Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -19

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -19

ஆரா மெல்ல நடந்து வந்து சக்கரவர்த்திக்கு காபியை கொடுக்க..

அய்யோ தங்கம் ஆராகுட்டி.. இந்த பார்மால்டிஸ் எதுக்கு.. அதுவுமில்லாம பொண்ணு வெட்கமெல்லாம் படுது.. அவளின் தலையை வருடினார்... போடா போய் கேஷ்வலா இரு...

மாமா இப்படி சொன்னா எப்படி மாப்பிள்ள பொண்ண பார்க்க இல்ல காத்திட்டு இருக்காரு... இனியனை சரண் கலாய்க்க.. அங்கே அனைவரும் சிரித்துவிட்டனர்... அகிலாவும் சேர்ந்துதான்..

சரணிடம் காபியை கொடுத்துவிட்டு, இனியனிடம் நீட்டினாள்.. அவளின் வெட்கத்தை பார்த்தபடியே காபியை எடுத்தான்.. தேனு இனியனை நிமிர்ந்து பார்க்கவில்லை..

பொண்ணை நல்லா பார்த்துக்கோடா..பின்னாடி இது சரியில்ல, அது சரியில்ல சொல்லபோற.. குட்டிமா.. நீயும்தான் மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா... வேணாம் என்றால் இப்பவே சொல்லிடு மறுபடியும் சரண் ஆரம்பிக்க..

போண்ணா..

ஸ்வீட்ஸ் மற்றும் பஜ்ஜி கார வகைகள் வேலைக்கார்கள் ட்ரேவில் வைக்க அனைவருக்கும் கொடுத்தாள் அகிலா... லைட்டா சாப்பிட்டுமுடித்து... அத்தை வாஷ் ரூம் போனோம் என்றான் இனியன்..

ஆரா.. கூட்டிட்டு போ..

வாஷ்ரூமின் கதவை திறந்து ம்ம் போங்க..

அவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான் இனியன்... அவளை இறுக்க கட்டியணைத்தான்.. ஓய் அழகி... ரொம்ப அழகாயிருக்கடி இந்த சாரில.. அப்படியே கடிச்சி...

அவள் திணற திணற தெவிட்டாத முத்தமிட்டான்.. அதில் மெய் மறந்து இனியனின் சட்டையை இறுக்க பிடித்தாள்...

மாமா...

ம்ம்... சூப்பரா வெட்கப்படுற.. உன் கண்ணம் சிவந்து போயிடுச்சு தெரியுமா...

அவன் நெஞ்சின் மூடியை சுருடியபடி.. காலையிலே ப்ளான் போட்டுட்டு ஏன் எங்கிட்ட சொல்லவில்லை..

மாமா உனக்கு சர்ப்ரைஸ் தரலாமுனு... நீ வேற உங்கவீட்டுக்கு போறீயா என்னால உன்னை பிரிஞ்சி இருக்கமுடியாதோ தோணுச்சு.. இன்னும் ஐந்து நாள்ல நிச்சியதார்த்தம் அப்பறம் இரண்டு மாசம் பிறகு மேரேஜ்... அம்மா நல்ல நாள் குறிச்சுட்டு தான் வந்தாங்க...பாரு அகிலாம்மாவே மாப்பிள்ளையை பார்த்து அசந்துட்டாங்க..

அப்படியொண்ணுமில்ல... பொண்ணுக்காக ஓகே சொல்லிட்டாங்க..

டேய் சீக்கீரம் வாடா கிளம்பறோம் சரண் குரல் கொடுக்க... மறுபடியும் பட்டுமுத்தமிட்டு.. தேனு நைட் கால் பண்ணுறேன்...

வீட்டு பெரியவர்கள் நிச்சியநாள் குறித்து பேசி முடிவெடுத்தார்கள்...

சத்யா நாளைக்கு இரண்டு பேரு ஜாதகத்தை எடுத்துட்டு போய் குருஜீ கிட்ட காட்டனும் சக்கரவர்த்தி சத்தியமூர்த்தியிடம் சொன்னார்..

அவர்கள் வீட்டின் எந்த விஷேசம் ஆனாலும் குருஜீயிடம் கேட்டுதான் முடிவெடுப்பார்கள்.. இனியன் பிறந்து ஜாதகம் எழுதுனது முதல் இப்போ அவன் செய்யும் பிஸினஸ் வரை குருஜீயிடம் கேட்டுதான் முடிவெடுப்பர் சக்கர மற்றும் சத்தியமூர்த்தி...

.....

அடுத்த நாள் காலை... டைனிங் டெபிளில், இனியன் காதில் செல்லை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்..

ம்ம்.. இல்ல.. க்ரே ஷர்ட்..ச்சீ... நானில்ல... இப்படி ஸ்வீட் நத்தீங்ஸ் பேசிக்கொண்டிந்தான் தேனுவிடம்..

முகம் சந்தோஷத்தில் ஆயிரம் லைட் எரிய.. தன் உதட்டை மடித்து.. மெதுவாக ம்ம் கூட்டினான்.. அங்கே தேனு அவனுக்கு கட்டளையிட..

இட்லி எடுத்து தட்டில் வைக்க வந்தாள் லதா..

நோ... முடியாது.. எனக்கு வேலையிருக்குடி..

பிறகு செலட் எடுத்து வைக்க... அத்தை இருங்க இவன் அலப்பறை தாங்க முடியல... பொங்கல் வைங்க சாப்பிடுறானா பார்க்கலாம்..

மாட்டேன்.. டைமில்ல நீயே பார்த்துக்கோ... பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே இனியன் பேச்சில் கவனமிருக்க..

ஆரா, இனியன் பொங்கல் சாப்பிடுறான் சரண் கத்திச்சொல்ல..

மாமா பொங்கலா சாப்பிடுறீங்க தேனுவும் கேட்க.. அப்பதான் தட்டை பார்த்தான்... அம்மா என்னம்மா எனக்கு பிடிக்காது சலித்தபடி....

ஏன்டா சாப்பிட்டே முடிச்சிட்ட கடைசியா ஒருவாய்தான் இருக்கு இப்பதான் தெரியுதா நீ பொங்கலை சாப்பிடுறேனும்... சக்கரவர்த்தியும், சரணும் கேலி செய்து சிரிக்க..

இங்க ஒரே டிஸ்டப்ன்ஸ்டி... நான் ஆபிஸூக்கு போய் பேசவா என்று போனை வைத்தான்...

அப்படி என்னடா பொழுது விடியவரை பேசற...

ம்ம் சிதம்பரம் ரகசியம்.. யாருக்கும் சொல்ல கூடாது, நீயும் செய்ய மாட்ட... என்னை கலாய்க்கிற... தள்ளுடா எனக்கு டைமாகுது... சரணிடம் சொல்லிவிட்டு காரில் ஏறினான் இனியன்.

......

மதியம் ஒரு மணிக்கு தேனுவின் காலேஜ் வாசலில் காரை நிறுத்தினான் இனியன்... பத்து நிமிடத்தில் தேனு காலேஜிலிருந்து வெளியே வந்து காரில் ஏறினாள்...

இனி மாமா வரமாட்டேன் சொன்ன...

எவ்வளவு வேலையிருக்கு தேனுமா.. நான்தான் ஈவினிங் பார்க்கிறேன் சொன்னேன்ல... நீதான் இப்பவே வாடான்னு சொல்லுற.

ப்ச்.. அபிக்கு 3 மணிக்குதான் கிளாஸ் முடியுது.. அதுக்கப்பறம் தானே ப்யூட்டி பார்லர் போறோம்.. அதுவரைக்கு நான் என்ன செய்யறது..

பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வண்டியை பார்க் செய்தான்...

அவன் வழக்கமான வர ஹோட்டல்தான்... ஒரு ரூமை புக் செய்திருந்தான்... இப்போ எதுக்கு மாமா ரூம்..

தேனு.. ரொம்ப வெயில்லா இருக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்.. எவ்வளவு நேரம் கார்ல உட்கார்ந்திருக்கிறது.. மதிய உணவை ஆர்டர் செய்தான்..

மாமா எனக்கு நான் வெஜ் வேணாம்.. நமக்கு நிச்சயம் ஆயிட்டவுடனே நீங்களும் சாப்பிட கூடாது .

சரி இப்போ சாப்பிடலாமில்ல...

இருவரும் சாப்பிட்டு முடித்து... ரிலாக்ஸா பெட்டில் உட்கார்ந்தனர்.. காலையில உங்க மாமா வந்தாரு சொன்னீயே.. என்னாச்சு தேனுமா..

காலையிலே ஊரிலிருந்து எல்லோரும் வந்துட்டாங்க மாமா.. எங்க பெரிய மாமாவுக்குதான் ரொம்ப வருத்தம்.. வந்தவுடனே அம்மாகிட்ட ஒரே சண்டை.. அம்மாவால சமாதானம் செய்யமுடியல.. கடைசியில ஏதோ பேசி முடிச்சாங்க.. எல்லாத்துக்கு நான்தான் காரணம் சொன்னாங்க..

ம்ம் விக்கி என்ன சொல்லுறான்..

அவனும் கொஞ்சம் ஃபீல் செய்திருப்பான் போல... கடைசியில ஆரா நல்லாயிருந்தா எனக்கு அதுபோதும் சொல்லிட்டான்... மாமா விக்கி சின்னவயசிலிருந்து எனக்கு நல்ல நன்பன்.. மொஸ்ட்லி எல்லா விஷியத்தையும் ஷேர் பண்ணிப்பேன்.. உன் விஷியம்தான் அவன்கிட்டயிருந்து நான் மறைச்சிட்டேன்.. அதான் அவனுக்கு கோவம் மாமா.. அப்பறம் நான் சமாதானம் செஞ்சிட்டேன்..

உங்களுக்கு அவனை பிடிக்காது தெரியும். எனக்காக ப்ளீஸ் மாமா...

சத்யா மாமா என்ன சொன்னாரு..

அவரா கிரேட் எஸ்கேப் ஆபிஸூக்கு போயிட்டாரு... நீயே சமாளின்னு சொல்லிட்டு..

அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு, ஒரு வழியா பிரச்சனை முடிச்சிடுச்சா தேனு..

ம்ம்... எவ்வளவு பெரிய ப்ராப்ளத்தை சமாளிச்சோம் தெரியுமா... மாமி ஒண்ணும் சொல்லலை... மாமா தான் பிடிவாதம் ஜாஸ்தி.. ஹாங் தன் கையிலிருக்கும் போனில் ஒரு போட்டோவை காட்டி இந்த டிரஸ் ஓகேவா.. இதைதான் சூஸ் பண்ணிருக்கேன்.. மேக்கப் எப்படியிருக்கு என்று காட்டினாள்.

அதை பார்க்காமலே சூப்பர்டி என்றான்..

அவனை முறைத்துவிட்டு... எங்கடா பார்த்த, ஓகேவாம்... எனக்கு எவ்வளவு குழப்பமா இருக்கு எந்த மாடல் போறதுனு... உனக்கு சூட்டாக வேணாமா.. தேனு முகத்தை திருப்பி கொள்ள..

தேனுகுட்டி... எந்த டிரஸ் போட்டாலும் நீ அழகுதான்டி... எதுவும் போடாம விட்டா இன்னும் அழகு தெரியும்மா..

எப்ப பார்த்தாலும் டபுள் மீனீங்தான்.. அவன் நெஞ்சில் அடிக்க.. அப்போ தான் இனியனுக்கு ஞாபகம் வந்து பாக்கெட்டிலிருந்து லாலி பாப் எடுத்து தந்தான்..

இந்த சாக்லெட வாங்கற போ ஸ்டோர்ல ஒரு மாதிரி பார்க்கிறாங்க...

அய்யோ தேங்க்ஸ் மாமா... சூப்பர் எனக்கு பிடிச்ச ஆரன்ஞ் பிளேவர்... பிரித்து வாயில் வைக்க.. அவனை உற்று பார்த்தாள்..

என்னடி அப்படி பார்க்கிற..

ம்ம்... அன்னிக்கு ஏதோ இந்த லாலிபாப் வச்சி பேசினீயே.. உன் புருஷன் கொடுத்து வச்சவன்னு.. சொல்லுடா என்ன மீனீங்..

தன் உதட்டை மடித்துக் சிரித்தபடி ம்ம்.. சொல்ல மாட்டேன் என்றான்..

சொல்லு மாமா..

தன் தலையை ஆட்டி மாட்டேன்... நீ திட்டுவ.. அவன் எழுந்து அந்த இடத்தை விட்டு நழுவி போக..

எங்கடா நழுவி போற... இனியனை போக விடாமல் பிடித்துக்கொண்டாள்.. ஹா..ஹான்னு சிரிக்க ஆரம்பித்தான்... அவன் கண்ணத்தை பிடித்து உதட்டின் அருகே நெருங்கினாள்.. சொல்லு...

இனியன் கண்களால் காட்டிய இடத்தை பார்த்த தேனு... டேய் ட்ரிபிள் எக்ஸ்... உன்னை போய் எங்க மாமா வெளிநாட்டுல படிக்க வச்சாரு பாரு.. அவனின் தலைமுடியை ஆட்டிய படி அவன் மேலேறி அடிக்க ஆரம்பித்தாள்...

என்னடா சுகமா கண்ணை மூடி மூடி அனுபவிக்கற.. இதே சீன் ஒரு முறை நடந்துச்சு.. இந்த மாயாக்கூட போக சொல்ல..

ஞாபகமிருக்கா உனக்கு.. அன்னிக்கு செம ஆங்கிள்டி.. அப்படியே என்மேல புரண்டி விழுந்தியா... அப்படியே வெல்வெட் மாதிரி சாப்டா இருச்சு.. என் இதயம் தாறுமாற எகிருடிச்சு. நீ அடிச்சாலும் பரவாயில்ல ரசிச்சிட்டு இருந்தேன்..

போக்கிரி பையன்டா நீ... வெளிநாட்டுல வேற படிக்க போன, அங்க எத்தனை பொண்ணுங்களுக்கு ஃப்ரீ ஷோ காட்டினீயோ...

அடிப்பாவி... உனக்கு சொந்தமானதை யாரையும் தீண்ட விடமாட்டேன் தேனு... நான் உன் ப்ராபர்டி.

அப்பறம் அந்த சீனக்கார பொண்ணை லவ் செஞ்சேன் அண்ணா சொல்லுச்சே..

அது சும்மா உன்னை காண்டேத்த.. எப்படியும் அவன் உன்கிட்ட விஷியத்தை சொல்லுவான் தெரியும்..

இனியனின் மேல் காலைபோட்டு, அவனின் காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள்... அவனின் விழிகளில் தன் விழிகளை கலந்தபடி.. மாமா உன்னை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்... அப்படி உன்னை யாருக்கூடவோ நான் பார்த்தா அன்னிக்கு என் உயிர் இருக்காது... கண் கலங்கினாள்.. தேனு

லூஸூ எதுக்கு இப்படி பேசற... ஹாப்பியா இருக்கும்போது அழற..

க்கும்... உனக்கு எந்த ஃபீலிங்க்ஸ் இருக்காது.. நான் உன்மேல பையத்தியமா இருக்கேன்.. எனக்கே புரியல... ரொம்ப உன்கிட்ட எதிர்ப்பார்க்கிறேனா மாமா... கல்யாணத்திற்கு அப்பறம் எப்படியிருப்போம்.. நமக்குள்ள சண்டை வந்து நீ என்னைவிட்டு பிரிஞ்சி போயிடுவீயா.. என்னால தாங்க முடியாது சொல்லிட்டேன்... இப்பவே உன்கிட்டே இருக்குனும் தோனுது, இதோ இப்படி அனைச்சிட்டே இருக்கனும்...

அவள் கண்ணை துடைத்துவிட்டான்... ஓய் தேனு இங்க பாருடி... ஏன் இந்த மாதிரி யோசிக்கிற, யாருக்காவும் உன்னை விட்டுதரமாட்டேன்.. எங்க அப்பா, அம்மாவே வந்தாலும், ஏன் கடவுளே வந்தாலும்... எனக்கு நீ மட்டும்தான் புரியுதா..

ம்ம் அப்பறம் உனக்கு என்கூடவே இருக்கனும் தோனுதுன்னா... நீ என்மலே வச்சிருக்க அளவுகடந்த காதல்.. அது கல்யாணம் ஆயிட்டு பர்ஸ்ட் நைட்ல முடிவு பெறும். அவளை பார்த்து கண்ணை சிமிட்டி அப்ப நம்ம கலந்துடுவோம் இல்லையா.. அதுவரைக்கும் இப்படி ரோமன்ஸ் ஃபீலிங்க்ஸ் இருக்கிறது நேச்சர் தான்...

உனக்கே இப்படியிருக்கே... நான் எவ்வளவு கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா... அதுக்குதான் உன்னை பார்க்க அவாய்ட் செய்யறது.. மீறி ஏதாவது தப்பு நடந்திடுச்சினா.. அப்பறம் நீ பேசறதை கவனிக்காத மாதிரி செல்லை நோன்டிட்டு இருக்கிறது... அவளின் பிறை நுதலில் முத்தமிட்டு... நானும் ஐ லவ் யூ சோ மச் புரியுதா...

......

சக்கர மற்றும் சத்தியமூர்த்தி குருஜீயின் ஆசிரமத்தில் நுழைந்தார்கள்... எங்கடா இனியனும் ஆபிஸில்லை, சரனும் காணோம்..

இரண்டும் யார பார்க்கபோவாங்க.. என் பொண்ணையும், உன் பொண்ணையும் தான்.. ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போகனும் சொன்னான் இனியன்...

எப்படிடா உங்கிட்ட மட்டும் நல்லவனா நடக்கிறான் என் பையன்.. திருட்டுதனமா தேனுவை பார்க்க போயிட்டு.. இப்போ எங்கயிருக்கான் தெரியுமா ஹோட்டல்ல..

அய்யா உங்களை வரச்சொன்னாங்க பனியாள் ஒருவன் அழைக்க.. இருவரும் அந்த குடிலுக்குள் சென்றார்கள்..

வாங்க ஐயா என்றான் தவசி... குருஜீயின் அடுத்த வாரிசு சொல்லலாம்.. காலையிலே குருஜீ இமயமலைக்கு போயிட்டாரு.. வர நாலு ஐந்து வருஷம் கூட ஆகலாம்..

நாங்க ஜாதகம் கொடுத்தோம், அவரும் என்கிட்ட போனில் பேசினார், ஏதோ பரிகாரம் சொன்னாரு...

ஹாங் அதை என்கிட்ட எழுதி கொடுத்துட்டு போனாரு ஸார்.. நீங்க வந்தா அதைபற்றி சொல்ல சொன்னாரு..

அவர்களை பார்த்து.. பொண்ணு ஜாதகத்தில பிரச்சனையிருக்கு... இப்போ உங்க பையனுக்கு நேரம் சரியில்ல.. பொண்ணை கட்டிக்கிட்டா பிரச்சனை பையனுக்கு தான் வரும்..

இப்போ நாங்க நிச்சயம் வச்சிருக்கோம்.. ஏதோ பரிகாரம் சொன்னாரு..

ம்ம் அதைபற்றி சொல்லுறேன்.. உங்க மனசு கஷ்டப்படுமே பார்க்கிறேன்.. பூஜை செய்யலாம் பரிகாரம் பூர்த்தியாகும் தெரியாது... பார்க்கலாம்.. வேற பொண்ணை பார்க்கலாமே தவசி கூற..

சத்தியமூர்த்திக்கு கண்கள் கலங்கிவிட்டது.. தன் நன்பனை பார்த்த சக்கர.. டேய் பரிகார பூஜை பண்ணலாம்.. வேற எதுவும் யோசிக்காதே.

தவசி நம்ம வீட்டுல நாளைக்கு பூஜை வச்சிக்கலாம்... சந்தோஷமாக சென்ற இருவரும் அமைதியாக வெளியே வந்தார்கள்..

சத்யா முதல்ல இனியனுக்கு போன்போட்டு பூஜையை பற்றி சொல்லனும்.. அவன் இதெல்லாம் நம்ம மாட்டான்... அவனை ஒத்துக்க வைக்கனும் அதான் முக்கியம்.

... மெய் தீண்டுவான்.
 
N

Nirmala vandhachu ???
Akila etho panna ranghala
 
Last edited:
நல்லா இருக்கு பதிவு
இந்த பூஜை பரிகாரம்
இதெல்லாம் ஏதாவது
அகிலா திட்டமா

நம்ப முடியல கல்யாணத்துக்கு
சம்மதம் சொன்னத
????
 
நல்லா இருக்கு பதிவு
இந்த பூஜை பரிகாரம்
இதெல்லாம் ஏதாவது
அகிலா திட்டமா

நம்ப முடியல கல்யாணத்துக்கு
சம்மதம் சொன்னத
????
நன்றி சிஸ் , இருக்கலாம் அகிலாவும் டேஞ்சர்தான்
 
Top