Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -21

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -21

மாமா...மாமா என்று கதறி அழற தேனுவின் குரல்தான் அவன் காதில் ஒலித்தது.. கண்களை சுருக்கி திறந்தான் இனியன்...தேனூ என்று அவன் இதழ் முனுங்க... அங்கிருந்த சிஸ்டர்...

ஸார்... என்று அவனருகில் வந்தாள்.

தேனு என்று மறுபடியும் அழைத்தான் இனியன்.. கதவை திறந்து வெளியே வந்த சிஸ்டர்.... அங்கே வரண்டாவில் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து பேஷன்ட் முழுச்சிட்டாங்க.. நீங்க தொந்தரவு தராமல் போய் பார்க்கலாம் என்றாள்..

லதா, சக்கரவர்த்தி, சத்யா முதலில் சென்று பார்த்தனர்...

இனியா என்று அவன் முகத்தை கையால் தடவி கண்கலங்கினாள் லதா... சத்யா தான் ஒண்ணுமில்லடா தங்கம்... அவன் கையைபிடித்து ஆறுதல் பேசினார்.. சக்கரவர்த்தியால் பேசமுடியவில்லை.. தன் மகனையே பார்த்திருந்தார்.. அவன் படுத்திருந்த கோலம்.. நெற்றி கையெல்லாம் சிராய்ப்பு... வலது காலில் நன்றாக அடிப்பட்டிருந்தது.. நல்லவேளை எலும்பு உடையவில்லை.. சின்னதாக க்ரேக் என்றனர்..

தலையில் அடிபட்டியிருந்தது.. டைமிக்கு அட்மிட் செய்ததால உயிருக்கு ஆபத்தில்லை டாக்டர் சொன்னார்... ரத்தம் அதிகமாக போயிருந்தா கஷ்டம் என்றார்..

பிறகு ஸ்கேன் செய்து பார்த்தனர்.. தலையில் ஒரு பிரச்சனையுமில்லை தொடையில் காயம் பட்டிருந்தது.. தேனுவை விட்டு மெயின் ரோட்டிற்கு வர குறுக்கே வந்த பெரிய லாரி இனியனின் காரில் மோதியது...

யாரிடமும் பேசவில்லை.. அனைவரும் பார்த்து சென்றனர்.. இனியன் தேடும் தேன்மொழியாள் மட்டும் வந்து பார்க்கவில்லை.. மருந்தின் மயக்கம்.. கண்ணை சொருக்கி தூங்கினான்..

சக்கரவர்த்தியிடம் டாக்டர் பேசினார்... ப்ராபளம் பெரிசாயில்ல.. கொஞ்சம், தலையில் பட்ட அடிதான் சரியாக நாள் ஆகும்.. நீங்க நாலுநாள் கழிச்சு டிஸ்சார்ஜ் செஞ்சிக்கலாம்..

மூனாவது நாள்... சரண் இனியன் பக்கத்தில் அமர்ந்து ஜூஸ் பிழிந்து கொடுக்க...

வேணாம்டா... ஏன் தேனு வந்து என்னை பார்க்கல சரண்..

அவ நீ மயக்கத்தில இருக்கசொல்ல வந்து பார்த்தா இனியா இந்தா இந்த ஜூஸை குடி..

எனக்கு வேணா, நான் தேனுவ பார்க்கனும் மச்சான்.. கூட்டிட்டு வாடா..

அவ வர மாட்டா இனியா... உனக்கு ஆக்ஸிடென்ட் ஆனபிறகு இங்க பெரிய கலாட்டாவே ஆயிடுச்சு.. நிறைய பேசிட்டாங்க... அவ வரமாட்டா இனியா..

யார் என்ன பேசினாங்க சரண்..

அது நீ எது தெரியக்கூடாதுன்னு நினைச்சியோ.. அதை தேனுகிட்ட சொல்லிட்டாங்க... எல்லோரும் இங்கதான் இருந்தோம்டா... லதா அத்தை மட்டும் அழுதுட்டே போய் தேனுவின் கையை பிடிச்சி... ஆரா உன் கால்ல கூட விழுறேன் என் பையனை உயிரோட எனக்கு கொடு... என்னால தாங்கமுடியாது ..

லதா இப்படி கூறினவுடன்.. அத்தை என்ன இப்படி பேசிறீங்க கண்களை துடைத்தபடி கேட்டாள்..

அந்த குருஜீ சொன்னமாதிரி நடந்துபோச்சு தேனு, உங்க ஜாதகம் பொருத்தமில்ல, உனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கு, உன்னை கட்டிகிட்டா இனியனோட உயிருக்கு ஆபத்து சொன்னாரு... எட்டு வருஷம் வரை பிரிஞ்சியிருக்கனும்மா.. அதுக்கு அப்பறம் உனக்கு ராகுகேது மாறும்மா ,பூஜை பண்ணி கொஞ்சம் சரிபண்ணலாம் சொன்னாரு

அத்தை ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லலை..

அதுக்குதான் பரிகாரம் செஞ்சோம்.. என் பையனுக்கு உயிர்பிச்சை கொடு ஆரா.. அவனை விட்டு விலகிடு எனக்கு ஒரு பையன்தான் இருக்கான் என்றாள்...

ஹேய் லதாதாதா... கடைசியில உன் வேலைக்கார புத்தியை காட்டிட்டியே...அகிலா கத்த..

அம்மா... அப்படி அத்தையை சொல்லாதீங்க.. மாமாவுக்கு பிடிக்காது இந்த மாதிரி பேசினா.. தேனு அகிலாவை அடக்க

இந்த நிலைமையில என் பெண்கிட்ட இப்படி பேசுவீயா... அவ உடைஞ்சி போயிருக்கா... எப்படி நிற்கிறா பாரு... ஏய் ஆரா அப்பவே தலைபாட அடிச்சிகிட்டேன்டி இந்த உறவு உனக்கு வேணான்னு.. நீயும் உங்க அப்பனும் எங்க கேட்டீங்க..

அம்மா...

வாடிபோலாம்... இதுக்குமேல உனக்கு அவன் வேணும்மா சொல்லு... அப்போதுதான் டாக்டரை பார்த்துவிட்டு சக்கரவர்த்தியும், சத்யாவும் வந்தார்கள்...

மாமாவ நல்லா பார்த்துங்க அத்தை... இனியனை பார்க்காமலே அங்கிருந்து அகிலாவோட வெளியேறினாள்..

சரண் ஏன் தேனு அழுதுட்டே போறா... அது மாமா, நடந்ததை கூறினான்..

லதா... உனக்கு அறிவில்லையாடி... சின்ன பொண்ணுடி தேனு அந்த பிள்ளை மனசு நோகும்படி இப்படியா பேசுவ.. அழுதுக்கொண்டே நின்றாள் லதா..

உன் போன்ல கூப்பிடுடா.. ம்ம் ஆராவிற்கு கால் போட... போனை எடுத்தாள்..

ஹலோ அண்ணா.. மாமா எப்படியிருக்காரு... இப்போ தலை வலிக்குதா..

இல்லடாம்மா... நார்மலுக்கு வந்துட்டான்... தேனு போன் ஸ்பீக்கர்ல போட்டிருக்கேன் இனியன் பேசனுமா..

அண்ணா வேணாம் சொல்லும்போதே...

என்னை ஏன்டி பார்க்க வரல... இனியன் அழுத்தமாக பேச.

அப்படியே அமைதியானாள்.. குட்டிமா அவன் இன்னும் சாப்பிடலை, மாத்திரை போட்டுக்க மாட்றான்.. நீ அவனை பார்த்தாதான் சொல்லிட்டான்..

இப்போ மதியம் மூனு... அண்ணா அவரென்ன சின்ன குழந்தையா அடம்பிடிக்க.. சாப்பிட வைங்க...

ஆரா அவனை என்ன நினைச்சிருக்க... உங்கம்மா பேசினாலோ இல்ல அத்தை பேசியோ ஒண்ணும் ஆகபோறதில்ல... அவன் யோசிக்கனும்.. கிளம்பி வாம்மா...

......

மூன்றை மணிக்கு தேனு, இனியனை பார்க்க வந்தாள்.. சரண் அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு வெளியே உள்ள சேரில் உட்கார்ந்தான்..

தேனு தன்னவனை தலை முதல் கால்வரை பார்த்தாள்.. அவனும் அவளையே பார்த்திருந்தான்... என்னை கவனிக்காம எங்கபோயிட்ட தேனு..

மாமா... இன்னைக்கு ப்ராடிக்கல்ஸ் இருந்தது.. காலேஜ் வரைக்கும் போயிட்டு வந்தேன்...

எனக்கு பசிக்குது இனியன் சொல்ல...அந்த டெபிள் மேலிருந்த பாக்ஸை திறந்து சாப்பாட்டை ஊட்டிவிட்டாள்... பிறகு மாத்திரையும் போட்டுக்கொண்டான்... அவனுக்கு வாயை துடைத்துவிட்டாள்.

தேனு நான் ரெஸ்ட்ரூமுக்கு போகனும்...

ம்ம்.. என்று அவனின் கையை தாங்கி பிடித்து பாத்ரூமின் கதவை திறந்து விட்டாள்... அவன் அப்படியே நிற்க...

என்ன மாமா..

ஜிப்பை யார் திறந்து விடுவா... ஒரு கை அசைக்கவே முடியல... எப்படி திறக்கிறது..

அவனை முறைத்தபடி... ஜீப்பை இழுத்துவிட்டு அந்த பக்கம் திரும்பிக்கொண்டாள்...

என்னவோ பார்க்காத மாதிரி.. ஏற்கனவே பார்த்துட்டதானே.. சரிவிடு எனக்கு கூச்சமா இருக்கு... அவனையே முறைத்து பார்த்தாள்..

கூட்டிட்டு போய் பெட்ல விடு... அவனை பெட்டில் உட்காரவைத்து.. மாமா நான் ஊருக்கு போகலாமிருக்கேன்.. சின்ன மாமா பொண்ணுக்கு கல்யாணம் போயிட்டு திரும்பிவந்துடுவேன்...

அவள் கண்ணையே பார்த்துட்டு, சரி தேனு என்றான்.. அதிர்ந்து தேனு நின்றாள்.. எதுவுமே கேட்கலை..

நான் கிளம்பறேன் மாமா... வாயில் கதவை திறக்க கதவின் பிடியில் கையை வைத்தாள்..

பத்தாவது நாள் வந்துடு தேனு இந்த இனியன் காரியத்துக்கு... அவளுக்கு புறமுதுகிட்டு அவன் உட்கார்ந்தபடி கூற..

மாமா... என்று ஓடி வந்து முதுகுபக்கமாக கட்டிக்கொண்டாள்.. அப்படி சொல்லாதே மாமா...

நீ செய்யறது உனக்கு நியாயமா தேனு.... நான் விலகியிருந்தபோது என்னையே சுற்றிவந்த... நான் இப்போ நீதான் எல்லாமே நினைச்சி உன்கிட்ட மண்டியிட்டு இருக்கிறேனே.. வேணான்னு உதறி தள்ளிட்டு போறதானே.. போ.. நான் தடுக்கல... உன் சொந்த ஊருக்கு போய் செட்டில் ஆயிடுனும் முடிவு பண்ணிட்ட...

மாமா... அவன் வாயில் கைவைத்து மூடினாள்... தன் கண்களை துடைத்துவிட்டு... பயமாயிருக்கு மாமா.. நான் தொட்டா உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு... உன்னை பிரியாம கட்டியனைச்சிட்டே இருக்குனும் ஆசைப்பட்டேனே.. நான் பாவி... நமக்கு நடுவுல நானே வந்துட்டேன் ...அழ ஆரம்பிக்க..

தேனூ.. என்று அவளை இழுத்து அனைத்துக்கொண்டான்... அவள் கண்ணத்தை பிடித்து இங்க பாருடி... இச் இச் ன்னு அவளின் இதழில் முத்தமிட்டு... காதல் ண்ணா எதிர்ப்பு இருக்கனும்டி... அப்பதான் நம்மமேல வச்சிருக்க காதல் இன்னும் அதிகமாகும்... என்வீட்டில ஆயிரம் சொல்லுவாங்க அதுக்கு மாமாவிட்டு போயிடுவீயா... ம்ம்.. உன்னை எதிர்பார்த்துட்டே இருந்தேன் தெரியுமா...

என்ன சொன்னாரு அந்த குருஜீ... எட்டு வருஷம் பிரிஞ்சிருங்க அப்பறம் கல்யாணம் செஞ்சிக்கலாம் சொல்லிருக்காரு... அப்ப எனக்கு 35 வயசாகும்... ஏன் மாமாவால எதுவும் செய்யமுடியாதுன்னு பயந்திட்டியா... அறுபது வயசானலும் மேட்டர் பண்ணுவேன்டி...

அவனை பார்த்து முறைத்தாள் தேனு..

பின்ன ஏன் வேணா சொல்லுற... இருபத்தாறு வருஷமா காத்திட்டு இருத்தேன் இப்போ எட்டு வருஷம்தானே... உனக்கு மாமன்மேல ஆசை வந்துச்சுன்னா யாருக்கும் தெரியாம கள்ளக்காதல் செஞ்சிக்கலாம்.. ஓகேவா...

போ மாமான்னு அவனின் கையில் அடிக்க... அய்யோ வலிக்குதுடி என்று கத்தினான்..

ஸாரி மாமா... நான் பார்க்கல.. ஸாரி தெரியாம செஞ்சிட்டேன்னு அந்த அடிப்பட்ட இடத்தில் கிஸ் செய்ய..

தேனு இங்கவும் வலிக்குது தன் நெஞ்சை காட்டினான்...

அப்படியா..

ம்ம் உள் காயம், அதுவும் ராட்சஸி நைட்ல வந்து செஞ்ச காயம் கண்ணை சிமிட்டினான்...

அதற்குள் நர்ஸ் வந்து பி.பீ செக் பண்ணிட்டு போனாள்... தேனு இந்த நர்ஸ் பொண்ணுல்ல மாமாவ சைட் அடிக்குதுடி... காயத்தை துடைச்சி விடுறேன்னு நைஸா தொட்டு பார்க்குது... அது நினைச்சிருக்கும்போல சிங்கள்ஸ்.. நான்தான் உன்கிட்ட எப்பவோ மிங்கிள் ஆயிட்டேனே...

மாமா... இந்த பொண்ணு அழகாதானே இருக்கா.. உனக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் செஞ்சிக்கோ நான் போய் பேசவா அந்த பொண்ணுகிட்ட..

ம்.. என்ன சொன்ன..

கல்யாணம் அவள் முடிப்பதற்குள் பளாருன்னு தேனுவின் கண்ணத்தில் அறைத்தான்... வெளியே போடீ.. கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லுறேன்.. இந்த இனியனை லவ்வர் பாயாதானே பார்த்த... இனிமே பார்ப்ப இந்த பொறுக்கி இனியனை...

அவன் அடித்த சத்தத்தை கேட்டு உள்ளே வந்தான் சரண்... டேய் எப்ப பார்த்தாலும் குட்டிமாவ அடிக்கிறதே வேலையா வச்சிருக்க...

அவளை வேளியே கூட்டிட்டு போடா... என் கண்ணுமுன்னாடி நின்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..

வாடா குட்டிமா.. அவளின் கண்ணத்தை திருப்பி பார்த்து நாலுவிரல் பதிச்சிருக்கு... ஏன்டா அவன் பிடிவாதக்காரன் அவன் சொல்பேச்சை கேளுடாமா... உனக்கு தெரியுமா ஆரா.. நீ பொறந்தது முதல் இப்பவரைக்கும் உன்னை பற்றி எல்லாமே தெரியும் அவனுக்கு... அவன்தான் சென்னையில இந்த காலேஜில சேர்க்க சொன்னது. நீயா அவனை விரும்புற சொல்லற வரைக்கும் அமைதியாயிருந்தான் ஆரா.. திரும்பவும் சொல்லுறேன் அவன் நினைக்கிறதுதான் நடக்கும்... தேனுவிற்கு ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பிவைத்தான் சரண்..

இனியனின் அறைக்கு வந்தான்.. ஏன்டா குட்டிமாவை அடிச்ச...

அவளா கொஞ்சமாச்சி புத்தியை யூஸ் பண்ணுதா... சரி அவள விடு... நம்ம ராதா அக்காக்கு போனை போடு... ராதா அன்று டாபாவில் தேனுவிற்கு அறிமுகமானவள் தான்..

சொல்லுபா என்றார்..

ராதாக்கா தேனுவை பார்த்துக்கோங்க.. அப்பறம் அங்க நடக்கிற விஷியம் உடனே தெரியனும்..

சரி தம்பி என்று போனை வைத்தார்..

சரண் இனியனை ஏறிட்டான்... என்னடா யோசிக்கிற..

இல்ல மச்சான்.. யாரோ எங்களை பாலோ செஞ்சி வந்திருக்காங்கடா.. அன்னிக்கு நைட் நடமாட்டமே கம்மிதானே.. தீடிரென்று எப்படி சந்திலிருந்து வேகமாக லாரி வந்தது.. நான் அவனை நல்லா பார்த்தேன் சரண்.. அவன் என்கிட்ட வந்தான் கண்ணத்துல வெட்டு காயமிருந்துச்சு... அப்பறம் தேனுவை பார்த்துட்டு ஓடிப்போயிட்டான்..

அவனை பத்தி ஒண்ணுமே தெரியல இனியா.. வடநாட்டுக்காரன் போல.. அகிலாமேல டவுட்டா..

அத்தையாவும் இருக்கலாம் சரண்.. யாரையும் நம்பமுடியல.

ஒருவேளை குருஜீ சொன்னமாதிரி தோஷமா இருந்தா..

ஹா...ஹான்னு சிரித்தான் இனியன்.. டேய் மறந்துட்டியா சின்னவயசில நடந்தது.. உனக்கும், எனக்கும் தேனுவுக்கு மட்டும்தான் தெரியும்.

ஆமாயில்ல.. சரி டிஸ்சார்ஜ் பண்ணிட்டு வீட்டுக்கு போகலாம்டா..

ஆனா மூன்று பேரை தவிர்த்து அன்று மரத்தின் பின்னாடியிருந்து பார்த்த இன்னொருத்தருக்கும் தெரியும் என்பது இனியனுக்கு தெரியவில்லை..

---- மெய் தீண்டுவான்.
 
Nirmala vandhachu ???
Nalla irrukku pa . ana intha gap athighama irrukku. la athan story complete ana paddikalam nnu irrupangha .
Romance konjam athigham taan .
Rasikkalam taan . normal life la lover's pesikkarangha . enakku okay.
Different story ahh irrukku and thenu iniyan name combination super pa ???
 
Last edited:
என்ன தான் நடக்கிறது
இந்த விக்கி பய கேணத்தனமா
ஏதாவது செஞ்சு வைக்கிறானா
 
என்ன தான் நடக்கிறது
இந்த விக்கி பய கேணத்தனமா
ஏதாவது செஞ்சு வைக்கிறானா
நன்றி சிஸ்
 
Nirmala vandhachu ???
Nalla irrukku pa . ana intha gap athighama irrukku. la athan story complete ana paddikalam nnu irrupangha .
Romance konjam athigham taan .
Rasikkalam taan . normal life la lover's pesikkarangha . enakku okay.
Different story ahh irrukku and thenu iniyan name combination super pa ???
நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்கு
 
Top