Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாசிக்கிறேன் உன் காதலை - 21(இறுதி)

prikar

Active member
Member
Sema story...Neha Kurumbu and love sema sema... Dev....nee ennadhan love pannaalum sonnadhane theriyum...nee love panninennu engalukke theriyalai Thatha twist sema...Neraya ila vattam serndhu ilamai po gum kadhai Ramya..romba rasichu padichen
 




Anantha jothi

New member
Member


அமைதியான கிராமத்தில் கூட்டுக் குடும்பத்தில் வாழும் நாயகனுக்கும், பல வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறி தற்சமயம் ஊருக்கு வந்த மாமன் மகளிற்கும் இடையே நடக்கும் காதல் யுத்தமே கதையின் கரு.

ரம்யா கதை என்றாலே கதாபாத்திரங்கள் அதிகம் தான். நினைவில் நிற்பது சற்று கடினமாகிப் போனது🤣🤣😂😂

வீட்டுப் பெரியவரான தாத்தாவின் விருப்பத்தை ஏற்று நடக்காமல் சதா கோபப்படும் டாலு பேபி👌👌👌👌அவளின் தேவ் மீதான அன்பு❤❤👌👌
சித்தப்பா மாமா பசங்களுடன் அடிக்கும் கலாட்டா தூள்😂😂.

சரி கொஞ்சம் கதையை பற்றி சொல்லிடுறேன்.

வீட்டை விட்டு சென்ற மகனின் மகளிற்கும் (நாயகியின் அக்கா)
மகளின் மகனிற்கும் (நாயகன்), நாயகி, அத்தை மகனிற்கும் திருமணம் செய்ய பெரியவர் முடிவெடுக்க ( மொத்தம் 2 ஜோடி) அதற்கு டாலு பேபியின் முடிவென்ன,
பெரியவரின் பேச்சை ஏற்று திருமணம் செய்து கொள்கிறாளா?
நட்புடன் பழகும் நாயகன் மீதான பிடித்தத்தை எப்படி எப்போது உணர்கிறாள்?
அக்காவின் நிலை,
நாயகனை எப்படி கரம் பற்றுகிறாள். என்பதை உள்ளடக்கி தொடர்கதை நகர்கிறது.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட வேண்டுகிறேன்.

வாழ்த்துகள் ரம்யா சகோ💐💐💐🌹🌹
 








Top