Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -01

Advertisement

மெய் தீண்டாய் உயிரே -01

மலேசியாவில் மிகப்பெரிய பப்பில், கலர் கலர் லைட்கள் சுழலவிட்டு , பெண்களும் ஆண்களும் அரைகுறை ஆடைகளில் போதையில் ஆடிக்கொண்டிருக்க அங்கே நடப்பதுக்கும் நமக்கும் சம்மதமில்லை என்று ஒரு கையில் செல்போனும் மற்றோரு கையில் கிளாஸுடன் சிப் சிப்பாக போதையேற்றும் திரவியத்தை பருகிக் கொண்டிருந்தான் தேவ்..

ஹாய் மச்சான் என்று அவனருகில் வந்து உட்கார்ந்தான் வர்ஷன்..

என்னடா தேவ் நாளைக்கு இந்தியா போறீயா...

செல்லில் டிஸ்ப்ளேவில் உள்ள போட்டோவை பார்த்தபடியே.. ம்ம்..

வந்த வேலை முடிச்சிடுச்சாடா..

இங்க ஒரு வேலையுமில்ல மச்சான் எனக்கு... கம்பெனி நானில்லாமலே நல்ல லாபம் தரும்.. இந்தியாவிலிருந்தே மேனேஜ் பண்ணிருப்பேன்... அங்கிருந்தா பிரச்சனை செய்வேன்னு குடும்பமே என்னை துரத்திவிட்டாங்க..

டேய் மச்சான் என்னடா உளர..

ப்ச்.. எல்லாம் இவளால என்று செல்லில் இருக்கும் போட்டோவை காட்டினான்... அந்த படத்தையே வர்ஷன் உற்று பார்க்க...

மச்சான் அவ உனக்கு தங்கச்சி அப்படி உற்று பார்க்காதேடா..

தேவ்வை எரிப்பதுப்போல் முறைத்து பார்த்து... நீ அங்க ஏதோ தில்லாலங்கடி வேலை பண்ணிருப்ப.. அதான் துரத்திவிட்டாங்க...

இவர்கள் பேசிக்கொண்டிருக்க நடுவில் ஒரு பெண் தேவ்வின் அருகில் வந்து பேப் என்று இவன் முகத்தில் தன் முகத்தை உரசி, அவன் இதழில் முத்தமிட வர..

நோ பேபி... இட்ஸ் நாட் யுவர்ஸ்... இந்த இடம் என்னவளுக்கு மட்டும்... அவளை தடுத்து தன் கண்ணத்தை காட்டினான் இங்க பண்ணிக்கோ என்று...

அந்த பெண் தன் இதழை குவித்து அவன் கண்ணத்தில் லைட்டாக முத்தமிட்டு நகர்ந்தாள்...

டேய் இவ்வளவு நேரம் அங்க அவ்வளவு டான்ஸ் ஆடின.. அங்கிருந்த பொண்ணுங்க உன் உடம்புல தொடக்க கூடாத இடத்திலெல்லாம் கையை வச்சிடுச்சு... நீ என்னடான்னா லீப்ல முத்தமிட சம்மதிக்க மாட்டுற..

அந்த கேர்ல்ஸ் எங்க தொட்டாளும் எனக்கு உணர்வு வராது... தன் இதயத்தை தொட்டு காட்டி இங்கே ஒருத்தி என்னை கொல்லுறா பாரு அவ மைய் தீண்டினாள் மட்டுமே இந்த உயிருக்கு உணர்வு வரும் மச்சான்...

நல்ல உயரம், சந்தன நிற தேகம், எதிரியை பயப்பட வைக்கும் கூர்மையான பார்வை வயதோ இருபதொறு... அனைவரும் ஒருமுறையாவது திரும்பி பார்க்கும் ஆணாழகன் நம்ம தேவ்...

தனது செல்லில் வீடியோவை ஆன் செய்தான்.. அந்தபக்கம் போன ஒரு பெண்ணை ஹாய் ஸ்வீட்டி என்று கூப்பிட்டு.. கிஸ் மீ என்று தன் கண்ணத்தை காட்ட அந்த பெண் அவனை முத்தமிட்டாள்...

தன் முகத்தை வீடியோவில் காட்டி... ஏய் பார்த்தியாடி அந்த பொண்ணு எப்படி கிஸ்ஸாடிச்சான்னு... உன்னையே நினைச்சிட்டு இருப்பேன் நினைச்சியா.. இடியட்... போதையேற கண்கள் சொக்கியபடி என்னை ஏன்டி வேணா சொல்லிட்ட... ராஜா மாதிரி என் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தேன்டி... அவன் செல்லை பிடிங்கினான் வர்ஷன்..

கொடுடா செல்லை.. அவளுக்கு இந்த வீடியோவ வாட்ஸ் அப்ல அனுப்பிட்டு தரனேன் வாங்கி அந்த வேலையை செய்யதான் தேவ்...

தேவ்.. அந்த பொண்ணு எந்த ரெஸ்பான்ஸும் பண்ணாதுடா..

பார்ப்பா ஆனா எதுவும் பேச மாட்டா.. அவ பார்த்துட்டான்னு இரண்டு ப்ளு டிக் வரும்... நான் தெரிஞ்சுப்பேன்... உடனே போனை காட்டி இங்க பாரு ப்ளூ டிக் வந்துடுச்சு... ஹா..ஹா.. பார்த்துட்டா மச்சான் தேவ் சிரிக்க…

உனக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சுடா வா வீட்டில வீட்டுட்டு போறேன்...

காரில் வரும்போது புலம்பிக்கொண்டே வந்தான் தேவ்.... அவனை வீட்டில் விட்டு தன் இடத்திற்கு திரும்பினான் வர்ஷன்...

பெட்டில் படுத்து தன் செல்லையே வெறித்து பார்த்தப்படி இருந்தான்... தூக்கமும் வரவில்லை... போதையும் ஏறவில்லை.. கண்கள் சிவந்தபடி தூங்காமல் அவள் போட்டோவையே பார்த்திருந்தான்...

எட்டு வயது பெண் அவன் மனக்கண் முன் தோன்றினாள்... நீ ரொம்ப பேட் பாய்... எனக்கு விச்சு மாமாதான் பிடிக்கும்... அம்மா சொன்னாங்க நீ எங்க வீட்டு வேலைக்காரியோட பையனாம்... ஹா..ஹா என்று அந்த சிறுமி சிரிக்க..

உடனே வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மேசேஜ் வந்தது...

அதை பார்த்தவுடன் இதழ்கள் மெல்ல விரித்தன தேவ்விற்கு... அதை ஆன் செய்து தன் காதில் வைத்தான்... முதலில் நிசப்தமாக போனது பிறகு மயக்கும் குரலில் மாமா... .

தன் கண்களை மூடி ம்ம்... என்றான் தேவ்..

அவன் ம்ம்.. சொல்லுவதற்கு சிறிய இடைவெளை விட்டு தூங்கு மாமா... அதோடு முடிந்துவிட்டது அவளுடைய வாய்ஸ் மேசேஜ்... இது மட்டுமே அவள் பேசும் வாசகம்..

அவள் குரலை கேட்டவுடன் அனைத்தும் மறந்து உறங்கி போனான் தேவ் இனியன்...

............

அதிகாலை மணி 5.30 மெல்ல கண் விழித்தாள் அந்த வீட்டு தேவதை குட்டிமா... வழக்கமாக அவள் கைதானாக நெஞ்சில் உள்ள கழுத்து செயினை தடவியது... எழுந்து உட்கார்ந்து தன் தலை முடியை அள்ளி கொண்டையிட்டு கேட்சரில் அடக்கினாள்... குளித்து பூஜை அறையில் சென்று சாமியை கும்பிட்டு...மாடிக்கு சென்றாள்...

பொழுது விடிய ஆரம்பித்தது.. அங்காங்கே கீச் கீச்ன்னு பறவைகள் கத்த... காலை குளிருக்கு சூரியனின் ஒளி இதமாக இருந்தது.. இன்று ஏனோ இயற்கையை ரசித்தபடி இருந்தாள்.. மனதிற்குள் ஆனந்தம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த வெறுமை , அதை நிரம்ப இப்பொழுது தன் மண்ணை நோக்கி வந்திருப்பான்...

பேசும் வார்த்தைகள் மறந்தன !!

இதழ்கள் சிரிக்க மறுக்கின்றன!!

மெய் தீண்டாத உன் விரலால்,

உணர்ச்சிகள் இல்லா ரோபர்ட் ஆனேன்!!

என்னவனே!!! என் இனியவனே!!!

கையில் செல்லை பார்த்தபடியே இருந்தாள்... அவள் செல் சினுங்க யாரென்று தெரிந்தவுடன் அண்ணா என்றாள் வீடியோ காலில்...

வந்துட்டான் குட்டிமா... தெரிதா ப்ளுடூத்தில் பேசியபடி சரண் அவளுக்கு காட்ட...எங்ககிட்ட வரான்.. அப்படியே பார்த்துட்டே இரு..

ம்ம் சரியண்ணா...கொஞ்சம் ஷேக்காகி தெரிந்தது... நேற்றும் பார்த்தாள் தான் அவன் முகத்தை மட்டும்... இன்று முழு உருவமாக தெரிந்தான்... இன்னும் மெலிந்துபோயிருந்தான்...

அங்கே அவனுடைய அம்மா லதாவை அனைத்துக் கொண்டான்.. தன் முகத்தில் புன்னகையை வரவழைத்து நல்லாயிருக்கீயா மம்மி, அவன் அம்மாவை பார்க்க...

கண்ணில் கண்ணீரோடு தன் மகனை கட்டி தழுவிக் கொண்டாள் லதா...

ம்ம்.. நீ நல்லாதான் இருப்ப... அவளை விலகிவிட்டு...தன் டாடியை பார்த்தான்..

யாரும் நான் இல்லாமல் ஏங்கன மாதிரி தெரியிலையே நல்லா இரண்டு சுற்று பெருத்துதான் போயிருக்கீங்க...

உடனே தேவ்வுடைய அப்பா, என்னடா இப்படி சொல்லுற, நீயில்லாம சோறு தண்ணீ இறக்க மாட்டுதுடா... பிறகு மனதில் நினைக்க ஆரம்பிச்சாரு.. இன்னும் என்ன செய்ய போறானோ இந்த சென்னை தாங்குமா கடவுளே...

அவரை உற்று நோக்கினான்

உங்க மைன்ட் வாய்ஸ் சொல்லவா.... எல்லா தாங்கும் சக்கரவர்த்தி... இனிமேதான் சம்பவமே இருக்க..

டேய் மகனே இனியா...

நோ தேவ்... ஐயம் தேவ் சக்கரவர்த்தி...

அண்ணா என்று அவனுடைய தங்கை அபிநயா கட்டிக் கொள்ள...

அவளை பார்த்து தேவ்.. என் அபிக்காக தான் நான் சென்னைக்கே வரேன்...

போதும்டா மச்சான், நீ யாருக்காக வந்தேன்னு எல்லோருக்கும் தெரியும்... பேசியபடி தேவ்வை அனைத்துக் கொண்டான் சரண்...

லதாவும், சக்கரவர்த்தியும் தனி காரில் வீட்டுக்கு கிளம்பினர்... என்னடி பிள்ளையை பெத்து வச்சிருக்க... எப்படி பெயரவிட்டு கூப்பிடுறான்...

அய்யோ இன்னிக்குதான் புதுசா கூப்பிடுறான்.. சின்ன வயசில அவன் பெயரவிட்டு கூப்பிட சொல்ல கெக்கபெக்கன்னு சிரிச்சிங்க... நல்லா யோசிச்சு பாருங்க மூனு வருஷம் முன்னாடி ,கனடாவிலிருந்து படிச்சுட்டு வந்தானே... அப்ப என்ன நடந்திச்சு... இதே ஏர்போர்ட் காலையில....

மறுபடியும்... நம்ம தேவ் இனியன்...

ஹாய் டாட், மாம் என்று கட்டியணைத்தான்.. அவன் பக்கத்தில் தொடை வரை போட்டிருந்த ஒரு கவுனில் கனட நாட்டு வெள்ளைக்கார பெண்..

மாம் உங்க மருமக எப்படியிருக்கா...

கண்னை விரித்து அப்படியே வாயை பிளந்து பார்த்தாள் லதா.. என்னடா சொல்லுற...

ம்ம் தமிழ்ல தானே சொன்னேன் உங்க மருமகள்... வெள்ளையாயிருக்கா பாரு எப்படீ...

சக்கரவர்த்தி தன் மகனின் பின்னாடி எட்டி பார்க்க...

என்ன டாடி பார்க்கிறீங்க..

ம்ம் பேரப்பிள்ளைங்க வருவாங்களான்னு...

அது இனிமேதான் சக்கி, என் டேஸ்ட் மேட்சானா ஒகே...

ஏன்டா இந்த பொண்ணுன்னா தக்காளி சட்னியா டேஸ்ட் பார்க்கிறதுக்கு...

ஜென்னி மீட் மை டாட் என்று தேவ் அறிமுக படுத்த...

ஹாய் அங்கிள் என்று சக்கரவர்த்தியை கட்டியனைத்து முத்தமிட்டாள்...

அய்யோ.... லதா .மருமக சின்ன பிள்ள போல கிஸ் செய்யுறா.. இதை நினைத்து பார்த்த சக்கரவர்த்தி அன்னைக்கு ஹார்ட் அட்டாக் வராதா குறைதான்... பிறகுதான் தெரிந்தது பிளைட்டில் கூட வந்த பெண் என்று..

முகத்தை சுளித்தபடி லதா... உன் பிள்ள உன்ன மாதிரிதான் இருக்கும்...

-------

இங்கே ஏர்போர்டில்,

ஏன்டா எல்லார் பற்றியும் விசாரிக்கிறீயே... என் குட்டிமா பற்றி கேட்கவே மாட்டியா..-சரண்.

எதுக்கு நீதான் அவளுக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணுறீயே.. அவன் போனை புடுங்கி... தன்னவளை பார்த்தான்.. நேர்ல வர பயம்... ஹாங்.. உன் பின்னாடியே சுற்றின இனியா இல்லடி நான்... தேவ் சக்கரவர்த்தி... போனை வையிடி... சரண் கையில் போனை தினைத்துவிட்டு..

டீச்சரை பார்த்து வீட்டுக்குள்ள ஓடிபோய் ஒளிச்சிக்கிற பையன்டா நீ... உன்கிட்ட போய் பேசறா.. அண்ணா நொண்ணான்னு உன் பாசமலர்...

அங்கு தேவ் செய்யும் அலப்பறையை பார்த்து வாய்விட்டு சிரித்தாள் அவனின் தேவதை... நீ மாறவேயில்ல...



---- மெய் தீண்டாய்
Super
 
Top