Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 16 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----16

ஆதித்யா அன்று கட்சி ஆபிசில் உள்ளாட்சி தேர்தல் வருவதால் கட்சி வேலையை பத்தி தீவிரமாக தன் உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது அப்போது தான் அங்கு வந்த சத்யாவை பார்த்து ஒருவன்

“என்ன சத்யா இப்போ எல்லாம் உன்ன பாக்கவே முடியமாட்டேங்குது.” என்ற கேள்விக்கு சத்யா பதில் அளிக்கும் முன் ஆதித்யா கூட தன்னை நெருங்க விடாது அவன் பின்னாலயே சுற்றிக் கொண்டு இருக்கும் சத்யாவின் மேல் பொறாமை கொண்ட அந்த கட்சியின் உறுப்பினரான மகேஷ்.

“சத்யாவை பாக்கனுமுன்னா இனி நீ தலைவர் வீட்டுக்கோ…..கட்சி ஆபிசுக்கோ போக கூடாது.*****தெருவில் இருக்கும் வீட்டுக்கு போனாலே பாத்துடலாம்.” என்ற அவன் பேச்சில் அனைவரும் அவனை பார்க்க.

தன்னை அனைவரும் நம்பாத பார்க்கும் பார்வையை பார்த்து “என்ன நான் சொல்வதி நிம்பிக்கை இல்லையா….சரி சத்யாவையே கேளுங்க. உண்மையா….? பொய்யான்னு…..?” அவனை கோத்து விட்டு வேடிக்கை பார்க்க.

இப்போது அனைவரும் தன்னை பார்ப்பதை பார்த்த சத்யா என்ன சொல்வது ஏது சொல்வது என்று தெரியாது ஆதித்யாவை பார்த்தான்.

ஆதித்யா மகேஷை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே “இங்கு கட்சி வேலையை பத்தி பேச தான் இருக்கோம் மத்ததை பத்தி இல்லை.” என்று சொல்லி விட்டு கட்சி வேலையை யார் யார் என்ன செய்வது என்று வாய் சொல்லிக் கொண்டே இருந்தாலும்.

மனம் அந்த பய எப்படி தாமரையை சத்யா கூட இணை கூட்டலாம் என்று நினைத்து கொந்தளித்துக் கொண்டு இருந்தது.

அந்த மகேஷை சொல்லியும் குற்றம் இல்லை.தாமரையை பார்க்க அந்த வீட்டுக்கு போவது சத்யாவின் காரில் அதுவும் சத்யா தான் டிரைவர் சீட்டில் அமர்ந்து இருப்பான்.ஆதித்யா பின் சீட்டி தான் அமர்வான்.

அதனால் அந்த மகேஷ் ஆத்யாவை பாக்காது சத்யாவை தான் பார்த்து தொலைத்தான்.ஒரு வேளை அந்த வீட்டுக்கு போவது ஆதித்யாவுக்காக தான் என்று தெரிந்து இருந்தால் இந்த விஷயத்தை சொல்லி இருப்பானோ….என்னவோ….?

ஒரு வழியாக கட்சி வேலையை பிரித்துக் கொடுத்து விட்டு சத்யாவை கண்ஜாடை காட்டி மற்றவங்களிடm “எனக்கு உடம்பு ஒரு மாதிரியா இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட்டு எடுத்துகுறேன்.” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு வந்து சத்யாவை எதிர் பார்க்க.

சத்யாவும் ஆதியாவை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவாகவே வந்து சேர்ந்தான்.

சத்யாவை பார்த்ததும் தன் அடக்கிய கோபம் மொத்தமும் வெளிபட “அவன் எப்படி உன்னை பாத்து அப்படி கேட்கலாம்…..?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்ப.

எப்போதும் ஆதித்யாவுக்கு ஆதரவாகவே பேசும் சத்யா அன்று எதுவும் பேசாது அமைதியுடம் ஆதித்யாவையே பார்த்திருந்தான்.

தான் இப்படி கோபமாக இருக்க எப்போதும் தன்னை அமைதி படுத்தும் சத்யா எதுவும் பேசாது தன்னையே பார்த்திருப்பதை பார்த்து “என்ன சத்யா எதுவும் சொல்ல மாட்டேங்கிறே…..”

“நாம் செய்வது தப்போ என்று தோனுது தலைவா….”

என்ற அவன் பேச்சில் ஆதித்யா நான் என்ன கேட்டா இவன் என்ன சொல்றான் என்று புரியாது பார்க்க.

இப்போது விளக்கமாகவே “தாமரைக்கு நாம் செய்தது தப்போன்னு தோனுது தலைவா….”

அவன் பேச்சில் தன் தாடையைதடவிக் கொண்டே சத்யாவை ஆழமாக பார்த்து “திடிர் என்ன இந்த ஞானோதயம்.” என்றதற்க்கு.

“இப்போ அந்த பய பேசினதை கேட்டிங்கலே….என்னையும் தா...மரையும்….” அதற்க்கும் மேல் பேச முடியாது அமைதியாகி விட.

“நானும் அது தான் யோசிக்கிறேன். என் தாமரையையும் உன்னையும் இணைச்சி பேசினவனைய் என்ன செய்யன்னு.”

“ அவனை மாதிரி எத்தனை பேரை செய்ய போறீங்க தலைவா…..”

“ நீ சொல்றது புரியலே….”

“இன்னிக்கி இவன் பேசினான். நாளைக்கு வேறு ஒருவன் பேசுவான். அடுத்த நாள் பத்து பேரு பேசுவாங்க. இதன் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது தலைவா.”

சத்யாவின் பேச பேச தான் அதன் தீவிரம் ஆதித்யாவுக்கு புரிந்தது. ஆம் நம்மால் எத்தனை பேரின் வாயைய் அடைக்க முடியும்.

தான் சொன்னதை தலைவர் யோசிக்கிறார் என்று நினைத்து எதுவும் பேசாது ஆதித்யாவை பார்க்க.

“பேசாம அவளை வேறு ஊரில் வைத்து விடலாமா….?”

என்று சொன்னவன் பின் “வேண்டாம் வேண்டாம் அது சரிபடாது. இப்பவே அவளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பார்க்கிறேன். வேறு ஊருன்னா ரொம்ப கஷ்டம்.” என்று அப்போதும் தன்னை பத்தி மட்டுமே நினைத்து பேசினான்.

சத்யாவுக்கு தலைவர் அப்படி சொன்னது பிடிக்கவில்லை. இருந்தும் அவனாலும் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. ஏன்னா இந்த உறவுக்கு வழிவகுத்து கொடுத்தவனே அவன் தானே….பின் அவன் என்ன சொல்ல முடியும்.

கொஞ்ச நாளாகவே சத்யாவுக்கு தாமரையை பாக்க பாக்க மனம் பிசைய ஆராம்பித்து விட்டது. முதன் முதலில் தாமரையை ஆதித்யா பார்ப்பத்துக்கு முன் சத்யா தானே அவளை பார்த்தான்.

அப்போது அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி இப்போது துணி வைத்து துடைத்தது போல் இருப்பதை பார்த்து அவன் மனதில் இதற்க்கு எல்லாம் தான் தானே காரணம் என்று எண்ண ஆராம்பித்து விட்டான்.

இதற்க்கு காரணம் ஆதித்யா என்று அவனை சொல்ல மனது வரவில்லை.ஏன் என்றால் ஆதித்யா தாமரையைய் விரும்பினான். ஆனால் அவளை திருமணம் செய்ய முடியாது என்று யோசிக்கும் வேளையில் தான் தானே அவனுக்கு இந்த ஐடியாவை தந்தோம் என்று யோசித்தானோ ஒழியோ ஆதித்யா எப்படியாவது தாமரையைய் அடைந்து இருப்பான் என்று யோசிக்க வில்லை.

காலம் கடந்த ஞானோதயத்தால் யாருக்கு என்ன பிரயோசனம் என்பது போல் இப்போது தான் தாமரையைய் பார்த்து பாரிதாபப்படுவதால் அவளுக்கு உபயோகம் எதுவும் இல்லை என்று நினைத்து ஆதித்யா என்ன தான் சொல்ல வருகிறான் என்று பார்க்க.

“சரி இந்த பிரச்சனையை அப்புறம் பாக்கலாம். முதலில் இந்த உள்ளாட்சி தேர்தல் முடியட்டும்.” என்று சொன்னவன்.

தாமரையை பாக்க மட்டும் தேர்தலை காரணம் காட்டி போகமல் எல்லாம் இல்லை.அதே ஒரு நாள் விட்டு ஒரு நாள் சென்று தான் வந்தான்.

என்ன ஒன்று இப்போது சத்யா காருக்கு பதிலாக புது ஒரு காரை வாங்கி அதில் சென்றான்.ஆனால் கார் ஓட்டுவது என்னவோ சத்யா தான்.சத்யாவும் தான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை.

அதற்க்கு காரணம் ஆதித்யாவின் பாதுகாப்பா இல்லை வேறு ஏதோ ஒன்றா என்று சத்யாவின் மனது தான் அறியும்.

எப்போதும் போல் தாமரையின் வீட்டுக்கு சென்ற ஆதித்யா சத்யாவை கீழே அமரவைத்து தாமரையின் அறைக்கு சென்றவன் அங்கு தாமரை கட்டில் முழுவதும் புத்தகத்தை பரப்பி விட்டு ஒரு கைய்யால் பக்கத்தை புரட்டிக் கொண்டே காதில் வைத்த போனின் மூலம் யாருக்கோ பேசிக் கொண்டே தன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு இருந்தாள்.

ஆம் தாமரை இப்போதும் காலேஜிக்கு சென்று கொண்டு தான் இருக்கிறாள். ஆதித்யாவுக்கு படிப்பு என்றால் அவ்வளவு விருப்பம். ஆனால் அவனால் தான் படிக்க முடியாமல் போனது.

அதனாலயே அவன் படிப்புக்காக ஏழை எளிய குழந்தைகளுக்கு நிறைய செலவு செய்வான். அதனால் தான் வள்ளியம்மா தாமரைக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று சொன்னதும். அவளை பாராமல் கூட நான் படிக்க வைக்கிறேன் என்று அவள் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டான்.

அப்படி இருக்கும் போது அவள் படிப்பு கெட அவன் விட்டு விடுவானா….?இப்போது தாமரை படிப்பதை பார்த்து நான் உள்ளே போகலாமா….இல்லை வீட்டுக்கு சென்று விடலாமா…..

என்று அவன் யோசிக்கும் போதே தாமரை தன் போன் பேச்சி முடிந்தது போல் “சரி நல்ல தம்பி நான் வைத்து விடுகிறேன்.” என்று சொல்லி போனை அணைக்க.

இது வரை வீட்டுக்கு போகலாம் என்று நினைத்திருந்தவன் அவளின் நல்ல தம்பி என்ற பெயர் கேட்டதும் கட்டில் அருகில் சென்று புத்தகத்தை ஒதுக்கி விட்டு அமர்ந்தவன்.

மொட்டையாக “யார்….?” என்று கேட்க.

நாளை நடக்கும் தேர்வு பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தவளாள் முதலில் அவன் வந்து இருப்பதையே பார்க்காது இருந்தவள் அவனின் யார் என்ற பேச்சி புரியாது. அவன் முகத்தை பாத்தாள்.

புரிந்து இருந்தாலும் ஆதித்யாவுக்கு ஒழுங்காக பதில் அளித்து இருப்பாளா….என்று தெரியாது.

ஆம் ஆதித்யா வந்தால் அவன் மட்டும் தான் பேசுவான். தாமரை ஏதும் பேச மாட்டாள். முதலில் எல்லாம் அதை அவன் பெரியதாக நினைக்கவில்லை.அவளை ஆள்வதிலேயே தான் அவன் கவனம் முழுவதும் இருக்கும்.

ஆனால் கொஞ்ச நாளாக தன் பிரச்சனையை அவளிடன் பேச வேண்டும்.அது போல அவளும் தன்னிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று மனது எதிர் பார்க்க ஆராம்பித்து இருந்தது
 
:love::love::love:

ஒரு கை ஓசை வராதுன்னு இப்போ தான் புரியுதா???
ஊர் கண்ணை வாயை அடைக்கமுடியாதுன்னு காலம் கடந்து புரியுதே ........
 
Last edited:
தாமரைக்கா க ஒரு பாடல்

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா தினம்
ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைகின்ற கை இல்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தபடி
கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன்
கண்களில் என்ன கண்களி‌ல் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
 
Last edited:
Top