்யாவிடம் “அவளுக்கு என்ன தைரியம் இருந்தா என் குழந்தைய அழிக்க சொல்லுவா…..?” என்று கோபமாக சொல்லிக் கொண்டே தலமை டாக்டர் அறைக்கு செல்ல.

ஆதித்யா பின்னே சென்ற சத்யா “தலைவா எது இருந்தாலும் அமைதியா பேசுங்க.”

“அமைதியாவா….என்ன அமைதியா பேச சொல்ற. அவ என் குழந்தைய அழிக்க சொல்றாடா….என்ன அமைதியா பேச சொல்றியா….?” என்று சொல்லிக் கொண்டே தாமரை இருந்த அறையின் வாசல் படி அருகில் சென்றவனின் காதில்.

“எனக்கு இந்த குழந்தை வேண்டாம் வேண்டாம். நீங்க பண்றிங்களா….?நான் வெளியில் பண்ணிக்கட்டுமா…..?”

அந்த வார்த்தையைய் கேட்ட ஆதித்யா ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு வெறியே….!!!வந்து விட்டது. தாமரையின் எதிரில் பேசிக் கொண்டு இருந்த டாக்டரை தள்ளி விட்டு தாமரையில் கழுத்தை பிடித்தவன்.

“ என் குழந்தைய அழிப்பியா ...?அழிப்பியா…?” என்று அவன் ஒவ்வொரு பேச்சிக்கும் அவனின் கைய் அழுத்தம் கூட்ட.

ஏற்கனவே சரியாக சாப்பிடததாலும் இந்த சமயத்தில் இருக்கும் உடல் சோர்விலாலும் அவன் அழுத்தத்தை தாள முடியாது இரும….

அப்போதும் ஆதித்யா தன் கையைய் தாமரையின் கழுத்தில் இருந்து எடுக்காமல் இருக்க. சத்யாவும், வசந்தியும் தான் ஆதித்யாவின் கைய் அழுத்தத்தில் இருந்து தாமரையைய் விடுவித்தனர்.

தன் கழுத்தி விடு பட்டதும் கழுத்தை தடவிக் கொண்டே ஆதித்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே ….

“இப்போ என்ன சொன்ன ...உன் குழந்தையா…..? அதுக்கு என்ன ஆதாரம்.”

திரும்பவும் அவளை கைய் ஒங்கிக் கொண்டு செல்பவனை தடுத்து நிறுத்திய சத்யா…. “தலைவா தாமரையைய் பாருங்க. எவ்வளவு சோர்வா தெரியிறாங்க.” என்றதும்.

“ஆமாம் ஆமாம் ரொம்ப சோர்வா தான் தெரியிறா!!!!” என்றவன்.

தாமரையின் அருகில் சென்று அவள் கழுத்தை தடவி விட்டு “நீ பேசுவதும் தப்பு தானே….தாமரை.” என்று மிக குழைந்த குரலில் பேச….

ஆச்சரியத்துடன் தன்னை பார்த்திருக்கும் தாமரையை பார்த்து “என்ன தாமரை அப்படி பாக்குற….? என்று கேட்டவன்.

“இதோ பார் தாமரை. இனி நீ சாப்பாட்டை கொறிக்க கூடாது நல்லா சாப்பிடனும். இனி நீ இரண்டு பேருக்கு சேர்த்து சாப்பிடனுமில்ல….” என்று சொல்லிக் கொண்டே தாமரையின் வயிற்று மேல் கைய் வைத்தவன்.அப்படியே கண் மூடி அமர்ந்து விட்டான்.

அவன் மோன நிலையைய் பார்த்த சத்யா “தலைவா இப்போ எல்லாம் ஒரு அசைவும் தெரியாது. அதுக்கு இன்னும் நாளு ஐந்து மாசம் காத்திருக்கனும்.” என்றதும்.

“ஒ அவ்வளவு நாள் ஆகுமா….?” என்று அந்த காத்திருப்பு கூட பொறுக்காதவனாய் கேட்க.

“ஆமாம் தலைவா உங்க அவசரத்துக்கு எல்லாம் நான் தான் ஆடுவேன். இனி குழந்தைக்கு ஏத்த மாதிரி தான் நீங்க ஆடனும்.” என்று அவனை கிண்டல் செய்ய.அந்த கிண்டல் அவனுக்கு மேலும் மகிழ்ச்சியைய் கூட்டியது என்றே சொல்லலாம்.

ஆனால் இதை ஏதும் தாமரைக்கும் பக்கத்தில் இருந்த வசந்திக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. நேற்றிலிருந்து தாமரைக்கு சாப்பிட்ட உணவு ஏதும் வயிற்றில் தங்காது வாந்தியாய் வெளியேற இது எதனால் என்று அறிந்துக் கொள்ள முடியாத வசந்தி பயந்து தான் விட்டாள்.

முதலில் இதை ஆதித்யாவுக்கு சொல்லி விடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் அதை தாமரை மறுத்து விட்டாள். அவள் மனதில் ஒரு அற்ப ஆசை என்று தான் சொல்ல வேண்டும்.

இரண்டு நாட்களாக எது சாப்பிட்டாலும் வாந்தி வருவதை பார்த்து நமக்கும் தன் ஆயாவை போல் ஏதாவது பெரிய வியாதி ஏதோ வந்து விட்டதோ என்று தான். அது அவளுக்கு பயத்தை தருவதற்க்கு பதிலாக ஒரு விடுதலை உணர்வு தான் ஏற்பட்டது.

இதன் மூலமாவது நான் வாழும் இந்த ஈன வாழ்வில் இருந்து விடுதலை கிடைக்காதோ என்று தான்.நர்சரிங் படித்துக் கொண்டு இருந்தும் தான் தாய்மை அடைந்து இருப்போமா….என்று துளி கூட அவள் மனதில் சந்தேகம் எழவில்லை.

ஒரு சமயம் முறைப்படி திருமணம் முடிந்து மத்தது நடந்து இருந்தால் தெரிந்து இருக்குமோ என்னவோ….?

பின் அந்த வீட்டில் பெரியவர்கள் என்று யாரும் இல்லாது வசந்தி மட்டும் இருப்பதாலும், வசந்தியும் தாமரை வயது தான். படித்த தாமரைக்கே தெரியாத போது வசந்திக்கு எப்படி தெரிந்து இருக்கும்.

அதனால் வசந்தியும் பயந்து போய் இரவு முழுவதும் தாமரை கூடவே இருக்க. காலை நான்கு மணிக்கு தாமரை குடித்த தண்ணியும் வாந்தியாய் வந்ததை பார்த்து விட்டு பயந்து போய் இப்போது நாமே ஹாஸ்பிட்டலுக்கு போகலாமா….?இல்லை ஆதித்யாவை கூப்பிடவா என்று மிரட்டிய பிறகு தான்.

தாமரை வீட்டிலே இருக்கும் கார் டிரைவர் லீவ் கேட்டு கொண்டு போனதால் கேபை அழைத்து வசந்தியுடன் ஹாஸ்பிட்டலுக்கு வந்தாள். இங்கு வந்ததும் அவளை பார்த்த சீப் டாக்டர் “என்ன தாமரை நீ மட்டும் வந்து இருக்கே ஆதித்யா சார் வரவில்லையா….? என்ற அவர் கேள்வியில் அப்படியே மண்ணுக்குள் புதைய மாட்டோமா என்று தான் நினைத்தாள்.

எல்லோருக்கும் தெரிந்து விட்டதே இவர்கள் எல்லாம் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள். என்று அவள் உள்ளுக்குள் உருக. அப்படியே மயங்கி சரிந்தவளை செக்கப் செய்த டாக்டர் அப்போது தான் அவள் கருவுற்று இருக்கிறாள் என்பதை அறிந்துக் கொண்டார்.

அவள் கண்முழித்ததும் அவளுக்கு விஷயம் தெரியும். அதை செக்கப் செய்ய தான் இங்கு வந்து இருக்கிறாள் என்று நினைத்த டாக்டர் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறி “இனி நீ உடம்பை பத்திரமா பாத்துக்கனுமா!!!ஏன்னா இனி நீ இரு உயிர் இல்லையா….?” என்று இப்போது ஆதித்யா சொன்னதை போலவே சொன்னதை கேட்ட தாமரைக்கு அந்த செய்தி மிக அதிர்ச்சியாக தான் இருந்தது.

இங்கு நான் வாழும் வாழ்க்கைக்கே பேர் என்ன என்று தெரியாது இருக்கேன் இதில் இன்னும் ஒர் உயிரா!!! என்று நினைத்து தான் அதை அழித்து விட சொன்னாள். ஆனால் அதை அங்கு உள்ள எவரும் கேட்காது போக.

சரி இங்கு செய்யவில்லை என்றால் என்ன வேறு ஹாஸ்பிட்டலில் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ஆதித்யா வந்து அந்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடுவது முதலில் வேடிக்கையாக இருந்தது என்றால் அவனின் துடிப்பை பார்க்க பார்க்க .

அவள் மனதில் வசந்தி சொன்ன நமக்கும் கடவுள் அவர்களை பழி தீர்க்க ஒரு வழி செய்வார் என்று சொன்னது தான் நியாபகம் வந்தது. இது தான் அந்த வழியோ என்று நினைத்து ஆதித்யாவை பார்க்க.

ஆதித்யா தன் வயித்து மீது வைத்த கையைய் எடுக்காது சத்யாவிடம் பேசுவது பார்த்து ஆதித்யாவின் கையைய் விளக்கியவள் ஆதித்யாவை பார்த்து “ தாலி கட்டாமல் பிறந்து குழந்தைக்கு இந்த சமுகத்தில் தே….. “ சொல்லி முடிப்பதற்க்குள் அவள் வாயைய் மூடிய ஆதித்யா….

“வேண்டாம் தாமரை என் பொறுமையைய் ரொம்ப சோதிக்கிறே...இது நல்லதுக்கு இல்லே….” என்றவனை பார்த்து தெனவெட்டாக ஒரு பார்வை பார்த்து “என் மேல கோபப்பட்டு எந்த பிரயோசனமும் இல்லை.” தன் வயிற்றை காண்பித்து விட்டு.

“இது பிறந்தால் ஊரு எல்லாம் இது தான் சொல்லுவாங்க.” என்பவளிடம் தன் சட்டை பையில் இருந்து தாலியைய் எடுத்து காண்பித்து “இனி அதுக்கு அவசியம் இல்லை தாமரை. இதை உன் கழுத்தில் கட்டிட்டா யாரு என்ன சொல்ல முடியும்.” என்ற அவன் பேச்சில் அப்போது தான் அவனை அவள் முழுவதுமாக பார்த்தாள்.

பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல் வந்து இருப்பவனை கேள்வியாக பார்க்க. அவளின் பார்வையைய் புரிந்துக் கொண்டு “இன்னிக்கு இதை உன் கழுத்தில் கட்டி உன்னை சந்தோஷப்படுத்த தான் வந்தேன் தாமரை. ஆனால் அதற்க்கு மேலான சந்தோஷத்தை நீ எனக்கு கொடுத்து விட்டாய்.” என்று சந்தோஷத்துடன் சொன்னவன்.

பின் “தாமரை வீட்டுக்கு போய் வள்ளியம்மா போட்டோ முன் கட்டவா...இல்லை போகும் போது கோயிலில் கட்டவா….?” என்று அவளிடமே கேட்க.

“யார் யார் முன்னிலையில் கட்ட போற...இதை.” அவன் கையில் உள்ள தாலியைய் அசைத்து காண்பித்து கேட்க.

அப்போது தான் ஆதித்யா தாமரையின் முகத்தை உற்று பார்த்தான். முதலில் தாலிகட்டு என்று சொன்னதே அவள் தான். இப்போது இதை நான் சொன்னால் மகிழ்ச்சி அடைவாள் என்று பார்த்தால் அவள் முகத்தில்

அதற்க்கு உண்டான எதுவும் காணது மட்டும் அல்லாமல் வேறு ஏதோ இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே…

“சத்யா வசந்தி முன்நிலையில் தான் தாமரை.”

“அதாவது அழுவுர குழந்தைக்கு பஞ்சி மிட்டாய் கொடுப்பது போல இதே என் கழுத்தில் கட்டிட்டா….நான் சந்தோஷப்பட்டு நீ சொன்னதை எல்லாம் நான் கேட்பேன் என்று இதை என் கழுத்தில் கட்ட வந்துட்டியா….?” என்று சொன்னவள் அவன் கையில் உள்ள தாலியை பிடிங்கி தூக்கி ஏறிந்தாள்.

“இனி இதை நீ கட்டினாலும் நான் ஏற்க மாட்டேன். அதே மாதிரி இந்த குழந்தையையும் நான் கலைக்க மாட்டேன்.”

முதலில் நான் தாலி கட்டிக் கொள்ள மாட்டேன் என்பதில் அய்யோ இவள் குழந்தையை கலைத்து விடுவாளோ என்று பயந்த ஆதித்யா நான் குழந்தையை கலைக்க மாட்டேன் என்பதில் மகிழ்ந்து போய் அவளை பார்க்க.

“என்ன சந்தோஷமா இருக்கா!!!!!அது எப்படி உன்னை சந்தோஷத்தில் விட்டு விடுவேன்.இந்த குழந்தை ஊருக்கு முன்னே யார் குழந்தை என்று நிற்க வேண்டும். இதனால் நான் அசிங்கம் பட்டாலும் பரவாயில்லை. அது தான் ஏற்கனவே பட்டு விட்டனே…

என்ன நாலு சேவுத்துக்குள்ள பட்டது ஊரு அறிய பட போறேன் அவ்வளவு தானே….ஆனா உன் குழந்தை ஊர் அறிய அவமானம் படணும்.” என்று தாமரை பேச பேச இவள் என்ன பேசுகிறாள் புரிந்து தான் பேசுகிறாளா….என்ற சந்தேகத்தில்.

“என்ன தாமரை சொல்றே...இந்த குழந்தை எனக்கு மட்டும் குழந்தை இல்லை உனக்கும் தான். அதாவது நம்ம குழந்தை.” என்று அவளுக்கு விளக்க.

“முதலில் அது என் குழந்தையா தான் தெரிந்தது. அது தான் நானே இப்படி வாழ்கிறேன் அதில் இது வேறா என்று தான் அழிக்க நினைத்தேன். ஆனால் எப்போ உன் கண்ணில் இந்த குழந்தைக்கு உண்டான பரிதவிப்பு தெரிந்ததோ….அப்போது இருந்து இது உன் குழந்தையாய் தான் தெரிகிறது.” என்று சொன்னவள்.

வசந்தியிடன் “நான் இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வசந்தி வா வீட்டுக்கு போகலாம். முதலில் இங்கு இருக்கும் டாக்டரிடம் இந்த சமயத்தில் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டுட்டு போகனும். ஏன்னா அப்புறன் இந்த குழந்தைக்கு ஏதாவது ஆயிட்டா என் திட்டம் எல்லாம் பாழ் தானே….”என்று சொல்லி விட்டு ஆதித்யா திக் பிரம்மையுடன் நிற்ப்பதை சட்டை செய்யாது வசந்தியைய் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றாள்.
 
தாமரை அடிச்சாய்யா நெத்தியடி
சூப்பர்
தாமரையின் அதிரடி ஆட்டம் ஆரம்பமோ
இனி ஆதித்யா என்ன செய்யப் போறான்?
 
Last edited:
Top